search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹூன்டாய் கோனா இ.வி.
    X
    ஹூன்டாய் கோனா இ.வி.

    பத்து நாட்களில் 120 பேர் முன்பதிவு செய்த ஹூன்டாய் கோனா இ.வி.

    இந்தியாவில் சமீபத்தில் ஹூன்டாய் கோனா இ.வி. காரை வாங்க பத்து நாட்களில் 120 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.



    ஹூன்டாய் இந்தியா நிறுவனம் தனது கோனா இ.வி. காரை வாங்கிக் கொள்வதாக கூறி இதுவரை 120 பேர் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

    ஹூன்டாய் கோனா கார் இந்தியாவில் ஜூலை 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. பின் ஆண்டுக்கு 500 யூனிட்களை விற்பனை செய்ய ஹூன்டாய் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. 

    இந்தியாவில் கோனா இ.வி. காரின் விலை ரூ. 25.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோனா இ.வி. காரை ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவிலேயே உருவாக்குகிறது. ஹூன்டாய் கோனா இ.வி. காரில் 39.2 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ARAI சான்றுடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஹூன்டாய் கோனா இ.வி.

    கோனா இ.வி. மாடலில் உள்ள பேட்டரியை 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய 52 நிமிடங்களே போதும் என ஹூன்டாய் தெரிவித்துள்ளது. எனினும், வழக்கமான சார்ஜிங் முறைகளில் ஹூன்டா கோனா இ.வி. காரை முழுமையாக சார்ஜ் செய்ய ஒன்பது மணி நேரம் ஆகும்.

    ஹூன்டாய் கோனா இ.வி. மாடலில் 100 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 131 பி.ஹெச்.பி. பவர் 395 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.7 நிமிடங்களில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காரின் உள்புறம் அதிகளவு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 8-இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சி்ஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், லெதர் இருக்கைகள், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆறு ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. உள்ளிட்டவை முக்கியமானவைகளாக இருக்கின்றன.
    Next Story
    ×