என் மலர்
சினிமா செய்திகள்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ், அடுத்ததாக நடிக்க உள்ள படம் 8 மொழிகளில் தயாராக உள்ளது.
‘ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸ், சமீபத்தில் தனது 25-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அர்ஜுன் ரெட்டி பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாகவும் அறிவித்திருந்தனர். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 8 மொழிகளில் தயாராவதாக குறிப்பிட்டிருந்தனர்.

ஸ்பிரிட் படத்தின் போஸ்டர், கரீனா கபூர்
இந்நிலையில், ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கப்போது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் ஸ்பிரிட் படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் நடிகை கரீனா கபூர் பிரபாஸுடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளார். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் விஷால், ஜெயம் ரவி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான லட்சுமி மேனன், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2016-ல் விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடர்ந்தார். அதன்பிறகு சில வருடங்கள் படங்களில் நடிக்கவில்லை.

ஏஜிபி படத்தின் போஸ்டர்
பின்னர் புலிக்குத்தி பாண்டி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற்போது ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்த லட்சுமி மேனன், தற்போது முதல் தடவையாக இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்க உள்ளார்.
நயன்தாரா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக உயர்ந்துள்ளதால், தற்போது லட்சுமி மேனனும் அந்த ரூட்டுக்கு மாறி உள்ளார்.
விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 77 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந் தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதன்படி காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர். இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 74 மையங்களில் நடைபெற்றது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மொத்தம் 169 பேர் போட்டியிட்டனர். இதில் 77 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு 77 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வார்டு உறுப்பினர் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட பிரபு என்பவர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்தும் நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேர்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீகாந்த்
அந்த வகையில், ஸ்ரீகாந்தின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
‘வெண்ணிற ஆடை’ படத்தில் அறிமுகமான பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
இயக்குநர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்தும் நடித்துள்ளார்.
இதுவரை 200-க்கும் மேர்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 83. அவரது மறைவுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜிக்கு மகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
அறிமுக இயக்குனர் சுந்தரவடிவேல் இயக்கத்தில் பிரசாந்த் சீனிவாசன், பிரசாத் நடிப்பில் தயாராகும் ‘ரீ’ படத்தின் முன்னோட்டம்.
குடும்ப பின்னணியில் சைக்கோ திரில்லராக உருவாகும் படம் ‘ரீ’. அறிமுக இயக்குனர் சுந்தரவடிவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். கதாநாயகர்களாக பிரசாந்த் சீனிவாசன், பிரசாத் ஆகியோரும், கதாநாயகிகளாக காயத்ரி ரெமா, சங்கீதா பால் நடிக்கிறார்கள். பாரதிராஜாவின் உதவியாளர் ராஜேந்திரன் இணை இயக்குனராக பணியாற்றுகிறார்.

ரீ படக்குழு
ஹரி இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். தினேஷ் ஸ்ரீநிவாஸ் ஒளிப்பதிவினை மேற்கொள்கிறார். எடிட்டிங் பணிகளை நவீன் கவனிக்கிறார். ஸ்ரீஅங்கா புரொடக்ஷன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் "ரீ" திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை, கடந்த 10 நாட்களில் தன்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
தெலுங்கில் பிசியான நடிகையாக வலம் வருபவர் பிரக்யா ஜெய்ஸ்வால். தமிழில் ’விரட்டு’ என்ற படத்தில் நடித்திருக்கும் இவர், இந்தி மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது அகண்டா என்கிற படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அவர் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், சிகிச்சைக்குப் பின் அதில் இருந்து மீண்ட நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரக்யா ஜெய்ஸ்வால்
இதுகுறித்து அவர் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “எனக்கு மீண்டும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய பிறகும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி, தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். கடந்த 10 நாட்களில் என்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்” என அவர் அறிவுறுத்தி உள்ளார்
பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ள மிஷ்கின், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மிஷ்கின்
இந்நிலையில், மிஷ்கின் அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி அவர் இயக்க உள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிசாசு 2 படத்தை தயாரித்த முருகானந்தம் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளாராம். மேலும் இப்படத்தில் நடிகர் வித்தார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் மூன்று நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘டாக்டர்’. இப்படம் கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என் அனைத்தும் படத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இதனால் டாக்டர் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூலிலும் இப்படம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

டாக்டர் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், டாக்டர் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த வாரம் ஆயுத பூஜை விடுமுறை வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பற்றி நடிகை கங்கனா மறைமுகமாக சாடி உள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அதில் அரசியல் மற்றும் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை பற்றி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். சில நேரங்களில் அவர் வெளியிடும் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்துவதும் உண்டு. அந்த வகையில் தற்போது ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பற்றி மறைமுகமாக சாடி உள்ளார் கங்கனா.

கங்கனா ரணாவத், ஷாருக்கான்
அவர் வெளியிடுள்ள பதிவில், “கடந்த 2014 ஆம் ஆண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஜாக்கிசானின் மகன் கைது செய்யப்பட்டபோது, ஜாக்கிசான் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார். அதனால் ஜாக்கிசானின் மகன் 6 மாதம் சிறையிலிருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். ஷாருக்கானும் தன் மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைத் தான் கங்கனா இவ்வாறு மறைமுகமாக பேசியிருப்பதாக தெரிகிறது.
நாகசைதன்யா ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் பிரீதம் ஜுகல்கர் தெரிவித்துள்ளார்.
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் என்று டோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியானது.
இதையடுத்து பிரீதம் ஜுகல்கருடன் நடிகை சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து பிரீதம் ஜுகல்கரை அவதூறாக திட்டியும், மிரட்டல் விடுத்தும் நாகசைதன்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

பிரீதம் ஜுகல்கர், சமந்தா
இதுகுறித்து பிரீதம் ஜுகல்கர் அளித்துள்ள பேட்டியில். ‘‘எனக்கும், சமந்தாவுக்கும் தவறான தொடர்பு உள்ளது என்றும், இதனாலேயே சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் பிரிவு ஏற்பட்டு உள்ளது என்றும் தகறான தகவல் பரப்பி உள்ளனர். இதன் மூலம் சமந்தாவை அவதூறு செய்துள்ளனர். சமந்தாவை நான் சகோதரியாகவே பார்க்கிறேன்.
அவரை சகோதரி என்றே அழைக்கிறேன். எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை என்பது நாகசைதன்யாவுக்கு தெரியும். ஆனாலும் அவர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. நாகசைதன்யா ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.
சுந்தர்.சி இயக்கி உள்ள ‘அரண்மனை 3’ திரைப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அரண்மனை 3’. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். இப்படம் வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஆயுத பூஜையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், அரண்மனை 3 படக்குழுவைச் சேர்ந்த ஒருவரிடம் படப்பிடிப்பு அனுபவங்கள் எப்படி இருந்தது என்பது குறித்து கேட்டோம். அவர் கூறிய விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்தியது. ‘அரண்மனை 3’ படத்திற்காக 12 அடி உயர லிங்கம் சிலை ஒன்றை செட் போட்டு படமாக்கி உள்ளனர்.

ஆர்யா, ராஷி கன்னா
ஷூட்டிங்கிற்காக போடப்பட்ட செட்டை உண்மையான லிங்கம் சிலை என்று நினைத்து பொதுமக்கள் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்தார்களாம். இதன் காரணமாக சில நாட்கள் ஷூட்டிங்கைத் தொடங்குவதில் தாமதம் ஆனதாம். முன்னதாக ‘அரண்மனை 2’ படத்தின் ஷூட்டிங்கின்போதும், அப்படத்திற்காக போடப்பட்ட பிரம்மாண்ட அம்மன் சிலை செட் முன்பு, இதேபோல பொதுமக்கள் திரண்டு பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.






