search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் ஹேரியர் கார் விலையில் அதிரடி மாற்றம்
    X

    இந்தியாவில் ஹேரியர் கார் விலையில் அதிரடி மாற்றம்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் கார் மாடலின் இந்திய விலையை அதிரடியாக மாற்றியமைத்து இருக்கிறது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் கார் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலையை அதிரடியாக மாற்றியமைத்திருக்கிறது. அந்த வகையில் டாடா ஹேரியர் அனைத்து மாடல்களின் விலை ரூ.30,000 உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹேரியர் விலை மாற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். 

    டாடா ஹேரியர் கார் க்ரியோடெக் 2.0 லிட்டர் ட்ரோபசார்ஜ் செய்யப்பட்ட பி.எஸ். IV ரக டீசல் என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 138 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    தற்சமயம் டாடா ஹேரியர் கார் டீசல் என்ஜின் ஆப்ஷன் மட்டுமே கொண்டிருக்கிறது. இதில் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் இதுவரை வழங்கப்படவில்லை. டாடா ஹேரியர் மாடலி்ல் செனான் ஹெச்.ஐ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டூயல் ஃபங்ஷன் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 3டி எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.



    காரின் உள்புறம் லெதர், அலுமினியம், கிளாஸ் பிளாக் பேனல்கள் மற்றும் மரத்தாலான பாகங்களை கொண்டு உருவாகியிருக்கிறது. இதில் 8.8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், லெதர் ரேப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது.

    டாடா ஹேரியர் மாடல் புதிய விலை ரூ.12.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.16.55 லட்சம் என மாறியிருக்கிறது. முன்னதாக அறிமுகமாகும் போது இதன் விலை ரூ.12.69 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.16.25 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.

    இந்தியாவில் டாடா ஹேரியர் கார் மஹிந்திராவின் எக்ஸ்.யு.வி. 500, ஜீப் காம்பஸ் மற்றும் ஹூன்டாய் கிரெட்டா போன்ற கார்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. 
    Next Story
    ×