என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை அபிராமியின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் அபிராமி. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

    அபிராமி

    இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் அவர் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில், அவர் அடையாளமே தெரியாத வகையில் உடல் எடை ஏறி மிகவும் குண்டாக காணப்பட்டார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.
    கடல், தேவராட்டம் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் கவுதம் கார்த்திக்கை வழிமறித்து செல்போன் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
    நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். இவர், கடல், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் குடும்பத்துடன் போயஸ் தோட்டத்தில் வசித்து வருகிறார். 

    இவர் தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செல்வதை வழக்கமாக கொண்ட கவுதம் கார்த்திக், அதிகாலை மெரினா வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். ராதாகிருஷ்ணன் சாலை - டி.டி.கே சாலை சந்திப்பில் தனது சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த செல்போன் திருடர்கள் அவரிடம் வழிபறி செய்ய மிரட்டியுள்ளனர்.

    கவுதம் கார்த்திக்

    அவர்களிடம் இருந்து தப்ப முயன்ற நடிகர் கவுதம் கார்த்திக்கை கீழே தள்ளி விலையுர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இதையடுத்து தகவலறிந்து வந்த மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். செல்போன் திருடர்களை பிடிக்க மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.

    "சினிமாவில் ஹீரோவாக, இன்னொரு முறை முயற்சி செய்கிறேன்'' என்று அப்பா விடம் கூறிவிட்டு சென்னைக்கு வந்த விஜயகுமார், தனியாக ஒரு அறை எடுத்து தங்கினார். 6 வருட இடைவெளியில் எஸ்.வி.எஸ்.குழுவினர் நாடகங்கள்நடத்துவது குறைந்து விட்டதால், நடிகை சந்திரகாந்தாவின் நாடகக் குழுவில் சேர்ந்தார். கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.

    நாடகம் இல்லாத நாட் களில் மறுபடியும் சினிமா வாய்ப்புக்கு முயலுவார்.போகிற கம்பெனிகளில் எல்லாமே சொல்லி வைத்தது போல் `பார்க்கலாம்'என்பதே பதிலாக இருந்தது.

    இப்படியே 11 மாதம் ஆகிவிட்டது. ஒரு மாதத்திற்குள் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஊருக்குப் போகவேண்டியதுதான். இதனால் கடைசி ஒரு மாதத்தில் வாய்ப்பு தேடும் முயற்சியை தீவிரமாக்கினார்.

    அப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-

    "சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் சிவாஜி சார் நடித்த படத்தை மேட்னி ஷோ பார்க்கச் சென்றிருந்தேன். படம் முடிந்ததும், அறைக்குத் திரும்புவதற்காக சாந்தி தியேட்டரை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது மாலை 6 மணி இருக்கும்.

    திடீரென என்னையே கூர்மையாக பார்த்தபடி வந்த ஒருவர், "தம்பி, எங்கே இருக்கிறீங்க?'' என்று கேட்டார்.

    சினிமாவுக்கு கதை எழுதும் கதாசிரியர் பாலமுருகன்தான் அவர். ஏற்கனவே வாய்ப்பு கேட்டுப் போனதில் அவரிடமும் நான் அறிமுக மாகியிருந்தேன். ரொம்பவும் அக்கறையாக என்னை விசாரிப்பார். என் முயற்சி நிச்சயம் வெற்றி தேடித்தரும் என்று மனதுக்குள் தன்னம் பிக்கை

    விதைப்பார்.அப்படிப்பட்டவர் என்னிடம் வந்து விசாரித்ததும் என் மனதிலும் கொஞ்சம் சந்தோஷம். "நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதோடுசினிமா வாய்ப் புக்கும் முயன்று கொண்டிருக் கிறேன்'' என்றேன்.

    அவர் உடனே ரொம்பவே உரிமையுடன் "ஏன் தம்பி என்னை வந்து பார்க் காமல் இருந்தீர்கள்? டைரக்டர் பி.மாதவன் சார்புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். உங்கள் முகவரி தெரியாததால் உடனடியாக உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று'' என்றவர், "தம்பி! நாளைக்கு காலை 10 மணிக்கு தேனாம்பேட்டையில் இருக்கும் மாதவன் சார் கம்பெனிக்கு வந்திடுங்க'' என்று கேட்டுக் கொண்டார். முகவரியையும் கொடுத்தார்.

    பாலமுருகன் சொன்னபடி மறுநாள் காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை ஆபீசுக்கு போனேன். அங்கே டைரக்டர் பி.மாதவன், கேமராமேன் பி.என்.சுந்தரம் ஆகியோர் இருந்தார்கள்.

    நான் போயிருந்த நேரத்தில் கதாசிரியர் பாலமுருகனும் வந்துவிட்டார். நேராக என்னை டைரக்டர் பி.மாதவனிடம் அழைத்துச் சென்று, "சார்! நம்ம கதைக்கு 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோவுக்கு இவர் சரியா இருப்பார். சிவகுமார்னு பேரு'' என்றார்.

    டைரக்டர் பி.மாதவன் என்னை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தார். பிறகு கேமராமேன் பி.என்.சுந்தரத்தை அழைத்தவர்,  "ஒரு டெஸ்ட் எடுத்திடுங்க'' என்றார்.

    மறுநாளே டெஸ்ட்! ஏவி.எம். 6-வது மாடிக்கு வரச்சொல்லி டெஸ்ட் எடுத்தார்கள். முடிவு டைரக்டர் பி.மாதவனுக்கு திருப்தியாக இருந்ததால், "தம்பி! வசனம் பேசிக் காட்டுங்க'' என்றார். பேசிக்காட்டினேன்.

    பிறகு, "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் சிவாஜி சார் நடிக்கும்போது பயன் படுத்திய உடைகளை எனக்கு தந்து நடிக்கச் சொன்

    னார்கள்.நான் நடிக்கும்போது, அதை படமாக்கினார்கள்.

    அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் பி.மாதவன், "தம்பி! நம்ம படத்தில் நீங்க நடிக்கிறீங்க'' என்றார்.

    "கந்தன் கருணை'' படத்தில் முருகன்வேடத்துக்காக எந்த சிவகுமாருடன் போட்டி ஏற்பட்டதோ, அதே சிவகுமாரும் நானும் இந்தப் படத்தில் இரட்டை நாயகர்கள். அந்தப்படம்தான் "பொண்ணுக்கு தங்க மனசு.''

    "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சார் சாதாரண கிராமத்து இளைஞன் ராமனாக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக வருவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது. நடிகராகும்போது அவருக்கு பெயர் விஜயகுமார். அதனால் அதுவரை சிவகுமாராக இருந்த எனக்கு `விஜயகுமார்' என்ற பெயரை சூட்டினார், டைரக்டர் பி.மாதவன்.

    பஞ்சாட்சரம், சிவகுமாராகி பிறகு விஜயகுமாராக மாறியது இப்படித்தான்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.
    சஞ்சய் சிவன் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி நடித்திருக்கும் தௌலத் படத்தின் விமர்சனம்.
    ஆதரவற்றவரான நாயகன் சஞ்சய் சிவன் பெங்களூரில் தாதாவாக இருக்கும் ஆடுகளம் ஜெயபாலனுடன் அடியாளாக வேலைபார்த்து வருகிறார். நாயகன் தன் குழுவினருடன் ஒரு எம்எல்ஏவை கொல்வதற்காக திட்டம் போடுகிறார். 

    இதேசமயம் தமிழ்நாட்டில் தாதாவாக இருக்கும் யோக் ஜாபி, போதைப் பொருள் ஒன்றை கைப்பற்றுவதற்காக பெங்களூர் செல்கிறார். அப்போது சஞ்சய் சிவன் தன் குழுவினருடன் எம்எல்ஏவை கொல்வதற்கு பதிலாக யோக் ஜாபியைக் கொண்டு விடுகிறார்கள். இதனால் கோபம் அடையும் யோக் ஜாபியின் கும்பல், சஞ்சய் சிவன் மற்றும் அவரது கும்பலை கொல்ல முயற்சி செய்கிறார்கள்.

    விமர்சனம்

    இறுதியில் நாயகன் சஞ்சய் சிவன், யோக் ஜாபியின் கும்பலிடம் இருந்து தப்பித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சஞ்சய் சிவன் ஓரளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரே இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார். நல்ல கதையை எடுத்துக் கொண்ட சக்தி சிவன் திரைக்கதையில் தடுமாறி இருக்கிறார். போதைப்பொருள், தாதா கும்பல் இவற்றை சுற்றிய படத்தை உருவாக்கியிருக்கிறார். சொல்லவந்த விஷயத்தை தெளிவாகச் சொல்லியிருக்கலாம். தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.

    விமர்சனம்

    நாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மி கவுதம் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் தாதாவாக வரும் யோக் ஜாபி, பெங்களூரு தாதாவாக வரும் ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். காமெடி கதாபாத்திரத்தில் வரும் யோகிபாபு பத்து நிமிடம் மட்டுமே வருகிறார். இன்னும் அதிக காட்சிகள் நடித்திருந்தால் ரசித்திருக்கலாம்.

    இமாலயன் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். மெய்யப்பனின் ஒளிப்பதிவு அதிகம் ஜொலிக்கவில்லை.

    மொத்தத்தில் 'தௌலத்' ஈர்ப்பு இல்லை.
    கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக இளைஞர்களுக்காக, புரட்சி பாடல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.
    இளைஞர்களின் எழுச்சிக்காக முதன்முறையாக தனி இசைப்பாடல் (independent music) ஒன்றை பாடி நடித்துள்ளார் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன்.

    இந்தப் பாடலுக்கு ஜெஃப்ரி இசையமைத்துள்ளார். இப்பாடலைப் பற்றி விஜய பிரபாகரன் கூறுகையில்..

    தமிழை என்னுயிர் என்பேன் நான்...
    தமிழ் இளைஞர்கள் எல்லோரும் என் உயிர் தோழர்கள் ஆவார்கள் என்றவர், இந்த பாடல் முழுக்க முழுக்க இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

    விஜய பிரபாகரன்

     மேலும் இந்தப் பாடலின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான மகத் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் படத்தில் பிரபல காமெடி நடிகர் இணைந்திருக்கிறார்.
    அஜித்துடன் மங்காத்தா படத்திலும் விஜய்யுடன் ஜில்லா படத்திலும் நடித்தவர். அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். இவர் தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

    இதில் கதாநாயகியாக ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார். தற்போது இவர்களுடன் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு இணைந்திருக்கிறார். இப்படத்தில் புதையலை தேடும் கடற்கொள்ளையனான ப்ளாக் ஸ்பாரோ ( Black Sparrow) வாக நடிக்கிறார். 

    யோகி பாபு

     இப்படத்தினை இயக்குநர் பிரபு ராம் சி இயக்கியுள்ளார். படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாக இருக்கிறது.
    தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக இருக்கும் பிரபாசின் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
    இந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம்மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது 'யுவரத்னா' மற்றும் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது.

    ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தங்களது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான 'டார்லிங்' பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை 'கே.ஜி.எஃப்' படங்களின் மூலம் நம்மை அசரவைத்த இயக்குநர் பிரஷான்த் நீல் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ளது.

    பிரபாஸ்

    இந்நிலையில் இப்படத்திற்கு சலார் என்று தலைப்பு வைத்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    எம்.ஜே.ஹுசைன் இயக்கத்தில் அன்பு மயில்சாமி, மனிஷா ஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் அல்டி படத்தின் விமர்சனம்.
    அன்பு, சென்ராயன், யாசி ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். சந்தர்ப்ப சூழ்நிலையால் செல்போன் திருட்டில் ஈடுபடுகிறார்கள். பிறகு அதையே தங்களது வேலையாக செய்கிறார்கள். அப்போது, கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ மகனின் செல்போன் இவர்களுக்கு கிடைக்க, அந்த போனில் இருக்கும் வீடியோ ஒன்றுக்காக போலீஸ் இவர்களை தேடுகிறது.  

    இன்னொரு பக்கம், மகனை கொலை செய்தவர்களை பழிவாங்க துடிக்கும் எம்.எல்.ஏ-வும் இவர்களை துரத்த, அவர்களிடம் இருந்து இந்த மூன்று இளைஞர்களும் தப்பித்தார்களா? இல்லையா?, எம்.எல்.ஏ-வின் மகனை கொலை செய்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    அல்டி

    நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு இப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முதல் படம் என்றாலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த பெரிதும் மெனக்கெட்டிருப்பது பல காட்சிகளில் தெரிகிறது. நாயகி மனிஷா ஜித்துக்கு படத்தில் குறைவான காட்சிகளே உள்ளன. பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து ஏமாற்றம் அளிக்கிறார். 

    அல்டி

    நாயகனின் நண்பர்களாக வரும் சென்ராயன் மற்றும் யாசிப் ஆகிய இருவரும் கவனிக்க வைக்கிறார்கள். போலீஸ் கதாப்பாத்திரத்தில் வரும் நடன இயக்குநர் ராபர்ட், வில்லத்தனத்தால் மிரட்டி இருக்கிறார். சட்டமன்ற உறுப்பினராக நடித்திருக்கும் மாரிமுத்து, தலைமைக்காவலராக வரும் பசங்க சிவக்குமார், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்கள். 

    அல்டி

    அறிமுக இயக்குனர் எம்.ஜே.ஹுசைன் திரைக்கதையை சிறப்பாக கையாண்டுள்ளார். முதல்பாதியில் செல்போன் திருட்டுகள் எப்படி நடக்கின்றன? திருடப்பட்ட செல்போன்கள் எங்குபோய் எப்படி உருமாற்றம் பெறுகின்றன என்பதை விளக்கமாகக் காட்டியிருக்கிறார். இரண்டாம் பாதியில் ஒரு கொலையின் பின்னணியை வைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார். 

    ஸ்ரீகாந்த் தேவாவின் துள்ளல் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி உள்ளன. ஆறுமுகத்தின் ஒளிப்பதிவு விறுவிறுப்பாக நகரும் திரைக்கதைக்கு வலுசேர்த்திருக்கிறது. 

    மொத்தத்தில் ‘அல்டி’ விறுவிறுப்பு.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படம் ஓடிடியில் வெளியிடப்பட உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இதனை திட்டவட்டமாக மறுத்த படக்குழு மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என விளக்கம் அளித்தனர். 

    இந்நிலையில், மாஸ்டர் படத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம். ஜனவரி 14ம் தேதி வியாழக்கிழமை பொங்கல் பண்டிகை என்பதால், அதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது ஜனவரி 13ம் தேதி (புதன்கிழமை) வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. 

    விஜய்

    அவ்வாறு வெளியிட்டால் புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று தொடர்ந்து 5 நாட்கள் மாஸ்டர் வசூல் வேட்டை நடத்தும் என்பதில் சந்தேகமில்லை.
    பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ஒருவர் திருமணமானதை மறைத்து 4 பேருடன் தொடர்பில் இருந்ததாக அவரது கணவர் புகார் தெரிவித்துள்ளார்.
    இந்தியில் ஏ ஹை மொஹப்பதைன், நாகின் 3 உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் பவித்ரா புனியா. சில இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்த அவர் இரு தினங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்டார். 

    பவித்ரா புனியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது என்றும் தெரிவித்தார். ஆனால் வருங்கால கணவர் பெயரை சொல்லவில்லை. இந்த நிலையில் சுமித் என்பவர், தன்னை திருமணம் செய்து பவித்ரா புனியா மோசடி செய்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இவர் ஓட்டல் உரிமையாளராக இருக்கிறார். 

    பவித்ரா புனியா

    அவர் கூறும்போது, “எனக்கும், பவித்ரா புனியாவுக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. அவர் பெயரை நான் பச்சை குத்திக்கொண்டேன். திருமணத்தை வெளியே சொல்ல வேண்டாம் என்று தெரிவித்து இருந்தார். திருமணத்தை மறைத்து 4 பேருடன் தொடர்பில் இருந்துள்ளார். 

    ஒரு ஓட்டலில் இன்னொரு நடிகருடன் அவர் இருப்பதை பார்த்தேன். அவரது நடவடிக்கைகளை பல தடவை மன்னித்தேன். இனிமேல் மன்னிக்க முடியாது. பவித்ரா என்னை விவாகரத்து செய்து விட்டு அவரது விருப்பம்போல் வாழலாம்” என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
    அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் பா.ரஞ்சித். இவர் தற்போது ஆர்யாவை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார். குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம் என்பதால் அதற்காக தீவிர உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றி இருக்கிறார் ஆர்யா. 

    இப்படத்தில் வில்லனாக இயக்குனர் மகிழ்திருமேனி நடித்துள்ளார். மேலும் சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    சார்பட்டா பரம்பரை பர்ஸ்ட் லுக் போஸ்டர்

    இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு சார்பட்டா பரம்பரை என பெயரிடப்பட்டுள்ளது. பர்ஸட் லுக் போஸ்டரில் ஆர்யா பாக்சிங் ரிங்கிற்குள் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். போஸ்டரை பார்த்த ரசிகர்கள், மரண மாஸாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
    மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரோஷ்னா அன்ராய் தனது காதலரை கரம்பிடித்துள்ளார்.
    மலையாள படமான ஒரு அடார் லவ், பிரியா வாரியரின் கண்சிமிட்டல் காட்சி மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானது. இந்த படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். படத்தில் ரோஷ்னா அன்ராயும் ஆசிரியை கதாபாத்திரத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 

    பாபம் செய்யாதவர் கேளறியட்டே, சுல், தமாக்கா உள்பட மேலும் பல படங்களிலும் நடித்து இருக்கிறார். ரோஷ்னா அன்ராயும், அங்கமாலி டைரிஸ், தண்ணீர் மதன் தினன்கள் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்துள்ள கிச்சு டெல்லசும் காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு எடுத்தனர். 

    கணவருடன் ரோஷ்னா

    சில வாரங்களுக்கு முன்பு ரோஷ்னா அன்ராய் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “எங்கள் திருமணத்தை முறைப்படி அறிவிக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது. உண்மையான காதலோடு என்னை நேசித்த கிச்சுக்கு நன்றி” என்று கூறி இருந்தார். 

    இந்த நிலையில் ரோஷ்னா அன்ராய்க்கும், கிச்சு டெல்லசுக்கும் கொச்சியில் திருமணம் நடந்தது. கொரோனாவால் நெருங்கிய உறவினர்களை மட்டும் அழைத்து அங்குள்ள தேவாலயத்தில் திருமணத்தை முடித்தனர்.
    ×