search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    வால்வோ புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்
    X

    வால்வோ புதிய எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரம்

    • வால்வோ நிறுவனத்தின் சர்வதேச விற்பனை 72 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்யும்.
    • புதிய வால்வோ EX30 மாடல் சீன சந்தையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

    வால்வோ நிறுவனம் தனது முழுமையான எலெக்ட்ரிக் கார் EX30 ஜூன் 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதே தேதியில் இந்த எஸ்யுவிக்கான முன்பதிவு துவங்க இருக்கிறது. முதற்கட்டமாக வால்வோ EX30 எலெக்ட்ரிக் மாடல் முன்பதிவு தேர்வு செய்யப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.

    வரும் வாரங்களில் புதிய எலெக்ட்ரிக் கார் பற்றிய இதர விவரங்களை அறிவிப்பதாக வால்வோ நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய EX30 மாடல் காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆகும். 2025 முதல் ஆண்டுக்கு 1.2 மில்லியன் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற வால்வோ இலக்கை அடைய இந்த கார் பெருமளவு உதவும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது.

    இது சாத்தியமாகும் பட்சத்தில் வால்வோ நிறுவனத்தின் சர்வதேச விற்பனை 72 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்யும். புதிய வால்வோ EX30 மாடல் சீன சந்தையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இங்கிருந்து உள்நாட்டு தேவை மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

    எலெக்ட்ரிக் கார் விலையை குறைவாக வைத்துக் கொள்ள பாதுகாப்பு அல்லது தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் சமரசம் செய்யாமல், சற்றே சிறிய பேட்டரியை வால்வோ வழங்க இருக்கிறது. முந்தைய EX90 வெளியீட்டின் போது, வால்வோ நிறுவனம் EX90 அருகில் சிறிய எலெக்ட்ரிக் கார் இருக்கும் படத்தை வெளியிட்டு இருந்தது.

    அந்த வகையில் அந்த படத்தில் இருந்த கார் தான், தற்போது EX30 பெயரில் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. புதிய வால்வோ EX30 மாடல் முந்தைய EX90 காரை விட அளவில் சிறியதாக இருக்கும். இது முதல் முறையாக ஆடம்பர எலெக்ட்ரிக் கார் விரும்புவோருக்கு ஏற்ற மாடலாக இருக்கும்.

    Next Story
    ×