என் மலர்
கார்
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ சி.என்.ஜி. வெர்ஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கார் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த காருடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட சி.என்.ஜி. வெர்ஷன் அப்போது அறிமுகம் செய்யப்படவில்லை.
இந்நிலையில், மாருதி சுசுகி தற்சமயம் 2019 ஆல்டோ சி.என்.ஜி. வெர்ஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் LXi ட்ரிம் விலை ரூ.4.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), LXi (O) ட்ரிம் விலை ரூ.4.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஆல்டோ சி.என்.ஜி. இதன் பெட்ரோல் மாடலை விட ரூ.60,000 விலை அதிகம் ஆகும். புதிய காரில் சி.என்.ஜி. தவிர வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஹேட்ச்பேக் காரில் 796 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 48 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 69 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
இதுதவிர இந்த காரில் பவர் ஸ்டீரிங், HVAC யூனிட், முன்புறம் பவர் விண்டோஸ், ரியர் சைல்டு லாக், ரிமோட் பூட், பாடி கலர்டு டோர் ஹோன்டில்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. LXi (O) ட்ரிம் ஏர் பேக், ஹை-ஸ்பீடு அலெர்ட், சீட்பெல்ட் ரிமைண்டர், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது.
ஆல்டோ சி.என்.ஜி. தவிர மாருதி சுசுகி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் மாடல்களையும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் மேம்படுத்தி இருக்கிறது. இவற்றை தொடர்ந்து விடாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் மாடல்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப விரைவில் மேம்படுத்தப்படலாம்.
மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் சக்திவாய்ந்த என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் 1.6 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் ஏப்ரல் 2020 இல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பை மஹிந்திரா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த என்ஜின் புதிதாக உருவாக்கப்பட்ட 4 சிலிண்டர் யூனிட் ஆகும். இது எக்ஸ்.யு.வி.300 மாடலில் உள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட்டை தழவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய என்ஜினில் ஒரு சிலிண்டர் கூடுதலாக வழங்கப்படுகிறது. இது டீசல் யூனிட்டை விட சக்திவாய்ந்தது ஆகும்.
புதிய 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு AMT ஆப்ஷனிலும் கிடைக்கும் என தெரிகிறது. தற்சமயம் விற்பனையாகும் மராசோ காரில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. எக்ஸ்.யு.வி. 300 மாடலில் டீசல் AMT விரைவில் வழங்கப்பட இருக்கும் நிலையில் இதே என்ஜின் மராசோ காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மஹிந்திரா மராசோ கார் மாதம் 2000 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்து தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனினும், இந்த பிரிவு வாகன விற்பனையில் எர்டிகா மற்றும் இன்னோவா கிரிஸ்டா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் கார் மாடலின் இந்திய விலையை அதிரடியாக மாற்றியமைத்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் கார் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலையை அதிரடியாக மாற்றியமைத்திருக்கிறது. அந்த வகையில் டாடா ஹேரியர் அனைத்து மாடல்களின் விலை ரூ.30,000 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹேரியர் விலை மாற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.
டாடா ஹேரியர் கார் க்ரியோடெக் 2.0 லிட்டர் ட்ரோபசார்ஜ் செய்யப்பட்ட பி.எஸ். IV ரக டீசல் என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 138 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
தற்சமயம் டாடா ஹேரியர் கார் டீசல் என்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொண்டிருக்கிறது. இதில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் இதுவரை வழங்கப்படவில்லை. டாடா ஹேரியர் மாடலி்ல் செனான் ஹெச்.ஐ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டூயல் ஃபங்ஷன் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 3டி எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

காரின் உள்புறம் லெதர், அலுமினியம், கிளாஸ் பிளாக் பேனல்கள் மற்றும் மரத்தாலான பாகங்களை கொண்டு உருவாகியிருக்கிறது. இதில் 8.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் ரேப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது.
டாடா ஹேரியர் மாடல் புதிய விலை ரூ.12.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.16.55 லட்சம் என மாறியிருக்கிறது. முன்னதாக அறிமுகமாகும் போது இதன் விலை ரூ.12.69 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.16.25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்தியாவில் டாடா ஹேரியர் கார் மஹிந்திராவின் எக்ஸ்.யு.வி. 500, ஜீப் காம்பஸ் மற்றும் ஹூன்டாய் கிரெட்டா போன்ற கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது.
டொயோட்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கிளான்சா கார் கடந்த மாதம் மட்டும் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் கிளான்சா கார் மே மாதத்தில் மட்டும் 2,142 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்திய சந்தையில் வெளியீட்டுக்கு முன் முன்பதிவு செய்யப்பட்ட கிளான்சா காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தியாவில் ஜூன் 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட கிளான்சா காருக்கான முன்பதிவு மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் துவங்கியது.
மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் தங்களின் தொழில்நுட்பம் மற்றும் பொருட்களை பயன்படுத்திக் கொள்ள மார்ச் 2018 இல் ஒப்பந்தம் கையெழுத்தானது. மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்களின் கூட்டணியில் வெளியாகி இருக்கும் முதல் மாடலாக கிளான்சா கார் இருக்கிறது. இந்தியாவில் டொயோட்டா கிளான்சா கார் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹேட்ச்பேக் மாடலாக இருந்தது.
புதிய கிளான்சா கார் பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர ரக ஹைபிரிட் மாடல் காராகும். இதில் 1.2 லிட்டர் கே.12சி டியூயல் என்ஜின் உள்ளது. இத்தகைய என்ஜின்தான் சமீபத்தில் பலேனோ மாடலிலும் பயன்படுத்தப்பட்டது.

இது 90 ஹெச்.பி. திறனையும் 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளன. இது தவிர 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், கே.12பி. மாடலும் தயாராகிறது. இது 83 ஹெச்.பி. திறனும் 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. இதில் சி.வி.டி. கியர் பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு மானுவல் கியர் வசதியும் உள்ளது.
இந்தக் கார் சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 21.01 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஜி.எம்.டி. (ஸ்மார்ட் ஹைபிரிட்) மாடலானது ஒரு லிட்டருக்கு 23.87 கி.மீ. தூரம் ஓடியது. இதில் சி.வி.டி மாடல் 19.56 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை அனைத்துமே மாருதி சுசுகி பலேனோ வழக்கமாக சாலைகளில் ஓடும் அளவிற்கு இணையாக உள்ளது.
இதில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, 7 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன் வசதி, குரல் வழி கட்டுப்பாடு ஆகியன உள்ளன. பாதுகாப்பு வசதியாக முன்புறம் 2 ஏர் பேக்குகள், இ.பி.டி. வசதி, ரியர் பார்க்கிங் சென்சார் வசதி, ரிவர்ஸ் கேமரா ஆகியன இதில் உள்ள சிறப்பம்சங்களாகும். வேகக் கட்டுப்பாடு மற்றும் சீட் பெல்ட் அறிவுறுத்தல் வசதி ஆகியனவும் இதில் உள்ளது.
இந்தியாவில் கிளான்சா கார் விலை ரூ.7.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப்-எண்ட் மாடல் விலை ரூ.8.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜீப் இந்தியா நிறுவனத்தின் காம்பஸ் டிரெயில்ஹாக் காருக்கான முன்பதிவுகளை அந்நிறுவனம் துவங்கி இருக்கிறது.
ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளது. ஜீப் இந்தியா நிறுவனம் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் காருக்கான முன்பதிவு கட்டணத்தை ரூ.50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்தியா முழுக்க 82 ஜீப் விற்பனையகங்களில் புதிய டிரெயில்ஹாக் காரை முன்பதிவு செய்யலாம். இந்தியாவில் ஜீப் இந்தியா வாகனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக 4WD வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் FWD வேரியண்ட் குறைந்த விலை காரணமாக அதிகம் விற்பனையாகிறது.
ஜீப் காம்பஸ் காரின் அதிகளவு ரக்கட் மற்றும் ஆஃப்-ரோடு அம்சங்கள் நிறைந்த வெர்ஷனாக டிரெயில்ஹாக் மாடல் இருக்கிறது. இந்தியாவில் புதிய டிரெயில்ஹாக் காரின் விலை ரூ.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய காரில் மேம்பட்ட பம்ப்பர் வடிவமைப்பு, நான்கு ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் டூயல்-டோன் 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜீப் காம்பஸ் காரின் மற்ற வேரியண்ட்கள் ஃபயர்ஸ்டோன் டையர்களை கொண்டிருக்கும் நிலையில், டிரெயில்ஹாக் காரில் ஃபால்கன் ஆல்-டெரைன் ரப்பருடன் வருகிறது. ஜீப் நிறுவனம் புதிய எஸ்.யு.வி. காரின் உயரத்தை அதிகரித்துள்ளது. இதனால் இந்த கார் 27 எம்.எம். கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் பெறுகிறது.
ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் காரின் உள்புறம் ஆல்-பிளாக் இன்டீரியர் மற்றும் ரெட் அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. சீட்களில் ரெட் டபுள்-ஸ்டிட்சிங் செய்யப்படுகிறது. டிரெயில்ஹாக் காரின் டாப்-எண்ட் வேரியண்ட்டில் பானரோமிக் சன்ரூஃப் கூடுதல் அம்சமாக இருக்கிறது.
இதுதவிர கீலெஸ் என்ட்ரி, குரூஸ் கண்ட்ரோல், 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
ஸ்கோடா நிறுவனத்தின் ஆக்டாவியா ஆர்.எஸ். கார் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்களைத் தயாரிக்கும் ஸ்கோடா நிறுவனம் தனது பிரபல மாடல் ஆர்.எஸ். ரக கார்களை மீண்டும் இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ஆர்.எஸ். 245 மாடல் முந்தைய மாடலைக் காட்டிலும் 15 ஹெச்.பி. கூடுதல் திறன் கொண்டது. இது 370 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. இந்த ஆர்.எஸ். மாடல் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மாடல் தொடக்கத்தில் 300 மட்டுமே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டது. கூடுதலாக முன்பதிவுகள் இருக்கவே 200 கார்களை மேலும் இறக்குமதி செய்து விற்பனை செய்தது. அதன் பிறகு இந்த மாடல் விற்பனையை ஸ்கோடா முற்றிலுமாக நிறுத்திவிட்டது.
இப்போது வெளிநாட்டிலிருந்து கார்களை இறக்குமதி செய்து விற்பதற்கான விதிமுறைகளை அரசு தளர்த்திஉள்ளது. புதிய விதிமுறையின்படி நிறுவனங்கள் ஆண்டுக்கு 2,500 கார்களை முழுதாகவோ அல்லது உதிரி பாகங்களாகவோ இறக்குமதி செய்து கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக ஆர்.எஸ். மாடல் கார்களை இந்தியாவில் மீண்டும் விற்பனை செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் இந்நிறுவனத்தின் கரோக் மாடல் இந்த முறையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட உள்ள ஆர்.எஸ். மாடல் காரானது ஐரோப்பிய நாடுகளில் அதிகம் விரும்பும் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டதாகும்.
இது இந்திய மாடலைக் காட்டிலும் 15 மி.மீ. உயரம் குறைவு. ஆனால் சக்கரங்கள் 18 அங்குலம் கொண்டவை. இதில் 10.25 அங்குல தொடுதிரை, ஸ்போர்ட்ஸ் வியூ, விர்ச்சுவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. முந்தைய 230 ஹெச்.பி. திறன் கொண்ட ஆக்டாவியா ஆர்.எஸ். விலை ரூ.25.50 லட்சமாகும்.
இந்தியாவில் புதிய ஸ்கோடா ஆக்டாவியா ஆர்.எஸ். மாடல் விலை ரூ.40 லட்சமாக இருக்கும் எனத் தெரிகிறது. இறக்குமதி செய்யப்படும் காருக்கு இந்த விலை தருவதற்கும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனால் ஆர்.எஸ். மாடல் பெரும் வரவேற்பைப் பெறும் என நிறுவனம் கருதுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் செல்டோஸ் காரின் புதிய டீசரை வெளியிட்டுள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் தனது புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிறுவனத்தின் முதல் வாகனம் ஹூன்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காருக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் கார் செல்டோஸ் என்ற பெயரில் அறிமுகமாக இருக்கிறது.
முன்னதாக இந்த கார் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் எஸ்.பி. கான்செப்ட் வடிவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. தற்சமயம் புத்தம் புதிய எஸ்.யு.வி. கார் உற்பத்திக்கு தயாராகி விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த காரின் புகைப்படங்கள் இணையத்தில் பலமுறை வெளியாகிவிட்ட நிலையில், செல்டோஸ் காரின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
டீசரின் படி புதிய செல்டோஸ் காரில் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், க்ரோம் சரவுண்ட் செய்யப்பட்ட கிரில் வழங்கப்படுகிறது. செல்டோஸ் காரின் வெளிப்புற வடிவமைப்பு அதிநவீனமாக காட்சியளிக்கிறது. கியா செல்டோஸ் கார் இந்தியாவில் ஹூன்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ் மற்றும் ரெனால்ட் டஸ்டர் போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.

காரின் உள்புறம் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே, 10.25 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படலாம். இதுதவிர கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் காரில் எஸ்.யு.வி. பிரிவு வாகனங்களில் பல்வேறு முதல்முறை அம்சங்களை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா செல்டோஸ் சீன சந்தைக்கான காரில் இருக்கைகளில் வெப்பத்தை வெளிப்படுத்தும் அம்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. என்ஜினை பொருத்தவரை புத்தம் புதிய கியா செல்டோஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் T-GDi என்ஜின்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 1.0-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர் அல்லது 1.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என தெரிகிறது.
இதன் டீசல் வேரிண்ட் Nu 2.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 150 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என கூறப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களில் ஆட்டோமேடிக் டிரான்ஸமிஷன் வசதி பயனர் விரும்பினால் தேர்வு செய்து கொள்ளும் வகையில் வழங்கப்படலாம்.
இந்தியாவில் எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் எஸ்.யு.வி. காருக்கான முன்பதிவுகளை துவங்கியுள்ளது.
எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. காரின் முன்பதிவுகள் துவங்கியுள்ளன. எம்.ஜி. மோட்டார் இந்தியாவின் முதல் வாகனத்தின் முன்பதிவு கட்டணம் ரூ.50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹெக்டார் காரை முன்பதிவு செய்ய எம்.ஜி. மோட்டார் அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் 120 டச் பாயின்ட்களை அணுகலாம்.
இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் எஸ்.யு.வி. கார் மே 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த கார் பல மாதங்ளாக சோதனை செய்யப்பட்டது. அந்த வகையில் காருக்கான முன்பதிவுகள் தற்சமயம் துவங்கப்பட்டுள்ளது.
புதிய எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.
எம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் வெர்ஷன் 48வோல்ட் ஹைப்ரிட் செட்டப் உடன் கிடைக்கிறது. எம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 14.16 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வேரிண்ட் லிட்டருக்கு 13.94 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற என்ஜின் ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹேரியர் போன்ற கார்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் இந்த என்ஜின் லிட்டருக்கு 17.41 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும்.
காரின் உள்புறம் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வோடபோனின் இசிம் தொழிலநுட்பத்தில் இணைய வசதியை வழங்குகிறது. எம்.ஜி. ஹெக்டார் டிஸ்ப்ளேவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி வசதியும், எதிர்காலத்தில் டன்-பை-டன் நேவிகேஷன் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவுடன் 8 ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டு ஒரு சர் ஊஃபர் மற்றும் ஆம்ப்ளிஃபையர் ஆடியோ செட்டப் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 360-டிகிரி கேமரா, குரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு எம்.ஜி. ஹெக்டார் காரில் 6 ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி திட்டம், டிராக்ஷன் கண்ட்ரோல், குரூஸ் கண்ட்ரோல், ஹில்-ஹோல்டு கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிளான்சா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள டொயோட்டா நிறுவனம் தனது புதிய மாடல் காரை கிளன்சா என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் மற்றொரு கார் தயாரிப்பு நிறுவனமான சுசுகியுடன் கூட்டு சேர்ந்து சுசுகியின் பிரபல மாடலான பலேனோவைப் போன்ற வடிவமைப்பில் புதிய காரை டொயோட்டா உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் கிளான்சா கார் விலை ரூ.7.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப்-எண்ட் மாடல் விலை ரூ.8.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய கார் பாரத் புகை விதி 6-க்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர ரக ஹைபிரிட் மாடல் காராகும். இதில் 1.2 லிட்டர் கே.12சி டியூயல் என்ஜின் உள்ளது. இத்தகைய என்ஜின்தான் சமீபத்தில் பலேனோ மாடலிலும் பயன்படுத்தப்பட்டது.

இது 90 ஹெச்.பி. திறனையும் 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளன. இது தவிர 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், கே.12பி. மாடலும் தயாராகிறது. இது 83 ஹெச்.பி. திறனும் 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. இதில் சி.வி.டி. கியர் பாக்ஸ் மற்றும் 5 ஸ்பீடு மானுவல் கியர் வசதியும் உள்ளது.
இந்தக் கார் சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 21.01 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஜி.எம்.டி. (ஸ்மார்ட் ஹைபிரிட்) மாடலானது ஒரு லிட்டருக்கு 23.87 கி.மீ. தூரம் ஓடியது. இதில் சி.வி.டி மாடல் 19.56 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை அனைத்துமே மாருதி சுசுகி பலேனோ வழக்கமாக சாலைகளில் ஓடும் அளவிற்கு இணையாக உள்ளது.

இதில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, 7 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, நேவிகேஷன் வசதி, குரல் வழி கட்டுப்பாடு ஆகியன உள்ளன. பாதுகாப்பு வசதியாக முன்புறம் 2 ஏர் பேக்குகள், இ.பி.டி. வசதி, ரியர் பார்க்கிங் சென்சார் வசதி, ரிவர்ஸ் கேமரா ஆகியன இதில் உள்ள சிறப்பம்சங்களாகும். வேகக் கட்டுப்பாடு மற்றும் சீட் பெல்ட் அறிவுறுத்தல் வசதி ஆகியனவும் இதில் உள்ளது.
இந்தியாவில் டொயோட்டா கிளான்சா காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த கார் ஹூன்டாய் ஐ 20, ஹோன்டா ஜாஸ், ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்தியாவில் ஆடி கார் மாடல்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கார் மாடல்களுக்கு ரூ.5 லட்சம் வரை விலை குறைக்கப்படுகிறது.
ஆடி இந்தியா நிறுவனம் தனது ஏ3 செடான் மாடல் காரின் விலையை குறைத்திருக்கிறது. விலை குறைப்பு அனைத்து ஆடி ஏ3 வேரியண்ட்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏ3 பெட்ரோல் வேரியண்ட் விலை ரூ.28.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கிறது. இது ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட விலையை விட ரூ.4.13 லட்சம் குறைவாகும்.
இந்தியாவில் ஆடி ஏ3 கார் அந்நிறுவன விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்கத்தில் ஆடி ஏ3 விற்பனை அதிகரித்த போதும், சமீப காலங்களில் இதன் விற்பனை சரிவை சந்திக்க துவங்கியது. இந்தியாவில் எண்ட்ரி-லெவல் ஆடி கார் மாடலாக ஏ3 விற்பனை செய்யப்படுகிறது.
ஆடி ஏ3 கார் இந்தியாவில் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகளாகி விட்ட நிலையில், தற்சமயம் காரின் விலையை குறைக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆடி ஏ3 கார் பிரீமியம் பிளஸ் மற்றும் டெக்னாலஜி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு வேரியண்ட்களும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

பெட்ரோலில் இயங்கும் 35 TFSI பிரீமியம் பிளஸ் வேரியண்ட் ஏற்கனவே ரூ.33.12 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் விலை குறைப்பிற்கு பின் ரூ.28.99 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 35 TFSI தொழில்நுட்ப மாடல் ரூ.34.57 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் ரூ.30.99 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் இந்த கார்களின் விலை முறையே ரூ.4.13 லட்சம் மற்றும் ரூ.3.58 லட்சம் விலை குறைக்கப்பட்டுள்ளது.
டீசல் என்ஜின் கொண்ட 35 TDI பிரீமியம் பிளஸ் வேரியண்ட் ரூ.34.93 லட்சத்தில் இருந்து தற்சமயம் ரூ.29.99 லட்சத்திற்கும் 35 TDI டெக்னாலஜி வேரியண்ட் ரூ.36.12 லட்சத்தில் இருந்து தற்சமயம் ரூ.31.99 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. இது முறையே ரூ.4.94 லட்சம் மற்றும் ரூ.4.13 லட்சம் விலை குறைவாகும்.
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2020 X1 கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட X1 கார் ஒருவழியாக அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. புதிய கார் 1 சீரிஸ் ஹேட்ச்பேக் மாடலின் புத்தம் புதிய கார் ஆகும். 2020 X1 காரில் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிய நிறங்கள் மற்றும் உள்புற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
காரின் வெளிப்புறம் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய காரில் மேம்பட்ட ஹெட்லைட் வடிவைப்பு, அடாப்டிவ் எல்.இ.டி. ஹெட்லைட்கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்புறம் L வடிவம் கொண்ட டெயில்பைப்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டு-டோன் எல்.இ.டி. ப்ரோஜெக்டர் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.
புதிய X1 கார்: ஸ்டாம் பே மெட்டாலிக், ஜுகாரோ பெய்க் மற்றும் மிசானோ புளு மெட்டாலிக் என மூன்று புதிய நிறங்களில் கிடைக்கிறது. பி.எம்.டபுள்யூ. வாகனங்களின் உள்புறம் 6.5 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட கண்ட்ரோல் வழக்கமான ஆப்ஷனாக அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படும் நிலையில் புதிய X1 காரில் 10.25 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

இதன் சென்டர் டிஸ்ப்ளேவில் பி.எம்.டபுள்யூ. கனெக்ட்டெட் டிரைவ், நேவிகேஷன் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன. புதிய X1 காரில் 1.5 லிட்டர் ட்வின் டர்போ sDrive16d டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 117 பி.எஸ். பவர், 270 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும். இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டி.சி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.
இத்துடன் 2.0 லிட்டர் ட்வின் டர்போ என்ஜின் 234 பி.எஸ். பவர், 450 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரோனிக் டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது. பெட்ரோல் X1 xDrive25i என்ஜின் 234 பி.எஸ். பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இந்தியாவில் தற்போதைய பி.எம்.டபுள்யூ. X1 மாடல் விலை ரூ.35.20 ல்ட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.45.70 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா சமீபத்தில் அறிமுகம் செய்த ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவுகள் ஜூன் 4 ஆம் தேதி துவங்கும் என அறிவித்துள்ளது. முன்பதிவுகள் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சரியாக மதியம் 12.00 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட முன்பதிவுகள் இந்தியா முழுக்க 120 மையங்களில் நடைபெறும். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா முழுக்க 250 மையங்களை எட்ட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புதிய ஹெக்டார் எஸ்.யு.வி. மாடல்கள் அந்நிறுவனத்தின் ஹலோல் தயாரிப்பு ஆலையில் நடைபெறுகிறது. இந்த ஆலையில் அந்நிறுவனம் ரூ.2,200 கோடி முதலீடு செய்துள்ளது.
"எம்.ஜி. ஹெக்டார் கார் அதிகளவு உள்நாட்டு பாகங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதிய தலைமுறை இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியும். இந்தியாவின் முதல் இண்டர்நெட் கார் என்ற வகையில் 50-க்கும் அதிக கனெக்ட்டெட் அம்சங்களையும், எஸ்.யு.வி. பிரிவில் 19 பிரத்யேக அம்சங்களையும் ஹெக்டார் கொண்டிருக்கிறது" என எம்.ஜி. மோட்டார் இந்தியா தலைவர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.

என்ஜின் அம்சங்களை பொருத்தவரை புதிய எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.
இத்துடன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4-சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இதேபோன்ற என்ஜின் ஜீப் காம்பஸ் மற்றும் டாடா ஹேரியர் போன்ற கார்களில் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் இந்த என்ஜின் லிட்டருக்கு 17.41 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும்.






