search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ பேஷன் பிளஸ்
    X

    இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ பேஷன் பிளஸ்

    • ஹீரோ பேஷன் பிளஸ் மாடலில் 97.2 சிசி சிங்கில் சிலின்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • ஹீரோ பேஷன் பிளஸ் மாடலில் i3எஸ் ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய பேஷன் பிளஸ் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹீரோ பேஷன் பிளஸ் விலை ரூ. 76 ஆயிரத்து 301, எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பிஎஸ் 6 புகை விதிகள் அமலுக்கு வந்த போது நிறுத்தப்பட்ட பேஷன் பிளஸ் மாடல் தற்போது மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    டிசைன் அடிப்படையில், புதிய பேஷன் பிளஸ் மாடலில் அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதன் ஒட்டுமொத்த தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய மாடலின் கிராஃபிக்ஸ் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் சைடு ஸ்டான்டு இன்டிகேட்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் ஒரு பகுதி- டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹீரோ பேஷன் பிளஸ் மாடலில் 97.2 சிசி சிங்கில் சிலின்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இதே என்ஜின் ஸ்பிலென்டர் பிளஸ் மாடலிலும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 7.9 ஹெச்பி பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    ஹீரோ பேஷன் பிளஸ் மாடலில் i3எஸ் ஸ்டாப்-ஸ்டார்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. பிரேக்கிங்கிற்கு இருபுறங்களிலும் டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் 80/100-18 டியூப்லெஸ் டயர்கள் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×