என் மலர்tooltip icon

    கார்

    இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகப்படுத்த எரிபொருளில் இயங்கும் இரண்டு, நான்கு சக்கர வாகன பதிவு கட்டணம் பல மடங்கு உயர்கிறது.



    இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, எரிபொருளில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மின் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும் வாகன பதிவுக் கட்டணங்களை பல மடங்கு உயர்த்த மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

    இதற்காக புதிய வாகனங்கள் பதிவு மற்றும் மறு பதிவுக்கான கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட உள்ளது. இதன்படி இலகு ரக கார்களுக்கான பதிவுக் கட்டணம் ரூ.600 இல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட உள்ளது.

    மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம்

    வாகனங்களின் புதுப்பிப்புக் கட்டணம் 2000 ரூபாயில் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் தற்போது ரூ.50 ஆக இருக்கிறது. புதிய விதிகளின் படி இந்த கட்டணம் ரூ.1000 ஆக உயர்த்தி வசூலிக்கப்பட உள்ளது.

    இதேபோல் லாரி, டிரக், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான பதிவுக் கட்டணம் 2000 ரூபாயில் இருந்து ரூ.40,000 ஆக உயர்த்தவும் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்து, இதற்கான சட்ட வரைவையும் முன்மொழிந்துள்ளது.

    அடுத்த 45 நாட்களுக்குள் இந்த புதிய கட்டண கட்டமைப்பு அறிவிக்கப்பட உள்ளது. எனவே இதுபற்றி நாங்கள் அனைத்து தரப்பினரின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளது. எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி பதிவு செய்யப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலான வாகங்களின் மறுப்பதிவுக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த புதிய விதிகள் அமுலுக்கு வந்தால் பெட்ரோல், டீசல் வாகனப் பயன்பாடு மக்களிடையே குறைந்து மின் வாகன பயன்பாடு அதிகரிக்கும்.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா சி.என்.ஜி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா சி.என்.ஜி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எர்டிகா சி.என்.ஜி. விலை ரூ. 8.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எர்டிகா சி.என்.ஜி. காரின் டூர் எம் வேரியண்ட் ரூ. 8.82 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    ஃபேக்ட்ரிஃபிட்டெட் சி.என்.ஜி. தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் முதல் எம்.பி.வி. காராக மாருதி சுசுகி எர்டிகா இருக்கிறது. இந்தியாவில் 2018 நவம்பரில் அறிமுகமான புதிய மாடலை தழுவி புகிய எர்டிகா சி.என்.ஜி. உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய மாருதி எர்டிகா சி.என்.ஜி. மாடல்களிலும் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 91 பி.ஹெச்.பி. பவர் @6000 ஆர்.பி.எம். மற்றும் 122 என்.எம். டார்க் @4400 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகி எர்டிகா

    புதிய மாடல் ஒரு கிலோவிற்கு 26.2 கிலோமீட்டர் வரை செல்லும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. எர்டிகா ஸ்டான்டர்டு மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    எர்டிகா சி.என்.ஜி. ஒற்றை Vxi வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதில் என்ஜின் இம்மொபைலைசர், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ஃபேப்ரிக் சீட், டூயல் டோன் கேபின், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் MID ஸ்கிரீன், பிரேக் அசிஸ்ட், ஏ.பி.எஸ். இ.பி.டி., சைல்டு லாக் ரியர் டோர், பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகி எர்டிகா சி.என்.ஜி. கார்: வைட், சில்வர், மேக்மா கிரே, ரெட் மற்றும் புளு என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. எர்டிகா சி.என்.ஜி. டூர் எம் வேரியண்ட்: வைட், சில்வர் மற்றும் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் தனது புதிய 7 சீரிஸ் காரை அறிமுகம் செய்தது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



    பி.எம்.டபுள்யூ. இந்தியா நிறுவனம் புதிய 7 சீரிஸ் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2019 பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் மாடலின் துவக்க விலை ரூ. 1.22 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் கார்: 740 Ld DPE, 740Ld DPE சிக்னேச்சர், 740 Ld M ஸ்போர்ட், 740 Li DPE சிக்னேச்சர், 745 Le xDrive மற்றும் M 760 Li xDrive என ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய 2019 பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு துவங்கிவிட்டது. விரைவில் இதன் விநியோகம் துவங்குகிறது.

    2019 பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ்

    செடான் மாடலில் மெல்லிய மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் 7.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்ட் வசதி, ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு அதிநவீன அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் காரின் இருக்கைகள் பிரீமியம் நப்பா லெதர் மூலம் கவர் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் அமர்வோருக்கு 10-இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே மற்றும் காரின் அம்சங்களை இயக்குவதற்கான கண்ட்ரோல்கள் வழங்கப்படுகிறது.

    ஆறுவித வேரியண்ட்களில் கிடைக்கும் 2019 பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் காரின் டீசல் ட்ரிம்களில் ஒரே என்ஜின் வழங்கப்படுகிறது. இது 3.0 லிட்டர் இன்-லைன் 6-சிலிண்டர் யூனிட் ஆகும். இந்த என்ஜின் 265 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
    சீன நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பேருந்துகள் மற்றும் கார் இறக்குமதிக்கு அமெரிக்க அரசு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் சீனாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹூவாய் நிறுவனம் தகவல் திருட்டில் ஈடுபடுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதுதவிர ஹூவாய் நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்கவும் முடிவு செய்தது.

    இருநாடுகளிடையே தகவல்திருட்டு விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வருகிறது. இந்நிலையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேருந்துகள் மற்றும் குறிப்பிட்ட சில கார்களைத் தடை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 

    வாகனங்கள் - கோப்புப்படம்

    தொலைதொடர்பு சாதனங்களை போன்று பேருந்து மற்றும் கார் போன்ற சில வாகனங்களிலும் உளவு பார்க்கும் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதன் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்திருக்கின்றன. இதுதவிர வெளிநாட்டு நிறுவனங்களுடன் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வருவதாகவும், அமெரிக்க ஆலைகள் மூலம் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
    சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எலெக்ட்ரிக் காரை தொடங்கி வைத்தார். புதிய கார் விவரங்களை பார்ப்போம்.



    உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் நான்காவது விரிவாக்கத் திட்டத்திற்காக 7000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கூடுதலாக ஒரு லட்சம் கார்கள் உற்பத்தி செய்யவும், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்யவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

    அதன் அடிப்படையில், ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் கோனா எலெக்ட்ரிக் எனும் எஸ்.யு.வி. காரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்து, வாகனத்தில் பயணம் செய்தார்.

    கோனா எலெக்ட்ரிக் கார்

    இந்த எஸ்.யு.வி. கார் உயர் தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், 57 நிமிடங்களில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட மின்கலன் பொருத்தப்பட்டு, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் சண்முகம் தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், தொழில் துறை சிறப்புச் செயலாளர் அருண்ராய், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    ஹூன்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் முதல் மாத முன்பதிவு விவரங்கள் வெளியாகியுள்ளது.



    ஹூன்டாய் நிறுவனத்தின் வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் இந்திய சந்தையில் அபார வரவேற்பு பெற்று வருகிறது. புதிய வென்யூ கார் முன்பதிவு துவங்கிய ஒரே மாதத்தில் 45,000-க்கும் அதிக முன்பதிவுகளை பெற்றிருக்கிறது.

    முன்னதாக வென்யூ காரை வாங்க 33,000 பேர் முன்பதிவு செய்ததாகவும் இவற்றில் 1000 யூனிட்கள் ஒரே நாளில் விநியோகம் செய்யப்பட்டதாக ஹூன்டாய் நிறுவனம் தெரிவித்தது. இதுதவிர சுமார் இரண்டு லட்சம் பேர் புதிய கார் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டனர் என அந்நிறுவனம் தெரிவித்தது.

    ஹூன்டாய் வென்யூ

    மாதாந்திர விற்பனையில் வென்யூ கார் பிரெஸ்ஸா மாடலை விட சில நூறு யூனிட்கள் பின்னதங்கியிருக்கிறது. ஜூன் 2019 இல் மாருதி நிறுவனம் சுமார் 8,871 விட்டாரா பிரெஸ்ஸா யூனிட்களை விற்பனை செய்தது. இதே காலக்கட்டத்தில் ஹூன்டாய் நிறுவனம் 8,763 யூனிட்களை விற்பனை செய்தது. 

    ஹூன்டாய் வென்யூ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் i20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கப்படுகிறது.
    இத்தாலி நாட்டு சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மஸராட்டி விரைவில் தனது லெவான்டே டிரோபியோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



    இத்தாலி நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மஸராட்டி நிறுவனம் இந்தியாவில் தனது லெவான்டே மாடல் காரை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. 

    ஏற்கனவே மஸராட்டி நிறுனத்தின் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அது டீசல் என்ஜின் கொண்ட மாடல் ஆகும். தற்போது லெவான்டே டிராபியோ எனும் பெட்ரோல் மாடல் கொண்ட காரை இந்தியாவில் அறிமுகம் செய்யப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்நிறுவனம் தயாரித்துள்ள கார்களில் அதிவிரைவு என்ஜினைக் கொண்ட மாடலாக டிராபியோ இருக்கிறது. இந்த என்ஜின் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 விநாடிகளில் எட்டிவிடும். இந்த காரில் மணிக்கு அதிகபட்சம் 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.

    மஸராட்டி லெவான்டே டிரோபியோ

    புதிய காரில் முந்தைய மாடலைக் காட்டிலும் பல்வேறு புதிய சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் காரில் எடை ஒரே சீராக பரவும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்.யு.வி. மாடல் காரில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை. இதில் மொத்தம் 17 ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    இத்துடன் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதன் ஆரம்ப விலை ரூ.1.54 கோடியாகும்.
    இந்தியாவில் சமீபத்தில் ஹூன்டாய் கோனா இ.வி. காரை வாங்க பத்து நாட்களில் 120 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.



    ஹூன்டாய் இந்தியா நிறுவனம் தனது கோனா இ.வி. காரை வாங்கிக் கொள்வதாக கூறி இதுவரை 120 பேர் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

    ஹூன்டாய் கோனா கார் இந்தியாவில் ஜூலை 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. பின் ஆண்டுக்கு 500 யூனிட்களை விற்பனை செய்ய ஹூன்டாய் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. 

    இந்தியாவில் கோனா இ.வி. காரின் விலை ரூ. 25.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோனா இ.வி. காரை ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்குகிறது. ஹூன்டாய் கோனா இ.வி. காரில் 39.2 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ARAI சான்றுடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஹூன்டாய் கோனா இ.வி.

    கோனா இ.வி. மாடலில் உள்ள பேட்டரியை 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய 52 நிமிடங்களே போதும் என ஹூன்டாய் தெரிவித்துள்ளது. எனினும், வழக்கமான சார்ஜிங் முறைகளில் ஹூன்டா கோனா இ.வி. காரை முழுமையாக சார்ஜ் செய்ய ஒன்பது மணி நேரம் ஆகும்.

    ஹூன்டாய் கோனா இ.வி. மாடலில் 100 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 131 பி.ஹெச்.பி. பவர் 395 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.7 நிமிடங்களில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காரின் உள்புறம் அதிகளவு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 8-இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சி்ஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், லெதர் இருக்கைகள், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆறு ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. உள்ளிட்டவை முக்கியமானவைகளாக இருக்கின்றன.
    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்டார் காருக்கான இந்த ஆண்டு முன்பதிவு நிறைவுற்றதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் காரான ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலை சமீபசத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது.

    ஹெக்டார் காருக்கான முன்பதிவு ஜூன் 4 ஆம் தேதி துவங்கியது. இந்தியாவில் ஹெக்டார் எஸ்.யு.வி. மாடலின் துவக்க விலை ரூ. 12.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முன்பதிவு துவங்கியது முதல் இதுவரை சுமார் 21,000 பேர் ஹெக்டார் காரை வாங்க முன்பதிவு செய்துள்ளனர். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில், எம்.ஜி. மோட்டார் இந்திய சந்தையில் ஹெக்டார் காருக்கான முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறது.

    எம்.ஜி. ஹெக்டார்

    எம்.ஜி. ஹெக்டார் முன்பதிவுகள் அதிகரிக்கும் தட்டுப்பாடுகளை தவிர்க்கும் நோக்கில் நிறுத்தப்படுகிறது. இதன் மூலம் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு சரியான நேரத்தில் வாகனத்தை வழங்க இது உதவும் என கூறப்படுகிறது. 

    ஹெக்டார் காரை வாங்க முன்பதிவு செய்தவர்களில் சுமார் 50 சதவிகிதம் பேர் ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என டாப் எண்ட் மாடல்களை தேர்வு செய்திருக்கின்றனர்.

    எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனம் ஹெக்டார் காரை குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹலோல் ஆலையில் உருவாக்குகிறது. சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மாதம் 3000 ஹெக்டார் கார்களை உருவாக்க எம்.ஜி. மோட்டார் திட்டமிட்டுள்ளது. 
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்.யு.வி. கார் முன்பதிவுகள் சமீபத்தில் துவங்கிய நிலையில், ஒரே நாளில் நடைபெற்ற முன்பதிவு விவரம் வெளியாகியுள்ளது.



    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்.யு.வி. காருக்கான முன்பதிவு ஜூலை 16 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக துவங்கியது. இந்நிலையில், முன்பதிவு துவங்கிய முதல் நாளிலேயே 6,046 பேர் புதிய காரை வாங்க முன்பதிவு செய்திருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் கியா செல்டோஸ் எஸ்.யு.வி. விற்பனை ஆகஸ்டு 22 ஆம் தேதி துவங்குகிறது. கியா செல்டோஸ் கார்: டெக் லைன் மற்றும் ஜி.டி. லைன் என இருவித ட்ரிம்களில் கிடைக்கிறது. இருவேரிண்ட்களும் 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதியுடன் கிடைக்கிறது.

    கியா செல்டோஸ்

    கியா செல்டோஸ் எஸ்.யு.வி. கார்: 115 பி.ஹெச்.பி. மற்றும் 144 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் என்ஜின், 115 பி.ஹெச்.பி. மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் CRDi டீசல் யூனிட் மற்றும் 140 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. டர்போ-பெட்ரோல் என்ஜின் என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    மூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6-ஸ்பீடு ஏ.டி., ஐ.வி.டி. மற்றும் 7-ஸ்பீடு டி.சி.டி. என மூன்று ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது. 

    புதிய செட்லோஸ் காரில் 10.25 இன்ச் ஹெச்.டி. தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, 8.0 இன்ச் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 360-டிகிரி சரவுண்ட் வியூ மானிட்டர், பிளைன்ட்-ஸ்பாட் மானிட்டரிங், உலகின் முதல் கனெக்ட் ஏர்-பியூரிஃபையர், கியாவின் சொந்த யு.வி.ஒ. கனெக்ட் சிஸ்டம், 8-ஸ்பீக்கர் போஸ் ஹை-ஃபை சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
    ஹூன்டாய் நிறுவனத்தின் அடுத்த எலெக்ட்ரிக் கார் விவரங்கள் வெளியாகியுள்ளது. இதில் அதன் விலை பற்றிய தகவலும் இடம்பெற்றிருக்கிறது.



    ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலான கோனா இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. முழுமையான எலெக்ட்ரிக் காராக உருவாகியிருக்கும் ஹூன்டாய் கோனா மாடலின் துவக்க விலை ரூ. 25.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஹூன்டாய் நிறுவனம் புதிதாக மற்றொரு எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. புதிய எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தைக்கென உருவாக்கப்படும் என்றும் இதன் விலை ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    புதிய எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் உள்ள உற்பத்தி செய்யப்படும் என்றும் இந்த பணிகள் சென்னையில் உள்ள ஹூன்டாய் ஆலையில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த கார் மத்திய கிழக்கு, லத்தின் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியாவின் இதர
    சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ஹூன்டாய் கோனா கோப்புப்படம்

    இந்தியாவுக்கென பிரத்யேக பட்ஜெட் விலை எலெக்ட்ரிக் காரை உருவாக்க ஹூன்டாய் நிறுவனம் ரூ. 2000 கோடியை முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இதன் வடிவமைப்பு பற்றிய முடிவு இதுவரை எட்டப்படவில்லை என தெரிகிறது. இது மினி எஸ்.யு.வி. அல்லது பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக இருக்கும் என தெரிகிறது.

    இந்திய அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களிடம் எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க வலியுறுத்தி வரும் நிலையில், ஹூன்டாய் நிறுவனத்தின் சமீபத்திய திட்டங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சரியான வரவேற்பை பெற்று தரும் என தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் தவிர ஹூன்டாய் நிறுவனம் பேட்டரி தயாரிக்கும் ஆலையை துவங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் செல்டோஸ் கார் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



    கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது முதல் வாகனமான செல்டோஸ் எஸ்.யு.வி. காரை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டுக்கு முன்னதாகவே செல்டோஸ் கார் சந்தையில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இது இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாகவும் இருக்கிறது.

    கியா செல்டோஸ் காருக்கான முன்பதிவு இன்று (ஜூலை 16) துவங்கியது. வாடிக்கையாளர்கள் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் அல்லது இந்தியா முழுக்க இயங்கும் 206 விற்பனை மையங்களில் புதிய காரை வாங்க முன்பதிவு செய்யலாம்.

    கியா செல்டோஸ்

    செல்டோஸ் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்டு 22 ஆம் தேதி துவங்குகிறது. 

    கியா செல்டோஸ் எஸ்.யு.வி. கார்: 115 பி.ஹெச்.பி. மற்றும் 144 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் ஸ்மார்ட்ஸ்டிரீம் பெட்ரோல் என்ஜின், 115 பி.ஹெச்.பி. மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் CRDi டீசல் யூனிட் மற்றும் 140 பி.ஹெச்.பி. மற்றும் 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. டர்போ-பெட்ரோல் என்ஜின் என மூன்று வித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 

    மூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், 6-ஸ்பீடு ஏ.டி., ஐ.வி.டி. மற்றும் 7-ஸ்பீடு டி.சி.டி. என மூன்று ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது. 
    ×