என் மலர்
சினிமா

தாழ் திறவா பட போஸ்டர்
தாழ் திறவா
பரணி சேகரன் இயக்கத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தாழ் திறவா’ படத்தின் முன்னோட்டம்.
பர்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘தாழ் திறவா’. அறிமுக இயக்குனர் பரணி சேகரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். மேலும் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சாலமன் போஸ் மற்றும் சபேஷ் கே.கணேஷ் ஆகியோர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது: “ஒரு சின்ன ஊருக்குள் தொல்பொருள் சோதனை நடக்கிறது. அங்கு மறைந்திருக்கும் நாகரிகம் ஒன்றை இவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். அதனால் ஏற்படும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக எப்படி ஒரு குழு சரி செய்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. சென்னை, ஊட்டி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இந்தப் படத்தின் கதையில் கிராபிக்ஸ் முக்கிய பங்கு வகிக்கும்” என கூறியுள்ளார்.
Next Story






