search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் மாருதி ஆல்டோ சி.என்.ஜி. அறிமுகம்
    X

    இந்தியாவில் மாருதி ஆல்டோ சி.என்.ஜி. அறிமுகம்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ சி.என்.ஜி. வெர்ஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் ஆல்டோ ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கார் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த காருடன்  அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட சி.என்.ஜி. வெர்ஷன் அப்போது அறிமுகம் செய்யப்படவில்லை.

    இந்நிலையில், மாருதி சுசுகி தற்சமயம் 2019 ஆல்டோ சி.என்.ஜி. வெர்ஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இதன் LXi ட்ரிம் விலை ரூ.4.11 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), LXi (O) ட்ரிம் விலை ரூ.4.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    புதிய ஆல்டோ சி.என்.ஜி. இதன் பெட்ரோல் மாடலை விட ரூ.60,000 விலை அதிகம் ஆகும். புதிய காரில் சி.என்.ஜி. தவிர வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஹேட்ச்பேக் காரில் 796 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 48 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 69 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இதுதவிர இந்த காரில் பவர் ஸ்டீரிங், HVAC யூனிட், முன்புறம் பவர் விண்டோஸ், ரியர் சைல்டு லாக், ரிமோட் பூட், பாடி கலர்டு  டோர் ஹோன்டில்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. LXi (O) ட்ரிம் ஏர் பேக், ஹை-ஸ்பீடு அலெர்ட், சீட்பெல்ட் ரிமைண்டர், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது.

    ஆல்டோ சி.என்.ஜி. தவிர மாருதி சுசுகி நிறுவனம் தனது ஸ்விஃப்ட் மற்றும் வேகன் ஆர் மாடல்களையும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் மேம்படுத்தி இருக்கிறது. இவற்றை தொடர்ந்து விடாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் மாடல்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப விரைவில் மேம்படுத்தப்படலாம்.
    Next Story
    ×