என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகை ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்விகபூர், மும்பையில் பிரபல நடிகரின் வீடருகே ரூ.39 கோடிக்கு வீடு வாங்கி உள்ளாராம்.
    நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர். நடிகையான இவர் 2018-ம் ஆண்டு இஷான் கட்டார் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படம் ‘கைராத்’ என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் குன் ஜான் சக்சேனா: தி கார்கிள் கேர்ள் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    அடுத்து கார்த்திக் ஆர்யன் ஜோடியாக தோஸ்த்தானா-2 என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் தமிழில் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கிலும் ஜான்விகபூர் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 9-ந்தேதி பஞ்சாப்பில் தொடங்க உள்ளது.

    ஜான்வி கபூர்

    இந்நிலையில், நடிகை ஜான்விகபூர் மும்பையில் அமிதாப்பச்சனின் வீடு அருகே ரூ.39 கோடியில் வீடு வாங்கியுள்ளார். இந்த வீடு மும்பை ஜூகு பகுதியில் ஜூகுவைல் பார்லே குடியிருப்பு திட்டத்தில் அமைந்துள்ளது. இது மும்பையின் மிகவும் ஆடம்பரமான மற்றும் மேல்மட்ட குடியிருப்பு பகுதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

    இந்த வீட்டை ஜான்வி கபூர் கடந்த டிசம்பர் 10-ந்தேதி பத்திரப்பதிவு செய்தார். அடுக்குமாடி குடியிருப்பின் 14, 15 மற்றும் 16-வது தளங்களில் ஜான்வி கபூரின் வீடு அமைந்துள்ளது. இந்த வீடு 4,144 சதுர அடி பரப்பளவு கொண்டது. அமிதாப்பச்சன் வீடு அருகே இந்த வீடு அமைந்துள்ளது. 

    இந்த குடியிருப்பில் நடிகர்கள் அனில்கபூர், அஜய்தேவ்கான், ஏக்தாகபூர் ஆகியோருக்கும் வீடு உள்ளது. ஜான்வி கபூர் தற்போது லோகண்ட்வாலா பகுதியில் உள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
    மோகன் ராஜா இயக்கத்தில் உருவாக உள்ள ரீமேக் படத்தில், பெண் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'லூசிபர்'. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. 

    இதன் ரீமேக் உரிமையை ராம் சரண் கைப்பற்றியுள்ளார். இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளார். இதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

    மோகன் ராஜா, மோகன்லால், சிரஞ்சீவி

    இந்நிலையில், இப்படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கதைப்படி அது ஒரு பெண் அரசியல்வாதி கதாபாத்திரம். இந்தக் கூட்டணி உறுதியானால், சிரஞ்சீவியும் நயன்தாராவும் இணையும் இரண்டாவது படமாக இது அமையும். 

    அவர்கள் இருவரும் ஏற்கனவே சைரா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதேபோல் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகை நயன்தாரா ஏற்கனவே தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், சில சமயங்களில் 100ஐ விட ஐம்பதே சிறந்தது என அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
    கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. 

    பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளதால், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை வைத்தார். 

    அரவிந்த் சாமியின் டுவிட்டர் பதிவு

    இதையடுத்து தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. இதுகுறித்து பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில், அரசின் இந்த முடிவு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் அரவிந்த்சாமி “சில சமயங்களில் 50 சதவீதம் என்பது 100 சதவீதத்தை விட சிறந்ததாகவே இருக்கும். அதில் இதுவும் ஒன்று” என கூறியுள்ளார்.
    புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி, தற்போது மீண்டும் இணைந்துள்ள படத்தின் பணிகள் தொடங்கி உள்ளது.
    தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

    இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்தை வி கிரியேசன்ஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடைசியாக புதுப்பேட்டை படத்தில் இணைந்து பணியாற்றிய தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது.

    செல்வராகவனின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில் இப்படத்துக்கான ஸ்டில்ஸ் ஷூட்டிங் தொடங்கி உள்ளதாக இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மீண்டும் எனது உலகத்திற்கு திரும்பிவிட்டேன்” என குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இப்படத்தை தொடர்ந்து மீண்டும் செல்வராகவனுடன் இணைய உள்ள நடிகர் தனுஷ் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். பிரம்மாண்டமாக தயாராக உள்ள இப்படத்தை 2024-ம் ஆண்டு வெளியிட உள்ளனர்.
    பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணாவின் வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் இரவில் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான அஹானா கிருஷ்ணகுமார், தற்போது கொரோனா பிரச்சினையால் வீட்டில் இருந்து வருகிறார். இவரது தந்தை கிருஷ்ணகுமாரும் நடிகர் தான். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சத்யம், தெய்வத்திருமகன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். 

    இவர்களின் வீடு திருவனந்தபுரம் சாஸ்தாமங்கலத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இவரது வீட்டிற்குள் வாலிபர் ஒருவர் நுழைய முயன்றார். அவர் சுவர் ஏறிகுதித்து காம்பவுண்ட்டுக்குள் நுழைந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்த கிருஷ்ணகுமார் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அஹானா, கிருஷ்ணகுமார்

    அவர் உடனே இது பற்றி வட்டிகாவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் பெயர் பசில் அல்அக்பர் என்றும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி, நடிகர் கிருஷ்ண குமார் கூறுகையில், அந்த வாலிபர் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் குடும்பத்தினர் வாலிபரை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
    கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்க உள்ள லோகேஷ் கனகராஜ், அதன்பின் வாரிசு நடிகரின் படத்தை இயக்க உள்ளாராம்.
    மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். பின்னர் அவர் இயக்கிய கைதி படம், மாபெரும் வெற்றி பெற்றது. இதன்மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்தார் லோகேஷ் கனகராஜ். 

    கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் பொங்கலையொட்டி வருகிற ஜனவரி 13-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதையடுத்து கமல் நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார்.

    ராம் சரண்

    இந்நிலையில், லோகேஷ் கனகராஜுக்கு பிற மொழி படங்களை இயக்கவும் அழைப்பு வருகிறதாம். அதன்படி மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரணை வைத்து படம் இயக்க லோகேஷ் கனகராஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என அழைத்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

    பூஜா ஹெக்டே

    இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகையான பூஜா ஹெக்டே ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையானார். நடிகை பூஜா ஹெக்டே பிரபாஸுடன் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ‘திரெளபதி’ படத்தை இயக்கி பிரபலமான மோகன் ஜி, அடுத்ததாக இயக்கும் ருத்ர தாண்டவம் படத்தின் படப்பிடிப்பை தொடங்கி உள்ளார்.
    மோகன் ஜி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘திரெளபதி’. ரிச்சர்டு ரிஷி நாயகனாக நடித்திருந்த இப்படம் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் பார்த்தது.

    இயக்குனர் மோகன் ஜி அடுத்ததாக இயக்கும் படம் ‘ருத்ர தாண்டவம்’. ‘திரெளபதி’ பட நாயகன் ரிச்சர்ட் ரிஷி தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடிக்க உள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா இப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

    ருத்ர தாண்டவம் படக்குழு

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. படக்குழுவினர் பூஜையுடன் படப்பிடிப்பை தொடங்கினர். இப்படத்தில் நாயகன் ரிஷி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘திரெளபதி’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் ‘ருத்ர தாண்டவம்’ படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனை அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. மலையாளத்திலும் 2 படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

    நயன்தாரா ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.

    விக்னேஷ் சிவன், நயன்தாரா

    இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற உள்ளதாகவும் இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு உள்ளனர் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா? இல்லை இதுவும் வதந்தியா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
    அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரெஜினா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக உள்ளதாம்.
    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாரான பல படங்கள் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் வெளியாகி வருகின்றன. சூர்யாவின் சூரரைப் போற்று, ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, விஜய் சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், அனுஷ்காவின் நிசப்தம் உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிடப்பட்டன.

    அடுத்ததாக மாதவனின் மாறா, ஜெயம் ரவியின் பூமி போன்ற படங்களும் ஓ.டி.டி.யில் வெளியாக உள்ளன. மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்-மீனா ஜோடியாக நடித்துள்ள திரிஷ்யம் 2-ம் பாகம் படமும் ஓ.டி.டி.யில் வருகிறது.

    முகிழ் பட போஸ்டர்

    இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘முகிழ்’ படமும் நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியாகிறது. இதில் நாயகியாக ரெஜினா நடிக்க, விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இப்படத்தை விஜய் சேதுபதியே தயாரித்துள்ளார். புதுமுக இயக்குனர் கார்த்திக் இயக்கியுள்ளார். 
    கொரோனா விதிகளை மீறிய குற்றச்சாட்டில் பாலிவுட் நடிகர் சொஹைல் கான், அவரது மகன் மற்றும் சகோதரர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    இந்தி திரையுலகில் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளராக உள்ளவர் சொஹைல் கான். இவரது சகோதரர் அர்பாஸ் கான். அவரும் நடிகராக உள்ளார். சொஹைல் கான் கடந்த ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி துபாயில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.

    சொஹைலுடன், அவரது சகோதரர் அர்பாஸ் கான் மற்றும் அவரது மகன் நிர்வாண் கான் ஆகியோரும் வந்தனர்.  உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவின் மும்பை நகருக்கு வந்திறங்கிய சொஹைல் கான் உள்ளிட்ட 3 பேரையும் ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி இருந்தது.

    எனினும், இதனை கவனத்தில் கொள்ளாமல் 3 பேரும் தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர். இதுபற்றிய விவரம் அறிந்து 3 பேருக்கு எதிராகவும் மும்பை பெருநகர மாநகராட்சி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் சொஹைல் கான் உள்பட 3 பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். சொஹைல் உள்பட 3 பேரையும் மும்பையில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஓட்டலில் அதிகாரிகள் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
    தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ரவுடி பேபி பாடல் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    இந்திய சினிமாவில் நடின இயக்குநர், நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல அனுபவங்களைக் கொண்டவர் பிரபு தேவா.  

    பிரபுதேவாவின் நடன இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ரவுடி பேபி பாடல் தற்போது வரை 26 கோடி ரசிகர்களை சென்று அடைந்து இருக்கிறது. மேலும் இணையத்தில் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தப் பாடல் என்ற அடையாளத்தையும் இது பெற்று தந்திருக்கிறது. இந்தப் பாடலில் நடிகர் தனுஷ் – நடிகை சாய்பல்லவி ஆகிய இரண்டு பேரும் சிறந்த நடனத்தை வெளிப்படுத்தியதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர்.

    பிரபு தேவா - தனுஷ்

    இந்நிலையில் நடிகர் தனுஷ் பிரபுதேவாவுடன் அரட்டை அடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ரவுடி பேபி காம்போ மறுபடியும் உருவாக போகிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
    ×