search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி எர்டிகா சி.என்.ஜி.
    X
    மாருதி சுசுகி எர்டிகா சி.என்.ஜி.

    இந்தியாவில் மாருதி சுசுகி எர்டிகா சி.என்.ஜி. அறிமுகம்

    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா சி.என்.ஜி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா சி.என்.ஜி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எர்டிகா சி.என்.ஜி. விலை ரூ. 8.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எர்டிகா சி.என்.ஜி. காரின் டூர் எம் வேரியண்ட் ரூ. 8.82 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    ஃபேக்ட்ரிஃபிட்டெட் சி.என்.ஜி. தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் முதல் எம்.பி.வி. காராக மாருதி சுசுகி எர்டிகா இருக்கிறது. இந்தியாவில் 2018 நவம்பரில் அறிமுகமான புதிய மாடலை தழுவி புகிய எர்டிகா சி.என்.ஜி. உருவாக்கப்பட்டுள்ளது.

    புதிய மாருதி எர்டிகா சி.என்.ஜி. மாடல்களிலும் 1.5 லிட்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 91 பி.ஹெச்.பி. பவர் @6000 ஆர்.பி.எம். மற்றும் 122 என்.எம். டார்க் @4400 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகி எர்டிகா

    புதிய மாடல் ஒரு கிலோவிற்கு 26.2 கிலோமீட்டர் வரை செல்லும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. எர்டிகா ஸ்டான்டர்டு மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    எர்டிகா சி.என்.ஜி. ஒற்றை Vxi வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. இதில் என்ஜின் இம்மொபைலைசர், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ஃபேப்ரிக் சீட், டூயல் டோன் கேபின், ஸ்டீரிங் மவுன்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் MID ஸ்கிரீன், பிரேக் அசிஸ்ட், ஏ.பி.எஸ். இ.பி.டி., சைல்டு லாக் ரியர் டோர், பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகி எர்டிகா சி.என்.ஜி. கார்: வைட், சில்வர், மேக்மா கிரே, ரெட் மற்றும் புளு என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. எர்டிகா சி.என்.ஜி. டூர் எம் வேரியண்ட்: வைட், சில்வர் மற்றும் பிளாக் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    Next Story
    ×