என் மலர்tooltip icon

    சினிமா

    அஹானா கிருஷ்ணகுமார், அத்துமீறி நுழைந்த வாலிபரின் புகைப்பட்ம்
    X
    அஹானா கிருஷ்ணகுமார், அத்துமீறி நுழைந்த வாலிபரின் புகைப்பட்ம்

    இரவில் பிரபல நடிகையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபரால் பரபரப்பு

    பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணாவின் வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் இரவில் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான அஹானா கிருஷ்ணகுமார், தற்போது கொரோனா பிரச்சினையால் வீட்டில் இருந்து வருகிறார். இவரது தந்தை கிருஷ்ணகுமாரும் நடிகர் தான். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சத்யம், தெய்வத்திருமகன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். 

    இவர்களின் வீடு திருவனந்தபுரம் சாஸ்தாமங்கலத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு இவரது வீட்டிற்குள் வாலிபர் ஒருவர் நுழைய முயன்றார். அவர் சுவர் ஏறிகுதித்து காம்பவுண்ட்டுக்குள் நுழைந்தார். சத்தம் கேட்டு வெளியே வந்த கிருஷ்ணகுமார் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அஹானா, கிருஷ்ணகுமார்

    அவர் உடனே இது பற்றி வட்டிகாவூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று வாலிபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் பெயர் பசில் அல்அக்பர் என்றும் தெரியவந்தது. போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி, நடிகர் கிருஷ்ண குமார் கூறுகையில், அந்த வாலிபர் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் குடும்பத்தினர் வாலிபரை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
    Next Story
    ×