search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹூன்டாய் வென்யூ
    X
    ஹூன்டாய் வென்யூ

    இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்தும் ஹூன்டாய் வென்யூ

    ஹூன்டாய் வென்யூ எஸ்.யு.வி. கார் இந்திய விற்பனையில் தொடர்ந்து அசத்துகிறது. இந்த மாடல் விற்பனையில் கடந்த புதிய மைல்கல் விவரங்களை பார்ப்போம்.



    ஹூன்டாய் இந்தியா நிறுவனம் 4-மீட்டர்களுக்குள் உருவான  தனது முதல் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் மே மாத வாக்கில் அறிமுகம் செய்தது. அன்று முதல் ஹூன்டாய் வென்யூ இந்திய சந்தையில் பிரபல மாடலாக இருக்கிறது. இதுவரை சுமார் 55,000 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், 18,000 யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

    தற்சமயம் ஹூன்டாய் வென்யூ இந்தியாவில் விற்பனையாகும் முன்னணி எஸ்.யு.வி. எனும் பெருமையை பெற்றிருக்கிறது. முன்னதாக மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மாடல் அதிகம் விற்பனையாகும் முன்னணி எஸ்.யு.வி.-யாக இருந்தது. ஹூன்டாய் நிறுவனம் ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 9,585 வென்யூ யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

    ஹூன்டாய் வென்யூ

    இதே காலக்கட்டத்தில் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மாடல் 5,302 யூனிட்களே விற்பனையாகி இருக்கிறது. ஹூன்டாய் தனது வென்யூ காரை எலைட் ஐ20 மற்றும் கிரெட்டா மாடல்களுக்கு மத்தியில் நிலை நிறுத்தியிருக்கிறது. 

    இதுதவிர ஹூன்டாய் வென்யூ எஸ்.யு.வி. இந்தியாவின் முதல் கனெக்ட்டெட் கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. இந்தியாவில் இதன் துவக்க மாடல் விலை ரூ. 6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் முதல் இரு இடங்களில் ஹூன்டாய் வென்யூ மற்றும் கிரெட்டா மாடல்கள் பிடித்துள்ளன. ஹூன்டாய் கிரெட்டா  விற்பனையும் விட்டாரா பிரெஸ்ஸா மாடலை விட அதிகமாகி இருக்கிறது. ஹூன்டாய் கிரெட்டா மாடல் மொத்தம் 6,585 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது வென்யூ மாடலை விட 3000 குறைவு ஆகும்.
    Next Story
    ×