என் மலர்
சினிமா செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதால், அண்ணாத்த தான் அவரின் கடைசி படமாக இருக்கக்கூடும் என தகவல் பரவி வருகிறது.
வருகிற ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். இதனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வி ரஜினியிடம் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்து கொடுப்பது எனது கடமை. இன்னும் 40 சதவீத படப்பிடிப்பு எஞ்சியுள்ளது என கூறினார்.

ரஜினிகாந்த் முழுமையாக அரசியலில் இறங்கிவிட்டால் படங்களில் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. மேலும் அண்ணாத்த படம் தான் அவரின் கடைசி படமாக இருக்கக்கூடும் என தகவல் பரவி வருகிறது. தற்போது ரஜினியின் கைவசம் அண்ணாத்த படம் மட்டுமே உள்ளது. தற்போதைய நிலவரப்படி அவர் வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பாளரின் லுங்கியை திருடியதாக நடிகையும், பாடகியுமான சுருதிஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதி ஹாசன் இந்தியில் அறிமுகமாகி பின்னர் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஒரு ரவுண்டு வந்தார். இவர் நடித்த படங்கள் கடைசியாக 2017-ல் வெளியாகின. அதன் பின்னர் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் சுருதிஹாசன்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் சமீபத்தில் பிகினி உடை மீது லுங்கி அணிந்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
அந்தப் பதிவில், உங்கள் லுங்கியைத் திருடியதற்கு மன்னியுங்கள் என தயாரிப்பாளர் ரேயன் ஸ்டெபனை குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த ரேயன், நீயே வச்சிக்கோ சுருதிமா என பதிவிட்டுள்ளார்.
கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் பல்வேறு மனிதநேயமிக்க செயல்களை செய்து வந்த சோனு சூட்டுக்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து, தற்போது வரை தன்னால் இயன்ற உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வருகிறார்.

குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழை மாணவர்களுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்தது என இவர் செய்த உதவிகள் ஏராளம்.

இந்நிலையில் இவரது மனிதநேயமிக்க சேவைகளை கவுரவப்படுத்தும் விதமாக, ஆந்திராவில் உள்ள சரத்சந்திரா ஐஏஎஸ் அகாடமி, சரத்சந்திரா கல்லூரி, சரத்சந்திரா ஜூனியர் கல்லூரி ஆகியவற்றில், ஒரு துறைக்கு சோனு சூட்டின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்காக தான் மிகவும் பெருமைப்படுவதாகவும், இது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் சோனு சூட் கூறியுள்ளார்
"பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஹீரோவாகி விட்ட நடிகர் விஜயகுமார், தொடர்ந்து வந்த வாய்ப்புகளில் `பிசி'யாகி விட்டார். அவர் நடிப்பில் ஒரே நாளில் 2 படங்கள் கூட பூஜை போடப்பட்டன.
"பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஹீரோவாகி விட்ட நடிகர் விஜயகுமார், தொடர்ந்து வந்த வாய்ப்புகளில் `பிசி'யாகி விட்டார். அவர் நடிப்பில் ஒரே நாளில் 2 படங்கள் கூட பூஜை போடப்பட்டன.
பி.மாதவன் டைரக்ஷனில் சிவகுமாரும், விஜயகுமாரும் இரண்டு நாயகர்களாக நடித்த "பொண்ணுக்கு தங்க மனசு'' படம் 2-6-1973-ல் வெளிவந்து, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, வெற்றிகரமாக ஓடியது. இதனால் பட அதிபர்களின் பார்வை புது நாயகன் விஜயகுமார் மீது திரும்பியது. டைரக்டர் கே.பாலச்சந்தர் இயக்கிய "அவள் ஒரு தொடர்கதை'' படத்தில் கதாநாயகன் வேடம் கிடைத்தது. அந்தப்படம் `வெள்ளி விழா' கொண்டாடியதில் விஜயகுமாரும் பிரபலம் ஆனார்.
டைரக்டர் பி.மாதவனும் அவர் இயக்கிய "சங்கர் சலீம் சைமன்'', "என் கேள்விக்கு என்ன பதில்'' என்று தொடர்ந்து விஜயகுமாரை நடிக்க வைத்தார். இதில் சிவாஜி - ஜெயலலிதாவை வைத்து அவர் இயக்கிய "பாட்டும் பரதமும்'' படமும் அடங்கும்.
விஜயகுமார் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய நேரத்தில், கமலஹாசனும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தார். சமகால ஹீரோ என்ற முறையில் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் நண்பர்களை ரொம்பவும் நெருக்கமாகியது.
அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-
"நடிக்கத் தொடங்கிய புதிதில், கமல் எனக்கு நண்பரானார். திறமை எங்கிருந்தாலும் அதை தேடிக் கண்டுபிடித்து பாராட்டும் குணம் அவருக்கு உண்டு.
படப்பிடிப்பில் ஏற்பட்ட எங்கள் நட்பு, நான் அவரது வீட்டுக்கு போய்வரும் அளவுக்கு வளர்ந்தது. காலையில் நானும் கமலும் வாக்கிங் போய்வருவோம். கமலின் அம்மா என்னிடம் மிகவும் அன்பு காட்டுவார்.
ஒரு முறை கமல் இரட்டைப்புலி நகம் கோர்த்த சங்கிலி அணிந்திருந்தார். அது அவருக்கு அழகாக இருந்தது. `எனக்கும் இது மாதிரி ஒன்று கிடைக்குமா?' என்று ஒரு ஆர்வத்தில் வாய்விட்டுக் கேட்டுவிட்டேன். இது கமலின் அம்மாவுக்கும் கேட்டுவிட்டது. உடனே அவர் கமலிடம், "தம்பிக்கும் இதுமாதிரி ஒண்ணு வாங்கிக் கொடுப்பா'' என்றார். தாய் சொல்லைத் தட்டாத கமலும் மறுநாளே புலி நகம் கோர்த்த தங்கச் சங்கிலி ஒன்றை வாங்கி என் கழுத்தில் போட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
கமலின் அண்ணன் சாருஹாசன் என்ன "மாப்பிள்ளை'' என்றே கூப்பிடுவார். அதனால் கமலுக்கும் நான் "மாப்பிள்ளை'' ஆனேன்.
டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய "ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது'' படத்தில் இரண்டு பேருக்குமே பெயர் வரக்கூடிய கேரக்டர்கள் அமைந்தன.
புதுமுகங்கள் நடித்த படங்கள், பெரும்பாலும் வித்தியாசமான கதைக் களத்தில் அமைந்திருந்ததால், ரசிகர்களின் வரவேற்பு கிடைத்தது. தயாரிப்பாளர்களுக்கு லாபமும் வந்தன.
இதனால் புதிய தயாரிப்பாளர்கள் வரத் தொடங்கினார்கள். அப்போது நான் நடிக்கிற படங்களே ஒரு நாளைக்கு 2 படங்களுக்கு பூஜை என்கிற அளவுக்கு உயர்ந்தது.
இதற்காக, ஒருநாள் கமல் என்னிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டார். "மாப்ளே! இந்த மாதிரி தப்பு பண்ணாதீங்க'' என்றார்.
அவர் சொன்னதில் இருந்த நியாயம் புரிந்தது. அதன் பிறகு நல்ல கம்பெனியா என்று பார்த்து, படங்களை ஒப்புக்கொள்ளத்
தொடங்கினேன்.எத்தனையோ வருடங்கள் கடந்து போனாலும், இன்றைக்கும் என் நல்ல நண்பர் கமல்.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
தொடர்ந்து நடித்து வந்த படங்களில் விஜயகுமாருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் "தீபம்.''
நடிகர் பாலாஜி தயாரித்த இந்தப்படத்தில் சிவாஜியின் தம்பியாக நடித்தார் விஜயகுமார். கதைப்படி, விஜயகுமார் தனது தம்பி என்பது சிவாஜிக்கு தெரியாது. தம்பியை சுஜாதா காதலித்தது தெரியாமல், சுஜாதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவார் சிவாஜி. இந்த காதல் போராட்டத்தில், அண்ணன் - தம்பி பாசப் போராட்டமும் கலந்து கொண்டது. அதனால் படம் சூப்பர் ஹிட்.
இந்தப் படத்தில் நடிக்கும்போது, நடிகர் திலகம் சிவாஜியிடம் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது, விஜயகுமாருக்கு.
அதுபற்றி கூறுகிறார்:-
"சிவாஜி சாருடன் "பாட்டும் பரதமும்'' படத்தில் நடித்தபோது, நான் புதுமுகம். தவிரவும் என் போர்ஷனும் குறைவானது. ஆனால் `தீபம்' படத்தில் கிடைத்த வாய்ப்பு, அப்படிப்பட்டது அல்ல. அண்ணன் - தம்பிக்கான பாசப்பிணைப்புதான் கதை. அவர் அண்ணன்; நான் தம்பி. கதைப்படி அண்ணன் - தம்பி என்பது தெரியாமல் காட்சிகளில் ஒரு `கண்ணாமூச்சி' ஒளிந்திருக்கும். காட்சிகளும் நெகிழ்ச்சிïட்டுகிற விதத்தில்
அமைந்திருந்தன.இந்தப் படப்பிடிப்பின்போது சிவாஜி சார் என்னிடம் பிரியமாக பேசுவார். "என்னடா விஜயா'' என்றுதான் அழைப்பார்.
அப்போது நான் ஊரில் இருந்த மனைவியை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டேன். என்னிடம் லஞ்ச் பிரேக்கில் உரிமையுடன் "உங்க வீட்டில் இருந்து சாப்பாடு எடுத்திட்டு வாடா!'' என்பார். ஒரு முறை தயங்கித்தயங்கி அவரை எங்கள் வீட்டுக்கு அழைத்தபோது, உடனே என்னுடன் வந்துவிட்டார். அவர் வீட்டுக்கு என்னையும் அழைத்துச் சென்றிருக்கிறார்.
இப்படி நெருக்கமாகி விட்ட ஒருநாள் அவரிடம், நான் நடிக்க வருவதற்கு முன்னதாக கும்பகோணத்திற்கு நாடகத்தில் நடிக்க அவர் வந்தபோது மைல் கணக்கில் சைக்கிளில் வந்து மரத்தில் ஏறி நண்பர்களுடன் அவரைப் பார்த்து பிரமித்ததை சொன்னேன். ஒரு குழந்தை மாதிரி, ஆர்வத்துடன் நான் சொல்லி முடிக்கும்வரை கேட்டார். "நாடகத்தில் நடிக்க வந்தப்போ என்னைப் பார்க்க வந்த கூட்டம் பார்த்து நீ நடிக்க வந்திருக்கே. ஆனா நான் நடிக்க வந்த பின்னணியிலும் நாடகம்தானே இருக்கு விஜயா! வீரபாண்டிய கட்டபொம்மன் தெருக்கூத்து பார்த்தப்புறம்தானே எனக்கும் நடிக்க ஆசை துளிர் விட்டுச்சு'' என்றார்.
டைரக்டர் மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் சிவாஜி சார் நடித்த "இளைய தலைமுறை'' படத்தில் நானும் நடித்தேன். இந்தப் படத்தில் சிவாஜி சார் கல்லூரிப் பேராசிரியர். நான் கல்லூரி மாணவன். கதைப்படி அவருக்கும் எனக்கும் ஒரு `பாக்ஸிங்' காட்சி இருந்தது. வாகினி ஸ்டூடியோவில் இதற்கான காட்சியை படம் பிடிக்க ஏற்பாடு செய்தார்கள்.
அந்த மேடை 9 அடி உயரத்தில் இருந்தது. சிவாஜி சார் பாக்ஸிங் மேடையில் ஏறியதும் என்னை அருகில் அழைத்தார். "டேய் விஜயா! நான் அடிச்சதும் நீ கீழே விழற சீனை "இப்ப எடுப்பாங்க. நான் அடிச்சதும் நீ கரெக்டா கீழே விழுந்துருவியா?'' என்று கேட்டார்.
அந்தக் காட்சி பற்றி எனக்கும் முன்னரே சொல்லியிருந்தார்கள். கீழே விழும்போது எந்த மாதிரி விழவேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார்கள். எனவே அந்த தைரியத்தில், "கரெக்டாக விழுந்திடுவேன் சார்'' என்றேன்.
கேமரா ஓடத்தொடங்கியது. சிவாஜி சார் பாக்ஸிங் உடையில் தயாராக இருந்தார். டைரக்டர் `ஸ்டார்ட்' சொன்னதும் என் முகத்தில் குத்துகிற மாதிரி நடித்தார். குத்து என் முகத்தில் விழுந்ததாக எடுத்துக்கொண்டு நான் 9 அடி உயர மேடையில் இருந்து கீழே விழவேண்டும்.
அப்படித்தான் விழுந்தேன். அனுபவமில்லாததாலும், ஆர்வக்கோளாறாலும் நான் விழப்போக, மேடையின் பக்கவாட்டில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் என் கைகள் மாட்டிக்கொண்டு தோள்பட்டை இறங்கி விட்டது. வலியால் துடித்தேன்.
படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டேன். மாவுக்கட்டு போட்டு அனுப்பினார்கள். கை சரியாகும் வரை வீட்டில் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயமாகி விட்டது. என்னைப் பார்த்த சிவாஜி சார், "என்னடா விஜயா! அவ்வளவு சொன்னேன். சரியா பண்ணியிருக்கக் கூடாதா?'' என்று கேட்டு வருத்தப்பட்டார்.''
- சிவாஜியின் அக்கறை கலந்த அன்பு பற்றி ஆச்சரியம் விலகாமல் சொல்லி முடித்தார், விஜயகுமார்.
இப்படி மாவுக்கட்டுடன் ஓய்வெடுத்து தோள் பட்டை சரியான நேரத்தில் ஒரு பட வாய்ப்பு தேடி வந்தது. நடிகை கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் நாயர் எடுக்கும் சொந்தப்படத்தில் நடிக்க அழைத்தார்கள்.
படப்பிடிப்புக்காக சத்யா ஸ்டூடியோ போனபோது எதிர்பாராத விதமாய் எம்.ஜி.ஆரை சந்தித்தார், விஜயகுமார்.

தயாரிப்பாளர்களுக்காக புதிய சங்கத்தை உருவாக்கி இருக்கும் டி.ராஜேந்தருக்காக நடிகர் சிலம்பரசன் திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் தனது உடல் எடையை முழுவதுமாகக் குறைத்து புதிய தோற்றத்துக்கு மாறிய சிலம்பரசன், சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்தார். அடுத்ததாக வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோல்வியடைந்த டி.ராஜேந்தர் தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கப்பட உள்ளது.

டி.ஆர் தொடங்கி உள்ள சங்கத்துக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சங்கத்தை பதிவு செய்ய விண்ணப்பித்ததற்கான ஆதாரமும் வெளியாகி உள்ளது. வரும் 5ந்தேதி சங்கம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளனர். டி.ராஜேந்தர், ஜே.சதீஷ் குமார், சிங்காரவடிவேலன், சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்டோர் இந்த சங்கத்தின் நிர்வாகிகளாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சங்க நலனுக்காக சிலம்பரசன் சம்பளமே இல்லாமல் ஒரு படத்தில் நடித்து கொடுக்க இருப்பதாக தகவல் பரவுகிறது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நடிகர் கார்த்தி அவர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி எல்லைகளிலும் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள், பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும், கொரொனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் உழவர் என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில் போராடி வருகின்றனர். விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும்பங்கு என்ற வகையில் பெண்களும் பெருந்திரளாகப் பங்கெடுத்து போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாக பிரமிப்பூட்டுகிறது.
நாளும், பொழுதும் பாடுபட்டால் தான் வாழ்க்கை என்ற நிலையில் தங்கள் மாடு, கழனி மற்றும் பயிர்களை அப்படியப்படியே போட்டுவிட்டு, குடும்பத்தாரைப் பிரிந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலைதூரம் பயணித்து வந்து தீரத்துடன் போராடி வரும் செய்திகள் நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது.

தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள், விளைப் பொருள்களுக்கு உரிய விலையில்லாமை உள்ளிட்டப் பல பிரச்சினைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் உழவர் சமூகம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களால் தாங்கள் இன்னும் மிக மோசமாக பாதிப்படைவோம் என கருதுகிறார்கள்.
தங்கள் மண்ணில் தங்களுக்கிருக்கும் உரிமையும், தங்கள் விளைப் பொருட்கள் மீது தங்களுக்கிருக்கும் சந்தை அதிகாரமும் பெரும் முதலாளிகள் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடைமாற்றம் செய்யப்பட்டுவிடும் என்றும், ஆகவே இந்தச் சட்டங்களை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது. ஆகவே, போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவி சாய்த்து, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு: அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, கலையரசன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். “K9 Studios” மற்றும் “நீலம் புரடொக்ஷன்ஸ்” இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித்.
இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலுமாக மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அவரோடு நடித்திருக்கும் நடிகர்கள் ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர் ஆகியோரும் இப்படத்திற்காக கட்டுமஸ்த்தான உடற்கட்டோடு நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகியாக துஷாரா அறிமுகமாகிறார். நடிகர் பசுபதி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களோடு ஜான் விஜய், காளி வெங்கட், அனுபமா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முரளி ஒளிப்பதிவு மேற்கொண்டிருக்கிறார். கலை இயக்குநர் த.ராமலிங்கம் இப்படத்திற்காக பிரம்மாண்டமான செட்டுகளை அமைத்திருக்கிறார். செல்வா ஆர்.கே எடிட்டிங் செய்திருக்கிறார். இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து இப்படத்தின் திரைகதை, வசனத்தை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்ப்பிரபா.
படத்தின் முக்கிய பலமே சண்டைக்காட்சிகள் தான் என்பதால் தேசிய விருது பெற்ற இரட்டையர்கள் அன்பறிவ் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். மார்ச் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னிராசி படத்திற்கான தடை நீங்கியதால், நாளை முதல் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் விமல் கதாநாயகனாகவும், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.
காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாகவே வெளியாக இருந்தது. தியேட்டர்கள் திறந்தவுடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. பின்னர் 'மீடியா டைம்ஸ்' நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் விநியோக உரிமையில் பிரச்சனை ஏற்பட்டு தடை வழங்கப்பட்டது.

தற்போது மீடியா டைம்ஸ் நிறுவனத்திற்கும், கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனர் ஷமீன் இப்ராஹிமுக்கும் இடையே சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னிராசி திரைப்படம் டிசம்பர் 4ம்தேதி (நாளை) தியேட்டரில் வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
சூரரைப்போற்று படத்தை அடுத்து, சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் மட்டுமில்லாமல், விமர்சகர்கள், பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டினார்கள். இப்படத்தை அடுத்து ’சூர்யா 40’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ’சூர்யா 40’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பாண்டிராஜ் இயக்கும் படத்தை முடித்துவிட்டு சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ படப்பிடிப்பில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிலம்பரசன், தனது தங்கை மகனுடன் காரில் கொஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது ஈஸ்வரன் திரைப்படமும், மாநாடு திரைப்படமும் உருவாகி வருகிறது. மேலும் இவர் கடந்த அக்டோபர் மாதத்தில் சமூக வலைத்தளத்தில் இணைந்தார். அதில் தனது படங்கள் குறித்த அறிவிப்புகள், புதிய புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். தற்போது தனது தங்கை இலக்கியாவின் மகன் ஜேசன் உடன் காரில் இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கும் நடிகர் சிம்பு, தனது மருமகனிடம் பக்கத்தில் இருக்கும் காருக்கு செல்கிறாயா என்று செல்லமாக பேசி, அருகே இருக்கும் காரில் உள்ளவர்களுக்கும் ஹாய் சொல்கிறார். இந்த வீடியோ சிம்பு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தின் டிரெய்லர், மாநாடு படத்தின் போஸ்டர், சிலம்பரசனின் நியூ லுக் என அனைத்தும் வைரலானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் வரலட்சுமி சரத்குமாரின் கணக்குகளை மர்ம நபர்கள் கைபற்றி இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கி வருபவர் வரலட்சுமி சரத்குமார். பாலியல் வன்முறை, கொரோனா விழிப்புணர்வு, உள்ளிட்டவை குறித்து தொடர்ச்சியாகப் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் நடிகை வரலட்சுமியின் சமூக வலைதளப் பக்கத்தை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம் என்று வரலட்சுமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "என்னுடைய இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்கள் நேற்று இரவு திருடப்பட்டு விட்டன. என்னால் இன்னும் அவற்றை மீட்க முடியவில்லை. கூடிய விரைவில் என்னுடைய கணக்குகளை மீட்பதற்காக அந்தத் தளங்களின் அதிகாரிகளுடன் பேசி வருகிறேன். ஆனால், அதற்கு சில நாட்கள் ஆகலாம்.

என்னைப் பின்தொடர்பவர்களுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால் அடுத்த சில நாட்களுக்கு என்னுடைய இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கங்களிலிருந்து மெசேஜ் வந்தால், தயவுசெய்து கவனமாக இருக்கவும். என்னுடைய கணக்குகளை மீட்டதும் நான் அதை உங்களுக்குத் தெரிவிப்பேன். உங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி. விரைவில் உங்களை ஆன்லைனில் சந்திக்கிறேன்".
இவ்வாறு வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து இசையமைப்பாளர் அனிருத், தலைவர் ஆட்டம் ஆரம்பம் என்று கூறியிருக்கிறார்.
ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனால் அரசியல் கட்சி துவங்குவது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் மவுனமாக இருந்து விட்டார். அறிவிப்பையும் வெளியிடவில்லை. விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம், #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல
வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்!!! என்று கூறினார்.
இனி தான் ஆரம்பம்..
— Anirudh Ravichander (@anirudhofficial) December 3, 2020
தலைவர் ஆட்டம் ஆரம்பம் 🤘🏻🤘🏻🤘🏻#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்லpic.twitter.com/zj8amBXklR
இதற்கு பலரும் வாழ்த்துகளை கூறிவருகிறார்கள். இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத், இனி தான் ஆரம்பம்.. தலைவர் ஆட்டம் ஆரம்பம்... #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம், #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.