என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஓபிலி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள பத்து தல படத்தில் அசுரன் பட பிரபலம் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம்.
    கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றிபெற்ற படம் ‘மப்டி’. இப்படத்தை தமிழில் ‘பத்து தல’ என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். சிம்பு, கவுதம் கார்த்திக் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய ஓபிலி என். கிருஷ்ணா இயக்க உள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் கவுதம் கார்த்திக்குக்கு ஜோடியாக நடிக்கிறார்.

    டீஜே

    இந்நிலையில், அசுரன் படத்தில் தனுசுக்கு மகனாக நடித்து பிரபலமான டீஜே அருணாச்சலம், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தனக்கு பிடித்த 90ஸ் ஹீரோக்களில் சிம்புவும் ஒருவர் என தெரிவித்துள்ள டீஜே, அவருடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், தற்போது அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது டீஜே லண்டனில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    "உலகம் சுற்றும் வாலிபன்" படப்பிடிப்புக்காக, எம்.ஜி.ஆருடன் லதா, மஞ்சுளா, சந்திரகலா ஆகியோர் ஜப்பான் பயணம் ஆனார்கள்.
    அப்போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து லதா கூறியதாவது:-

    "நடனம், நடிப்பு என்று 4 மாத கால பயிற்சிக்குப் பிறகு ஜப்பானுக்கு 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திற்கு எம்.ஜி.ஆர். எங்களை அழைத்துச் செல்வதாக இருந்தார்.

    பயணத்துக்கு சில நாட்கள் இருந்த நிலையில், திடீரென ஒரு நாள் நடிகர் அசோகனின் படத்தில் நான் நடிக்க வேண்டியிருக்கும் என்றார்கள்.

    எனக்கு குழப்பம். ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தை தொடங்குவார்கள் என்று அதுவரை எண்ணிக் கொண்டிருந்தேன். அதனால், உலகம் சுற்றும் வாலிபன் படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படம் பற்றி பேசுவார்கள் என்று நினைத்த நேரத்தில், நடிகர் அசோகன் "நேற்று இன்று நாளை" என்றொரு படம் தயாரிக்கிறார். அதில் எம்.ஜி.ஆருடன் நானும் மஞ்சுளாவும் கதாநாயகிகளாக நடிக்கிறோம் என்றார்கள்.

    இதுபற்றி அரசல்புரசலாக கேள்விப்பட்டிருந்த ஒருநாளில் திடீரென "நாளையே படப்பிடிப்பு" என்றார்கள். அதுவும் பாடல் காட்சி படப்பிடிப்பு என்றார்கள்.

    மறுநாள் கார் வந்து அழைத்துப் போனது. சத்யா ஸ்டூடியோவில் இறங்கியபோது அங்கே பிரமாண்ட செட் போட்டிருந்தார்கள். எம்.ஜி.ஆர். மேக்கப்பில் தயாராக இருந்தார். டைரக்டர் ப.நீலகண்டன் என்னைப் பார்த்ததும், "இப்போது ஒரு பாடல் காட்சி எடுக்கப்போகிறோம். நீயும் எம்.ஜி.ஆரும் பாடி நடிக்கிறீர்கள்" என்றார்.

    ஏற்கனவே, நடனப்பயிற்சி இருந்ததால், டான்ஸ் மாஸ்டர் சொல்லிக் கொடுத்த 'மூவ்மெண்ட்'களை சுலபத்தில் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு 'ரோமியோ ஜுலியட்' என்ற அந்தப் பாடலுக்கான படப்பிடிப்பு நடந்தது. 'ரோமியோ ஜுலியட்' என்ற வசன வரிகளைத் தொடர்ந்து 'இன்னொரு வானம் இன்னொரு நிலவு' என அந்தப் பாடல் தொடங்கும்.

    குறித்த நேரத்தில் பாடல் காட்சி முடிந்ததும், ஜப்பான் போகும் தேதி உறுதியாகிவிட்ட தகவலை தெரிவித்தார்கள்.

    நாளைக்கு புறப்பட இருந்த நேரத்தில் ஒருநாள் முன்னதாக அம்மாவையும் என்னையும் கம்பெனிக்கு வரச்சொன்னார் எம்.ஜிஆர். நாங்கள் போய் அவரைச் சந்தித்தபோது, அம்மாவிடம், "உங்கள் மகள் என் படத்தில் நடிப்பது தொடர்பாக 5 வருடம் காண்டிராக்ட் போட்டுக்கொள்வோம்" என்றார்.

    அம்மா இந்த மாதிரியான விஷயத்தை எதிர்பார்க்கவில்லை என்பது அவரது விழிகளில் தெரிந்தது. சட்டென அதை புரிந்து கொண்ட எம்.ஜி.ஆர், "நான் ஒரு புது ஹீரோயினை என் செலவில் கஷ்டப்பட்டு உருவாக்குவேன். ஒரு படத்தில் நடித்ததும் கிடைத்த பெயருக்கு, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க அழைப்பு வரும். நடிகைகளும் உடனே நடிக்கப் போய்விடுகிறார்கள். கடைசியில் பெரிய ஹீரோயின் ஆக்கிய எனக்கே கால்ஷீட் கிடைக்காது. இது எனக்கு தேவையா?"

    இப்படிச் சொன்னவர், மிகவும் கனிந்த குரலில், "ஒருவரின் வளர்ச்சி என்பது என் மூலமாகவே இருந்தாலும், அவர்களின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு நான் ஒருபோதும் தடையாக இருக்க மாட்டேன். இந்த காண்டிராக்டு என்பது, ஒரு பாதுகாப்புக்காகத்தான். என் படங்கள் தவிர மற்ற படங்களில் வாய்ப்பு வந்தால், என்னிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு நடியுங்கள். நான் தடுக்கப் போவதில்லை" என்றார்.

    அதன் பிறகு சந்தோஷமாக அந்த காண்டிராக்ட்டில் கையெழுத்து போட்டார், அம்மா.

    உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நான், மஞ்சுளா, சந்திரகலா என 3 நாயகிகள். மூவருமே ஒன்றாகத்தான் ஜப்பானுக்கு பயணம் ஆனோம்.

    பார்த்த மாத்திரத்திலேயே மஞ்சுளா படபடவென பேசி என்னை கவர்ந்து விட்டார். சந்திரகலா அமைதியாக தெரிந்தார். ஓரளவு பழகிய பிறகு தொடர்ந்து நட்பு பாராட்டினார். விமானப் பயணத்துக்கு முன்பே நாங்கள் மூவரும் நல்ல தோழிகளாகி விட்டோம்.

    விமானப் பயணத்தின்போது என்னை வழியனுப்ப வந்த அம்மாவை தன் அருகில் அழைத்த எம்.ஜி.ஆர், "கவலைப்படாதீங்கம்மா. உங்க பொண்ணை எப்படி கூட்டிட்டுப் போறேனோ அப்படியே திரும்ப உங்களிடம் ஒப்படைப்பேன்" என்றார். அம்மாவுக்கு கண்கள் கலங்கிவிட்டன. எம்.ஜி.ஆருடன் அவரது மனைவி ஜானகியம்மாவும் வந்திருந்தார். "உங்க குழந்தையை நான் பார்த்துக்கறேன்" என்று அவரும் அம்மாவிடம் சொன்னார்.

    வெளிநாட்டில் நாங்கள் போனது படப்பிடிப்புக்காக என்பதை மறந்து விட்டோம். பள்ளி நாட்களில், கல்லூரிக் காலத்தில் 'சுற்றுலா' வருபவர்கள் எப்படி ஜாலியாக அதைக் கொண்டாடுவார்களோ அந்த நிலையில்தான் நான், மஞ்சுளா, சந்திரகலா மூவருமே இருந்தோம்.படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் சதா ஜாலிதான். மஞ்சுளா எப்போதும் ஏதாவது பேசிக்கொண்டேயிருப்பார். நான் அமைதி என்றால் அமைதி... அப்படி ஓர் அமைதியாக இருப்பேன்.

    சந்திரகலா எங்கள் இருவருக்கும் அப்பாற்பட்டு 'மெச்சூர்டாக' இருப்பார்.படப்பிடிப்பினூடே ஒருமுறை எங்கள் இருவரையும் பார்த்த எம்.ஜி.ஆர், "ஒண்ணு (நான்) பேசவே மாட்டேங்குது. ஒண்ணு (மஞ்சுளா) பேச்சை நிறுத்த மாட்டேங்குது" என்று கிண்டலாக சொல்லிவிட்டுப் போனார். அதற்குப்பிறகு நான் கொஞ்சம் பேச ஆரம்பித்தேன்."

    இவ்வாறு லதா கூறினார்.
    ராம்கோபால் வர்மா இயக்கத்தில் நாகார்ஜுனா நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் சிம்டாங்காரன் படத்தின் விமர்சனம்.
    மும்பையில் தொடர்ந்து என்கவுண்டர்கள் செய்து வருகிறார் போலீஸ் அதிகாரி அன்வர். இவர் செய்த என்கவுண்டர்கள் போலியானது என்று கருதி மும்பை உயர்நீதிமன்றம் விசாரணை கமிஷன் அமைகிறது.

    அவ்வழக்கை விசாரிக்க சென்னையை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான நாகார்ஜுனா நியமிக்கிறார்கள். நாகார்ஜுனாவின் விசாரணையில் அன்வர் பற்றிய பல உண்மைகள் தெரிய வருகிறது. அன்வரும் நாகார்ஜுனாவை விசாரிக்க விடாமல் தடுக்கிறார்.

    விமர்சனம்

    இறுதியில் அன்வர் பற்றிய விவரத்தை நாகார்ஜுனா கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    ஆக்ஷன் திரில்லர் படமாக 2018 ஆம் ஆண்டு ‘ஆபிசர்’ என்ற பெயரில் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தற்போது ‘சிம்டாங்காரன்’ என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியாகி உள்ளது.

    நாயகனாக நடித்திருக்கும் நாகார்ஜுனா, தனக்கே உரிய பாணியில் ஆக்சன் காட்சிகளில் அசத்தியிருக்கிறார். அவருக்கு மகளாக பேபி காவியா அறிமுகமாகி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மயிரா சரீன் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

    விமர்சனம்

     சுவாரசியமான திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் ராம் கோபால் வர்மா. அரசியல், சென்டிமெண்ட், ஆக்சன் கலந்து ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் அளவிற்கு இயக்கியிருக்கிறார்.

    ரவிசங்கர் இசையில் பாடல் அனைத்தும் ரசிக்கும் விதம். பரத் வியாஸ் மற்றும் ராகுல் ஆகியோரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் சிம்டாங்காரன் சிறப்பானவன்.
    விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் வாத்தி கம்மிங் பாடல் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
    விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ரம்யா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 

    அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் ‘வாத்தி கம்மிங்...’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

    வாத்தி கம்மிங் பாடல்

    இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
    தற்போது நடைபெற்றுவரும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டிலை ஆரி வெல்வார் என்று முன்னாள் போட்டியாளர் கூறியிருக்கிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசன் அக்டோபர் 4ந்தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தமுறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கடந்த வாரம் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆஜித் குறைந்த வாக்குகளைப் பெற்று 11-வது போட்டியாளராக வெளியேற்றப்பட்டுள்ளார். 

    இந்த வாரம் முழுக்க ஆரி - பாலாஜி இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து போட்டியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் பாலாஜியின் தவறுகளை சுட்டிக்காட்டினார். அதே வேளையில் சக போட்டியாளர்கள் வைக்கும் சிறு சிறு விஷயங்களை திருத்திக் கொள்ளலாமே என்றும் ஆரிக்கு அறிவுரை வழங்கினார்.

    ரேஷ்மா

    ஆரி - பாலாஜி இருவரிடையேயான மோதலைப் பார்த்த பார்வையாளர்கள் சிலர் ஆரிக்கு ஆதரவாகவும், ஒரு சிலர் பாலாஜிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருந்த நிலையில், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகையுமான ரேஷ்மா பசுபுலெட்டி தான் ஆரிக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவர் டைட்டிலை வெல்வார் என்றும் கூறியுள்ளார். நடிகை ரேஷ்மா, சிலுக்குவார்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால் மறைந்த தயாரிப்பாளரின் குடும்பத்திற்கு உதவ முன் வந்துள்ளார்.
    தமிழ்த் திரையுலகில் பெரும் சாதனை படைத்த 'சின்னத்தம்பி' படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.பி. பிலிம்ஸ் பாலு சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நடைபெற்றது.

    அப்போது நடிகர் விஷால் தன்னுடைய மேலாளரை அனுப்பி மறைந்த தயாரிப்பாளர் பாலு தயாரிப்பில் சரவணன் இயக்கத்தில் தான் நடிப்பதாக இருந்த படத்தின் பூஜை ஸ்டில்லைக் காட்டி உறுதி ஒன்றை அளித்துள்ளார்.

    மார்ச் மாதம் அப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து நடத்தி, ஆறு மாதத்திற்குள் நடத்தி முடித்து அந்தப் படம் மூலம் வரும் லாபத் தொகை அனைத்தையும் மறைந்த தயாரிப்பாளர் பாலு குடும்பத்திற்கு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    தயாரிப்பாளர் பாலு

     மேலும், தயாரிப்பாளர் பாலு, விஷாலுக்கு அட்வான்ஸ் ஆக வழங்கிய தொகையான 50 லட்ச ரூபாயையும் விஷால் திருப்பி கொடுத்து இருக்கிறார்.
    நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தியபோது போதைப்பொருளுடன் பிரபல நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மும்பை:

    இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு இந்தி திரையுலகில் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது என்றும், சினிமா விருந்து நிகழ்ச்சிகளில் நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. போதைப்பொருள் பிரிவு போலீசார் விசாரணையில் சுஷாந்த் சிங் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி கைதாகி பின்னர் ஜாமீனில் வந்தார். 

    நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரித்தனர். கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோரும் போதைப்பொருள் வழக்கில் கைதானார்கள். சஞ்சனாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தெலுங்கு நடிகை ஸ்வேதா குமாரியும் (27) போதைப்பொருள் வழக்கில் கைதாகி உள்ளார். 

    மும்பை போலீசார் நட்சத்திர ஓட்டலில் சோதனை நடத்தியபோது அவர் சிக்கினார். ஸ்வேதாவிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தெலுங்கு பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்வேதா குமாரி சில தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ரிங் மாஸ்டர்  என்ற கன்னட படத்திலும் நடித்து இருக்கிறார்.

    மும்பை, தானே மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்களுடன் நடிகைக்கு தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது.

    இதுகுறித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே கூறுகையில், “ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்வேதா குமாரிக்கு போதைப் பொருள் விற்கும் கூட்டத்துடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததையடுத்து கைது செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    போதைப் பொருள் வழக்கில் தென்னிந்திய நடிகை ஒருவர் கைதாகி இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நடிகையும் பின்னணிக் குரல் கொடுப்பவர் மாண ரவீனா ரவி பொங்கல் தினத்தை அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
    விஜய்யின் ‘மாஸ்டர்’ படமும், சிம்புவின் ’ஈஸ்வரன்’ படமும் ஜெயம் ரவியின் ‘பூமி’ படமும் பொங்கலையொட்டி வெளியாகிறது. மாஸ்டரில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். ஈஸ்வரன் மற்றும் பூமி படங்களில் ஹீரோயினாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் மூன்று படத்திலும் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார், ரவீனா ரவி.

    ரவீனா ரவி

    ஏற்கனவே, ரவீனா ரவி நயன்தாரா, எமி ஜாக்சன், சமந்தா, அமலா பால் உள்ளிட்ட முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் விமர்சன ரீதியாக பாராட்டுகளைக் குவித்த ’ஒரு கிடாரியின் கருணை மனு’ மற்றும் சமீபத்தில் வெளியான ’காவல்துறை உங்கள் நண்பன்’ படங்களில் ஹீரோயினாக ரவீனா ரவி நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    மாஸ்டர், ஈஸ்வரன் படத்துக்காக தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி குறித்து டாக்டர் ஒருவரின் உருக்கமான பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
    கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராத நிலையில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது. இதற்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திரையுலகை சேர்ந்த அரவிந்த்சாமி, கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டாக்டர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவரின் சோஷியல் மீடியா போஸ்ட் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    டாக்டர் அரவிந்த் தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழக அரசு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான டாக்டர்கள் சோர்வாக இருக்கிறார்கள். சுகாதாரத் துறை ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.

    இந்த நோய் பரவல் தடுக்க நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறோம். எங்கள் வேலையை பெருமைப்படுத்தி சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும் தெரியவில்லை. எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் ஹீரோக்கள் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம் மற்றும் பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.

    டாக்டரின் பதிவு

    பான்டமிக் இன்னும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் இறக்கிறார்கள். தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலை முயற்சி. இல்லை கொலை, சட்டம் செய்பவர்களோ, ஹீரோக்களோ கூட்டத்துடன் சேர்ந்து படம் பார்க்கப் போவது இல்லை. உயிருக்கு பணத்தை வியாபாரம் செய்கிறார்கள். நாம் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்த பான்டமிக்கில் இருந்து வெற்றிகரமான மீண்டு வர முயற்சிக்கலாமா? மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே, அது இன்னும் முழுதாக அணையவில்லை. நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன் என்று கூறியுள்ளார் அரவிந்த்.
    சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருக்கும் நீலிமா ரசிகரின் ஆபாசமான கேள்விக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தைநட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா ராணி. அதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல என ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல தொடர்களில் மிரட்டலான வில்லியாகவும் நடித்து வருகிறார்.

    நீலிமா அவ்வப்போது வித்தியாசமான போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில் அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 

    நீலிமாவின் பதிவு

    அப்பொழுது நபர் ஒருவர், ஒரு நைட்க்கு எவ்ளோ என்று ஆபாசமாக கேட்டுள்ளார். அதற்கு நீலிமா, கொஞ்சம் நாகரீகத்தை எதிர்பார்க்கிறேன். மற்றவர்களை கேவலமாக பேசுவது வக்கிர புத்தி. தயவு செய்து மனோதத்துவ மருத்துவரை பாருங்கள் என்று நெத்தியடி பதிலளித்துள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
    பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி ஏராளமான ரசிகர்களை பெற்றார்.  

     பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய லாஸ்லியாவிற்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவியத் துவங்கியது. சமீபத்தில் கனடாவில் பணிபுரிந்து வந்த லாஸ்லியாவின் தந்தை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இதனால் லாஸ்லியா குடும்பமே சோகத்தில் மூழ்கிப் போனது.

    லாஸ்லியா

    ஒரு மாதம் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு லாஸ்லியா தந்தையின் உடல் சொந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. லாஸ்லியாவிற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் லாஸ்லியா தந்தையின் மறைவிற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பின் நம்பிக்கை என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட அவரது come back என்று கூறி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
    ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘பூமிகா’ படத்தின் முன்னோட்டம்.
    ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பூமிகா’. இதில் அவர் மனநோய் மருத்துவராக நடித்து இருக்கிறார். ‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தை இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பில் கார்த்திக் சுப்புராஜ், சுதன் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். 

    ஒரு கட்டிடத்தை கட்ட செல்லும் கட்டிடக்கலை நிபுணர்கள் அனைவரும் கொலை செய்யப்படுகிறார்கள். 10 வருடங்களாக அந்த கட்டிடத்தை யாராலும் கட்டி முடிக்க முடியாத நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவருக்காக துப்பறிந்து அங்குள்ள மர்மத்தை கண்டுபிடிப்பது, படத்தின் கதை. 

    ஐஸ்வர்யா ராஜேஷ்

    படம் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது: “இது, எனக்கு 25-வது படம். கனமான கதாபாத்திரம். துணிச்சல் மிகுந்த வேடம். டைரக்டர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் ஒரு நல்ல நண்பர். திறமையான டைரக்டர். பொதுவாக கதையும், கதாபாத்திரமும் பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன். 

    அப்படி ஏற்றுக்கொண்ட படங்களில், ஓபூமிகா’வும் ஒன்று. படப்பிடிப்பு முழுவதும் ஊட்டியில் நடந்தது. இரவு-பகலாக வேலை செய்து, 35 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்து விட்டோம்” என தெரிவித்துள்ளார்.
    ×