என் மலர்
சினிமா செய்திகள்
விஜயகுமார் கதாநாயகனாக நடித்த "மாங்குடி மைனர்'' உள்ளிட்ட சில படங்களில், ரஜினி வில்லனாக நடித்திருக்கிறார்.
விஜயகுமார் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய நேரத்தில், ரஜினி வில்லனாக தனது நடிப்பு அத்தியாயத்தை தொடங்கியிருந்தார். விஜயகுமார் கதாநாயகனாக நடித்த "மாங்குடி மைனர்'' உள்ளிட்ட சில படங்களில், ரஜினி வில்லனாக நடித்திருக்கிறார்.
ரஜினி பற்றி விஜயகுமார் கூறியதாவது:-
"நான் முதலில் தங்கியிருந்த புதுப்பேட்டை முரளி வீட்டில்தான் பின்னாளில் ரஜினியும் தங்கியிருக்கிறார். பிறகு நான் புரசைவாக்கம் விடுதிக்கு வந்துவிட்டேன்.
ஒருநாள் படப்பிடிப்பு முடிய நேரமாகி விட்டது. படப்பிடிப்பில் ரஜினியும் இருந்தார். "நான் உங்களை `டிராப்' பண்ணிடறேன்'' என்று சொல்லி எனது காரில் ஏற்றிக்கொண்டேன்.
புதுப்பேட்டையில் காரை ரஜினி நிறுத்தச்சொன்ன இடம், முன்பு நான் தங்கியிருந்த அதே இடம்! ரஜினியிடம் இதைச் சொன்னபோது அவரும் ஆச்சரியப்பட்டார்.
1976-ல் டைரக்டர் பீம்சிங் இயக்கிய "உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தில் என்னுடன் ரஜினியும் நடித்தார். அப்போதெல்லாம் தூங்காமல் படப்பிடிப்பில் நான் கலந்து கொண்டிருந்தேன்.
காலையில் ஒரு படப்பிடிப்பை முடித்து விட்டு வந்தவன், வாகினியில் இருந்த செட்டுக்கு மதியம்
2 மணிக்கு வந்தேன். முந்தின இரவு தூங்காததால் சாப்பிட்டு விட்டு கொஞ்சம் தூங்க விரும்பி மேக்கப் ரூமுக்கு போனேன்.
அங்கே ரஜினி இருந்தார். அடுத்த காட்சியில் அவருக்கு நடிக்க வேண்டிய பேண்ட் - ஜிப்பா கொடுத்திருந்தார்கள். ஜிப்பாவை போட ரஜினி முயற்சிக்கிறார்; முடியவில்லை! ரஜினியும் எப்படியாவது அந்த ஜிப்பாவை உடம்புக்குள் நுழைத்துவிட முயன்று கொண்டிருந்தார்.
இதைப் பார்த்த நான் ரஜினியிடம், "இந்த சின்ன ஜிப்பா, உங்கள் உடம்புக்கு எப்படிப் பொருந்தும்'' என்று கேட்டேன்.
"காஸ்ட்ïமர்'' இதைத்தான் கொடுத்திட்டுப் போனார்'' என்றார், ரஜினி.
நான் உடனே காஸ்ட்ïமரை அழைத்து, "இந்த ஜிப்பா இவருக்குப் பொருந்தவில்லை. வேறு ஜிப்பா கொண்டு வந்து கொடுங்கள்'' என்று கேட்டுக் கொண்டேன். உடனடியாக காஸ்ட்ïமர் வேறு ஜிப்பா வாங்கி வந்து கொடுத்தார். அது ரஜினிக்கு பொருத்தமாக இருந்தது. அதை அணிந்து கொண்டு, அன்றைய படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
அன்றைய படப்பிடிப்பில் ஒரே ஷாட்டில் 4 பக்க வசனம் அவருக்கு கொடுத்திருந்தார்கள். `கடகட'வென அவருக்கே உரிய பாணியில் ஒரே டேக்கில் பேசி, காட்சியை ஓ.கே. பண்ணினார் ரஜினி.''
இப்படிச் சொன்ன விஜயகுமார், ஆந்திர மாநிலம் நகரியில் "என் கேள்விக்கென்ன பதில்'' படப்பிடிப்பு நடந்தபோது, ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் ஒன்றையும் குறிப்பிட்டார்.
"நகரியில் நான், ரஜினி உள்ளிட்ட நடிகர் குழுவினர் நடித்துக்கொண்டிருந்தோம். டைரக்டர் பி.மாதவன் டைரக்ட் செய்தார்.
திடீரென பொதுமக்கள் கூட்டத்தில் நின்ற சிலர் வேண்டுமென்றே எங்களிடம் தகராறு செய்தார்கள். படப்பிடிப்பு கேமராவை பிடுங்கிக் கொண்டார்கள்.
நான் அவர்களிடம் பேசிப்பார்த்தேன். அவர்களோ வேறு ஏதோ நோக்கம் வைத்துக் கொண்டு எங்களிடம் தகராறு செய்து
கொண்டிருந்தார்கள்.இனியும் இங்கே இருந்தால், அடுத்த கட்ட பிரச்சினை உருவாகலாம் என்று நினைத்து, டைரக்டரின் யோசனைப்படி அங்கிருந்து காரில் புறப்பட்டோம். ஒரு பியட் காரில் என்னையும், ரஜினியையும் டைரக்டர் பி.மாதவன் சார் சென்னைக்கு அனுப்பி வைத்தார். கார் புறப்பட்டதும் கூடியிருந்த கும்பலை விலக்கும் பொருட்டு, ஜன்னலுக்கு வெளியே நானும், ரஜினியும் கைகளை நீட்டி `ஓரம்போ ஓரம்போ' என்று சொல்லிக் கொண்டே வந்தோம்.
`இனி பிரச்சினையில்லை' என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரத்தில், `கார்' மக்கர் செய்து ஒரு இடத்தில் நின்று விட்டது. என்ன முயற்சி செய்தும் கார் நகரவில்லை.
உடனே, அந்த ஊரில் உள்ள பஸ் ஸ்டாண்டுக்கு சென்று, பஸ்சில் ஏறினோம். டாக்சி ஸ்டாண்ட் இருந்த இடத்திற்கு பஸ் வந்தபோது, அங்கே நிறுத்தி இறங்கிக் கொண்டு, டாக்சி பிடித்தோம். அம்பத்தூர் வரை அந்த டாக்சியில் பயணம் செய்தோம்.
ரஜினியைப் பொறுத்தமட்டில் நடிக்க வந்த புதிதில் எப்படி இருந்தாரோ, அப்படியேதான் இப்போதும் இருக்கிறார். ஆனால் இன்றைக்கு அவருக்கு உள்ள பெயரும், புகழும் வேறு. இப்போதும் நண்பர்களிடம் முன்பு காட்டிய அதே அன்புதான்; அதே பண்புதான். எப்போதாவது சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கும்போது, அவராகவே பழைய நாட்கள் பற்றி நினைவுபடுத்துவார்.
ஒரு கட்டத்தில் நான் அவருக்கே அப்பாவாக நடிக்க வேண்டி வந்தது. கமலுக்கும் நான் அப்பாவாக நடித்திருக்கிறேன். இப்போதும் எங்களுக்குள் அதே அன்புதான் நீடிக்கிறது.
நாட்டாமை படத்தில் நான் நடித்த `நாட்டாமை' கேரக்டர் பற்றி ரஜினி ரொம்பவும் புகழ்ந்து பேசினார். `அமைந்தால் இப்படி கேரக்டர் அமையவேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்த கேரக்டர் அப்படியே அவருக்குள் ஊடுருவி, நாட்டாமையை தெலுங்கில் `பெத்தராயுடு' என்ற பெயரில் எடுக்கச் செய்து, அதில் நான் நடித்த நாட்டாமை கேரக்டரையும் செய்து அசத்தினார்.
இந்த கேரக்டர் பற்றி அவர் என்னிடம் சொல்லும்போது, "விஜி! உங்க ஸ்டைல் எனக்கு வரலை. அதனால் நாட்டாமை கேரக்டரில் சுருட்டு பிடிக்கும் மேனரிசத்தை சேர்த்துக் கொண்டேன்.''
மற்றவர்களின் திறமையை மதிக்கும் பண்பு, அவருக்கு எப்போதுமே உண்டு. என்னுடன் சேர்ந்து நடித்த காலகட்டங்களில் படப்பிடிப்புக்கு அவர் தாமதமாக வந்து நான் பார்த்ததே இல்லை. இப்போதும் இந்த நேரம் தவறாமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
தொழிலை நேசிக்கத் தெரிந்தவர். அதனால்தான் அவரது தொழிலான சினிமாவும் அவரை சிகரத்தில் ஏற்றி வைத்திருக்கிறது.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரமும் குறும்படம் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

ஒவ்வொரு வாரமும் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்தவாரம் சம்யுக்தாவிற்கு குறும்படம் போட்டு காண்பித்தார் கமல். அதுபோல் இந்த வாரம் பாலாவிற்கு குறும்படம் போட்டு காண்பிக்க இருக்கிறார் கமல். தலைவர் போட்டியின் போது ஏற்பட்ட பிரச்சினையை குறும்படமாக கமல் போட்டு காண்பித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கெவின், ரேணு சவுந்தர், ருக்மணி பாபு, பாபு ரபீக் நடிப்பில் எஸ்.குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கடத்தல் காரன் படத்தின் விமர்சனம்.
நாயகி ரேணு சவுந்தர் கல்லூரி விட்டு வரும் வழியில் செயினை திருடுகிறார்கள். இதை நாயகன் கெவின் சண்டை போட்டு மீட்டு கொடுக்க இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்களின் காதல் ரேணுவின் அப்பாவிற்கு தெரிய வர, வேணுவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய நினைக்கிறார்.

இதையறிந்த கெவின், ரேணுவை அழைத்துக் கொண்டு ஊரை விட்டு சென்று திருமணம் செய்யலாம் என்று முடிவுக்கு வருகிறார்.
இந்நிலையில், திருடுவதை முக்கிய தொழிலாக கொண்டிருக்கும் கிராமத்தை சேர்ந்த 4 இளைஞர்கள், திருமண வீட்டில் பொருட்களோடு மணப்பெண் ரேணு சவுந்தரையும் தெரியாமல் கடத்திவிடுகிறார்கள்.

இறுதியில் கடத்தல் கும்பலிடமிருந்து ரேணு சௌந்தர் தப்பித்தாரா? காதலன் கெவினுடன் இணைந்தாரா என்பதே படத்தின் மீதி கதை.
நாயகனாக கெவின் நல்ல முகம். ஆனால் நடிப்புதான் வரவில்லை. பெண் வேடத்தில் அழகாக இருக்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ஓரளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகி ரேணு சவுந்தர் கிராமத்துப் பெண் வேடத்தில் கச்சிதம். நடனத்திலும் ஈர்க்கிறார்.
மற்ற நடிகர் நடிகர்கள் புதுமுகங்கள் என்பதால் மன்னித்து விடலாம்.

சுகமாய் வருடும் காதல் பாட்டு, குத்துப் பாட்டு என ரகத்துக்கு இரண்டு கொடுத்து ரகளை செய்திருக்கிறது எல்.வி.கணேஷ் & ஜுபின் கூட்டணி. மலைக்கிராமத்தின் பச்சைப் பசேல் அழகை சுழன்று சுருட்டியிருக்கிறது எஸ்.ஸ்ரீராமின் கேமரா.
வித்தியாசமான கதையை கலகலப்பாக சொல்ல முயற்சி செய்து இருக்கிறார் இயக்குனர் எஸ்.குமார். கதாபாத்திரங்களிடையே வேலை வாங்கி இருக்கலாம்.
மொத்தத்தில் கடத்தல்காரன் சுமாரானவன்.
தமிழ் சினிமாவின் பல படங்களுக்கு வசனம் எழுதி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்த ஈரோடு சவுந்தர் இன்று காலமானார்.
முதல் சீதனம், சிம்மராசி படங்களையும் இயக்கியவர் ஈரோடு சவுந்தர். சேரன் பாண்டியன், நாட்டாமை, பரம்பரை, சமுத்திரம் போன்ற படங்களுக்கு கதை, வசனம் எழுதியவர். சேரன் பாண்டியன், நாட்டாமை படத்தின் கதைக்காகவும், சிம்மராசி படத்திற்கு வசனத்திற்காகவும் தமிழக அரசு விருது பெற்றவர். ரஜினியுடன் லிங்கா, கமலுடன் தசாவதாரம் ஆகிய படங்களில் ஈரோடு சவுந்தர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஈரோடு சவுந்தர் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஈரோடு சவுந்தர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
63 வயதாகும் ஈரோடு சவுந்தருக்கு வளர்மதி என்ற மனைவியும், கலையரசி, காயத்ரி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். ஈரோடு சவுந்தரின் இறுதி சடங்கு நாளை நடைபெற இருக்கிறது.
டி ராஜேந்தர் தொடங்கியுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன் இணைய இருக்கிறார்.
டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக விழா இன்று (5th Dec) நடைபெற்றது. இதில், செயலாளர்கள் - N. சுபாஷ் சந்திர போஸ், JSK. சதிஷ் குமார், பொருளாளர் - K.ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில்,

1. புதிய, சிறிய படத்தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி உருவாக்க நினைக்கிறோம்.
2. VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவீனங்களை தவீர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம்.

3. திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கி தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடுவதற்க்கு, புதிய, உரிய வழி காட்டுவோம்.
4. F.M.S, சாட்டிலைட், O.T.T. மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தை பெருக்கி லாபம் ஓட்ட முயற்சி மேற்கொள்வோம்.
5. பட வெளியீட்டின் போது ஏற்படும் பல வித சிக்கல்களை, இயன்றவரை சுமுகமாக பேசி தீர்க்க ஆவண செய்வோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான திருமதி உஷா ராஜேந்தர், STR பிக்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் இந்த சங்கத்தில் உறுப்பினராக
இணைகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமான நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பெருமளவில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர்பட்டாளத்தை கொண்டவர் நடிகர் கவின். ஆர்.ஜேவாக அறிமுகமான இவர் தொலைக்காட்சியில் கனா காணும், சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து கவினுக்கு பட வாய்ப்புகள் கிடைத்தநிலையில் இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். பின்னரே அவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. மேலும் பிக்பாஸ் வீட்டில் அபிராமி, சாக்ஷி ஆகியோருடன் ரொமான்ஸ் மற்றும் லாஸ்லியாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் கவினுக்கு திருமணம் என தகவல்கள் தீயாய் பரவி வருகிறது. ஸ்டைலிஸ்ட் ஒருவரை கவின் காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி தலைவி படக்குழுவினர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதல்வர் என தமிழக அரசியலில் அசைக்க முடியாத தலைவியாக இரும்பு பெண்மணியாக உலா வந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அதிமுகவினர் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய ஜெயலலிதா நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். இதில் மறைந்த முதல்வர் எம்ஜிஆர் உடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார். இவரது வாழ்க்கை கதை தலைவி என்ற பெயரில் உருவாகி வருகிறது.

தலைவி படத்தில் கங்கனா ரனாவத், ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜெயலலிதாவின் மறைவு தினத்தை ஒட்டி தலைவி படக்குழுவினர், படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் லலித் வெளியிடுகிறார். மாஸ்டர் படத்தின் டீசர் கடந்த தீபாவளி அன்று வெளியாகி 4.3 கோடி பார்வையாளர்களுடன் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டிரெய்லரை வரும் ஜனவரி 1ந் தேதி அதிகாலை ஒரு மணிக்கு படக்குழுவினர் வெளியிடப் போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் டீசர் சில மணி நேரங்களில் கோடிக்கணக்கானோர் பார்த்து வைரலான நிலையில், தற்போது டிரெய்லருக்கு விஜயின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால் தற்போது புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சாக்ஷி சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் போராளியாக ‘புரவி’ படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகைகள் பலரும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் சொல்லி வருகிறார்கள். ஆனால் சாக்ஷி அகர்வால் தினமும் உடற்பயிற்சி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். மேலும் ரசிகர்கள் பலரும் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் என்றும் அறிவுரை சொல்லி வருகிறார்.

எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி அகர்வால், தற்போது புடவையில் கிராமத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.
திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் உடைய விஜயகுமார், அநேகமாக எல்லா டைரக்டர்களின் படங்களிலும் நடித்துள்ளார்.
திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் உடைய விஜயகுமார், அநேகமாக எல்லா டைரக்டர்களின் படங்களிலும் நடித்துள்ளார். அந்த டைரக்டர்களுடன் ஏற்பட்ட அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:-
ஒரு கதையை எப்படி படமாக்குவது என்பதை, இன்றைய இளம் இயக்குனர்கள்வரை இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். இவரது இயக்கத்தில் நான் நடித்த "அழகே உன்னை ஆராதிக்கிறேன்'' படத்திலேயே ரசிகர்களின் நாடித்துடிப்பை எந்த அளவுக்கு தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார் என்று உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. காதல் உணர்வுகளை திரையில் இத்தனை அழுத்தமாக பதிவு செய்தவர்கள் வேறு எவரும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இவர் டயலாக் சொல்லித் தரும்போதே நமது கேரக்டரை நமக்குள் விதைத்து விடுவார். சிறியவர்களைக்கூட `நீங்க... வாங்க...' என்று மரியாதையுடன் அழைப்பார்.
இந்தியா - இலங்கை கூட்டுத் தயாரிப்பாக சிவாஜி நடித்த "பைலட் பிரேம்நாத்'' படத்தை ஒரு டைரக்டருக்கான எந்த டென்ஷனும் இல்லாமல் இவர் இயக்கியதை பார்த்து வியந்திருக்கிறேன். நானும் ரஜினியும், ஸ்ரீதேவியும் நடித்த "வணக்கத்துக்குரிய காதலியே'' படத்தையும்
இயக்கினார்.எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பிரபலங்களை இயக்கியவர், என் போன்ற அந்நாளைய புதுமுகங்களை இயக்கும்போதும் தனக்கே உரிய அவையடக்கத்துடன்தான் காணப்படுவார். புதுமை விரும்பியான இவரது படங்களில் புதுமையான விஷயங்களை ஆர்வத்துடன் வெளிப்படுத்துவார். எம்.ஏ. முதுகலைப் பட்டதாரியான இவர், எப்போதும் எங்களிடம் சொல்லும் வாசகம்: "கற்றது கையளவு; கல்லாதது உலகளவு.''
நான் அதிகப் படங்களில் நடித்திருப்பது இவரது இயக்கத்தில்தான். "செந்தமிழ்ப்பாட்டு'' படத்தின் வெற்றி விழாவில் இவர் பேசும்போது, "மறைந்த குணசித்ர நடிகர் எஸ்.வி.ரெங்காராவின் இடத்தை நிரப்ப தமிழ் சினிமாவில் யாரும் இல்லையே என்ற வருத்தம் எனக்கிருந்தது. விஜயகுமாரின் நடிப்பை பார்த்த பிறகு அந்தக் கவலை நீங்கி விட்டது. குணசித்ர நடிப்பில் எஸ்.வி.ரெங்காராவை கண்முன் நிறுத்துகிறார்'' என்று இவர் பாராட்டியபோது, நெகிழ்ந்து போனேன்.
"வேலை கிடைச்சிடுச்சு'' படத்தின் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. அவுட்டோரில் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் டைரக்டர் பி.வாசுவுக்கு பக்கத்து ரூம் என் ரூமாக இருக்கும். படத்தில் என் கேரக்டர் பற்றி அன்றைய இரவு தூங்கப்போகும் நேரத்தில் அவரிடம் ஒரு சந்தேகம் கேட்டேன். உடனே சிறு குழந்தை போல உற்சாகமானவர், படத்தின் முழுக்கதையையும் காட்சி வாரியாக சொல்லத் தொடங்கி விட்டார். "தூக்கம் கெட்டு விடுமே. நாளை படப்பிடிப்பு பாதிக்குமே'' என்றெல்லாம் எண்ணாமல், நம்மிடம் சந்தேகம் கேட்பவரின் சந்தேகம் தீரவேண்டுமானால் முழுக்கதையையும் சொல்வதே சரியாக இருக்கும் என்று முடிவெடுத்தாரே, இந்த முன்னோக்குப் பார்வைதான் அவரது வெற்றிக்கு காரணம்.
"சின்னத்தம்பி'' இவரது இயக்கத்தில் மாபெரும் வெற்றிப் படம். இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்பதை, ஒருமுறை நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது விளையாட்டாக குறிப்பிட்டு விட்டேன். அதற்கு அவர், "விஜயகுமார் சார்! உங்களுக்கு தருகிற மாதிரி அதில் கேரக்டர் இல்லை'' என்று சொன்னார். நானும் விடவில்லை. ஒரு படத்தின் கதையை உருவாக்கும் படைப்பாளி நீங்கள். உங்களுக்கு எனக்கும் ஒரு கேரக்டர் வைத்து கதை தரமுடியாதா?'' என்று கேட்டேன்.
நான் இப்படிக் கேட்டதுகூட விளையாட்டு ரீதியில்தான். ஆனால் அவரோ அதை சீரியாசாக எடுத்துக் கொண்டு அடுத்து உருவாக்கிய கதைகளில் எனக்கும் ஒரு கேரக்டர் வருகிற மாதிரி பார்த்துக் கொண்டார். கதைக்குள் வாழ்கிற இயக்குனர் என்று தாராளமாக இவரைச் சொல்லலாம்.
"புதுவசந்தம்'' படத்தில், டைரக்டர் விக்ரமனிடம் அசோசியேட்டாக இருந்தபோதே இவரை எனக்குத் தெரியும். ஒரு நட்சத்திர தம்பதிகள், சிறந்த ஜோடியை தேர்வு செய்கிற மாதிரி ஒரு காட்சி அந்தப் படத்தில் இருந்திருக்கிறது. இதற்காக என்னை சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார், "நட்சத்திர தம்பதிகளாக நீங்களும், மஞ்சுளா மேடமும் படத்தில் தோன்ற முடியுமா?'' என்று கேட்டார். கதையின் முக்கியத்துவம் கருதி ஒப்புக்கொண்டு நடித்தும் கொடுத்தோம்.
இதற்கான படப்பிடிப்பு, சென்னையை அடுத்த முட்டுக்காட்டில் நடந்தது. அப்போதுதான் தயாரிப்பு நிர்வாகியாக சினிமாவுக்குள் வந்து இப்போது விக்ரமனிடம் இணை இயக்குனராகி இருப்பது தெரிய வந்தது. நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து கலை ஆர்வத்தில் சினிமாவுக்கு வந்திருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
ஒரு சினிமாவில் தயாரிப்பு நிர்வாகம் என்பது ரொம்ப முக்கியமானது. தயாரிப்பு நிர்வாகம் சரியாக அமைந்தால் எல்லாமே சரியாக இயங்கும். ஒரு தயாரிப்பாளருக்கு உரிய நடைமுறை சிரமங்கள் இந்தப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தெரியும் என்பதால், இவர்களே இயக்குனர் பொறுப்புக்கு வரும்போது தேவையற்ற செலவுகள் இன்றி குறித்த பட்ஜெட்டுக்குள், குறிப்பிட்ட நாட்களுக்குள் படத்தை முடித்து விடமுடியும்.
ஆலிவுட்டில் உள்ள யுனிவர்சல் ஸ்டூடியோவுக்கு சினிமா பற்றி தெரிந்து கொள்ள போகிறவர்களுக்கு, முதலில் அவர்கள் "தயாரிப்பு நிர்வாகம்'' குறித்தே விளக்கம் தருகிறார்கள். தயாரிப்பு நிர்வாகம் சரியாக அமைந்தால், எடுக்கப்போகிற படம் சரியாக அமைந்து விடும். இந்த தயாரிப்பு நிர்வாகப் பின்னணி தெரிந்த இயக்குனரை, யாரும் ஏமாற்றி விடமுடியாது.
இப்படி தயாரிப்புத்துறை பற்றி அக்குவேறு ஆணிவேறாக அவர் தெரிந்து வைத்திருப்பதுதான், சினிமாவில் அவருக்கான இடத்தை நிலையாக வைத்திருக்கிறது.
சேரன் பாண்டியன் படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது, "சார்! நான் மந்தைவெளியில் இருந்தபோதே உங்களை பார்த்திருக்கிறேன். மோட்டார் சைக்கிளில் சுற்றிக்கொண்டு இருப்பீர்கள்'' என்றார்.
"சேரன் பாண்டியன்'' படத்தில், அவரது திட்டமிட்ட இயக்கம் என்னைக் கவர்ந்தது. அதனால் ரஜினியிடம், "ஒரு நல்ல டைரக்டர் இருக்கிறார். ரொம்ப பாஸ்ட்! அதே அளவுக்கு குவாலிட்டி! இவரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' என்றேன்.
இதன் பிறகு ரஜினி நடிக்கும் "முத்து'' படத்தை ரவிக்குமார் இயக்குகிறார் என்ற செய்தி பத்திரிகைகளில் வந்தது.
ரவிக்குமாரின் படம் இயக்கும் நேர்த்தி ரஜினியையும் கவர, கமல் பட விழா ஒன்றில் கலந்து கொண்ட ரஜினி அதை மேடையிலேயே வெளிப்படையாக பேசினார். "என் படத்தை இயக்கி வரும் ரவிக்குமார் திட்டமிட்டு பணியாற்றும் மிகச்சிறந்த இயக்குனர். `உங்கள் படத்தில் ரவிக்குமாரை போடுங்கள்' என்று எனக்கு விஜயகுமார்தான் சொன்னார். அவர் சொன்னதை ரவிக்குமாரும் நூற்றுக்கு நூறு உறுதிப்படுத்தியிருக்கிறார்'' என்று பாராட்டினார்.
நான் நடிக்க வந்த புதிதில் வியந்த இயக்குனர்களுள் ஒருவர் எஸ்.பி.முத்துராமன். ஒரு இயக்குனரின் வெற்றி என்பது, அவரது நல்ல அணுகுமுறையிலும் இருக்கிறது என்பதை அனுபவபூர்வமாக உணர வைத்தவர்.
இவரது இயக்கத்தில் "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது'', "மயங்குகிறாள் ஒரு மாது'', "மோகம் முப்பது வருஷம்'' போன்ற படங்களில் நடித்திருக்கிறேன்.
இன்றைக்கு `தயாரிப்பாளர்களின் இயக்குனர்' என்ற பட்டியலில் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் போன்றோர் இருந்தாலும், இவர்களுக்கு முன்னோடி எஸ்.பி.எம். அவர்கள்தான். `டென்ஷனே' இல்லாமல், நேர்த்தியாக நடிகர்களை வேலை வாங்கும் இவர், புதிய இயக்குனர்களின் படைப்புக்களையும் பார்த்து பாராட்டும் பண்பு கொண்டவர்.
என் மகளை மணந்தவர் என்ற முறையில் ஹரி, என் மாப்பிள்ளை. ஆனால் படத்தில் நான் நடிகன்; அவர் இயக்குனர். "சாமி'', "தாமிரபரணி'' என இவரது இயக்கத்தில் 2 படங்களில் நடிக்க வைத்திருக்கிறார்.
`சுறுசுறுப்பு' இவரது பலம். காட்சிகளை விவரிக்கும்போது, இவரது `முகபாவம்' மூலமே அந்த கேரக்டரை தெரிந்து கொண்டுவிட முடியும். என் நண்பர்கள் பலரும், "மருமகன் படங்களில் அதிகம் நடிப்பதில்லையா?'' என்று கேட்பதுண்டு. `நானும் சிபாரிசு மூலம் வாய்ப்பு தேடுவதில்லை. அவரும் எனக்கான கேரக்டர் இருந்தால் மட்டுமே வாய்ப்பு தருவார்'' என்று அவர்களிடம் பதில் சொல்லியிருக்கிறேன்.''
நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் வலம் வரும் குஷ்பு, அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன் என்று சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.
1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் பி.வாசு இயக்கத்தில் வெளியான 'நடிகன்', 'சின்ன தம்பி', 'கிழக்கு கரை', 'மன்னன்', 'ரிக்ஷா மாமா', 'இது நம்ம பூமி', 'அம்மா வந்தாச்சு' உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். இதில் பல படங்கள் பெரும் வரவேற்பு பெற்றது.

தற்போது, பி.வாசு குறித்து குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில், "எனது குரு, எனக்கு மிகவும் பிடித்தமானவர். என்னை நன்றாகப் புரிந்துகொண்ட ஒரு இயக்குநர். எனக்குள்ளிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்த இயக்குநர் பி.வாசுதான்.
எனது திரை வாழ்க்கையைச் செதுக்கியதில் அவருக்குப் பெரிய பங்குண்டு. அவருக்கு எப்போதும் கடன்பட்டிருப்பேன். அவர் மகளின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். மிகவும் ரசித்தேன். பல உணர்வுகளை இது சொல்கிறது".
இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.
மது ஜி கமலம் இயக்கத்தில் அஞ்சிதா ஸ்ரீ, ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இது என் காதல் புத்தகம் படத்தின் விமர்சனம்.
சுந்தரகாண்டம் என்னும் ஊரில் தலைவராக இருப்பவர், மக்கள் யாரும் படிக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார். படுத்துவிட்டால் அனைவரும் பெரிய ஆள் ஆகி விடுவார்கள் என்று பள்ளிக்கூடம் கூட கட்டாமல் இருக்கிறார்.

ஆனால் தலைவரின் மகளான நாயகி அஞ்சிதா ஸ்ரீ படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். வளர்ந்தவுடன் நண்பர் ஒருவர் மூலமாக கதை புத்தகங்களை வாங்கி படிக்கிறார். கதாசிரியர் ஜெமிஜேகப் எழுதிய கதைகளை படித்து அவருக்கு ரசிகை ஆகிறார் அஞ்சிதா ஸ்ரீ.
படிப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு தந்தையிடம் கூற, அதற்கு அவர் படிப்பு வேண்டாம் என்று கூறி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். திருமணத்திற்கு பயந்து கதாசிரியர் ஜெமிஜேகப் தேடி ஊரை விட்டு செல்கிறார்.

இறுதியில் கதாசிரியரை தேடிச்சென்ற அஞ்சிதா ஸ்ரீ வாழ்க்கை என்ன ஆனது? படிக்கும் ஆர்வம் நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் அஞ்சிதா ஸ்ரீ, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதாநாயகி அதிகம் முக்கியத்துவம் உள்ள படம் என்பதை உணர்ந்து ஓரளவிற்கு நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களான ஜெமிஜேகப், ராஜேஷ்ராஜ், சூரஜ்சன்னி, கர்னல் மோகன்தாஸ், கொலப்புள்ளி லீலா ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

பெண்களுக்கு கல்வி இன்றியமையாதது என்கிற கருத்தை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் மது ஜி கமலம். நல்ல கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் திரைக்கதையில் தடுமாறியிருக்கிறார். திரைக்கதை எதை நோக்கிச் செல்வது என்று தெரியாமல் செல்கிறது. அடுத்தடுத்து காட்சிகள் சம்பந்தமில்லாமல் இருப்பது தேவையில்லாத கதாபாத்திரங்கள் படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.
ஸ்ரீ மாதவ் இசையில் வைக்கம் விஜயலட்சுமி பாடிய பாடல் மட்டும் கேட்கும் ரகம். அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் 'இது என் காதல் புத்தகம்' படிக்க முடியவில்லை.