search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டெஸ்லா மாடல் எஸ்
    X
    டெஸ்லா மாடல் எஸ்

    டெஸ்லா இந்திய வெளியீட்டு விவரங்களை அறிவித்த எலான் மஸ்க்

    டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் அந்நிறுவன வாகனங்களின் இந்திய வெளியீட்டு திட்டத்தை அறிவித்திருக்கிறார்.



    இந்தியாவில் டெஸ்லா வாகனங்கள் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பை டெஸ்லா தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ் ஹைப்பர்லூப் பாட் போட்டியின் போது தெரிவித்தார்.

    ஸ்பேஸ் எக்ஸ் ஹைப்பர்லூப் பாட் போட்டியில் கலந்து கொண்ட இந்திய அணியினர் எலான் மஸ்க்கிடம் டெஸ்லா எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என கேள்வி எழுப்பினர். அதற்கு எலான் மஸ்க் அடுத்து ஆண்டு டெஸ்லா இந்தியா வரும் என தெரிவித்தார்.

    இதுவரை எந்த மாடல்களை டெஸ்லா இந்தியா கொண்டு வரும் என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. எனினும், அந்நிறுவனத்தின் அனைத்து மாடல்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட மாடல்கள் மட்டும் வெளியாகும் பட்சத்தில் டெஸ்லா மாடல் எக்ஸ் முதலில் அறிமுகமாகலாம்.

    டெஸ்லா மாடல் எக்ஸ்

    இந்திய சந்தையில் எஸ்.யு.வி. மாடல்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் டெஸ்லா மாடல் எக்ஸ் இந்தியாவில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம். ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி மற்றும் பி.எம்.டபுள்யூ. நிறுவனங்களின் எஸ்.யு.வி. மாடல்கள் அதிகம் விற்பனையாகி வருகிறது.

    டெஸ்லா கார்கள் முழுமையாக உருவாக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படலாம் என தெரிகிறது. எனினும், இவை அமெரிக்காவில் உருவாக்கப்படுமா அல்லது சீனாவில் உருவாக்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் டெஸ்லா சீனாவின் ஷாங்காய் நகரில் தயாரிப்பு ஆலையை துவங்கியது.
    Next Story
    ×