என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நடிகர் விஜய்சேதுபதி வெப் தொடர் ஒன்றில் நடிக்க ரூ.55 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது.
    ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன.

    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதும், இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை, முதியவர் தோற்றங்களில் நடிப்பதுமே அவரை பெரிய நடிகராக்கி உள்ளது. பிறமொழி படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார். 

    விஜய் சேதுபதி

    இதுவரை 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கிய விஜய்சேதுபதிக்கு இந்தி வெப் தொடர் ஒன்றில் நடிக்க ரூ.55 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த தொடரில் நாயகனாக நடிக்கும் இந்தி நடிகர் ஷாகித் கபூர் சம்பளம் ரூ.40 கோடி என்று கூறப்படுகிறது. அவரை விட விஜய்சேதுபதிக்கு அதிக சம்பளம் கொடுப்பது திரையுலகினர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடரில் ராஷிகன்னா நாயகியாக நடிக்கிறார்.
    விவாகரத்து தனது வாழ்க்கையில் மாற்றத்தை தந்துள்ளதாகவும், தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் நடிகை சுவேதா பாசு தெரிவித்துள்ளார்.
    இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய விருது பெற்ற சுவேதா பாசு, தமிழில் உதயாவின் ரா ரா படத்தில் கதாநாயகியாக வந்தார். கருணாஸ் ஜோடியாக சந்தமாமா மற்றும் ஒரு முத்தம் ஒரு ரத்தம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சுவேதா பாசுவும் இந்தி பட இயக்குனர் ரோகித் மிட்டலும் காதலித்து, 2018-ல் திருமணம் செய்து கொண்டனர். 

    பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். கொரோனா ஊரடங்கில் சுவேதா பாசுக்கு மன அழுத்த பிரச்சினை இருந்தது, அதற்கு சிகிச்சை பெற்றார். விவாகரத்துக்கு பிறகு தனது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக சுவேதா பாசு கூறியுள்ளார்.

    சுவேதா பாசு

    இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “ரோகித்தை விவாகரத்து செய்து விலகியதை சாதாரண பிரிவாகவே உணர்கிறேன். சிலர் பத்து வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து பிரிந்து செல்வதை பார்த்து இருக்கிறேன். ஆனால் எனது திருமண வாழ்க்கை 8 மாதங்களிலேயே முடிந்துவிட்டது. விவாகரத்து மற்றவர்களுக்கு பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால் நான் அதை மோசமாக உணரவில்லை. எனக்கு நானே தோழியாக இருந்து தேற்றினேன். விவாகரத்து எனது வாழ்க்கையில் மாற்றத்தை தந்துள்ளது. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்றார்.
    விவசாயிகள் போராட்டம் குறித்த இந்திய பிரபலங்களின் நிலைப்பாட்டை நடிகர் சித்தார்த் கடுமையாக சாடியுள்ளார்.
    டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஹாலிவுட் பாப் பாடகி ரிஹானா, நடிகை மியா கலிபா உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் டுவிட் செய்து இருந்தனர். 

    இதனிடையே விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச பிரபலங்கள் கருத்து தெரிவிப்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாக இந்திய பிரபலங்களான கங்கனா ரனாவத், அக்‌ஷய் குமார், விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் உள்ளிட்ட பலர் டுவிட் செய்திருந்தனர். 

    சித்தார்த்தின் டுவிட்டர் பதிவு

    இந்நிலையில் இந்திய பிரபலங்களின் இந்த நிலைப்பாட்டை நடிகர் சித்தார்த் மறைமுகமாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: உங்கள் ஹீரோக்களை நீங்கள் கவனமாக, அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள். கல்வி, அன்பு, நேர்மை மற்றும் கொஞ்சம் முதுகெலும்புடன் நடந்து கொள்ளும் தன்மை கண்டிப்பாக தேவை. எந்த நிலைப்பாட்டிலும், எதிலும் குரல் கொடுக்காதவர்கள், திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள். இதுதான் இவர்களின் பிரச்சாரம்’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
    மாஸ்டர் படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனனை கேலி செய்து போடப்பட்ட ‘மீம்ஸ்’களை அவர் அதிகம் ரசித்ததாக தெரிவித்துள்ளார்.
    ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமான மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார். தற்போது தனுஷ் ஜோடியாக நடித்து வருகிறார். 

    இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் நடித்த காட்சிகளின் முகபாவனைகளை வைத்து அவரை கேலி செய்வது போன்ற மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. விஜய்யிடம் கோபமாக பேசும் காட்சிகளை வைத்து பல் துலக்குவது, பீர் பாட்டில் மூடியை பல்லால் திறப்பது உள்பட சில மீம்ஸ்களை உருவாக்கி உள்ளனர்.

    மீம்ஸ்

    மீம்ஸ்களுக்கு மாளவிகா மோகனன் பதில் அளித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், என்னைப் பற்றி வந்துள்ள மீம்ஸ்களை பார்த்தேன். அது காமெடியாக இருந்தன. என்னை சிரிக்கவும் வைத்தன. டூத் பேஸ்ட் மீம்ஸை அதிகமாக ரசித்தேன். உங்களை பார்த்து நீங்களே சிரிக்காமல் இருந்தால் வாழ்க்கை போரடித்துவிடும்'' என்று கூறியுள்ளார். மீம்ஸ்களை பார்த்து கோபப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் ரசித்ததாக மாளவிகா மோகனன் கூறியிருப்பது அதை உருவாக்கியவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
    பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
    பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

    வெளிநாட்டில் வசிப்பவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து நல்லவர்கள் போல் நடித்து அழகிய பெண்களை திருமணம் செய்து அழைத்து செல்வது, பிறகு சித்ரவதை செய்து விரட்டி விடுவது பற்றிய செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாகின்றன அல்லவா?

    இதை மையமாக வைத்து, ஏற்கனவே எழுத்தாளர் சிவசங்கரி "47 நாட்கள்'' என்ற நாவலை எழுதினார். இது, பாலசந்தர் டைரக்ஷனில் 1981-ல் படமாக வெளிவந்தது.

    இதுபற்றி சிவசங்கரி எழுதியிருப்பதாவது:-

    "முதன் முதலாக பாலசந்தரை சந்தித்த நிமிஷத்தில் கொஞ்சம் சந்தோஷம், கொஞ்சம் பயம், கொஞ்சம் படபடப்பு என்று நான் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தது நிஜம்.

    நான் எழுதிய "47 நாட்கள்'' கதையை பாலசந்தர் திரைப்படமாக்கப்போகிறார் என்ற சந்தோஷம், இத்தனை பெரிய டைரக்டருக்கு சமமாய் உட்கார்ந்து விவாதிக்கப் போகிற அளவிற்கு சினிமாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும் என்ற பயம், படபடப்பு. ஆனால் அந்த பயமும், படபடப்பும் சரியாய் இரண்டு நிமிடங்களில் மாயமாய் மறைந்து போனதுதான் ஆச்சரியம்.

    தன்னோடு பேசுபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்துவது என்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமான காரியம். என்னைப் பொறுத்தவரையில், அந்த சிலரில் பாலசந்தரையும் நான் சேர்க்க விரும்புகிறேன்.

    பாலசந்தர் என்னிடம், "47 நாட்கள் ரொம்பவும் பிரபலமான கதை. நான் அதைப்படம் எடுக்கும்போது ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். படம் நன்றாக அமையாவிட்டால், சிவசங்கரியின் கதையை பாலசந்தர் கெடுத்துவிட்டார் என்றுதான் சொல்வார்கள். அதனாலே, அந்த பயம் எனக்கு இருக்கிறது'' என்றார்.

    திரைப்பட உலகிற்கு முன்னோடியாக, ஒரு வழிகாட்டியாக திகழ்பவருக்கு பயமா!

    என் வியப்பை நான் வெளியிட்டதும், பாலசந்தர் "ஆமாம்'' என்று தலையசைத்தார்.

    "ஆம். அந்த பயம் அடிமனதில் உறுத்திக்கொண்டே இருந்தால்தான் கவனத்துடனும், சிரத்தையுடனும் என்னால் வேலை பார்க்க முடியும். படம் சிறப்பாக அமைய இந்த பயமும், தவிப்பும் முக்கியம்'' என்றார், பாலசந்தர்.

    "47 நாட்கள்'' படத்தில் கதாநாயகனாக நடித்தவர், சிரஞ்சீவி. அவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் இதுதான். அவர் இப்போது ஆந்திராவில் சூப்பர் ஸ்டாராக விளங்குகிறார்.

    கதாநாயகியாக நடித்தவர் ஜெயப்பிரதா.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் எல்லாம் நடந்தது. படம் நன்றாக அமைந்தும், எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

    டைரக்டர் ஆவதற்கு நடிகை லட்சுமிக்கு ஊக்கம் அளித்தவர், பாலசந்தர்.

    இதுபற்றி லட்சுமி கூறியிருப்பதாவது:-

    "ஒரு கலைஞனிடம் மறைந்திருக்கும் கலைத் திறமையைக் கண்டு பிடித்து, வெளி உலகுக்கு கொண்டு வருபவர் என்னுடைய குரு கே.பாலசந்தர். படங்களில் காபரே நடனங்கள் மட்டும் ஆடிக்கொண்டிருந்த ஆலத்தை "மன்மதலீலை''யின் கதாநாயகி ஆக்கியவர். சூப்பர் ஸ்டார்களான ரஜினி, கமல் ஆகியவர்களை படங்களில் வில்லன்களாக நடிக்க வைத்தவர்.

    நான் டைரக்ட் செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் சொன்னபோது, "உனக்கு அதற்கான திறமை இருக்கிறது. தைரியமாகச் செய்!'' என்று ஊக்கப்படுத்தியதோடு, அவர் டைரக்ட் செய்யும் நிறுவனத்திலேயே எனக்கு டைரக்ட் செய்ய வாய்ப்பு கொடுத்தார்.

    "லட்சுமி ஒரு படத்தை டைரக்ட் செய்யப் போகிறாராம். அதற்கு பாலசந்தர் உதவி செய்கிறாராம். படத்தின் முடிவு எப்படி இருக்கும்?'' என்று வாசகர் ஒருவர், ஒரு பத்திரிகையில் கேள்வி கேட்டிருந்தார். "படம் ஓடினால் லட்சுமிக்கு பெயர். தோல்வி அடைந்தால் பாலசந்தரை திட்டுவார்கள்'' என்று பதில் எழுதியிருந்தது அந்தப் பத்திரிகை. இது முற்றிலும் உண்மை.

    நான் டைரக்ட் செய்வதற்கு பாலசந்தர் தைரியம் கொடுத்தார். பாலசந்தரின் மேற்பார்வையில் விசுவும், நானும் ஒரே சமயத்தில் டைரக்ட் செய்யக் கற்றுக்கொண்டோம் என்று சொல்லலாம்.

    "மழலைப்பட்டாளம்'' ஓடியவுடன், அது பாலசந்தரின் மேற்பார்வையில் டைரக்ட் செய்யப்பட்டது என்பதை மறந்து விட்டு, "அடுத்த படத்தை எப்போது டைரக்ட் செய்யப்போகிறீர்கள்?'' என்று என்னைக் கேட்க ஆரம்பித்து விட்டனர். படம் ஓடாமல் இருந்தால், அவரைத்தானே திட்டி இருப்பார்கள்!

    "சில நேரங்களில் சில மனிதர்கள்'' படத்தில் என் சிறந்த நடிப்புக்காக எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதற்காக சென்னையில் ஒரு பாராட்டு விழா நடந்தது.

    நான் மேடையில் இருந்து கீழே இறங்கியபோது, பாலசந்தர் "ஒரு நிமிடம்'' என்றார். நான் அவர் பக்கம் திரும்பினேன். "நவக்கிரகம் செட்டில் நான் ஒரு வார்த்தை சொன்னேன். ஞாபகம் இருக்கிறதா?'' என்று கேட்டார்.

    அவர் முன்பு சொன்னது என் நினைவுத் திரையில் நிழலாட ஆரம்பித்தது. "நவக்கிரகம்'' படப்பிடிப்பு நடந்து வந்தபோது, "நான் திருமணம் செய்து கொண்டு, திரை உலகில் இருந்து விலகிவிடப்போகிறேன்'' என்று அவரிடம் கூறினேன்.

    "சாவித்திரி, பானுமதி, சவுகார்ஜானகி இவர்கள் மூன்று பேருக்குப் பிறகு, அந்த லிஸ்டில் யாருமில்லை. நீ இந்தப் பட உலகை விட்டு போகக்கூடாது. இதை அதிகாரமாகச் சொல்லவில்லை. இது என் வேண்டுகோள்'' என்று பாலசந்தர் கூறினார்.

    இதைத்தான் பாலசந்தர் நினைவு படுத்தினார்.

    "அன்றைக்கு நான் சொன்னேனே லட்சுமி! சினிமா உலகில் நீ தொடர்ந்து இருப்பதால்தானே இன்றைக்கு உன்னாலே தேசிய விருது வாங்க முடிந்தது!'' என்றார்.

    "ஆமாம் சார். ரொம்ப சந்தோஷம். தேசிய விருது வாங்குகிற அளவுக்கு நடிப்பிலே என்னை வளர்த்து இருக்கிறீர்கள். அதற்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை'' என்று சொன்னேன்.''

    இவ்வாறு லட்சுமி குறிப்பிட்டுள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களை பெற்ற கவின் நடித்துவரும் புதிய படத்தில் சின்னத்திரை பிரபலம் ஒருவர் இணைந்து நடித்து வருகிறார்.
    சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் கவின். இதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

    கவின் நடிப்பில் தற்போது லிப்ட் என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் பவித்ராவும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பவித்ரா

    மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை பவித்ரா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பவித்ராவுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, மாநாடு படத்தில் நடிக்க காரணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு 'மாநாடு' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டீசருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்தப் படம் தொடர்பாக சிம்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: "எனக்குக் கடவுள் நம்பிக்கை அதிகம். சிவனை ரொம்பப் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், மதத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. இந்தக் கடவுள், அந்தக் கடவுள் என்றில்லாமல் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கிறேன். இந்தச் சமூகத்தில் பொதுவாகவே இஸ்லாமியர்கள் மீது ஒரு பார்வை இருக்கிறது. அதை மாற்றுவதற்கு ஏதாவது ஒன்று பண்ண வேண்டும் என நினைத்துக்கொண்டே இருந்தேன்.

    மாநாடு

    இந்தப் படத்தில் அந்த விஷயத்தைப் பேசுவதற்குக் கதை சரியாக அமைந்தது. அதற்காகவே இந்தப் படத்தை ஒப்புக்கொண்டேன். வழக்கமான ஒரு கதையாக அல்லாமல், வித்தியாசமாக இருக்கும். எந்த மொழியிலும் நல்லதொரு படம் வெளியானால் இந்தியாவில் கொண்டாடுவார்கள். அப்படியொரு படமாக 'மாநாடு' இருக்கும்”.

    இவ்வாறு சிம்பு தெரிவித்தார்.
    தமிழில் சித்து பிளஸ் 2 படத்தில் நடிகையாக அறிமுகமான சாந்தினி, ரசிகர்களுக்காக கணவருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
    கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘சித்து பிளஸ் 2’ படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தினி. தொடர்ந்து பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்கூஸ்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் இரட்டை ரோஜா, தாழம்பூ ஆகிய சீரியல்களிலும் நடித்தார்.

    சாந்தினிக்கும் நடன இயக்குநர் நந்தாவுக்கும் இருவீட்டார் சம்மதப்படி கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் சாந்தினி எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகும் பொம்மை படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சாந்தினி

    திரைத்துறை பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கின்றனர். நடிகைகள் பலரும் அவ்வப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவிடுவது, படம் குறித்த அறிவிப்புகளை பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என இன்ஸ்டாகிராமில் பிஸியாக இருக்கின்றனர். இந்நிலையில் நடிகை சாந்தினி தனது கணவருடன் எடுத்த ரீல் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். எல்லோரும் கேட்டுக் கொண்டதற்காக தன்னுடைய கணவருடன் எடுத்த முதல் ரீல் வீடியோவை பதிவிடுவதாகவும் அவர் எழுதியுள்ளார். சாந்தினியின் இந்த பதிவைப் பார்த்த பலரும் அற்புதமான ஜோடி என்று பாராட்டி வருகின்றனர்.
    ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தனுஷுடன் நடித்து மிகவும் பிரபலமான நடிகை இணைந்திருக்கிறார்.
    சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், யோகிபாபு, கே.ஜி.எப். பட வில்லன் ராமச்சந்திர ராஜு, குக் வித் கோமாளி புகழ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

    அம்மு அபிராமி

    சமீபத்தில், தலைவாசல் விஜய் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தனுஷின் அசுரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான அம்மு அபிராமி இந்த படத்தில் இணைந்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
    திரைப்பட விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் இணைந்து கலந்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
    இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் விரைவில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, சில திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறார்கள்.

    அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர். இந்த படத்தின் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ரோட்டர்டாம் என்ற நகரில் டைகர் காம்படிஷன் இன்டர்நேஷனல் திரைப்பட விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கூழாங்கல் படம் திரையிடப்படுகிறது.

    கூழாங்கல் படக்குழுவினர்

    இதற்காக விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பிஎஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திர்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
    பிரபுதேவா படத்தில் ரூ.85 லட்சம் நஷ்டம் அடைந்தேன் என்று சிங்கிள்ஸ் பட விழாவில் டபுள்ஸ் பற்றி தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளார்.
    அட்டக்கத்தி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் தினேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நானும் சிங்கிள் தான்’. இப்படத்தில் கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி கோபி என்பவர் இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ‘நானும் சிங்கிள் தான் படத்தில் பணியாற்றிய படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். நான் டபுள்ஸ் என்ற திரைப்படத்தை எடுத்திருந்தேன். இதில் பிரபுதேவா, மீனா, சங்கீதா ஆகியோர் நடித்திருந்தார்கள். கணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனையை படமாக உருவாக்கப்பட்டது.

    கே.ராஜன் - பிரபு தேவா

    இந்த படத்தில் எனக்கு ரூ.85 லட்சம் நஷ்டம் அடைந்தேன். எப்போதும் இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு மதிப்பு தர வேண்டும். ஒரு இயக்குனரைத்தான் தயாரிப்பாளர் நம்பி பணம் போடுகிறார். அதை மனதில் வைத்து இயக்குனர்கள் படம் எடுக்க வேண்டும்’ என்றார்.
    நடிகர் விஷாலுடன் 15 ஆண்டுகளுக்கு முன் நடித்த நடிகை ஒருவர் தற்போது மீண்டும் அவர் நடிக்கும் அடுத்த படத்தில் இணைய இருக்கிறார்.
    நடிகர் விஷால் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’சிவப்பதிகாரம்’. கரு பழனியப்பன் இயக்கிய இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக மம்தா மோகன் தாஸ் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின்னர் அருண்விஜய்யின் ‘தடையறத்தாக்க’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில் தற்போது விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் ’எனிமி’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் மம்தா மோகன் தாஸ் நடிக்க உள்ளார். இவர் அனேகமாக ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. 

    மம்தா - விஷால்

    விஷாலுக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடிக்கிறார். பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
    ×