என் மலர்
கார்
போர்ஷ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் புதிய மெக்கான் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு போர்ஷ் நிறுவனம் தனது பிரபல மெக்கான் பிராண்டில் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் கொண்ட காரை அறிமுகம் செய்துள்ளது. நான்கு சிலிண்டர்களைக் கொண்ட இந்த மாடல் காரின் விலை ரூ.69.98 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வி6 என்ஜினைக் கொண்ட மெக்கான் எஸ் மாடல் விலை ரூ.85.03 லட்சம் ஆகும். கோடீஸ்வரர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் வாங்கும் வகையில் காரின் விலையை நிர்ணயித்து உள்ளது இந்நிறுவனம்.
மெக்கான் மாடல் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டிருக்கிறது. இது 252 ஹெச்.பி. திறன், 370 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டது. மெக்கான் எஸ் மாடல் 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு வி6 பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 354 ஹெச்.பி. திறன், 480 என்.எம். டார்க் இழுவிசையைக் கொண்டிருக்கிறது.
இந்த மாடல் கார் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.3 வினாடிகளில் எட்டி விடும். இதில் மணிக்கு 254 கி.மீ. தூரம் பயணிக்க முடியும். இதில் எல்.இ.டி. விளக்கு வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. பம்பரும் முகப்பு விளக்கும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
போர்ஷ் மெக்கான் கார்: கரும்பச்சை மெட்டாலிக், டோலமைட் சில்வர் மெட்டாலிக், மியாமி புளூ, கிரேயான் போன்ற புதிய நிறங்களில் கிடைக்கிறது. இது இண்டர்நெட் இணைப்பு கொண்ட வாகனமாகும். இதில் 10.9 அங்குல தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது.
போர்ஷ் நிறுவனம் இந்த மாடலில் பேட்டரி காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மெக்கான் மாடல் பேட்டரி கார் 2021-ல் வெளியாகும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் டேகான் மாடல் கார் பேட்டரியில் ஓடும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெக்கான் மாடல் 2 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினைக் கொண்டிருக்கிறது. இது 252 ஹெச்.பி. திறன், 370 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டது. மெக்கான் எஸ் மாடல் 3 லிட்டர் டர்போ சார்ஜ்டு வி6 பெட்ரோல் என்ஜினைக் கொண்டுள்ளது. இது 354 ஹெச்.பி. திறன், 480 என்.எம். டார்க் இழுவிசையைக் கொண்டிருக்கிறது.

போர்ஷ் மெக்கான் கார்: கரும்பச்சை மெட்டாலிக், டோலமைட் சில்வர் மெட்டாலிக், மியாமி புளூ, கிரேயான் போன்ற புதிய நிறங்களில் கிடைக்கிறது. இது இண்டர்நெட் இணைப்பு கொண்ட வாகனமாகும். இதில் 10.9 அங்குல தொடுதிரை வழங்கப்பட்டுள்ளது.
போர்ஷ் நிறுவனம் இந்த மாடலில் பேட்டரி காரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மெக்கான் மாடல் பேட்டரி கார் 2021-ல் வெளியாகும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2020-ம் ஆண்டில் இந்நிறுவனத்தின் டேகான் மாடல் கார் பேட்டரியில் ஓடும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எக்ஸ்.எல்.6 கார் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய பிரீமியம் எம்.பி.வி. கார் எக்ஸ்.எல்.6 மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6 இந்தியாவில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் எக்ஸ்.எல்.6 முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. புதிய காரை முன்பதிவு செய்ய விரும்புவோர் ரூ. 11,000 கட்டணம் செலுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் ஆன்லைன் அல்லது நெக்சா விற்பனையகங்களில் புதிய எக்ஸ்.எல்.6 காரை வாங்க முன்பதிவு செய்யலாம்.
மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6 ஆறுபேர் பயணிக்கக்கூடிய எம்.பி.வி. மாடல் ஆகும். இது அந்நிறுவனத்தின் பிரபல எர்டிகா மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய எக்ஸ்.எல்.6 நெக்சா விற்பனையகங்களில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. எனினும், இது மாருதி சுசுகி அரினா விற்பனையகங்களில் கிடைக்கும்.

புதிய மாருதி சுசுகி எக்ஸ்.எல்.6 மேம்பட்ட முன்புற வடிவமைப்பு, புதிய கிரில், அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், பிளாக் இன்சர்ட் மற்றும் புதிய எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன.
காரின் உள்புறம் கேபின், டேஷ்போர்டு பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு சில்வர் அக்சென்ட் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்கள் எர்டிகா டாப்-எண்ட் மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படுகின்றன.
மாருதி சுசுகி எக்ஸ்.எல். 6 மாடலில் 1.5 லிட்டர் பி.எஸ். 6 ரக கே15-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் வழங்கப்படுகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் வெளியாகும் முன் கியா செல்டோஸ் கார் முன்பதிவில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் எஸ்.யு.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறதரு. புதிய எஸ்.யு.வி. இந்தியாவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவு ஜூலை 16 ஆம் தேதி துவங்கியது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் செல்டோஸ் காரை வாங்க சுமார் 23,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதில் முதல் நாளில் மட்டும் சுமார் 6000 பேர் முன்பதிவு செய்தனர். தற்சமயம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. மாடலாக செல்டோஸ் இருக்கிறது. புதிய செல்டோஸ் வெளியீட்டிற்கு 14 நாட்கள் இருக்கும் நி்லையில், முன்பதிவு எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடக்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய செல்டோஸ் காரை வாங்க கியா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ. 25,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்யலாம். கியா செல்டோஸ் கார்: டெக்-லைன் மற்றும் ஜி.டி.-லைன் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் மூன்று சப்-வேரியண்ட்களும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
கியா செல்டோஸ் கார் 115 பி.ஹெச்.பி. பவர், 144 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் என்.ஏ. பெட்ரோல் என்ஜின், 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் ஜி.டி.ஐ. என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
மூன்று என்ஜின்களும் ஸ்டான்டர்டு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. இந்த எஸ்.யு.வி. மூன்று ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்கள்: CVT, IVT மற்றும் DCT-களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
டொயோட்டா நிறுவனத்தின் வெல்பயர் ஆடம்பர் எம்.பி.வி. ரக கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள தனது வெல்பயர் மாடல் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 6 பேர் பயணிக்கும் வகையிலான சொகுசு மாடல் காரை அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் வந்துள்ளன.
முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்ட காராக (சி.பி.யு.) இங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.80 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.
ஏற்கனவே டொயோட்டா நிறுவனம் ‘அல்பார்டு’ என்ற பெயரிலான காரை அறிமுகம் செய்திருந்தது. அதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு ‘வெல்பயர்’ என்ற பெயரில் அறிமுகமானது. இந்த ஆல்பார்டு மாடல் 2018-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இது சில மாற்றங்களுடன் இந்தியாவில் வெல்பயர் என்ற பெயரில் அறிமுகமாக உள்ளது.

இதில் ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் பகலில் எரியும் டி.ஆர்.எல். விளக்கு ஆகியன உள்ளன. பனியில் ஒளி வீசும் பாக் விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடலாகும். 150 ஹெச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினைக் கொண்டது.
இத்துடன் 143 ஹெச்.பி. எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. இவை ஒன்றிணைந்து 145 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடியவை. இதில் இரண்டு மேற்கூரை உள்ளன. இதனால் பின் வரிசையில் அமர்ந்திருப்போரும் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியும்.
இதன் பக்கவாட்டில் சாத்தக் கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. 3 விதமான கிளைமேட் கண்ட்ரோல் வசதி உள்ளது. இதில் 7 இன்ச் அளவுல் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிகச் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்கிறது.
அதேபோல பின் இருக்கை பயணிகள் பொழுதைக் கழிக்க வசதியாக 10.2 அங்குல டி.வி.க்கள் உள்ளன. தொடக்கத்தில் 200 கார்களை இறக்குமதி செய்து இங்கு அறிமுகம் செய்து, சந்தை நிலவரத்துக்கேற்ப படிப்படியாக இறக்குமதி செய்வது அல்லது இங்கேயே தயாரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது நெக்சான் காரின் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது நெக்சான் காரை அப்டேட் செய்துள்ளது. டாடா நெக்சான் எக்ஸ்.டி. பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட். வேரியண்ட்கள் தற்சமயம் டி.ஆர்.எல்.-கள், ஃபாக் லேம்ப்களை கொண்டிருக்கின்றன.
இத்துடன் எக்ஸ்.டி. பிளஸ் வேரியண்ட்டில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், ஓட்டுனர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி, எட்டு ஸ்பீக்கர் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. நெக்சான் எக்ஸ்.டி. பிளஸ் மாடலில் கனெக்ட்நெக்ஸ்ட் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அலாய் வீல் உள்ளிட்ட வசதிகள் இம்முறையும் வழங்கப்படவில்லை.
இரண்டு வேரியண்ட்களிலும் கிளைமேட் கண்ட்ரோல் அம்சங்களை பயனர் மாற்றிக் கொள்ளலாம். எனினும், எக்ஸ்.இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட்.ஏ. பிளஸ் மாடல்களில் இது தானியங்கி முறையில் செயல்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அப்கிரேடுகள் மூலம் நெக்சான் எக்ஸ்.டி. மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் விலை முறையே ரூ. 8.02 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 8.87 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டாடா நெக்சான் எக்ஸ்.இசட், எக்ஸ்.இசட் பிளஸ் மற்றும் எக்ஸ்.இசட்.ஏ. பிளஸ் வேரியண்ட்களில் தொடர்ந்து கனெக்ட்நெக்ஸ்ட் தொழில்நுட்பம் மற்றும் 7-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
புதிய 7-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இத்துடஎன் குரல்வழி அங்கீகார வசதி, நேவிகேஷன், போன் அழைப்புகள், மியூசிக் உள்ளிட்டவற்றை ஒரே க்ளிக் மூலம் வழங்குகிறது. குரல் கமாண்ட்களின் மூலம் குறுந்தகவல்களுக்கும் பதில் அளிக்க முடியும்.
டாடா நெக்சான் காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசர் என்ஜின்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டீசல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
ஹூன்டாய் வென்யூ எஸ்.யு.வி. கார் இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்துகிறது. இந்த மாடல் விற்பனையில் கடந்த புதிய மைல்கல் விவரங்களை பார்ப்போம்.
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் 4-மீட்டர்களுக்குள் உருவான தனது முதல் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்தது. அன்று முதல் ஹூன்டாய் வென்யூ இந்திய சந்தையில் பிரபல மாடலாக இருக்கிறது. இதுவரை சுமார் 55,000 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், 18,000 யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
தற்சமயம் ஹூன்டாய் வென்யூ இந்தியாவில் விற்பனையாகும் முன்னணி எஸ்.யு.வி. எனும் பெருமையை பெற்றிருக்கிறது. முன்னதாக மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மாடல் அதிகம் விற்பனையாகும் முன்னணி எஸ்.யு.வி.-யாக இருந்தது. ஹூன்டாய் நிறுவனம் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 9,585 வென்யூ யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மாடல் 5,302 யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. ஹூன்டாய் தனது வென்யூ காரை எலைட் ஐ20 மற்றும் கிரெட்டா மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தியிருக்கிறது.
இதுதவிர ஹூன்டாய் வென்யூ எஸ்.யு.வி. இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்தியாவில் இதன் துவக்க மாடல் விலை ரூ. 6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் முதல் இரு இடங்களில் ஹூன்டாய் வென்யூ மற்றும் கிரெட்டா மாடல்கள் பிடித்துள்ளன. ஹூன்டாய் கிரெட்டா விற்பனையும் விட்டாரா பிரெஸ்ஸா மாடலை விட அதிகமாகி இருக்கிறது. ஹூன்டாய் கிரெட்டா மாடல் மொத்தம் 6,585 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது வென்யூ மாடலை விட 3000 குறைவு ஆகும்.
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா மாடலில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை புகுத்தி அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வெர்னா மாடலைக் காட்டிலும் இது வடிவமைப்பில் முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. மிகப் பெரிய முகப்பு விளக்கு, கிரில்லுடன் இணைந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிப்புறம் குரோம் , புரொஜெக்டர் லைட், பார்க்கிங் விளக்கு மற்றும் இன்டிகேட்டர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய காரின் பம்பர் முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டிருக்கிறது. அலாய் சக்கரங்களில் டியூயல் டோன் டயமன்ட் கட் டிசைனுடன் இருப்பது இதற்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.

டியூயல் டோன் அலாய் சக்கரங்கள் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த வென்யூ மாடல் காரில்தான் முதல் முறையாக அறிமுகமானது. தற்போது அது மேம்படுத்தப்பட்ட வெர்னா மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பம்பரின் தோற்றத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
காரின் உள்புற அமைப்பில் குறிப்பாக தொடு திரையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட எலன்ட்ரா மாடலில் உள்ளதைப் போன்றே தொடுதிரை இதில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் கனெக்டட் கார் வசதியும் இடம்பெருகிறது.
இது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினைக் கொண்டதாக வெளி வர இருக்கிறது. இந்த மாடல் பி.எஸ்6. புகை சான்று விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 128 ஹெச்.பி. திறன் கொண்டது. இதன் டார்க் அளவு 260 நியூட்டன் மீட்டராக உள்ளது.
புதிய மாடலில் 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் உள்ளது. இது வாடிக்கையாளரின் விருப்ப தேர்வாக இருக்கும். புதிய மாடல் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், டொயோட்டா யாரிஸ், ஸ்கோடா ராபிட், போக்ஸ்வேகன் வென்டோ ஆகிய மாடல் கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷன் மாடலின் துவக்க விலை ரூ. 12.78 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் காரில் காஸ்மெடிக் மாற்றங்கள் மற்றும் புதிய உபகரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
காஸ்மெடிக் அப்டேட்களை பொருத்தவரை புதிய கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷனில் முன்புற ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்பில் ஸ்மோக்டு எஃபெக்ட் கொண்டிருக்கிறது. முன்புற கிரில் டார்க் க்ரோம் ஃபினிஷ், ஃபாக்ஸ் டூயல் எக்சாஸ்ட் பைப்கள், சில்வர் ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்கள் வழங்கப்பட்டுள்ளது.
உள்புறம் ஆல்-பிளாக் இன்டீரியர், கிரெட்டா பேட்ஜிங் கொண்ட கருப்பு நிற ஃபேப்ரிக் சீட்கள், ஸ்டீரிங் வீலில் லெதர் சுற்றப்பட்டுள்ளது. ஏ.சி. வென்ட்களை சுற்றி சில்வர் அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் எலெக்ட்ரிக் சன்ரூஃப், இருக்கை, ஸ்டீரிங் வீல் மற்றும் கியர் லீவர்களில் காண்டிராஸ்ட் ஸ்டிட்ச் செய்யப்பட்டுள்ளது.

புதிய கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷன் கிரெட்டா எஸ்.எக்ஸ். வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 7.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், குரூஸ் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங், ஏ.பி.எஸ்., டூயல் ஏர்பேக் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஹூன்டாய் கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷனில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை கொண்டிருக்கிறது. இதன் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 122 பி.ஹெச்.பி. பவர், 151 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் 126 பி.ஹெச்.பி. பவர், 260 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கின்றன. இத்துடன் ஆட்டோமேடிக் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
புதிய ஹூன்டாய் கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷன்: ஃபேண்டம் பிளாக் மற்றும் போலார் வைட்/ஃபேண்டம் பிளாக் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஹூன்டாய் கிரெட்டா ஸ்போர்ட்ஸ் எடிஷன் விலை ரூ. 55,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் கோடியக் எஸ்.யு.வி. மாடல் வாங்குவோருக்கு காரின் விலையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் ஸ்கோடா கோடியக் கார் ஃபுல்லி லோடெட் மற்றும் எல் அண்ட் கே என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. எஸ்.யு.வி. மாடலின் இரு வேரியண்ட்களும் முறையே ரூ. 35.36 லட்சம் மற்றும் ரூ. 36.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இரு வெர்ஷன்களிலும் 2.0 லிட்டர் டி.டி.ஐ. டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 340 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 7-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும்பாலான நிறுவனங்கள் விற்பனையில் மந்த நிலையை சந்தித்து வருகின்றன. கடந்த ஆறு மாதங்களாக நீடிக்கும் இந்த சூழ்நிலையால் இழப்பை கட்டுப்படுத்தவும், விற்பனையை ஊக்குவிக்கவும் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் மாடல்களுக்கு அதிகளவு தள்ளுபடி வழங்க துவங்கியிருக்கின்றன.

அந்த வரிசையில் டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் உள்ள ஸ்டோகா வாகன விற்பனையாளர்கள் கோடியக் எஸ்.யு.வி. மாடலை வாங்குவோருக்கு ரூ. 2.75 லட்சம் வரை தள்ளுபடி வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏழுபேர் பயணிக்கக்கூடிய கோடியக் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
பின் 2018 ஆம் ஆண்டில் லாரின் அண்ட் கிளெமன்ட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர இந்தியாவில் கோடியக் மிட்-சைக்கிள் ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட் ஒன்றை அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்கோடா கோடியக் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய சூப்பர்ப் மாடலில் வழங்கப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் இந்த மாடலில் புதிய பம்ப்பர்கள், ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், புதிய கிரில் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. உள்புறத்திலும் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது.
ஓலா மற்றும் உபெர் போன்ற கால்டாக்சி நிறுவனங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓலா, உபெர் போன்ற கால்டாக்சி நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
சட்ட மாணவர் நிபுன் சக்சேனா என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-
மொபைல் போன் செயலி மூலம் இயங்கும் தனியார் வாடகை கார் நிறுவனங்களான ஓலா, உபெர் போன்றவற்றில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எவ்வித நிபந்தனையும் இல்லாமல் இந்த நிறுவனங்கள் டிரைவர்களை பணியில் அமர்த்துகின்றன. அத்தகைய டிரைவர்களால் பெண்கள் மானபங்கம், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு அவ்வப்போது ஆளாகுகின்றனர்.

எனவே இந்த நிறுவனங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட வேண்டும். பிரிட்டன் தலைநகர் லண்டனில் உபெர் வாடகை கார்களை இயக்க அந்நாடு தடை செய்துள்ளது. உபெர் நிறுவனத்தின் டிரைவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை அடுத்து, இந்த முடிவுக்கு அந்த நாடு வந்துள்ளது. எனவே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி போட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, ஆர்.சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘மத்திய சாலை போக்குவரத்து துறை இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவைப்பட்டால் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்’ என உத்தரவிட்டனர்.
ஹூன்டாய் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஹூன்டாய் வென்யூ கார் இந்திய சந்தையில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது.
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் இந்தியாவில் வென்யூ எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்தது. ஹூன்டாய் வென்யூ கார் அந்நிறுவனத்தின் முதல் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்.யு.வி. ஆகும். மேலும் இது இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் கார் ஆகும்.
இந்தியாவில் ஹூன்டாய் வென்யூ துவக்க மாடல் விலை ரூ. 6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய வென்யூ கார் வாங்க அறிமுகமான 60 நாட்களிலேயே 50,000 முன்பதிவுகளை பெற்றிருப்பதாக ஹூன்டய் அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் அதிவேக 50,000 முன்பதிவுகளை கடந்த முதல் கார் என்ற பெருமையை வென்யூ பெற்றிருக்கிறது.

இதுவரை ஹூன்டாய் நிறுவனம் சுமார் 18,000-க்கும் அதிக ஹூன்டாய் வென்யூ கார்களை விநியோகம் செய்திருக்கிறது. இவற்றில் 55 சதிவிகிதம் புளு லின்க் தொழில்நுட்பம் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறது.
ஹூன்டாய் வென்யூ காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் i20 பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 83 பி.ஹெச்.பி. பவர், 115 என்.எம். டார்க், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
டீசல் என்ஜின் 89 பி.ஹெச்.பி. பவர், 220 என்.எம். டார்க், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 120 பி.ஹெச்.பி. பவர், 170 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கப்படுகிறது.
டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அந்நிறுவன வாகனங்களின் இந்திய வெளியீட்டு திட்டத்தை அறிவித்திருக்கிறார்.
இந்தியாவில் டெஸ்லா வாகனங்கள் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பை டெஸ்லா தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் ஹைப்பர்லூப் பாட் போட்டியின் போது தெரிவித்தார்.
ஸ்பேஸ் எக்ஸ் ஹைப்பர்லூப் பாட் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணியினர் எலான் மஸ்க்கிடம் டெஸ்லா எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என கேள்வி எழுப்பினர். அதற்கு எலான் மஸ்க் அடுத்து ஆண்டு டெஸ்லா இந்தியா வரும் என தெரிவித்தார்.
இதுவரை எந்த மாடல்களை டெஸ்லா இந்தியா கொண்டு வரும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், அந்நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட மாடல்கள் மட்டும் வெளியாகும் பட்சத்தில் டெஸ்லா மாடல் எக்ஸ் முதலில் அறிமுகமாகலாம்.

இந்திய சந்தையில் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் டெஸ்லா மாடல் எக்ஸ் இந்தியாவில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் பி.எம்.டபுள்யூ. நிறுவனங்களின் எஸ்.யு.வி. மாடல்கள் அதிகம் விற்பனையாகி வருகிறது.
டெஸ்லா கார்கள் முழுமையாக உருவாக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படலாம் என தெரிகிறது. எனினும், இவை அமெரிக்காவில் உருவாக்கப்படுமா அல்லது சீனாவில் உருவாக்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் டெஸ்லா சீனாவின் ஷாங்காய் நகரில் தயாரிப்பு ஆலையை துவங்கியது.






