என் மலர்
இது புதுசு
- புதிய பி-செக்மன்ட் கிராஸ்ஒவர் மாடல் பெருமளவு ரிடிசைன் செய்யப்பட்டுள்ளது.
- டொயோட்டா C-HR கார் பிளக்-இன் ஹைப்ரிட் வடிவில் அறிமுகம் செய்யப்படலாம்.
டொயோட்டா நிறுவனம் இரண்டாம் தலைமுறை C-HR எஸ்யுவி மாடலுக்கான டீசரை வெளியிட்டது. புதிய C-HR எஸ்யுவி மாடல் ஜூன் 26-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த காரின் ப்ரோலோக் கான்செப்ட் மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சப்-காம்பேக்ட் கிராஸ்ஒவர் மாடலின் ப்ரோடோடைப் டெஸ்டிங் நடைபெற்றது.
டீசர்களின் படி புதிய எஸ்யுவி மாடலின் பின்புறம் டெயில் கேட் முழுக்க பேரலல் லைன்கள் இடம்பெற்றுள்ளது. இதன் நடுவே டொயோட்டா லோகோவுக்கு மாற்றாக டொயோட்டா C-HR எழுத்துக்கள் காணப்படுகின்றன.
புதிய பி-செக்மன்ட் கிராஸ்ஒவர் மாடலில் பெருமளவு ரிடிசைன் செய்யப்பட்டு இருப்பதாக டொயோட்டா நிறுவனம் சூசகமாக தெரிவித்து வந்தது. இதுபற்றிய விரிவான விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. புதிய C-HR மாடலில் சற்றே சிறிய ஒவர்ஹேங்குகள், இன்டீரியரில் அதிக இடவசதி இருக்கும் என தெரிகிறது.

காரின் முன்புறம் ஹாமர்ஹெட் என்று அறியப்படும் நிலையில், இதன் டிசைனிங் சமீபத்திய மாடல்களில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இதன் டிசைன் இளமை மிக்க தோற்றம் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
புதிய டொயோட்டா C-HR கார் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் செல்ஃப் சார்ஜிங் ஹைப்ரிட் மாடல் வடிவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. டொயோட்டா C-HR மாடல் இந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
- ஹீரோ பேஷன் பிளஸ் மாடலில் 97.2 சிசி சிங்கில் சிலின்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஹீரோ பேஷன் பிளஸ் மாடலில் i3எஸ் ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய பேஷன் பிளஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹீரோ பேஷன் பிளஸ் விலை ரூ. 76 ஆயிரத்து 301, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பிஎஸ் 6 புகை விதிகள் அமலுக்கு வந்த போது நிறுத்தப்பட்ட பேஷன் பிளஸ் மாடல் தற்போது மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிசைன் அடிப்படையில், புதிய பேஷன் பிளஸ் மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதன் ஒட்டுமொத்த தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய மாடலின் கிராஃபிக்ஸ் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் ஒரு பகுதி- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹீரோ பேஷன் பிளஸ் மாடலில் 97.2 சிசி சிங்கில் சிலின்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் ஸ்பிலென்டர் பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 7.9 ஹெச்பி பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
ஹீரோ பேஷன் பிளஸ் மாடலில் i3எஸ் ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் 80/100-18 டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகிறது.
- டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் அபாச்சி RR 310.
- கொலம்பியாவில் இந்த மாடலின் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
டிவிஎஸ் நிறுவனம் அபாச்சி RR 310 ஃபிளாக்ஷிப் மோட்டார்சைக்கிளின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் அபாச்சி RR 310 மியாமி புளூ என அழைக்கப்படுகிறது. இந்த வேரியண்ட் முதற்கட்டமாக கொலம்பியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அபாச்சி RR 310 மியாமி புளூ நிற வேரியண்டில் புளூ, பிளாக் மற்றும் ரெட் என மூன்று நிறங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிறத்தில் அபாச்சி RR 310 மாடல் அதிக ஸ்போர்ட் மற்றும் கவர்ச்சிகர தோற்றம் கொண்டிருக்கிறது. இந்த மாடலின் வீல்கள், ஃபிரேம், முகப்பு மற்றும் டெயில் பகுதியில் ரெட் அக்சென்ட்கள் செய்யப்பட்டு உள்ளது.

புதிய அபாச்சி RR 310 மாடலில் 312சிசி, நான்கு வால்வுகள் கொண்ட சிலின்டர் சிங்கில் சிலின்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 34 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் அர்பன், ரெயின், ஸ்போர்ட் மற்றும் டிராக் என நான்கு ரைடு மோட்களை கொண்டிருக்கிறது.
இவைதவிர புதிய அபாச்சி மாடலில் ஸ்மார்ட் எக்சோனெக்ட் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, மல்டி ஃபன்ஷன் ஸ்விட்ச்கியர், மிஷலின் ரோடு 5 ரக டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Photo Courtesy: rpmotos
- ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது.
- மஹிந்திரா BE.05 மாடல் 4300mm நீளம், 2775mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது.
மஹிந்திரா நிறுவனம் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஐந்து புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவிக்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே XUV400 மாடலை அறிமுகம் செய்த மஹிந்திரா தற்போது பிளாக்ஷிப் எஸ்யுவி மாடல்களில் எலெக்ட்ரிக் வசதியை வழங்க முடிவு செய்து இருக்கிறது.
இதற்காக மஹிந்திரா நிறுவனம் BE (Bron Electric) பிரிவில் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. மஹிந்திராவின் BE துணை பிராண்டின் முதல் மாடலாக BE.05 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிட்டனில் நடைபெற்ற ஆட்டோ விழாவில் இந்த கார் முதன்முதலாக காட்சிக்கு வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த வரிசையில், மஹிந்திரா BE.05 மாடல் இந்திய சாலைகளில் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அளவீடுகளை பொருத்தவரை மஹிந்திரா BE.05 மாடல் 4300mm நீளம், 2775mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய INGLO பிளாட்ஃபார்மில், லெவல் 2 ADAS தொழில்நுட்பத்தை BE.05 மாடல் கொண்டிருக்கிறது. மஹிந்திரா BE.05 மாடலின் உள்புறம் டூயல் ஸ்கிரீன் செட்டப், புதிய ஸ்டீரிங் வீல் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் உருவாக்கப்பட்ட இருக்கைகள் வழங்கப்படுகின்றன.
Photo Courtesy: Rushlane
- உலகம் முழுக்க இந்த கார் 60 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
- இந்த என்ஜின் 446 ஹெச்பி பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய M2 மாடலை அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ M2 மாடலின் விலை ரூ. 98 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. முதல் தலைமுறை 2 சீரிஸ் மாடல் அறிமுகமாகி நீண்ட காலம் ஆகிவிட்டது. உலகம் முழுக்க இந்த கார் 60 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
முற்றிலும் புதிய M2 மாடல் அதீத செயல்திறனை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சக்திவாந்த M பிராண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரின் மிகமுக்கிய விஷயம், இந்திய சந்தையில் மேனுவல் ஆப்ஷன் கொண்ட முதல் பிஎம்டபிள்யூ மாடல் இது ஆகும். இந்த காரில் ஃபிரேம்லெஸ் கிட்னி கிரில், கிடைமட்டமாக பார்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவை காருக்கு அதிரடி தோற்றத்தை வழங்குகிறது.

புதிய பிஎம்டபிள்யூ M2 மாடலில் ஃபிளார்டு ஸ்கர்ட்கள், வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. இந்த காரில் சக்திவாய்ந்த M டுவின்பவர் டர்போ 6 சிலிண்டர்கள் கொண்ட இன்லைன் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 446 ஹெச்பி பவர், 550 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.1 நொடிகளில் எட்டிவிடும். மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இந்த கார் 4.3 நொடிகளில் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை எட்டிவிடும். இதன் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- கவாசகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய நின்ஜா மாடல் மூன்று புது நிறங்களில் கிடைக்கிறது.
- 2023 நின்ஜா மாடல் புதிய OBD விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா கவாசகி மோட்டார்ஸ் நிறுவனம் 2023 நின்ஜா 300 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கவாசகி நின்ஜா 300 மாடல் சமீபத்திய OBD விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய கவாசகி மோட்டார்சைக்கிள்: லைம் கிரீன், கேண்டி லைம் கிரீன் மர்றும் மெட்டாலிக் மூன்டஸ்ட் கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
இதன் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் 295சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு 8-வால்வுகள் கொண்ட ஃபியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 38.4 ஹெச்பி பவர், 26.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

மற்ற உபகரணங்கள் பட்டியலில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி 2023 நின்ஜா 300 மாடலிலும் டைமண்ட் ரக ஃபிரேம், முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு பெட்டல் ரக டிஸ்க் பிரேக்குகள் இரண்டு வீல்களிலும் வழஹ்கப்படுகிறது. இந்த மாடல் 17-இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ளது. இதில் டியூப்லெஸ் ரக டயர்கள் வழங்கப்படுகிறது.
புதிய 2023 கவாசகி நின்ஜா 300 மாடலில் ஹாலஜன் ரக ஹெட்லைட் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் பல்பு ரக இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் போன்ற வசதிகள் உள்ளன.
- மைனஸ் ஜீரோ நிறுவனம் தனது தானியங்கி தொழில்நுட்பத்தை மற்ற வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்க இருக்கிறது.
- தொழில்நுட்பத்தை அனைவரிடம் கொண்டுசேர்க்கும் வகையில் தான் zPod உருவாக்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூரை சேர்ந்த தானியங்கி வாகன ஸ்டார்ட்அப் நிறுவனம் மைனஸ் ஜீரோ, இந்தியாவின் முதல் தானியங்கி வாகனத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. zPod என்று அழைக்கப்படும் புதிய தானியங்கி வாகனம் அதன் கான்செப்ட் வடிவில் உள்ளது. செயற்கை நுண்ணறிவு நிறுவனம் உருவாக்கி இருக்கும் முழுமையான தானியங்கி தொழில்நுட்பத்தை புதிய zPod காட்சிப்படுத்துகிறது.
ஆட்டோமோடிவ் உற்பத்தியாளர் இன்றி மைனஸ் ஜீரோ நிறுவனம் தனது தானியங்கி தொழில்நுட்பத்தை மற்ற வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இதை கொண்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தங்களின் ADAS சூட்-ஐ மேம்படுத்தவும், வாகனங்களில் அதிக வசதியையும் வழங்க முடியும்.

தனது தொழில்நுட்பத்தை அனைவரிடம் கொண்டுசேர்க்கும் வகையில் தான் zPod உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று மைனஸ் ஜீரோ தெரிவித்து இருக்கிறது. தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்து மற்றும் அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க மைனஸ் ஜீரோ திட்டமிடுவதாக தெரிவித்து இருக்கிறது.
மற்ற தானியங்கி வாகனங்களில் இருப்பதை போன்று zPod மாடலில் LIDAR பயன்படுத்தப்படவில்லை. மாறாக காரை சுற்றிலும் முன்புறம் ஒன்று, பின்புறம் ஒன்று, பக்கவாட்டுகளில் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. கேமரா மற்றும் இதர சென்சார்களை கொண்டு தடைகளை தவிர்க்கும் தொழில்நுட்பத்தை மைனஸ் ஜீரோ உருவாக்கி இருக்கிறது. இது ட்ரூ விஷன் ஆட்டோனமி கான்செப்ட் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கான்செப்ட்-ஐ தற்போது இருக்கும் எந்த வாகனத்திற்கும் ஏற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மைனஸ் ஜீரோ தெரிவித்துள்ளது. இதுதவிர தற்போது சாலைகளில் வலம்வரும் எந்த வாகனத்திலும் இந்த தானியங்கி தொழில்நுட்பத்தை பொருத்த முடியும். இதற்கு குறிப்பிட்ட காரில் என்ஜின் கண்ட்ரோல் மாட்யுல் மட்டும் இருந்தாலே போதுமானது.
தானியங்கி வாகனங்களை உருவாக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளில் சிலவற்றை மைனஸ் ஜீரோ தீர்த்து வைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதற்காக மைனஸ் ஜீரோ நிறுவனம் நேச்சர் இன்ஸ்பயர்டு ஏ.ஐ. பயன்படுத்துகிறது. விலை உயர்ந்த ஹார்டுவேர், அதிகளவு விவரங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் பயணிப்பது போன்ற பிரச்சினைகளை இந்த தொழில்நுட்பம் எளிதில் எதிர்கொள்கிறது.
இதற்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு பயிற்சி அளிப்பதற்கு மாற்றாக, இயற்பியல் சார்ந்த நோக்கம், மனித மூளையை போன்று கணித்தல் முறையில் முடிவுகளை எடுக்கும் திறன் வழங்கப்படுவதாக மைனஸ் ஜீரோ தெரிவித்துள்ளது. zPod தானியங்கி வாகனம், உலகின் எந்த பகுதிக்கும் தனது கேமரா சூட் மூலமாகவே பயணிக்கும். இது கிட்டத்தட்ட ஆட்டோனோமஸ் லெவல் 5-க்கு இணையாக செயல்படும்.
அதாவது மனித உதவியின்றி நிஜ உலகின் போக்குவரத்து மிக்க சாலைகளில் இந்த தொழில்நுட்பம் சீராக இயங்கும். zPod நான்கு இருக்கைகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இதில் உள்ள இருக்கைகள் ஒன்றை ஒன்று பார்க்கும் வகையில் பொருத்தப்பட்டு இருக்கிறது. வழக்கமான கார்களில் இருப்பதை போன்று இதில் எவ்வித கண்ட்ரோல்களும் வழங்கப்படவில்லை. கேமரா பயன்பாடு காரணமாக இதற்கான கட்டணம் பலமடங்கு குறைக்கப்பட்டு இருப்பதாக மைனஸ் ஜீரோ தெரிவித்துள்ளது.
- ஜாகுவார் நிறுவனத்திற்கு என பிரத்யேக லோகோ ஒன்று இருந்ததே இல்லை.
- லேண்ட் ரோவர் பிராண்டு தொடர்ந்து நிறுவனத்தின் டி.என்.ஏ.-வில் மிகமுக்கிய அங்கமாக தொடரும்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முற்றிலும் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்தின் பெயர் ஜெ.எல்.ஆர். (JLR) என்று மாற்றப்படுகிறது. புதிய லோகோ மிக எளிய டிசைன் கொண்டிருக்கிறது. இதில் JLR என்ற எழுத்துக்கள் மினிமலிஸ்ட் ஸ்டைலிங் கொண்டிருக்கிறது. இது ஜெ.எல்.ஆர். வாகனங்கள் மற்றும் விற்பனை மையங்களின் ஸ்டைலிங்கை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக ஜாகுவார் நிறுவனத்திற்கென பிரத்யேக லோகோ ஒன்று இருந்ததே இல்லை. மாறாக ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் பிராண்டுகளுக்கென தனி லோகோக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தன. இவை எந்த கார்களிலும் இடம்பெறவில்லை.
புதிய லோகோவை அறிமுகம் செய்த ஜெ.எல்.ஆர்., "லேண்ட் ரோவர் பிராண்டு தொடர்ந்து நிறுவனத்தின் டி.என்.ஏ.-வில் மிகமுக்கிய அங்கமாக தொடரும். நிறுவனத்தின் பாரம்பரியம் மிக்க ஓவல் வடிவ பேட்ஜ், வாகனங்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படும்," என்று தெரிவித்து இருக்கிறது.
டிஃபெண்டர், ரேன்ஜ் ரோவர் மற்றும் டிஸ்கவரி மாடல்களுக்கு டிரஸ்ட் மார்க்-ஆக (TrustMark) லேண்ட் ரோவர் உருவெடுக்கும் என்று மூத்த அதிகாரியான கெரி மெக்கோவென் தெரிவித்துள்ளார்.
- வால்வோ C40 மாடலின் விலை, XC40 ரிசார்ஜ் மாடலை விட அதிகமாகவே இருக்கும்.
- தோற்றத்தில் இந்த கார் XC40 ரிசார்ஜ் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
வால்வோ நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடல் C40 ரிசார்ஜ்-ஐ இந்திய சந்தையில் ஜூன் 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்திய சந்தையில் இது வால்வோ நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். ஏற்கனவே வால்வோ நிறுவனம் XC40 ரிசார்ஜ் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
புதிய எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடலின் டூயல் மோட்டார் கொண்ட ஆல்வீல் டிரைவ் வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக புதிய C40 மாடலின் விலை ஏற்கனவே விற்பனை செய்யப்படும் XC40 ரிசார்ஜ் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவில் தற்போது வால்வோ XC40 ரிசார்ஜ் மாடலின் விலை ரூ. 56.9 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வால்வோ C40 ரிசார்ஜ் மாடல் வால்வோ நிறுவனத்தின் CMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் இந்த கார் XC40 ரிசார்ஜ் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
காரின் உள்புறம் 9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது. இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், ஏர் பியூரிஃபயர் சிஸ்டம் மற்றும் ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய குளோஸ்டர் ஸ்பெஷல் எடிஷன் மாடல் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
- எம்ஜி குளோஸ்டர் ஸ்பெஷல் எடிஷன் மாடல் 2WD மற்றும் 4WD டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது குளோஸ்டர் எஸ்யுவி-யின் பிளாக்ஸ்டார்ம் எடிஷன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எம்ஜி குளோஸ்டர் பிளாக்ஸ்டார்ம் எடிஷன் விலை ரூ. 40 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் 2WD மற்றும் 4WD என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இத்துடன் 6 மற்றும் 7 சீட்டர் வடிவில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் காஸ்மடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி வெளிப்புறம் மெட்டல் பிளாக் பெயின்ட் மற்றும் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறம் மற்றும் பின்புற ஸ்கிட் பிலேட்கள், ORVM-கள், டோர் பேனல்கள், ஹெட்லைட் கிலஸ்டர் உள்ளிட்டவைகளில் ரெட் கார்னிஷ் செய்யப்பட்டு உள்ளது.

இத்துடன் முன்புற ஃபெண்டரில் 'பிளாக்ஸ்டார்ம் பேட்ஜிங்' பின்புறம் டெயில்கேட்டில் 'குளோஸ்டர்' லெட்டரிங் இடம்பெற்று இருக்கிறது. டெயில்கேட் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிளாக்டு-அவுட் கிரில், ஹெக்சகோனல் மெஷ் பேட்டன் உள்ளது. இவைதவிர புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்மோக்டு டெயில்கேட்கள், விண்டோ மற்றும் ஃபாக் லேம்ப் சரவுண்ட்கள் வழங்கப்படுகிறது.
உள்புறத்தில் டேஷ்போர்டு மற்றும் இருக்கை மேற்கவர்கள் பிளாக் ஃபினிஷ் மற்றும் ரெட் அக்செண்ட்கள் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் டேஷ்போர்டு மற்றும் செண்டர் கன்சோல் பட்டன்கள், ஸ்டீரிங் வீல், மேட், டோர் பேட் உள்ளிட்டவைகளில் ரெட் பிராகாசமாக காட்சியளிக்கிறது.
புதிய எம்ஜி குளோஸ்டர் பிளாக்ஸ்டார்ம் எடிஷன் பிஎஸ் 6 2 விதிகளுக்கு ஏற்ற 2.0 லிட்டர் டீசல் எஞ்சின், டர்போ மற்றும் டுவின் டர்போ ஆப்ஷன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. இரண்டு எஞ்சின்களும் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் கொண்டுள்ளன. இந்திய சந்தையில் இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 43 லட்சத்து 08 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் செடான் மாடல் வெவ்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- இந்த கார் 308 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆல்-எலெக்ட்ரிக் i5 செடான் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. பிஎம்டபிள்யூ பிரபல செடான் சீரிசில் முழு எலெக்ட்ரிக் வடிவம் பெற்ற முதல் கார் இது ஆகும். இந்த ஆண்டு இறுதியில் இந்த கார் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய i5 மாடல் iX எஸ்யுவி மற்றும் i7 செடான் மாடல்கள் வரிசையில் இணைகிறது.
ஆல் எலெக்ட்ரிக் i5 மாடல் பல்வேறு ஆப்ஷன்களில் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ i5 ஸ்டாண்டர்டு மாடல் சிங்கில் மோட்டார் லே-அவுட் உடன் கிடைக்கிறது. அதிக செயல்திறன் எதிர்பார்ப்போருக்காக டுவின் மோட்டார் வேரியண்ட் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

புதிய பிஎம்டபிள்யூ i5 மாடலில் 81.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் 72 பேட்டரி செல்கள், 12 செல்கள் வழங்கப்பட்டு உள்ளன. புதிய பிஎம்டபிள்யூ i5 காரின் உள்புறம் அதன் ஐசி எஞ்சின் வேரியண்டில் உள்ளதை போன்ற அளவீடுகள் உள்ளன. இந்த காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிமீ வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது.
செயல்திறனை பொருத்தவரை இந்த கார் 308 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 6 நொடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சம் 193 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
- பிரீமியம் ஹேச்பேக் மாடலில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- காரின் பக்கவாட்டு பகுதிகளில் 17 இன்ச் அளவில் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஹூண்டாய் நிறுவனம் தனது i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்து இருக்கிறது. பிரீமியம் ஹேச்பேக் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் மேம்பட்ட வெளிப்புற டிசைன், புதிய அம்சங்கள் மற்றும் புதிய நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த காரின் முன்புறம் ரிடிசைன் செய்யப்பட்டு, புதிய டிசைன் கொண்ட பம்பர் மற்றும் இருபுறங்களிலும் முக்கோண வடிவம் கொண்ட இன்சர்ட்கள் உள்ளன. காரின் கிரில் பகுதியில் சிறிதளவு மாற்றங்கள் செய்யப்பட்டு, ஹூண்டாய் லோகோ கிரில் பகுதியில் இருந்து நீக்கப்பட்டு, பொனெட்டின் கீழ்புறம் பொருத்தப்பட்டுள்ளது.

இத்துடன் ஃபுல் எல்இடி ஹெட்லேம்ப் யூனிட்கள் வழங்கப்பட்டு உள்ளன. காரின் பக்கவாட்டு பகுதிகளில் 17 இன்ச் அளவில் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல்: லுமென் கிரே, மெட்டா புளூ பியல், லைம் மெட்டாலிக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.
புதிய ஹூண்டாய் i20 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ரூஃப் காண்டிராஸ்ட் நிற கிளாஸ் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இந்த கார் டூயல் டோன் தோற்றத்தில் கிடைக்கிறது. புதிய i20 ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும். ஆனால், எப்போது அறிமுகமாகும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை.






