என் மலர்tooltip icon

    கார்

    மாருதி சுசுகி நிறுவனம் தனது எர்டிகா சி.என்.ஜி. வேரியண்ட்டை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி ஆகஸ்டு 21 ஆம் தேதி தனது எம்.பி.வி. ரக காரின் ரக்கட் வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் நெக்சா விற்பனையகங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    புதிய கார் மாருதி எர்டிகா கிராஸ் என அழைக்கப்படும் என தெரிகிறது. புதிய மாடலில் பல்வேறு கிராஸ்ஒவர் அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட அழகிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. எர்டிகா காரின் வெளிப்புறம் மற்றும் உற்புறங்களில் அதிகளவு அப்டேட்கள் செய்யப்படும் என தெரிகிறது.

    மாருதி சுசுகி எர்டிகா

    இதுதவிர மாருதி சுசுகி நிறுவனம் எர்டிகா காரின் சி.என்.ஜி. வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் இரண்டாம் தலைமுறை எர்டிகா கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கிறது. முந்தைய வெர்ஷனில் சி.என்.ஜி. ஆப்ஷன் வழங்கப்பட்டிருந்தது.

    இதேபோன்று இரண்டாம் தலைமுறை மாடலிலும் சி.என்.ஜி. வெர்ஷனை வழங்க மாருதி சுசுகி பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இது 1.5 லிட்டர் K15B பெட்ரோல் என்ஜினை தழுவிய பவர்-டிரெயின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

    முந்தைய தலைமுறை எர்டிகா சி.என்.ஜி. மாடல் லிட்டருக்கு 22.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கியது. புதிய சி.என்.ஜி. மாடலின் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் லிட்டருக்கு 25 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என தெரிகிறது.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 81 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க கார் பிரியாவிடை பெற்றுக் கொண்டது.



    ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கடைசி பீட்டில் கார் வெளியாகியுள்ளது. 1938 ஆம் ஆண்டு துவங்கிய பீட்டில் உற்பத்தி தற்சமயம் நிரந்தரமாக நிறுத்தப்பட்டு விட்டது.

    உலகம் முழுக்க பல்வேறு ஃபோக்ஸ்வேகன் ஆலைகளில் இதுவரை சுமார் இரண்டு கோடிக்கும் அதிக பீட்டில் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. பீட்டில் மாடலின் கடைசி கார் பீட்டில் ஃபைனல் எடிஷன் என அழைக்கப்படுகிறது. இதன் வெளிப்புறம் டெனிம் புளு பெயின்ட் செய்யப்பட்டுள்ளது.

    இந்த கார் விற்பனை செய்யப்படாமல் மெக்சிகோ நகரில் உள்ள ஃபோக்ஸ்வேகன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படுகிறது. 81 ஆண்டுகள் விற்பனையில் இருந்த பாரம்பரிய பீட்டில் கார் வெறும் மூன்று தலைமுறை மாடல்களே வெளியிடப்பட்டன. இதன் முதல் தலைமுறை பீட்டில் கார் 1938 முதல் 2003 ஆம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்டது.

    ஃபோக்ஸ்வேகன் பீட்டில்

    இதன் இரண்டாம் தலைமுறை மாடல் 1998 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, பின் 2012 ஆம் ஆண்டு மூன்றாம் தலைமுறை பீட்டில் கார் வெளியானது. இந்த கார் 2015 முதல் 2018 வரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது.

    ஃபோக்ஸ்வேகன் பீட்டில் முதல் தலைமுறை மாடல் விற்பனை நிறுத்தும் முன் வரை 21.5 கோடி யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. பின் இரண்டாம் தலைமுறை மாடல் 12 கோடி யூனிட்கள் 1998 முதல் 2010 ஆம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்டது. மூன்றாம் தலைமுறை பீட்டில் கார் வெறும் ஐந்து லட்சம் யூனிட்களே உருவாக்கப்பட்டன.
    மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.500 காருக்கு புதிய அப்டேட் வழங்கியுள்ளது. புதிய அப்டேட் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.500 காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார்பிளே வசதியை சேர்த்துள்ளது. புதிய அப்டேட் மூலம் எக்ஸ்.யு.வி.500 கார் தற்சமயம் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே என இரண்டு அம்சங்களையும் கொண்டிருக்கிறது.

    இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கனெக்ட்டெட் ஆப்ஸ், எமெர்ஜன்சி கால், ஸ்மார்ட் வாட்ச் வசதி மற்றும் இகோசென்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. தற்சமயம் புதிய அப்டேட் எக்ஸ்.யு.வி.500 காரின் டபுள்யூ11 வேரியண்ட்டில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    ஏற்கனவே மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 டபுள்யூ11 வேரியண்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் புதிய அப்டேட் பெற முடியும். வாடிக்கையாளர்கள் தங்களது காரை அதிகாரப்பூர்வ மஹிந்திரா சர்வீஸ் மையத்தில் அப்டேட் செய்து கொள்ளலாம். 

    மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500

    இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 கார் 2011 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. பின் கடந்த ஆண்டு இந்த கார் அப்டேட் செய்யப்பட்டது. இந்த காரில் 2.2 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட எம்-ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 155 பி.எஸ். மற்றும் 360 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    இதுதவிர 2.2 லிட்டர் பெட்ரோல் மோட்டார் 140 பி.எஸ். மற்றும் 320 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டிரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செய்ய மஹிந்திரா எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை.

    இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500 கார் ரூ. 12.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 19.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    ஹூன்டாய் இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வென்யூ கார் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



    ஹூன்டாய் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது வென்யூ எஸ்.யு.வி. காரை மே மாதத்தில் அறிமுகம் செய்தது. ஹூன்டாய் வென்யூ கார் அந்நிறுவனத்தின் முதல் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலாக வெளியானது. 

    முதல் மாத விற்பனையில் ஹூன்டாய் வென்யூ சுமார் 8,763 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இது மாருதி விடாரா பிரெசா மாடலை விட 100 யூனிட்கள் குறைவாகும். ஜூன் 2019 இல் மாருதி சுசுகியின் விடாரா பிரெசா மாடல் 8,871 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. 

    இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 17 சதவிகிதம் குறைவு ஆரும். கடந்த சில மாதங்களாக மாருதி சுசுகியின் வாகன விற்பனை குறைந்து வருகிறது. இது விடாரா பிரெசா மாடலையும் பாதித்துள்ளது. இதன் காரணமாக ஹூன்டாய் வென்யூ மாடலை முன்னணி இடத்திற்கு போட்டியாகியுள்ளது.

    ஹூன்டாய் வென்யூ

    இந்தியாவில் ஹூன்டாய் வென்யூ பேஸ் மாடல் விலை ரூ. 6.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 11.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    வென்யூ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை எலைட் ஐ20 மற்றும் கிரெட்டா மாடல்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக 1.0 லிட்டர் 3-சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர், 172 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்பீடு டி.சி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    ஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலாக கோனா இ.வி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    ஹூன்டாய் இந்தியா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலான கோனா இ.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய கோனா இ.வி. காரின் விலை ரூ. 25.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த காரின் உதிரிபாகங்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படும். ஹூன்டாய் கோனா இ.வி. காரில் 39.2 கிலோவாட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ARAI சான்றுடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 452 கிலோமீட்டர் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

    ஹூன்டாய் கோனா இ.வி.

    கோனா இ.வி. மாடலில் உள்ள பேட்டரியை 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய 52 நிமிடங்களே போதும் என ஹூன்டாய் தெரிவித்துள்ளது. எனினும், வழக்கமான சார்ஜிங் முறைகளில் ஹூன்டா கோனா இ.வி. காரை முழுமையாக சார்ஜ் செய்ய ஒன்பது மணி நேரம் ஆகும்.

    ஹூன்டாய் கோனா இ.வி. மாடலில் 100 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 131 பி.ஹெச்.பி. பவர் 395 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 9.7 நிமிடங்களில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காரின் உள்புறம் அதிகளவு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 8-இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சி்ஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், லெதர் இருக்கைகள், ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆறு ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி. உள்ளிட்டவை முக்கியமானவைகளாக இருக்கின்றன.
    ரெனால்ட் நிறுவனம் தனது வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் மதிப்பிலான சலுகையை அறிவித்துள்ளது.



    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை பெருமளவு சரிவை சந்தித்து வருகிறது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்களின் வாகனங்களுக்கு அதிகளவு தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. 

    அந்த வரிசையில் ரெனால்ட் நிறுவனம் தன்பங்கிற்கு சலுகையை அறிவித்துள்ளது. விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கில் ரெனால்ட் நிறுவனம் தனது டஸ்டர், கேப்டூர் மற்றும் க்விட் மாடல்களை வாங்குவோருக்கு அதிகளவு தள்ளுபடி வழங்குகிறது.

    ரெனால்ட் டஸ்டர் - ரூ. 1.05 லட்சம் வரை சேமிக்கலாம்

    ரெனால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியா முழுக்க அனைத்து விற்பனையாளர்களிடம் விற்பனை செய்யப்படும் நிலையில், டஸ்டர் பழைய மாடலுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ரெனால்ட் டஸ்டர் டீசல் வேரியண்ட்களில் ரூ. 1.05 லட்சம் மற்றும் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு ரூ. 35,000 வரையிலான சலுகை வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் டஸ்டர் 1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் ஆப்ஷன்களுக்கு வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது. 

    ரெனால்ட் கேப்டூர்

    ரெனால்ட் கேப்டூர் - அதிகபட்சம் ரூ. 35,000 வரை சேமிக்கலாம்

    ரெனால்ட் கேப்டூர் இந்திய சந்தையில் போதுமான வரவேற்பு பெறவில்லை. சமீபத்தில் இந்த மாடல் மேம்படுத்தப்பட்டு இரண்டு மாடல்களில் வெளியாகி இருக்கிறது. இந்த கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் கிடைக்கிறது. ரெனால்ட் கேப்டூர் மாடலுக்கு ரூ. 55,000 வரை சலுகை மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் க்விட்

    ரெனால்ட் க்விட் - அதிகபட்சம் ரூ. 25,000 வரை சேமிக்கலாம்

    2015 ஆம் ஆண்டில் அறிமுகமான க்விட் கார் ரெனால்ட் நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றாக இருக்கிறது. அழகிய தோற்றம் இந்த மாடலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தோற்றத்தில் இது மாருதி சுசுகியின் ஆல்டோ காரை விட அழகாக காட்சியளிக்கிறது. 

    க்விட் மாடலில் 800சிசி மற்றும் 1.0 லிட்டர் என்ஜின் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இதன் ஆட்டமோடேிக் வேரியண்ட் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. ரெனால்ட் க்விட் வாங்குவோருக்கு ரூ. 25,000 வரை சலுகை வழங்கப்படுகிறது.
    ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சர்வதேச சந்தையில் பிரபலமாக இருக்கும் மூன்று எஸ்.யு.வி. மாடல்களை இந்தியாவில் அறி்முகம் செய்ய இருக்கிறது.



    இந்தியாவில் தற்போது எஸ்.யு.வி.க்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு உலக அளவில் பிரபலமாக உள்ள தனது 3 மாடல் எஸ்.யு.வி.க்களை இறக்குமதி செய்து விற்பனைசெய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 

    இதன் அடிப்படையில் நிறுவனத்தின் பிரபல மாடல்களான ஃபோக்ஸ்வேகன் டிகுயான், டிராக், டிகுயான் ஆல்ஸ்பேஸ் ஆகிய மூன்று மாடல்களை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. டிகுயான் மாடல் 4,234 மி.மீ. நீளம் கொண்டது. 

    டிராக் மாடல் இதைவிட 252 மி.மீ. நீளம் குறைவானது. 1.5 டி.எஸ்.ஐ., 150 ஹெச்.பி. திறன் கொண்ட என்ஜினை உடையது. இதன் விலை ரூ.23 லட்சம் இருக்கும் என தெரிகிறது.

    ஃபோக்ஸ்வேகன் டிகுயான் ஆல்ஸ்பேஸ்

    டிகுயான் ஆல் ஸ்பேஸ் மாடல் எஸ்.யு.வி. மாடலில் பெரிய அளவிலானதாகும். 2017-ம் ஆண்டு டெட்ராய்டில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியில் இடம்பெற்று சர்வதேச அளவில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விலை ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.32 லட்சம் வரை இருக்கும்.

    143 ஹெச்.பி. திறனுடன் 2 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்ட இதில் 7 கியர்களைக் கொண்ட டியூயல் கிளட்ச், அனைத்து சக்கர சுழற்சி கொண்டது. பொதுவாக ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகளுக்கு இந்திய சந்தையில் மிகச் சிறந்த வரவேற்பு உள்ளது. இறக்குமதி செய்யப்படும் எஸ்.யு.வி. மாடல்கள் ஏற்கனவேசந்தையில் உள்ள எஸ்.யு.வி. மாடல் கார்களுக்கு பெரும் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்.பி.வி. காரின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.



    கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது முதல் வாகனமான செல்டோஸ் எஸ்.யு.வி. மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எஸ்.யுவி. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விற்பனை ஆகஸ்டு மாதம் துவங்க இருக்கிறது.

    தற்சமயம் வெளியீட்டுக்கு முன் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்னிவல் எம்.பி.வி. காரை இந்தியாவில் இரண்டாவது மாடலாக அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கியா கார்னில் எம்.பி.வி. 2020 ஆம் ஆண்டு வாக்கில் விற்பனை செய்யப்படுகிறது.

    கியா கார்னிவல்

    இந்திய சந்தையில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் மாடலாக கார்னிவல் எம்.பி.வி. இருக்கும். கார்னிவல் எம்.பி.வி. கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட அகலமாக இருக்கும். இதன் வீல்பேஸ் மட்டும் 3060 எம்.எம். அளவில் இருக்கும். இதில் ஏழு, எட்டு மற்றும் பதினொன்று இருக்கைகள் கொண்ட மாடலாக வெளியாகும்.

    கியா கார்னிவல் காரில் 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக்கல் பவர் ஸ்லைடிங் ரியர் டோர், எல்.இ.டி. லைட்டிங், தொடுதிரை வசதி கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த கார் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும்.

    இந்த என்ஜின் 202 பி.ஹெச்.பி. @3800 ஆர்.பி.எம். மற்றும் 441 என்.எம். டார்க் @1750 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    மஹிந்திரா நிறுவனம் ஏ.பி.எஸ். வசதி கொண்ட பொலிரோ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ காரை சத்தமில்லாமல் அப்டேட் செய்துள்ளது. இந்தியாவில் விற்பனையாகும் நான்கு சக்கர வாகனங்களில் ஏ.பி.எஸ். வழங்குவது கட்டாயமாகிறது. இதுதவிர புதிய வாகனங்களில் ஓவர்-ஸ்பீடிங் அலாரம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீ்ட்-பெல்ட் ரிமைன்டர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் வழங்க வேண்டும்.

    இதன் காரணமாக மஹிந்திரா தனது பொலிரோ காரில் புதிய பாதுகாப்பு அம்சங்களை வழங்கியுள்ளது. இத்துடன் ஏ.பி.எஸ். பொலிரோ மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் புதிய காரை மஹிந்திராவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் விற்பனை மையங்களில் முன்பதிவு செய்யலாம்.

    முன்னதாக ஏ.பி.எஸ். வசதி கொண்ட மஹிந்திரா பொலிரோ புகைப்படம் இணையத்தில் வெளியானது. தனது வலைத்தளத்தில் மஹிந்திரா தனது வாகனத்தை பட்டியலிட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். புதிய பொலிரோ வாகனத்தின் விலையை மஹிந்திரா இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், இது முந்தைய மாடலை விட விலை அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    மஹிந்திரா பொலிரோ ஏ.பி.எஸ்.

    இந்தியாவில் BNVSAP பாதுகாப்பு விதிகளை பூர்த்தி செய்யும் புதிய பொலிரோ காரும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரில் புத்தம் புதிய பி.எஸ். 6 ரக என்ஜினும் வழங்கபப்டுகிறது. இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் பி.எஸ். 6 புகை விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனும் விதிமுறை ஏப்ரல் 1, 2020 முதல் அமலாகிறது.

    புதிய பாதுகாப்பு உபகரணங்கள் தவிர காரின் என்ஜின் மற்றும் இதர அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவில் மஹிந்திரா பொலிரோ கார் விலை ரூ. 7.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய கார் மாடலின் விற்பனையை நிறுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.



    டாடா நிறுவனத்தின் ஹேரியர் கார் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடலாக இருக்கிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் கார் அந்நிறுவனத்தின் ஹெக்சா காருக்கு மாற்றாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2019 ஜெனீவா சர்வதேச மோட்டார் விழாவில் டாடா ஹேரியர் கார் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் டாடா ஹேரியர் கார் டாடா ஹெக்சா காருக்கு மாற்றாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்யும் விலை உயர்ந்த கார் மாடலாக டாடா ஹெக்சா இருக்கிறது. இந்த கார் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது டாடா ஆரியா மாடலுக்கு மாற்றாக அறிமுகமாகி 2017 ஆம் ஆண்டு இங்கு வெளியானது.

    டாடா ஹேரியர்

    இந்திய சந்தையில் ஹெக்சா கார் எதிர்பார்த்த விற்பனையை பூர்த்தி செய்யவில்லை என்பதால், இந்த காரின் விற்பனையை நிறுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. டாடா ஹெக்சா காரில் 2.2 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 153.8 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    2020 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கார்களில் பி.எஸ். 6 ரக எமிஷன்களை பின்பற்ற அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்நிலையில், ஹெக்சா காரை பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வதற்கு அதிக செலவாகும் என்பதால் டாடா மோட்டார்ஸ் ஹெக்சா காரை அப்டேட் செய்ய வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இதன் காரணமாக ஹெக்சா காருக்கு மாற்றாக புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது எக்ஸ்.யு.வி.300 மாடலை ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் அறிமுகம் செய்துள்ளது.



    மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது எக்ஸ்.யு.வி.300 ஏ.எம்.டி. காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய எக்ஸ்.யு.வி.300 ஏ.எம்.டி. காரின் விலை ஸ்டான்டர்டு வேரியண்ட்டை விட ரூ. 55,000 அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ஏ.எம்.டி. டிரான்ஸமிஷன் கொண்ட எக்ஸ்.யு.வி.300 கார் ஆட்டோஷிஃப்ட் என அழைக்கப்படுகிறது. இது டீசல் பவர் டாப் எண்ட் மாடல்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில் டபுள்யூ8 மற்றும் டபுள்யூ8 (0) வேரியண்ட் விலை ரூ. 11.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 12.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    எக்ஸ்.யு.வி.300 ஏ.எம்.டி. கியர்பாக்ஸ்
     
    ஆட்டோஷிஃப்ட் வசதி கொண்ட எக்ஸ்.யு.வி.300 கார் இந்தியா முழுக்க அனைத்து விற்பனையகங்களிலும் கிடைக்கும். இதன் விநியோகம் உடனடியாக துவங்கும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. 

    புதிய எக்ஸ்.யு.வி.300 ஏ.எம்.டி. மாடல்: அக்வாமரைன், பியல் வைட் மற்றும் ரேஜ் ரெட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரில் 150 பி.ஹெச்.பி. மற்றும் 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் காரை டூயல் டோன் ஃபினிஷில் அறிமுகம் செய்துள்ளது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை டூயல் டோன் நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹேரியர் டூயல் டோன் நிறங்களின் விலை ரூ. 16.76 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் கிடைக்கிறது. 

    ஹேரியர் கார் தற்சமயம்: கலிஸ்டோ காப்பர் / பிளாக் மற்றும் ஆர்கஸ் வைட் / பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஹேரியர் கார் வழக்கமான ஒற்றை நிற வேரியண்ட்களுடன் டூயல் டோன் ஆப்ஷனும் கிடைக்கிறது. புதிய டூயல் ஃபினிஷ் டாடா ஹேரியர் 10,000 யூனிட்கள் விற்பனையை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் டாடா ஹேரியர் கார் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டூயல் டோன் நிறங்கள் டாப் எண்ட் மாடலான ஹேரியர் XZ வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.  

    டாடா ஹேரியர்

    டாடா ஹேரியர் மாடல் அந்நிறுவனத்தின் புதிய OMEG பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாகி இருக்கிறது. புதிய ஹேரியர் எஸ்.யு.வி. இந்தியாவில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூன்டாய் டக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.

    இந்தியாவில் டாடா ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் துவக்க விலை ரூ. 12.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 16.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×