என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அவங்க இல்லாமல் ஒருநாள் கூட இருக்க முடியாது என்று நடிகை மேகா ஆகாஷ் பேட்டி அளித்துள்ளார்.
    நடிகைகளில் மேகா ஆகாஷ் அம்மா செல்லம். அம்மாவுடன் தோழி போலத்தான் பழகுவேன் என்று கூறியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘ஆமாம். உண்மைதான். நானும் அம்மாவும் நெருங்கிய தோழிகள் மாதிரிதான் பழகுவோம். அம்மா ரொம்ப இளமையாக என்னை மாதிரியே இருப்பார். 

    நிறைய பேர் எங்களை அக்கா-தங்கைன்னுதான் நினைப்பாங்க. அம்மாகிட்ட நான் எதையுமே மறைக்க மாட்டடேன். அம்மா இல்லாம என்னால ஒருநாள்கூட இருக்க முடியாது. அம்மா பிந்து ஆகாஷ் நிறைய விளம்பரப் படங்களை இயக்கி இருக்கிறார். ஊரடங்கில் எங்க ரெண்டு பேருக்குமே ஷூட்டிங் இல்லாததால, ஏதாவது புதுசா முயற்சி பண்ணலாம்னு யோசிச்சோம். 

    மேகா ஆகாஷ்

    ‘பேசினால் போதும் அன்பே’ குறும்படத்துக்கான ஐடியா அப்படி வந்ததுதான். விவாகரத்துக்கு முடிவெடுத்துள்ள இளம் தம்பதியின் வாழ்க்கை, ஊரடங்கால எப்படி மாறுதுங்கிறதுதான் கதை. நான்தான் இதுல ஹீரோயின். அம்மா இயக்கத்துல நான் நடித்த முதல் அனுபவம் இது. வித்தியாசமாகவும், ஜாலியாகவும் இருந்தது’. இவ்வாறு அவர் கூறினார்.
    நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஜனனி ஐயர் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
    பரத் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காளிதாஸ் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 8, நடுவண், ராதே, 6 ஹவர்ஸ், ஷணம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் இந்தி மற்றும் மலையாள படங்களும் அடங்கும். அடுத்து முழுநீள காதல் படமாக உருவாகும் யாக்கை திரி படத்தில் நடிக்கிறார். பரத் மோகன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பரத் மற்றும் ஜனனி ஐயர் இருவரும் ஜோடியாக நடிக்க இருக்கின்றனர்.

    சோனாக்‌சி சிங் ராவட் என்ற பாலிவுட் நடிகையும் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மீரகி புரடக்‌ஷன் சார்பில் சபரீஷ் குமார் தயாரிக்கிறார். உணர்ச்சிப்பூர்வமிக்க கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகிறது.

    ஜனனி - பரத்

    மேலும் பகவதி பெருமாள், நிரஞ்சனி, பிரதாப் போத்தன், பாண்டியராஜன், சுதா சந்திரன், கு.ஞானசம்பந்தம் ஆகியோரும் நடிக்கிறார்கள். பல்லு ஒளிப்பதிவு செய்ய அரோல் கரோலி இசையமைக்கிறார். இயக்குனர் பரத் மோகன் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்ற இக்லூ படத்தை இயக்கியவர்.
    மைனா படம் மூலம் மிகவும் பிரபலமான விதார்த், அடுத்ததாக நடித்திருக்கும் படத்தில் காரும் இணைந்து நடித்து இருக்கிறது.
    செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் ஆற்றல். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியானது. இந்தப்படத்தில் விதார்த்தோடு இணைந்து ஒரு கார் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம்.

    இப்படம் குறித்து இயக்குனர் கே எல் கண்ணன் கூறும்போது, ஒரு கார் எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல உதவ முடியும், டெக்னலாஜியை வைத்து எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்யமுடியும் என்பதை இந்தப்படம் பேசுகிறது.

    படம் முழுக்க ஒரு காரை ஒரு கதாபாத்திரமாக வடிவமைத்து அதை ரசிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறோம், படம் பார்ப்பவர்களுக்கு இது புதுமையாக இருக்கும், ஒரு கார் எப்படி நடித்திருக்கமுடியும் என்பவர்களுக்கு படம் பார்க்கும்பொழுதுதான் தெரியும் என்றார்.

    விதார்த்

    படத்தில் வில்லனாக வம்சி கிருஷ்ணா, கதாநாயகியாக ஸ்ரிதா, மற்றும் சார்லி முக்கிய கதாபாத்திரத்திலும், வையாபுரி, விக்கி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
    முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, மீண்டும் பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
     தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் தற்போது பூமி திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

    இப்படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார்.

    ஜெயம் ரவி

     இந்நிலையில், ஜெயம் ரவியின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி அடுத்து பூலோகம் பட இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். பூலோகம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக திரிஷா நடித்து இருந்தார்.
    தமிழ் சினிமாவின் நடன இயக்குனரும் பிக்பாஸ் பிரபலமான சாண்டிக்கு மாஸ்டர் படக்குழுவினர் கைகொடுத்து இருக்கிறார்கள்.
    தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதில் அவருக்கென தனி பாணியில் பேச்சு, நகைச்சுவை என கவனம் ஈர்த்தார். அவருக்கான ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியது. 

    டான்ஸ் மாஸ்டரான சாண்டி, பிக் பாஸ் வெளிச்சத்தினால் நாயகனாகவும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். 3:33 (மூணு முப்பத்தி மூணு) என்று இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழு நீள திகில் படமாக ஒவ்வொரு காட்சியும் பயமுறுத்தும் வகையில் உருவாகியுள்ளது. சாண்டிக்கும் படத்தில் சீரியசான கதாபாத்திரம். 

    சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு செய்ய ஹர்ஷவர்த்தன் இசையமைக்கிறார். பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கியிருக்கும் இந்த படத்தில் மற்றொரு பிக்பாஸ் போட்டியாளரான ரேஷ்மாவும் நடிக்கிறார். இவரோடு ரமா, ஸ்ருதி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    சாண்டியின் புதிய படம்

    இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் வெளியிட்டார்கள்.
    பிரபல இந்தி நகைச்சுவை நடிகர், மத்திய அமைச்சர் பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
    பிரபல இந்தி நகைச்சுவை நடிகர் முனாவர் பாரூகி. குஜராத்தை சேர்ந்த இவர் பொது மேடைகளில் சர்ச்சை கருத்துகளை பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

    சமீபத்தில் இந்தூர் டூகான் என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது இந்து கடவுள்கள் பற்றியும், மத்திய மந்திரி அமித்ஷா குறித்தும் அவதூறான கருத்துகளை பேசியதாக எதிர்ப்புகள் கிளம்பின. 

    முனாவர் பாரூகி மீது நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள பா.ஜனதா எம்.எல்.ஏ மாலினி லட்சுமணன் சிங் மகன் ஏக்லவ்யா சிங் கவுர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாவர் பாரூகியை கைது செய்தனர். அவருடன் மேலும் 4 பேரும் கைதானார்கள். 

    முனாவர் பாரூகி,

    முனாவர் பாரூகி உள்பட கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் மத உணர்வை தூண்டுதல், கவனக்குறைவான செயலால் தொற்றுநோயை பரப்ப காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு நடிகர் சிம்பு, தமிழக முதலமைச்சருக்கு நன்றி கூறியிருக்கிறார்.
    கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. 

     பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளதால், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். நடிகர் சிம்பு இன்று அறிக்கை வெளியிட்டார்.

    சிம்புவின் பதிவு

    இந்நிலையில், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில், எங்களது கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த, தமிழ் திரையுலகிற்கு நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றி என்று பதிவு செய்து இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகர் சாம்ஸின் மகன் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகர் சாம்ஸின் மகன் கதாநாயகனாக களம் இறங்கியிருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாம்ஸ். இவருடைய மகன் தற்போது நடிகராக அறிமுகமாக இருக்கிறார். இது குறித்து சாம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    ஒரு இனிப்பான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது மகன் யோஹன் நடிப்பு பயிற்சியும், இயக்குனர் பயிற்சியையும் வெற்றிகரமாக முடித்துவிட்டார். 

    சாம்ஸ்

    தற்பொழுது இயக்குனர் திரு ராம் அவர்களிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி வரும் யோஹன் நடிகனாக களமிறங்க தயாராகிவிட்டார். அவருக்கு உங்களது ஆசிகளையும் ஆதரவையும் வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பரணி சேகரன் இயக்கத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தாழ் திறவா’ படத்தின் முன்னோட்டம்.
    பர்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘தாழ் திறவா’. அறிமுக இயக்குனர் பரணி சேகரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சாலமன் போஸ் மற்றும் சபேஷ் கே.கணேஷ் ஆகியோர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளனர்.

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: “ஒரு சின்ன ஊருக்குள் தொல்பொருள் சோதனை நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரிகம் ஒன்றை இவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக எப்படி ஒரு குழு சரி செய்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. சென்னை, ஊட்டி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இந்தப் படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும்” என கூறியுள்ளார்.
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தின் மூலம் பிரபல பாடலாசிரியர் விவேக் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
    கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம், மாரி செல்வராஜின் கர்ணன், ஆனந்த் எல் ராயின் அத்ரங்கி ரே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகி உள்ளார்.

    கார்த்திக் நரேன்

    சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக் கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத பிரபல பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் வசனம் மற்றும் திரைக்கதை எழுதும் முதல் படம் இதுவாகும். இவர் மெர்சல், பிகில், சர்கார், பேட்ட போன்ற படங்களுக்கு பாடல்களை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தில் அஜித் தவிர வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன.

    அஜித்

    வலிமை படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் இடம்பெறும் முக்கியமான பைக் ரேஸ் காட்சியை சுவிட்சர்லாந்தில் படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அங்கு படப்பிடிப்பு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அந்தக் காட்சிகளை டெல்லியில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வலிமை படத்தை அஜித்தின் பிறந்தநாளையொட்டி ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
    பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள ‘சூர்யா 40’ படத்தில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    சூர்யா நடிப்பில் கடந்தாண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நவரசா எனும் ஆந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்த சூர்யா, அடுத்ததாக பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ராஜ்கிரண்

    இந்நிலையில், ‘சூர்யா 40’ படத்தில் நடிகர் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஏற்கனவே பாலா இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான நந்தா படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதன்மூலம் 20 ஆண்டுகளுக்கு பின் சூர்யா படத்தில் ராஜ்கிரண் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×