search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சக்திவாய்ந்த என்ஜினுடன் மஹிந்திரா மராசோ
    X

    சக்திவாய்ந்த என்ஜினுடன் மஹிந்திரா மராசோ

    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் சக்திவாய்ந்த என்ஜினுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    மஹிந்திரா நிறுவனத்தின் மராசோ கார் 1.6 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் ஏப்ரல் 2020 இல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பை மஹிந்திரா நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த என்ஜின் புதிதாக உருவாக்கப்பட்ட 4 சிலிண்டர் யூனிட் ஆகும். இது எக்ஸ்.யு.வி.300 மாடலில் உள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட்டை தழவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய என்ஜினில் ஒரு சிலிண்டர் கூடுதலாக வழங்கப்படுகிறது. இது டீசல் யூனிட்டை விட சக்திவாய்ந்தது ஆகும்.

    புதிய 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீடு AMT ஆப்ஷனிலும் கிடைக்கும் என தெரிகிறது. தற்சமயம் விற்பனையாகும் மராசோ காரில் 1.6 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.



    இந்த என்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. எக்ஸ்.யு.வி. 300 மாடலில் டீசல் AMT விரைவில் வழங்கப்பட இருக்கும் நிலையில் இதே என்ஜின் மராசோ காரிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் மஹிந்திரா மராசோ கார் மாதம் 2000 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்து தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனினும், இந்த பிரிவு வாகன விற்பனையில் எர்டிகா மற்றும் இன்னோவா கிரிஸ்டா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
    Next Story
    ×