search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    அடுத்த வாரம் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூ i5
    X

    அடுத்த வாரம் அறிமுகமாகும் பிஎம்டபிள்யூ i5

    • புதிய பிஎம்டபிள்யூ i5 மாடல் - இடிரைவ்40 மற்றும் M60 எக்ஸ்டிரைவ் என்று இருவித வேரியண்ட்களில் கிடைக்கும்.
    • புதிய கார் 7 சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்ற சவுகரியத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது முற்றிலும் புதிய i5 மாடலின் சர்வதேச வெளியீடு மே 24 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்து இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் 5 சீரிஸ் மாடல் எட்டாம் தலைமுறை ஐசி என்ஜின் வெர்ஷனுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய கார் வெளியீட்டை ஒட்டி பிஎம்டபிள்யூ நிறுவனம் டீசர் ஒன்றை பகிர்ந்துள்ளது.

    டீசரின் படி பிஎம்டபிள்யூ காரில் முற்றிலும் புதிய கிரில் வழங்கப்படும் என்றும், அது சுற்றிலும் இலுமினேட் செய்யப்பட்டு இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. காரின் உள்புறம் ஃபுளோடிங் டிஸ்ப்ளே டேஷ்போர்டு முழுக்க நீண்டு இருக்கும் என்று தெரிகிறது. இதே போன்ற செட்டப் மேம்பட்ட 3 சீரிஸ் மற்றும் ஃபிளாக்ஷிப் 7 சீரிஸ் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அறிமுகத்தின் போது i5 மாடல் - இடிரைவ்40 மற்றும் M60 எக்ஸ்டிரைவ் என்று இருவித வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. புதிய காரின் பேட்டரி அம்சங்கள் அல்லது செயல்திறன் பற்றிய விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும், புதிய காரின் சவுகரியத்தை அதிகப்படுத்தும் வகையில் சஸ்பென்ஷன் டுவீக் செய்யப்பட்டு இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்து இருக்கிறது.

    இத்துடன் அடாப்டிவ் சஸ்பென்ஷன் வழங்கப்பட இருக்கிறது. இது 7 சீரிஸ் மாடல்களில் உள்ளதை போன்ற சவுகரியத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த கார் தவிர எட்டாம் தலைமுறை பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மாடலின் உற்பத்தி வரும் மாதங்களில் துவங்க இருக்கிறது. இந்த காரின் உற்பத்தி பவேரியாவில் உள்ள பிஎம்டபிள்யூ குழுமத்தின் டிங்கோல்ஃபிங் ஆலையில் நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×