search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    2020 ஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்
    X
    2020 ஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

    புதிய அம்சங்களுடன் ஹூண்டாய் வெர்னா

    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    ஹூண்டாய் நிறுவனம் தனது வெர்னா மாடலில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை புகுத்தி அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வெர்னா மாடலைக் காட்டிலும் இது வடிவமைப்பில் முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. மிகப் பெரிய முகப்பு விளக்கு, கிரில்லுடன் இணைந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    வெளிப்புறம் குரோம் , புரொஜெக்டர் லைட், பார்க்கிங் விளக்கு மற்றும் இன்டிகேட்டர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய காரின் பம்பர் முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டிருக்கிறது. அலாய் சக்கரங்களில் டியூயல் டோன் டயமன்ட் கட் டிசைனுடன் இருப்பது இதற்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது.

    2020 ஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்

    டியூயல் டோன் அலாய் சக்கரங்கள் சமீபத்தில் இந்நிறுவனம் அறிமுகம் செய்த வென்யூ மாடல் காரில்தான் முதல் முறையாக அறிமுகமானது. தற்போது அது மேம்படுத்தப்பட்ட வெர்னா மாடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. பின்புற பம்பரின் தோற்றத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    காரின் உள்புற அமைப்பில் குறிப்பாக தொடு திரையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட எலன்ட்ரா மாடலில் உள்ளதைப் போன்றே தொடுதிரை இதில் வழங்கப்படுகிறது. மேலும் இதில் கனெக்டட் கார் வசதியும் இடம்பெருகிறது.

    இது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினைக் கொண்டதாக வெளி வர இருக்கிறது. இந்த மாடல் பி.எஸ்6. புகை சான்று விதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது 128 ஹெச்.பி. திறன் கொண்டது. இதன் டார்க் அளவு 260 நியூட்டன் மீட்டராக உள்ளது.

    புதிய மாடலில் 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் உள்ளது. இது வாடிக்கையாளரின் விருப்ப தேர்வாக இருக்கும். புதிய மாடல் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், டொயோட்டா யாரிஸ், ஸ்கோடா ராபிட், போக்ஸ்வேகன் வென்டோ ஆகிய மாடல் கார்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×