search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்தியாவில் அறிமுகமான புதிய பிஎம்டபிள்யூ கார் - விலை எவ்வளவு தெரியுமா?
    X

    இந்தியாவில் அறிமுகமான புதிய பிஎம்டபிள்யூ கார் - விலை எவ்வளவு தெரியுமா?

    • பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 2 சீரிஸ் கிரான் கூப் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய 2 சீரிஸ் வேரியண்ட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கிடைக்கிறது.

    பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் தனது 2 சீரிஸ் கிரான் கூப் மாடலின் புதிய வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பெட்ரோல் வேரியண்ட் M ஸ்போர்ட் ப்ரோ என்று அழைக்கப்படுகிகிறது.

    புதிய பிஎம்டபிள்யூ விலை ரூ. 45 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் 220i M ஸ்போர்ட் மற்றும் 220d M ஸ்போர்ட் வேரியண்ட்களின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை புதிய M ஸ்போர்ட் ப்ரோ மாடலில் ஹெட்-அப் டிஸ்ப்ளே, பிஎம்டபிள்யூ ஜெஸ்ட்யுர் கண்ட்ரோல், 10 ஸ்பீக்கர் செட்டப், உள்புறத்தில் காண்டிராஸ்ட் தீம் கொண்ட டேஷ்போர்டு, M சார்ந்த ஆந்த்ரசைட் லைனிங், லெதர் ஸ்டீரிங் வீல், பேடில் ஷிஃப்டர்கள், M பேட்ஜிங், இலுமினேட் செய்யப்பட்ட போஸ்டன் இண்டீரியர் ட்ரிம் ஃபினிஷர்கள் உள்ளன.

    புதிய M ஸ்போர்ட் ப்ரோ வேரியண்டில் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின், 7 ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 189 ஹெச்பி பவர், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் லாஞ்ச் கண்ட்ரோல், ஷிஃப்ட் பை கியர் செலக்டர் ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×