search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டொயோட்டா வெல்பயர்
    X
    டொயோட்டா வெல்பயர்

    விரைவில் அறிமுகமாகும் டொயோட்டா வெல்பயர் ஆடம்பர எம்.பி.வி.

    டொயோட்டா நிறுவனத்தின் வெல்பயர் ஆடம்பர் எம்.பி.வி. ரக கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ஜப்பானைச் சேர்ந்த டொயோட்டா நிறுவனம் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள தனது வெல்பயர் மாடல் எம்.பி.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. 6 பேர் பயணிக்கும் வகையிலான சொகுசு மாடல் காரை அறிமுகம் செய்யப் போவதாக தகவல்கள் வந்துள்ளன. 

    முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்ட காராக (சி.பி.யு.) இங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.80 லட்சம் வரை இருக்கும் என்று தெரிகிறது.

    ஏற்கனவே டொயோட்டா நிறுவனம் ‘அல்பார்டு’ என்ற பெயரிலான காரை அறிமுகம் செய்திருந்தது. அதில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு ‘வெல்பயர்’ என்ற பெயரில் அறிமுகமானது. இந்த ஆல்பார்டு மாடல் 2018-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இது சில மாற்றங்களுடன் இந்தியாவில் வெல்பயர் என்ற பெயரில் அறிமுகமாக உள்ளது.

    டொயோட்டா வெல்பயர்

    இதில் ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்கு மற்றும் பகலில் எரியும் டி.ஆர்.எல். விளக்கு ஆகியன உள்ளன. பனியில் ஒளி வீசும் பாக் விளக்கு ஆகியன இதன் சிறப்பம்சங்களாக இருக்கின்றன. இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடலாகும். 150 ஹெச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினைக் கொண்டது. 

    இத்துடன் 143 ஹெச்.பி. எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. இவை ஒன்றிணைந்து 145 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தக் கூடியவை. இதில் இரண்டு மேற்கூரை உள்ளன. இதனால் பின் வரிசையில் அமர்ந்திருப்போரும் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி இயற்கைக் காட்சிகளை ரசிக்க முடியும்.

    இதன் பக்கவாட்டில் சாத்தக் கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. 3 விதமான கிளைமேட் கண்ட்ரோல் வசதி உள்ளது. இதில் 7 இன்ச் அளவுல் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மிகச் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்கிறது.
     
    அதேபோல பின் இருக்கை பயணிகள் பொழுதைக் கழிக்க வசதியாக 10.2 அங்குல டி.வி.க்கள் உள்ளன. தொடக்கத்தில் 200 கார்களை இறக்குமதி செய்து இங்கு அறிமுகம் செய்து, சந்தை நிலவரத்துக்கேற்ப படிப்படியாக இறக்குமதி செய்வது அல்லது இங்கேயே தயாரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளது.
    Next Story
    ×