என் மலர்tooltip icon

    இது புதுசு

    வால்வோ நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ஓ.டி.ஏ. முறையில் அப்டேட் வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது.


    வால்வோ நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை ஓவர் தி ஏர் அப்டேட் (ஓ.டி.ஏ.) மூலம் மேம்படுத்துகிறது. இந்த அம்சம் முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் எக்ஸ்.சி.40 ரிசார்ஜ், 2022 எக்ஸ்.சி.60, 2022 எக்ஸ்.சி.60 ரிசார்ஜ் மற்றும் 2022 எக்ஸ்.சி.60 போல்-ஸ்டார் போன்ற மாடல்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

    இந்த அப்டேட்- புது அம்சங்களை வழங்குவது, ஏற்கனவே உள்ள சிறு குறைகளை போக்குவது, இன்போடெயின்மென்ட் மற்றும் ப்ரோபல்ஷன் சிஸ்டத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இதன் மூலம் எக்ஸ்.சி.40 மாடலை பயன்படுத்துவோர் 'ரேன்ஜ் செயலி' ஒன்றை எதிர்பார்க்கலாம். இதை கொண்டு வாகனத்தின் ரேன்ஜ்-ஐ நீட்டிக்கவும் முடியும். 

     வால்வோ எலெக்ட்ரிக் கார்

    ஓ.டி.ஏ. அப்டேட் மூலம் காரின் ரேன்ஜ் எத்தனை கிலோமீட்டர்கள் அதிகரிக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. முன்னதாக டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கு ஓ.டி.ஏ. அப்டேட் வழங்குவதில் வாடிக்கையாளர்களிடம் நற்பெயரை பெற்று இருக்கிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய செடான் மாடல் கார் நவம்பர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய ஸ்லேவியா மாடல் நவம்பர் 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் ஸ்கோடா ரேபிட் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்படுகிறது. 

    புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடல் ஹோண்டா சிட்டி, மாருதி சுசுகி சியாஸ் மற்றும் ஹூண்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. ஸ்கோடா ஸ்லேவியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அறிமுகமாகும் இரண்டாவது கார் ஆகும். 

     ஸ்கோடா ஸ்லேவியா

    ஸ்கோடா ஸ்லேவியா மாடல் வோக்ஸ்வேகன் குழுமத்தின் எம்.கியூ.பி. ஏ0 ஐ.என். பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இந்த கார் 4541எம்.எம். அளவு நீளமும், 1752 எம்.எம். அளவு அகலமும், 1487 எம்.எம். அளவு உயரமாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2651 எம்.எம். ஆகும். 

    ஸ்கோடா ஸ்லேவியா மாடலில் 113 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1 லிட்டர் டி.எஸ்.ஐ. என்ஜின் அல்லது 150 பி.ஹெச்.பி. திறன் வழங்கும் 1.5 லிட்டர் டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலினை முதற்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் 2022 கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரினில் புதிய கிரெட்டா மாடலின் முன்புறம் மற்றும் பக்கவாட்டு பகுதிகள் காணப்படுகிறது. இந்த கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    தற்போதைய தகவல்களின்படி புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் கார் கைகிண்டோ இந்தோனேசியா சர்வதேச ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. டீசரின் படி புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் மாடல் எல்.இ.டி. ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கும் என தெரிகிறது. 

     2022 கிரெட்டா பேஸ்லிப்ட் டீசர்

    புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடலில் பானரோமிக் சன்ரூப், போஸ் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், புதிய 10.25 இன்ச் டி.எப்.டி. எல்.சி.டி. கிளஸ்டர், மேம்பட்ட அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புளூலின்க் கனெக்டிவிட்டி வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
    ஜப்பானை சேர்ந்த அலி டெக்னாலஜிஸ் நிறுவனம் உலகின் முதல் பறக்கும் பைக் மாடலை அறிமுகம் செய்தது.


    பறக்கும் கார்கள் உருவாக்கப்படுவதை அனைவரும் அறிவோம். பல்வேறு நிறுவனங்கள் பறக்கும் கார்களின் ப்ரோடோடைப் மாடல் வெளியிட்டுள்ளன. தற்போது ஜப்பானில் உலகின் முதல் பறக்கும் பைக் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக் வானில் பறப்பது மட்டுமின்றி, காற்றில் மிதக்கவும் செய்யும்.

    ஜப்பானை சேர்ந்த அலி டெக்னாலஜிஸ் நிறுவனம் பறக்கும் பைக் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது இந்த பைக் எவ்வாறு இயங்கும் என்பதை விளக்கி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. 

     எக்ஸ்-டுரிஸ்மோ லிமிடெட் எடிஷன்

    இந்த பறக்கும் பைக் எக்ஸ்-டுரிஸ்மோ லிமிடெட் எடிஷன் என அழைக்கப்படுகிறது. இந்த பறக்கும் பைக் புஜியில் உள்ள பந்தய களத்தில் இயக்கி காண்பிக்கப்பட்டது. எக்ஸ்-டுரிஸ்மோ மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடல் மொத்தத்தில் 200 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    புதிய எக்ஸ்-டுரிஸ்மோ லிமிடெட் எடிஷன் விலை இந்திய மதிப்பில் ரூ. 5.10 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 300 கிலோ எடை கொண்ட எக்ஸ்-டுரிஸ்மோ தொடர்ச்சியாக 30 முதல் 40 நிமிடங்கள் வரை பறக்கும். இதன் அதிகபட்ச வேகம் குறித்து அலி டெக்னாலஜிஸ் நிறுவனம் எந்த தகவலையும் வழங்கவில்லை.
    ஜாகுவார் நிறுவனத்தின் 2021 எக்ஸ்.எப். மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


    ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் 2021 எக்ஸ்.எப். ஆடம்பர செடான் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் தெய்தது. புதிய செடான் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 2021 ஜாகுவார் எக்ஸ்.எப். துவக்க விலை ரூ. 71.60 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    பேஸ்லிப்ட் மாடல் என்பதால், எக்ஸ்.எப். மாடலின் வெளிப்புறம் சிறு மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டு இருக்கிறது. முன்புற கிரில் சற்றே பெரிதாகவும், ஸ்டட்-ரக டிசைன் கொண்டிருக்கிறது. இதன் எல்.இ.டி. ஹெட்லேம்ப் வடிவமைப்பும் மாற்றப்பட்டு இருக்கிறது. பின்புறம் மெல்லிய எல்.இ.டி. டெயில் லைட்கள், புதிய கிராபிக் டிசைன் கொண்டிருக்கிறது. 

     2021 ஜாகுவார் எக்ஸ்.எப்.

    உள்புறம் 11.4 இன்ச் பி.வி.-ப்ரோ தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஹெட்-அப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஜாகுவார் எக்ஸ்.எப். மாடலில் 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 201 பி.ஹெச்.பி. திறன், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 247 பி.ஹெச்.பி. திறன், 365 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய எம்.பி.வி. மாடல் காப்புரிமை விவரங்கள் வெளியாகி இருக்கிறது.


    டொயோட்டா மோட்டார் நிறுவனம் ருமியன் மாடலுக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து இருக்கிறது. இந்த கார் மாருதி சுசுகியின் எர்டிகா மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. விரைவில் இந்த மாடல் இந்திய சந்தையின் எம்.பி.வி. பிரிவில் விற்பனைக்கு அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    இது டொயோட்டா பிராண்டிங்கில் விற்பனைக்கு வரும் மூன்றாவது மாருதி சுசுகி மாடல் ஆகும். சமீபத்தில் இந்த மாடல் தென் ஆப்ரிக்கா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதுபற்றி டொயோட்டா சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வழங்கப்படவில்லை. 

     டொயோட்டா கார்

    தற்போது தென் ஆப்ரிக்காவில் விற்பனை செய்யப்படும் ருமியன் மாடல் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. தோற்றத்தில் இந்த கார் மாருதி எர்டிகா எம்.பி.வி. போன்றே காட்சியளிக்கிறது. ருமியன் மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    மினி இந்தியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    மினி இந்தியா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் டீசர் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளது. மினி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது. முன்னதாக மினி கூப்பர் எஸ்.இ. மாடல் 2019 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    தோற்றத்தில் மினி கூப்பர் எஸ்.இ. மாடல் அதன் ஐ.சி.இ. மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், எஸ்.இ. மாடலில் பிளான்க்டு-அவுட் முன்புற கிரில், குரோம் பார்டர், புதிய இ பேட்ஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய அலாய் வீல்கள், டூயல் எக்சாஸ்ட் டெயில் பைப்கள் உள்ளன.

     மினி எலெக்ட்ரிக் கார்

    மினி எலெக்ட்ரிக் காரில் 32.6 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இந்த மோட்டார் 181 பி.ஹெச்.பி. திறன், 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.7 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்படி கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ்.சி.90 மைல்டு ஹைப்ரிட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.


    வால்வோ கார் இந்தியா நிறுவனம் எக்ஸ்.சி.60 மற்றும் எஸ்90 மாடல்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அப்டேட் செய்தது. தற்போது எக்ஸ்.சி.90 மைல்டு ஹைப்ரிட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணிகளில் வால்வோ ஈடுபட்டு வருகிறது.

    முந்தைய மாடல்களை போன்றே புதிய எக்ஸ்.சி.90 மாடலும் அப்டேட் செய்யப்பட இருக்கிறது. அதன்படி புதிய எக்ஸ்.சி.90 மாடலில் ட்வீக் செய்யப்பட்ட பம்ப்பர்கள், புதிய அலாய் வீல் டிசைன், குரோம் பிட்டிங் உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கிறது.

     வால்வோ எக்ஸ்.சி.90

    தற்போதைய மாடலில் உள்ள 2 லிட்டர் டீசல் என்ஜினுக்கு மாற்றாக 2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 10.4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் செயல்திறன் மற்றும் இதர விவரங்கள் இன்னும் மர்மமாகவே உள்ளது.
    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5 சீரிஸ் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் 530ஐ எம் ஸ்போர்ட் கார்பன் எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 66.30 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த காரின் 18 இன்ச் வீல்கள் ஜெட் பிளாக் நிற பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் பிரத்யேகமாக ஆல்பைன் வைட் நிறத்தில் கிடைக்கிறது.

    காரின் உள்புறம் காக்னக் பிளாக் மற்றும் காண்டிராஸ்ட் ஸ்டிட்ச் செய்யப்பட்டு உள்ளது. இந்த காரில் மல்டி-சோன் கிளைமேட் கண்ட்ரோல், தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, பவர் சீட்கள், டிஜிட்டல் டிஸ்ப்ளே, 360 டிகிரி கேமரா உள்ளது.

     பி.எம்.டபிள்யூ. 530ஐ எம் ஸ்போர்ட்

    புதிய 530ஐ மாடலிலும் 2 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 248 பி.ஹெச்.பி. திறன், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    டாடா மோட்டார்ஸ் இந்தியாவின் பயணிகள் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் 71 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. மாடல் சிப்டிரான் தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கிறது.

    இதுவரை இந்திய சந்தையில் நெக்சான் இ.வி. மாடல் 10 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. சமீப காலங்களில் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர மேம்பட்ட டிகோர் மாடலை சிப்டிரான் தொழில்நுட்பத்தில் அறிமுகம் செய்தது. 

     டாடா பன்ச்

    சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா பன்ச் மைக்ரோ எஸ்.யு.வி. மாடலும் எலெக்ட்ரிக் வெர்ஷனில் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம். இதுவும் சிப்டிரான் தொழில்நுட்பத்திலேயே உருவாகும் என கூறப்படுகிறது.

    2026 நிதியாண்டு வாக்கில் பத்து புதிய எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது.
    வால்வோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எஸ்90 மற்றும் எக்ஸ்.சி.60 மாடல்களை அறிமுகம் செய்தது.


    வால்வோ கார்ஸ் இந்தியா நிறுவனம் எஸ்90 மற்றும் எக்ஸ்.சி.60 பெட்ரோல் ஹைப்ரிட் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 61.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    புதிய எஸ்90 மற்றும் எக்ஸ்.சி.60 மாடல்களில் உள்ள மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் பிரேக் எனர்ஜியை கொண்டு 48 வோல்ட் பேட்டரியை சார்ஜ் செய்யும். காரில் பிரேக் பயன்படுத்தும் போது பேட்டரி சார்ஜ் ஆகும். இது கார் வெளிப்படுத்தும் காற்று மாசு அளவையும் குறைக்கிறது. 

     வால்வோ எக்ஸ்.சி.60

    சிறப்பம்சங்களை பொருத்தவரை வால்வோ எஸ்90 மாடல் 250 ஹெச்.பி. திறன் மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் வைட், பிளாக், கிரே மற்றும் புளூ என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

    எக்ஸ்.சி.90 மாடலும் 250 ஹெச்.பி. திறன் மற்றும் 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் வைட், பிளாக், ஆஸ்மியம் கிரே, பைன் கிரே, ரெட் மற்றும் புளூ என ஆறு நிறங்களில் கிடைக்கிறது.
    ஸ்கோடா நிறுவனம் கோடியக் பி.எஸ்.6 மாடலின் பேஸ்லிப்ட் வெர்ஷனை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    ஸ்கோடா நிறுவனம் பி.எஸ்.6 கோடியக் பேஸ்லிப்ட் மாடலை அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிமுகம் செய்கிறது. இந்த தகவலை ஸ்கோடா ஆட்டோ இந்தியா இயக்குனர் ஜாக் ஹாலிஸ் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.

    பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் என்ஜின் கொண்ட ஸ்கோடா கோடியக் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 2 லிட்டர், 4 சிலிண்டர், டி.எஸ்.ஐ. பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 187 பி.ஹெச்.பி. திறன், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.

     ஸ்கோடா கோடியக்

    இந்தியாவில் பி.எஸ்.6 ஸ்கோடா கோடியக் பேஸ்லிப்ட் மாடல் சி.கே.டி. முறையில் கொண்டுவரப்படுகிறது. இந்த மாடலில் புதிய ஹெட்லேம்ப்கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில் லைட்கள், புதிய அலாய் வீல்கள், பிளாக் ஒ.ஆர்.வி.எம்.கள் உள்ளன. 
    ×