என் மலர்tooltip icon

    இது புதுசு

    • இரண்டு முறை F1 பந்தயம் வென்ற மைகா ஹகினென் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்.
    • வெர்ஜ் மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் ஹப்லெஸ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஃபின்லாந்தை சேர்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான வெர்ஜ் மோட்டார்சைக்கிள்ஸ் தனது லிமிடெட் மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த இ பைக் மொத்தத்திலேயே 100 யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதன் விலை 80 ஆயிரம் யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 71 லட்சத்து 48 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    வெர்ஜா மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடல் வெர்ஜ் மற்றும் மைகா ஹகினென் இடையேயான கூட்டணியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது. இரண்டு முறை F1 பந்தயம் வென்ற மைகா ஹகினென் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதோடு, இந்த பைக்கின் டிசைனிங் பணிகளில் உதவியாக இருந்து வந்துள்ளார்.

     

    வெர்ஜ் மோட்டார்சைக்கிள்ஸ்-இன் TS ப்ரோ மோட்டார்சைக்கிளை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் மைகா ஹகினென் எடிஷன் டார்க் கிரே மற்றும் சில்வர் டூயல் டோன் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இந்த பெயிண்ட் ஸ்கீம்1998 மர்றும் 1999 ஆண்டுகளில் மைகா ஹகினென் பயன்படுத்திய மெக்லாரென் ஃபார்முலா 1 மாடல்களை நினைவூட்டும் வகையில் உள்ளது.

    வெர்ஜ் மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் ஹப்லெஸ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 136.78 ஹெச்பி பவர், 1000 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது.

    மைகா ஹகினென் சிக்னேச்சர் எடிஷன் மாடலில் 20.2 கிலோவாட் ஹவர் லித்தியம் அயன் பேட்டரி பேக் உள்ளது. இந்த பைக்கை முழு சார்ஜ் செய்தால் 563 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்குகிறது. இதன் பேட்டரி 25 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இது 35 நிமிடங்களில் பைக்கை சார்ஜ் செய்துவிடுகிறது. 

    • புகைப்படங்களில் காரின் லைட்கள், பொனெட் மற்றும் கிரில் மட்டும் இடம்பெற்று இருக்கின்றன.
    • ஆஸ்டன் மார்டின் DB12 மாடலில் 5.2 லிட்டர் டுவின் டர்போ V12 என்ஜின் மற்றும் AMG-இன் 4.0 லிட்டர் பை டர்போ வி8 என்ஜின் வழங்கப்படலாம்.

    பிரிட்டன் நாட்டு கார் உற்பத்தியாளரான ஆஸ்டன் மார்டின் தனது அடுத்த ஃபிளாக்ஷிப் கிராண்ட் டூரர் மாடலின் டீசரை வெளியிட்டு உள்ளது. இதில் மூன்று புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மாடல் DB12 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. ஆஸ்டன் மார்டின் DB12 மாடல் ஜேம்ஸ் பாண்ட்-இன் அடுத்த காராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மே 24 ஆம் தேதி அறிமுகமாக இருக்கும் புதிய ஆஸ்டன் மார்டின் DB12 கிராண்ட் டூரர் மாடலின் குறிப்பிட்ட சில விவரங்களே அம்பலமாகி இருக்கிறது. முதற்கட்ட புகைப்படங்களில் காரின் லைட்கள், பொனெட் மற்றும் கிரில் மட்டும் இடம்பெற்று இருக்கின்றன. இதன் ஹெட்லைட்களில் மூன்று கிளஸ்டர் யூனிட்கள் உள்ளன. பொனெட்டில் சக்திவாய்ந்த என்ஜின் கொண்டிருப்பதை உணர்த்தும் லைன்கள் உள்ளன.

    புதிய ஆஸ்டன் மார்டின் DB12 மாடலில் 5.2 லிட்டர் டுவின் டர்போ V12 என்ஜின் மற்றும் AMG-இன் 4.0 லிட்டர் பை டர்போ வி8 என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. காரின் இரண்டாவது படத்தில் பக்கவாட்டு பகுதி எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த மாடலில் ஃபிலஷ் டோர் ஹேண்டில்கள் உள்ளன.

     

    மூன்றாவது புகைப்படத்தில் காரின் இண்டீரியர் எப்படி காட்சியளிக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த காரின் செண்டர் கன்சோல் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. இன்ஃபோடெயின்மெண்டிற்கு புதிய டிஸ்ப்ளே, கிளைமேட் கண்ட்ரோல் செட்டிங்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் மேலும் சில பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • இம்மாத துவக்கத்தில் ஹோண்டா நிறுவனம் பதிய எஸ்யுவி மாடல் பெயரை அறிவித்தது.
    • இந்த காரில் ஹோண்டா சிட்டி மாடலில் உள்ளதை போன்ற என்ஜின் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது புதிய மிட்சைஸ் எஸ்யுவி மாடல், எலிவேட் எனும் பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதை உறுதிப்படுத்தியது. இதைத் தொடர்ந்து புதிய எலிவேட் எஸ்யுவி மாடல் ஜூன் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. புதிய ஹோண்டா எலிவேட் எஸ்யுவி மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

     

    இம்மாத துவக்கத்தில் ஹோண்டா நிறுவனம் பதிய எஸ்யுவி மாடல் பெயரை அறிவித்தது. இதைத் தொடர்ந்து எலிவேட் எஸ்யுவி ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகின. புதிய எலிவேட் மாடல் 360 டிகிரி கேமரா, பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் சன்ரூஃப் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    காரின் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப்கள், டெயில் லைட்கள், எல்இடி டிஆர்எல்கள், ஷார்க் ஃபின் ஆண்டெனா, ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ரூஃப் ரெயில்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் ஹோண்டா சிட்டி மாடலில் உள்ளதை போன்ற என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் ஹைப்ரிட் பவர்டிரெயின், ADAS சூட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    • புதிய பிஎம்டபிள்யூ i5 மாடல் - இடிரைவ்40 மற்றும் M60 எக்ஸ்டிரைவ் என்று இருவித வேரியண்ட்களில் கிடைக்கும்.
    • புதிய கார் 7 சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்ற சவுகரியத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது முற்றிலும் புதிய i5 மாடலின் சர்வதேச வெளியீடு மே 24 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் 5 சீரிஸ் மாடல் எட்டாம் தலைமுறை ஐசி என்ஜின் வெர்ஷனுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய கார் வெளியீட்டை ஒட்டி பிஎம்டபிள்யூ நிறுவனம் டீசர் ஒன்றை பகிர்ந்துள்ளது.

    டீசரின் படி பிஎம்டபிள்யூ காரில் முற்றிலும் புதிய கிரில் வழங்கப்படும் என்றும், அது சுற்றிலும் இலுமினேட் செய்யப்பட்டு இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. காரின் உள்புறம் ஃபுளோடிங் டிஸ்ப்ளே டேஷ்போர்டு முழுக்க நீண்டு இருக்கும் என்று தெரிகிறது. இதே போன்ற செட்டப் மேம்பட்ட 3 சீரிஸ் மற்றும் ஃபிளாக்ஷிப் 7 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    அறிமுகத்தின் போது i5 மாடல் - இடிரைவ்40 மற்றும் M60 எக்ஸ்டிரைவ் என்று இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. புதிய காரின் பேட்டரி அம்சங்கள் அல்லது செயல்திறன் பற்றிய விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும், புதிய காரின் சவுகரியத்தை அதிகப்படுத்தும் வகையில் சஸ்பென்ஷன் டுவீக் செய்யப்பட்டு இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்து இருக்கிறது.

    இத்துடன் அடாப்டிவ் சஸ்பென்ஷன் வழங்கப்பட இருக்கிறது. இது 7 சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்ற சவுகரியத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த கார் தவிர எட்டாம் தலைமுறை பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலின் உற்பத்தி வரும் மாதங்களில் துவங்க இருக்கிறது. இந்த காரின் உற்பத்தி பவேரியாவில் உள்ள பிஎம்டபிள்யூ குழுமத்தின் டிங்கோல்ஃபிங் ஆலையில் நடைபெற இருக்கிறது.

    • வால்வோ நிறுவனத்தின் சர்வதேச விற்பனை 72 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்யும்.
    • புதிய வால்வோ EX30 மாடல் சீன சந்தையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    வால்வோ நிறுவனம் தனது முழுமையான எலெக்ட்ரிக் கார் EX30 ஜூன் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதே தேதியில் இந்த எஸ்யுவிக்கான முன்பதிவு துவங்க இருக்கிறது. முதற்கட்டமாக வால்வோ EX30 எலெக்ட்ரிக் மாடல் முன்பதிவு தேர்வு செய்யப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.

    வரும் வாரங்களில் புதிய எலெக்ட்ரிக் கார் பற்றிய இதர விவரங்களை அறிவிப்பதாக வால்வோ நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய EX30 மாடல் காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆகும். 2025 முதல் ஆண்டுக்கு 1.2 மில்லியன் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற வால்வோ இலக்கை அடைய இந்த கார் பெருமளவு உதவும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

     

    இது சாத்தியமாகும் பட்சத்தில் வால்வோ நிறுவனத்தின் சர்வதேச விற்பனை 72 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்யும். புதிய வால்வோ EX30 மாடல் சீன சந்தையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இங்கிருந்து உள்நாட்டு தேவை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

    எலெக்ட்ரிக் கார் விலையை குறைவாக வைத்துக் கொள்ள பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் சமரசம் செய்யாமல், சற்றே சிறிய பேட்டரியை வால்வோ வழங்க இருக்கிறது. முந்தைய EX90 வெளியீட்டின் போது, வால்வோ நிறுவனம் EX90 அருகில் சிறிய எலெக்ட்ரிக் கார் இருக்கும் படத்தை வெளியிட்டு இருந்தது.

    அந்த வகையில் அந்த படத்தில் இருந்த கார் தான், தற்போது EX30 பெயரில் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. புதிய வால்வோ EX30 மாடல் முந்தைய EX90 காரை விட அளவில் சிறியதாக இருக்கும். இது முதல் முறையாக ஆடம்பர எலெக்ட்ரிக் கார் விரும்புவோருக்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

    • புதிய ஹூண்டாய் கிரெட்டா EV மாடல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
    • கிரெட்டா EV மாடல் தோற்றத்தில் அதன் ஐசி என்ஜின் கொண்ட வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது.

    ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா மிட் சைஸ் எஸ்யுவி மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய கிரெட்டா EV மாடல் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் மற்றும் ஐயோனிக் 5 மாடல்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. பொது வெளியில் சோதனை செய்யப்படும் கிரெட்டா EV மாடல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    புகைப்படங்களின் படி கிரெட்டா EV மாடல் தோற்றத்தில் அதன் ஐசி என்ஜின் கொண்ட வெர்ஷன் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த காரின் பம்ப்பர்கள் வித்தியாசமான நிறம் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கிரெட்டா EV ப்ரோடக்ஷன் வெர்ஷனில் பம்ப்பர் ரிடிசைன் செய்யப்பட்டு இருக்கும் என்றே தெரிகிறது.

     

    எலெக்ட்ரிக் கார் என்பதால், இந்த மாடலில் எக்சாஸ்ட் டெயில்பைப் இடம்பெறவில்லை. மேலும் பேட்டரி பேக் காரின் பக்கவாட்டில் இருந்தே பார்க்க முடிகிறது. ப்ரோடோடைப் மாடலில் சார்ஜிங் போர்ட் என்ஜின் வைக்கப்படும் இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இறுதி வெர்ஷனில் சார்ஜிங் போர்ட் ஃபெண்டர் அல்லது முன்புற கிரில் அருகில் தனியே வழங்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய கிரெட்டா EV மாடல் E-GMP ஆர்கிடெக்ச்சரின் ரி-என்ஜினீயர்டு வெர்ஷனை தழுவி உருவாக்கப்படும் என்றே தெரிகிறது. கிரெட்டா EV மாடல் இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. கிரெட்டா EV மாடல் அடுத்த ஆண்டு அல்லது 2025 துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    சமீபத்தில் ஹூண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை வெர்னா செடான் மாடலை அறிமுகம் செய்தது. தற்போது முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யுவி மாடலை எக்ஸ்டர் எனும் பெயரில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் வென்யூ காரின் கீழ் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

    புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலில் 1.2 லிட்டர் அல்லது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் அனைத்து ஹூண்டாய் கார்களையும் பிஎஸ்6 2 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார்கள் E20 எரிபொருளில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    Photo courtesy: Rushlane

    • மினி நிறுவனத்தின் கண்ட்ரிமேன் மற்றும் ஏஸ்மேன் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன் அறிமுகம் செய்யப்படலாம்.
    • மினி நிறுவனம் முதன் முதலில் அறிமுகம் செய்த மினி SE மாடல் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது.

    மினி நிறுவனத்தின் 3 கதவுகள் கொண்ட மினி கூப்பர் காரின் அடுத்த தலைமுறை மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் முழுமையான எலெக்ட்ரிக் கார் வடிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது மினி நிறுவனம் தனது கார்களை எலெக்ட்ரிக் திறன் கொண்டதாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இதைத் தொடர்ந்து மின நிறுவனத்தின் கண்ட்ரிமேன் மற்றும் ஏஸ்மேன் மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம். மினி நிறுவனம் முதன் முதலில் அறிமுகம் செய்த மினி SE மாடல் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த கார் கடந்த ஆண்டில் மட்டும் உலகளவில் 43 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகின.

     

    மினி கூப்பர் E எலெக்ட்ரிக் காரில் 40.7 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. மினி கூப்பர் SE மாடலில் 54.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 300 முதல் 400 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும். மினி கூப்பர் எலெக்ட்ரிக் கார் மினி ஸ்பேஸ் கான்செப்டில் உருவாக்கப்படுகிறது.

    மினி கண்ட்ரிமேன் மாடல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் லெய்சிக் பிஎம்டபிள்யூ குழும ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 2024 ஆண்டு ஏஸ்மேன் மாடலின் உற்பத்தி துவங்கும் என்று கூறப்படுகிறது. 

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய 2 சீரிஸ் வேரியண்ட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது 2 சீரிஸ் கிரான் கூப் மாடலின் புதிய வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பெட்ரோல் வேரியண்ட் M ஸ்போர்ட் ப்ரோ என்று அழைக்கப்படுகிகிறது.

    புதிய பிஎம்டபிள்யூ விலை ரூ. 45 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் 220i M ஸ்போர்ட் மற்றும் 220d M ஸ்போர்ட் வேரியண்ட்களின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

     

    அம்சங்களை பொருத்தவரை புதிய M ஸ்போர்ட் ப்ரோ மாடலில் ஹெட்-அப் டிஸ்ப்ளே, பிஎம்டபிள்யூ ஜெஸ்ட்யுர் கண்ட்ரோல், 10 ஸ்பீக்கர் செட்டப், உள்புறத்தில் காண்டிராஸ்ட் தீம் கொண்ட டேஷ்போர்டு, M சார்ந்த ஆந்த்ரசைட் லைனிங், லெதர் ஸ்டீரிங் வீல், பேடில் ஷிஃப்டர்கள், M பேட்ஜிங், இலுமினேட் செய்யப்பட்ட போஸ்டன் இண்டீரியர் ட்ரிம் ஃபினிஷர்கள் உள்ளன.

    புதிய M ஸ்போர்ட் ப்ரோ வேரியண்டில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின், 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 189 ஹெச்பி பவர், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் லாஞ்ச் கண்ட்ரோல், ஷிஃப்ட் பை கியர் செலக்டர் ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • பிஎம்டபிள்யூ X1 sDrive18i M ஸ்போர்ட் மாடல் சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • புதிய பிஎம்டபிள்யூ காரின் வினியோகம் ஜூன் மாதம் துவங்குகிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது X1 சீரிசில் X1 sDrive18i M ஸ்போர்ட் பெயரில் புதிய வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பிஎம்டபிள்யூ காரின் விலை ரூ. 48 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. புதிய மாடல் sDrive19i X லைன் மாடலின் மேல் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. பிஎம்டபிள்யூ sDrive19i X லைன் மாடலின் விலை ரூ. 45 லட்சத்து 90 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    பிஎம்டபிள்யூ X1 sDrive18i M ஸ்போர்ட் மாடல் சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் ஜூன் மாதம் துவங்குகிறது. இந்த மாடலில் 1.5 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

     

    இந்த என்ஜின் 134 ஹெச்பி பவர், 230 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வெளிப்படுத்துகிறது. ஷைன் 18i X லைன் மாடலுடன் ஒப்பிடும் போது புதிய X1 sDrive18i M ஸ்போர்ட் மாடலில் ஹை கிளாஸ் பிளாக் ரூஃப் ரெயில்கள், ஆக்டிவ் சீட்கள், ரியர் சீட் அட்ஜஸ்ட், ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளன.

    இத்துடன் M ஸ்போர்ட் எக்ஸ்டீரியர் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. இதில் கிட்னி கிரில்-க்கு பியல் க்ரோம் ஃபினிஷ், ஹை கிளாஸ் பிளாக் ஸ்லாட்கள், புதிய பம்ப்பர்கள், ஃபெண்டர் மற்றும் சாவியில் M பேட்ஜ்கள், M ஆந்த்ரசைட் ஹெட்லைனர், லெதர் ஸ்டீரிங் வீல், பேடில் ஷிஃப்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    • சீனாவில் மட்டும் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டம்.
    • ஹோண்டா எலெக்ட்ரிக் காரில் ஹோண்டா கனெக்ட் 4.0 கனெக்டட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனம் மூன்று எலெக்ட்ரிக் எஸ்யுவி கான்செப்ட்களை 2023 ஷாங்காய் மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தி இருக்கிறது. இவை e:N சீரிஸ், e:NP2 ப்ரோடோடைப் மற்றும் e:NS2 ப்ரோடோடைப் என்று அழைக்கப்படுகின்றன. இதில் இரண்டு மாடல்கள் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளன. இவற்றின் விற்பனை அடுத்த ஆண்டு சீனாவில் துவங்க இருக்கிறது.

    இரு எலெக்ட்ரிக் கார்களுடன் புதிய e:N எஸ்யுவி கான்செப்ட் கிட்டத்தட்ட ஷோ கார் போன்றதாகும். 2027 ஆண்டிற்குள் சீனாவில் மட்டும் பத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும் 2035 ஆண்டிற்குள் முழுமையான எலெக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியாளராக வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.

     

    தற்போது காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதில் e:NP2 மற்றும் e:NS2 மாடல்கள் உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயார் நிலையில் உள்ளன. இவை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளன. e:N எஸ்யுவி கான்செப்ட் ஹோண்டா நிறுவனத்தின் மூன்றாம் கட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் ஆகும். ஹோண்டா எலெக்ட்ரிக் காரில் ஹோண்டா கனெக்ட் 4.0 கனெக்டட் கார் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    இரண்டு ஹோண்டா எலெக்ட்ரிக் வாகனங்களில் வங்கப்பட இருக்கும் தொழில்நுட்ப அம்சங்கள் பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. சீன அறிமுகத்தைத் தொடர்ந்து இந்த எஸ்யுவி-க்களின் விலை விவரங்கள், மற்ற நாடுகளில் வெளியீடு உள்ளிட்ட தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 700 கிமீ வரை செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஃபிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது.
    • இந்த மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களே புதிய லேண்ட் ரோவர் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடலின் முன்பதிவுகள் இந்த ஆண்டே துவங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, 2025 வாக்கில் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. முற்றிலும் புதிய எலெக்டிரிக் மாட்யுலர் ஆர்கிடெக்ச்சரில் புதிய ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக் கார் உருவாகி வருகிறது. இதே ஆர்கிடெக்ச்சரில் எதிர்கால லேண்ட் ரோவர் மாடல்களும் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    முழு சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஃபிளாக்ஷிப் மாடலை அறிமுகம் செய்வதாக ஜாகுவார் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த மாடலின் விலை ரூ. 1.2 கோடி வரை இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. இந்த மாடலில் உள்ளதை போன்ற அம்சங்களே புதிய லேண்ட் ரோவர் எஸ்யுவி மாடலிலும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இதுதவிர தற்போது ஐசி என்ஜின் மற்றும் ஹைப்ரிட் மாடல்களை உருவாக்க பயன்படுத்தப்படும் மாட்யுலர் ஆர்கிடெக்ச்சரில் புதிய கார் மாடல்கள் உருவாக்கப்படும் என்று லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. எலெக்ட்ரிக் எவோக் மற்றும் டிஸ்கவரி மாடல்களுக்கு முன் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ரேன்ஜ் ரோவர் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த ஆண்டு துவங்கி எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடல் இந்தியாவுக்கு சிபியு (முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட வடிவில்) முறையில் இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், இதற்காக குறைந்த எண்ணிக்கைகளே விற்பனைக்கு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    • எம்ஜி கொமெட் EV வெளிப்புறத்தில் இலுமினேட் செய்யப்பட்ட எம்ஜி லோகோ உள்ளது.
    • எம்ஜி கொமெட் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 230 கிலோமீட்டர்கள் வரை செல்லும்.

    எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கொமெட் EV மாடல் இந்திய சந்தையில் வெளியானது. புதிய எம்ஜி கொமெட் EV மாடல் விலை ரூ. 7 லட்சத்து 98 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய எலெக்ட்ரிக் கார் எம்ஜி நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் ZS EV மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது.

    கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஜி கொமெட் EV மாடலின் டெஸ்ட் டிரைவ் நாளை (ஏப்ரல் 27) துவங்க இருக்கிறது. வினியோகம் மே 15 ஆம் தேதி துவங்குகிறது. புதிய எம்ஜி கொமெட் EV வெளிப்புறத்தில் இலுமினேட் செய்யப்பட்ட எம்ஜி லோகோ உள்ளது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப்கள், முன்புறம் மற்றும் பின்புறத்தில் எல்இடி லைட் பார்கள், எல்இடி டெயில் லைட்கள், க்ரோம் டோர் ஹேண்டில்கள், 12 இன்ச் ஸ்டீல் வீல் மற்றும் வீல் கவர்கள் வழங்கப்படுகின்றன.

     

    காரின் உள்புறம் ஸ்பேஸ் கிரே இண்டீரியர் தீம், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள், டில்ட் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ஸ்டீரிங், பவர் விண்டோ, லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்கள் உள்ளன.

    பாதுகாப்பிற்கு இந்த காரில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், இபிடி, ரியர் பார்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைண்டர் சிஸ்டம், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், டிபிஎம்எஸ், ரிவர்ஸ் பார்கிங் கேமரா, ஸ்பீடு சென்சிங் டோர் லாக் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய எம்ஜி கொமெட் EV மாடலில் உள்ள 17.3 கிலோவாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 230 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 41 ஹெச்பி பவர், 110 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பேட்டரியை 3.3 கிலோவாட் யூனிட் மூலம் சார்ஜ் செய்யும் போது ஏழு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும். மேலும் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஐந்து மணி நேரங்களே ஆகும்.

    ×