என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கேட்ட கேள்விக்கு திணறுகிறார்கள்.
    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று வெளியான புரோமோவில், நீங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இந்த 60 நாட்களில் என்ன செய்தீர்கள் என்று ரசிகர்களுக்கு கூறுமாறு பிக்பாஸ் கூறுகிறார்.

    அதற்கு ஷிவானி,கேபி, ஆஜீத், சோம் ஆகியோர் என்ன கூறுவது என்று திணறுகின்றனர். ரம்யாவிடம் இந்த வாய்ப்பு மறுபடியும் வராது ரம்யா என்றும், இந்த மாதிரி பேசுறதுக்கு வேற வாய்ப்பு கிடைக்குமா என்று சோமிடமும், 60 நாட்கள் எதுவே ஞாபகம் வரவில்லையா என்று சோமிடமும் பிக்பாஸ் கேட்கிறார்.

    போட்டியாளர்கள்

     அனிதா நான் அனைவருக்கும் ஹெயர் ஸ்டைல் செய்து கொடுத்ததாக கூறுகிறார். மொத்தத்தில் வீட்டுக்குள் சண்டைய மட்டும் நடத்திற்று இருக்காங்க, சொல்ற அளவுக்கு எதுவும் யாரும் பண்ணவில்லை என்று திணறுவதாக வீடியோவை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 
    நடிகை ஜெயசித்ராவின் கணவரும் இசை அமைப்பாளர் அம்ரிஷ் தந்தையுமான கணேஷ் இன்று காலமானார்.
    நடிகர்கள் சிவாஜி கணேசன், ரஜினி, கமல் உள்ளிட்ட பலருடன் நடித்தவர் நடிகை ஜெயசித்ரா. தமிழ் மட்டுமின்றி ஏராளமான தெலுங்கு படங்களிலும் மலையாளம் கன்னடம் படங்களிலும் நடித்துள்ளார்.  

    இந்த நிலையில் ஜெயசித்ராவின் கணவர் கணேஷ் என்பவர் இன்று திருச்சியில் இன்று காலமானார். ஜெயசித்ராவின் கணவரின் மறைவை அடுத்து திரையுலகினர் அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கும்பகோணத்தில் பிறந்த அவர் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகை ஜெயசித்ராவின் கணவர்

    நடிகை ஜெயசித்ரா கடந்த 1983-ம் ஆண்டு கணேஷை திருமணம் செய்து கொண்டார். ஜெயசித்ரா-கணேஷ் தம்பதிக்கு அம்ரிஷ் என்ற மகன் உள்ளார். இவர் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், சினிமாவில் 28 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கோவிலில் சிறப்பு அர்ச்சனை செய்து இருக்கிறார்கள்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் ‛28YearsOfBeIovedVlJAY‘ '28YearsOfVijayism' என்கிற ஹேஷ்டேக்கள் டிரெண்டாகி வருகிறது. 

    விஜய் ரசிகர்கள்

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ரசிகர்கள் கோவிலில் விஜய் புகைப்படத்தை வைத்து சிறப்பு அர்ச்சனை செய்து இருக்கிறார்கள். விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தை திரையில் காண ஆர்வமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா வழியை பார்வதி நாயர் பின்பற்றி ஒரு படத்தில் நடிக்கிறார்.
    விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'க/பெ ரணசிங்கம்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 'டாக்டர்', 'அயலான்', 'டிக்கிலோனா' உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்து வருகிறது.

    இந்த படங்களின் வரிசையில் தங்களுடைய புதிய படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் தாமரை செல்வன் இயக்கத்தில் பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'ரூபம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

     2021-ம் ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி, சென்னையிலேயே முழுப் படத்தையும் படமாக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது. சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் 'ரூபம்' படம் தயாராகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. பார்வதி நாயர் இந்த படத்தில் போலீசாக நடிக்க உள்ளார். 

    ரூபம்

    நயன்தாரா உள்ளிட்ட பல நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வரும் நிலையில், பார்வதி நாயரும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ரூபம் படத்தில் நடிக்கிறார்.
    உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக தேர்வான இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்டிருக்கிறார் இளையராஜா.
    இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் இசைவாணி தான்.

    இந்த தகவலை அறிந்த இசைஞானி இளையராஜா, இசைவாணியை நேரில் அழைத்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். மேலும் இசைவாணியை பாடச்சொல்லி ரசித்துக் கேட்டிருக்கிறார். 

    இசைவாணி

    இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தேனே” மற்றும் “கானக் கருங்குயிலே” ஆகிய பாடல்களை பாடிக் காண்பித்திருக்கிறார் இசைவாணி. மேலும், “ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறி மகிழ்ந்திருக்கிறார் இசைஞானி.
    கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் ஹரீஸ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஓமணப்பெண்ணே படத்தின் முன்னோட்டம்.
    ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘பெல்லி சூப்பலு’ என்ற தெலுங்கு படத்தின் தமிழ் பதிப்பு தான் ஓமணப்பெண்ணே. ஹரீஸ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் காதல் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். “ஹரீஸ் கல்யாண் நடித்த ‘தாராள பிரபு,’ ‘ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய 2 படங்களும் வெற்றிகரமாக ஓடியதால், ‘ஓமணப்பெண்ணே’ படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது” என்கிறார், படத்தின் டைரக்டர் கார்த்திக் சுந்தர். 

    “இந்த படத்துக்குப்பின் ஹரீஸ் கல்யாணின் நட்சத்திர அந்தஸ்து மேலும் பல படிகள் உயரும்” என்று தயாரிப்பாளர்கள் கொனேரு சத்யநாராயணா, ரமேஷ் வர்மா பென்மட்சா ஆகிய இருவரும் சொல்கிறார்கள். “படத்தின் கதைப்படி, ஹரீஸ் கல்யாண் பக்கத்து வீட்டு பையன் போல் இருப்பார். சமையல் கலையில் ஆர்வம் உள்ளவர். அம்மா, அப்பாவின் கட்டாயத்தால் என்ஜினீயரிங் படிக்கிறார். கதாநாயகி பிரியா பவானி சங்கர், ‘எம்.பி.ஏ.’ பட்டதாரி. துணிச்சல் மிகுந்த பெண். 

    படம் முழுவதும் சென்னையில் வளர்ந்து இருக்கிறது. 30 நாட்களில் படப்பிடிப்பு முழுவதையும் முடித்து விட்டோம். இப்போது இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன” என்கிறார், டைரக்டர் கார்த்திக் சுந்தர்.
    ரஜினியை வைத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர், விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்னதாக தெரிவித்துள்ளார்.
    இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து படங்களை இயக்கி வெற்றி கண்டார். 

    இவர் தற்போது ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்கிற படத்தை இயக்கி உள்ளார். ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

    பா.இரஞ்சித்

    இந்நிலையில், நடிகர் விஜய்க்கு தான் கூறிய கதையை பற்றி சமீபத்திய பேட்டியில் இரஞ்சித் கூறியுள்ளார். அதில், காலா படத்திற்கு பின் விஜய்யை சந்தித்து கதை சொன்னேன். அது ஒரு சூப்பர் ஹீரோ கதை. அந்தக்கதை விஜய்க்கும் பிடித்திருந்தது. அது படமாக உருவாவதற்காக காத்திருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
    கடந்த மூன்று ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த நடிகை ஸ்ரீதிவ்யா, அடுத்ததாக இளம் நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம்.
    ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்  பெற்றது. இதையடுத்து காக்கிசட்டை, காஷ்மோரா, ஜீவா, ஈட்டி, மருது என அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வந்த அவர், கடைசியாக 2017ம் ஆண்டு வெளியான ‛சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற திரைப்படத்தில் நடித்தார். 

    அதன் பின்னர் 3 வருடங்களாக அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் பாணா காத்தாடி பட இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.  

    கவுதம் கார்த்திக்

    இந்த படத்தில் கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்க உள்ளார். இதில் ஸ்ரீதிவ்யா பிசியோதெரபி மருத்துவராக  நடிக்க உள்ளதாகவும் அவரது கதாபாத்திரத்தை சுற்றித்தான் கதை பின்னப்பட்டு இருப்பதாகவும் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.    

    இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க இருப்பதாகவும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் கதை என்றும் அவர் கூறியுள்ளார்.
    நடிகர் விஜய், இயக்குனர் அட்லீயின் அலுவலகத்திற்கு சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. அடுத்ததாக அவரின் 65-வது படத்தை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். ஏற்கனவே 65-வது படத்தை இயக்குவதாக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் சம்பள பிரச்சினை காரணமாக படத்திலிருந்து விலகி விட்டார். இதனால் விஜய்யின் புதிய படத்தை இயக்குவோர் பட்டியலில் மகிழ் திருமேனி, நெல்சன், பேரரசு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் உள்ளனர். 


    இயக்குனர் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், நடிகர் விஜய், இயக்குனர் அட்லீயின் அலுவலகத்திற்கு சென்றுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின் போது புதிய படம் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இயக்குனர் அட்லீ, ஏற்கனவே நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகையின் தந்தை திடீரென மரணமடைந்தது திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சசிகுமார் நடித்த வெற்றிவேல் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நிகிலா விமல். பின்னர் கிடாரி படத்திலும் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். கடந்தாண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற தம்பி படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் அடுத்ததாக ரங்கா படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

    நிகிலா விமல் 

    இந்நிலையில், நடிகை நிகிலா விமலின் தந்தை பவித்ரன் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 61. கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணமடைந்தார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையான ராஷி கண்ணா, அடுத்ததாக விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    சூர்யா-ஹரி கூட்டணி, தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான ஆறு, வேல், சிங்கம் பட வரிசைகள் என அனைத்தும் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தன. இதனிடையே ஹரியும் சூர்யாவும் ‘அருவா’ படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. 

    ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடித்து படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருந்தனர். கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் இப்படம் கைவிடப்பட்டது. இதையடுத்து இயக்குனர் ஹரி விக்ரமுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் பரவின. 

    ராஷி கண்ணா

    இந்நிலையில் அப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. அருவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், சினிமாவில் 28 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
    நடிகர் விஜய் கடந்த 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கி இருந்தார். நாளைய தீர்ப்பு படத்திற்கு எதிர்பார்த்த விமர்சனங்கள் கிடைக்கவில்லை. பின்னர் வந்த படங்களும் விஜய்க்கு கைகொடுக்கவில்லை. நான்கு ஆண்டுகள் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஜய் பூவே உனக்காக படம் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்தார்.

     இதையடுத்து தனது கடின உழைப்பால் திரையுலகில் படிப்படியாக உயர்ந்த விஜய், திருமலை படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இதையடுத்து அவர் நடித்த கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி ஆகிய படங்கள் அடுத்தடுத்து ஹிட்டானது மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக் குவித்தது.  

    விஜய்

    தொடர்ந்து துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களில் சமூகக் கருத்துக்களையும் பேசத் தொடங்கிய விஜய், இப்படங்கள் மூலம் ரசிகர் வட்டத்தை பெரிதாக்கினார்.  இதையடுத்து இவர் நடித்த மெர்சல் 200 கோடி ரூபாய் வசூலையும், பிகில் 300 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டி சாதனை படைத்தது. 

    தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் விஜய் சினிமாவில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் ‛28YearsOfBeIovedVlJAY‘ என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

    இந்த 28 ஆண்டுகளில் விஜய் இதுவரை 64 படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் 64வது படமான மாஸ்டர் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருப்பதால், இதுவும் வசூலில் புதிய உச்சம் தொடும் என்பதில் சந்தேகமில்லை.
    ×