என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி உள்ளது.
    • இந்த கல்லூரியின் 65-வது ஆண்டு விழாவை கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பினர் நடத்தினர்.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 65-வது ஆண்டு விழாவை கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பினர் நடத்தினர்.இதில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் சென்னைக்கு வந்து நடிகர் ஆவதற்கு முன்பாக ஒரு ஓவியனாக இருந்தேன். சென்னையில் இருந்து 60 கி.மீ தூரம் சைக்கிளில் மாமல்லபுரம் வந்து தெரு ஓரம் தங்கியிருந்து இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை வரைந்துள்ளேன். இதற்கு எனது ஆர்வமும் விடாமுயற்சியுமே காரணம் ஆகும். எனவே மாணவர்கள் முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது. இது ஒரு தெய்வீக கலைச்சார்பு பயிற்சியாகும். சாதாரண நபர்களுக்கு இது தோன்றாது. உங்களுக்கு கடவுள் வாய்ப்பளித்துள்ளார், வளருங்கள்.

    நான் ஒரு நடிகன், நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை என்கிற மகிழ்ச்சி எனக்கு நிறைவை தரவில்லை. நான் ஓவியனாக வாழ்ந்து அலைந்து திரிந்த அந்த நாட்களே எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்தது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அனைத்து பிரிவு மாணவ, மாணவிகள் இடையே நடத்தப்பட்ட மரச்சிற்பம் செதுக்குதல், கழிமண்,கற்சிலைகள் வடித்தல், உலோக உருவம் செய்வது, பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிவக்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    • நடிகரும், திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியனை நேற்று சந்தித்தார்.
    • டி.ராஜேந்தர் அப்போது வேலுாரில் உள்ள தனக்கு சொந்தமான சினிமா தியேட்டர் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

    நடிகரும், திரைப்பட இயக்குனருமான டி.ராஜேந்தர் வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியனை நேற்று சந்தித்தார். அப்போது வேலுாரில் உள்ள தனக்கு சொந்தமான சினிமா தியேட்டர் தொடர்பாக அவர் பேசியதாக தெரிகிறது.

    டி.ராஜேந்தரை பார்த்ததும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ஆர்வத்துடன் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதில், பெண் ஒருவர் தனது குழந்தையுடன் 'செல்பி' எடுக்க முயன்றபோது, அவரை அருகில் அழைத்து டி. ராஜேந்தர் போட்டோ எடுத்துக்கொண்டார்.

    பின்னர், அங்கிருந்த மக்களிடம், "எல்லாரும் பாதுகாப்பாக, ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அரசாங்கம் கூறும் சட்டத்தை பின்பற்ற வேண்டும்" என்று கூறியதோடு, தனக்கே உரிய ஸ்டைலில், "வாழ்க்கையில எல்லாருக்கும் வேணும் டாஸ்க், உங்களோட சேப்டிக்கு போடுங்க மாஸ்க்" எனக் கூறினார்.

    இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. தனது சொந்த வேலை காரணமாக வந்த இடத்திலும் அவருக்கே உரிய பாணியில் முககவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்திய டி.ராஜேந்தருக்கு அங்கிருந்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர். 

    • நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் எதிர்பாராத கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
    • இந்த வழக்கின் விசாரணைக்காக யாஷிகா ஆனந்த் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்.

    நடிகை யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.


    யாஷிகா ஆனந்த்

    யாஷிகா ஆனந்த்


    இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டது. யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாகவும் அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்குமூலத்தில் தெரியவந்தது.


    யாஷிகா ஆனந்த்

    யாஷிகா ஆனந்த்


    தொடர்ந்து படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார்.


    நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா ஆனந்த்

    நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா ஆனந்த்


    இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக யாஷிகா ஆனந்த் இன்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும் வருகிற ஜூலை 27ம் தேதி ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்த படம் பரியேறும் பெருமள்.
    • இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த 2018ம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் பரியேறும் பெருமாள். இதில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தை அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குனர் பா.இரஞ்சித் தயாரித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    பரியேறும் பெருமாள்

    பரியேறும் பெருமாள்

    இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் பின்னணியில் உள்ள சாதிய முரண்பாடுகளை பற்றி பேசும் படமாக எடுக்க கரண் ஜோஹர் திட்டமிட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முதன்மை கதாபாத்திரங்களில் சித்தார்த் சதுர்வேடியும், டிரிப்டி டிமிரி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு திவீரம் காட்டி வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கடந்த ஆண்டும் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். நேற்று பெங்களூரில் நடைபெற்ற இப்படத்தின் நிகழ்ச்சியில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.


    ஜெயம் ரவி

    ஜெயம் ரவி

    இவ்விழாவில் ஜெயம் ரவி பேசியதாவது, நான் படங்களில் நல்லவனாக நடிக்க விருப்பமில்லை. ஏனெனில் ஒரே மாதிரியான நடிப்பை மட்டும் வெளிபடுத்த முடியும் .ஆனால் கெட்டவனாக நடித்தால் தனது நடிப்பு திறனை நன்றாக வெளிப்படுத்தலாம். குறிப்பாக இந்த ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிக்க மணி சார் நிறைய திறன்களை சொல்லி தந்தார். இந்த கதாபாத்திரத்திற்காக யாரையும் பார்த்து நான் காப்பி அடிக்க விருப்பமில்லை.


    ஜெயம் ரவி

    ஜெயம் ரவி

    பல வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த ராஜ ராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் முன்பு அந்த படத்தை நான் பார்க்கவில்லை. ஒரு வேளை அந்த படத்தை நான் பார்த்திருந்தால் அவரின் நடிப்பின் தாக்கம் என்னுள் வந்திருக்கும், என் நடிப்பு அவர் நடிப்பிற்கு 10 சதவீதம் கூட ஈடாகாது. என்னால் எப்படி நடிக்க முடியுமோ அப்படி நடித்தேன். மணி சாரை நம்புனேன், கல்கியை நம்பினேன், கடவுளை நம்பினேன். என்னுடைய வழியில் நான் சிறப்பாக நடித்து முடித்துள்ளேன் என்று கூறினார்.

    • தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா.
    • இவர் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

    தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா. தெலுங்கு, இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். தற்போது கிக், ரேஸ் குர்ரம், கிக்-2, துருவா, சைரா உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ள ஏஜென்ட் என்ற தெலுங்கு படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.


    ஊர்வசி ரவுத்தேலா - அகில்

    ஊர்வசி ரவுத்தேலா - அகில்

    இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் ஊர்வசி ரவுத்தேலா நடனம் ஆடியபோது அவரிடம் அகில் தவறாக நடக்க முயன்று தொல்லை கொடுத்ததாகவும், இதனால் அவரை முதிர்ச்சியற்றவர் என்று ஊர்வசி ரவுத்தேலா சாடியதாகவும் வலைத்தளத்தில் விமர்சகர் ஒருவர் தெரிவித்து இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.


    ஊர்வசி ரவுத்தேலா

    ஊர்வசி ரவுத்தேலா

    இதையடுத்து அந்த நபர் மீது அவதூறு வழக்கு தொடர தனது வழக்கறிஞர் மூலம் ஊர்வசி ரவுத்தேலா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். "நீங்கள் சொன்னதுபோல் படப்பிடிப்பில் எந்த சம்பவமும் நடக்கவில்லை. தவறான தகவல் வெளியிட்ட உங்கள் மீது அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து.
    • இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.

    1980-ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. அதன்பின்னர் ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கு பாடல்களை எழுதி ரசிகர்களை கவர்ந்தார். இவர் முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, பவித்ரா, சங்கமம், கண்ணத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை வைரமுத்து பெற்றார்.

    இந்நிலையில் வைரமுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், பிரிவுக்குப் பிறகு

    உறவுக்கு வந்த கணவனைக்

    கொஞ்சுகிறாள் மனைவி

    "வெட்கம் விடைகேட்குதே"

    என்கிறாள்

    "கொச்சையான சொற்கள்

    கொஞ்சம் செவிகேட்குதே"

    என்கிறாள்

    பாடல் பதிவைப் பாருங்கள்

    இயக்கம் ராஜசேகர்

    இசை ஜோகன்

    படம் 13ஆவது அட்சக்கோடு

    என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    • ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் தொடர்சியாக வெளியாகி படத்தின் மீதான மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


    விக்ரம் வெளியிட்ட புகைப்படங்கள்
    விக்ரம் வெளியிட்ட புகைப்படங்கள்


    இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படத்தில் ஆதித்த கர்காலனாக நடித்த விக்ரம் கதாப்பாத்திரத்தின் உடன்பிறப்புகளான அருண்மொழி வர்மன் ஜெயம் ரவி, குந்தவை திரிஷா, மற்றும் வந்தியத்தேவன் கார்த்தியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உடன்பிறப்புகள் 3, திரையுலும் திரைக்கு வெளியிலும் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

    • சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’.
    • இப்படம் அஜித் நடிப்பில் வெளியான ‘வீரம்’ படத்தின் இந்தி ரீமேக்காகும்.

    கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வீரம்'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தற்போது இந்தியில் 'கிசி கா பாய் கிசி கி ஜான்'என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.


    கிசி கா பாய் கிசி கி ஜான்

    இயக்குனர் பர்ஹத் சம்ஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சல்மான்கான், வெங்கடேஷ், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இப்படத்தை ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


    • ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’.
    • இப்படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    டாக்டர், டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் 'அயலான்'. இப்படத்தை இயக்குனர் ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


    பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 7.26 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    'அயலான்' திரைப்படம் இந்தாண்டு தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


    • விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவுற்றது.

    திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.


    மார்க் ஆண்டனி

    சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்ததையடுத்து சில தினங்களுக்கு முன் படப்பிடிப்பு நிறைவுற்றது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.


    மார்க் ஆண்டனி போஸ்டர்

    இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டீசர் வருகிற 27-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.


    • மணிரத்னம் இயக்கத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர்.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர்.


    இதையடுத்து, 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'சின்னஞ்சிறு நிலவே' பாடலின் லிரிக் வீடியோ இதற்கு முன்பே வெளியான நிலையில் இப்பாடலின் ஒரு நிமிட வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்பாடலின் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.




    ×