search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    இந்தியாவில் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் முன்பதிவு துவங்கியது
    X

    இந்தியாவில் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் முன்பதிவு துவங்கியது

    ஜீப் இந்தியா நிறுவனத்தின் காம்பஸ் டிரெயில்ஹாக் காருக்கான முன்பதிவுகளை அந்நிறுவனம் துவங்கி இருக்கிறது.



    ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் காருக்கான முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளது. ஜீப் இந்தியா நிறுவனம் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் காருக்கான முன்பதிவு கட்டணத்தை ரூ.50,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்கள் இந்தியா முழுக்க 82 ஜீப் விற்பனையகங்களில் புதிய டிரெயில்ஹாக் காரை முன்பதிவு செய்யலாம். இந்தியாவில் ஜீப் இந்தியா வாகனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் முறையாக 4WD வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் FWD வேரியண்ட் குறைந்த விலை காரணமாக அதிகம் விற்பனையாகிறது.

    ஜீப் காம்பஸ் காரின் அதிகளவு ரக்கட் மற்றும் ஆஃப்-ரோடு அம்சங்கள் நிறைந்த வெர்ஷனாக டிரெயில்ஹாக் மாடல் இருக்கிறது. இந்தியாவில் புதிய டிரெயில்ஹாக் காரின் விலை ரூ.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய காரில் மேம்பட்ட பம்ப்பர் வடிவமைப்பு, நான்கு ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளன.



    இத்துடன் டூயல்-டோன் 17-இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜீப் காம்பஸ் காரின் மற்ற வேரியண்ட்கள் ஃபயர்ஸ்டோன் டையர்களை கொண்டிருக்கும் நிலையில், டிரெயில்ஹாக் காரில் ஃபால்கன் ஆல்-டெரைன் ரப்பருடன் வருகிறது. ஜீப் நிறுவனம் புதிய எஸ்.யு.வி. காரின் உயரத்தை அதிகரித்துள்ளது. இதனால் இந்த கார் 27 எம்.எம். கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் பெறுகிறது.

    ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் காரின் உள்புறம் ஆல்-பிளாக் இன்டீரியர் மற்றும் ரெட் அக்சென்ட்கள் வழங்கப்பட்டுள்ளது. சீட்களில் ரெட் டபுள்-ஸ்டிட்சிங் செய்யப்படுகிறது. டிரெயில்ஹாக் காரின் டாப்-எண்ட் வேரியண்ட்டில் பானரோமிக் சன்ரூஃப் கூடுதல் அம்சமாக இருக்கிறது.

    இதுதவிர கீலெஸ் என்ட்ரி, குரூஸ் கண்ட்ரோல், 8.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே போன்ற அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
    Next Story
    ×