search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    கியா கார்னிவல்
    X
    கியா கார்னிவல்

    கியா கார்னிவல் எம்.பி.வி. இந்திய வெளியீடு உறுதியானது

    கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்.பி.வி. காரின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.



    கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது முதல் வாகனமான செல்டோஸ் எஸ்.யு.வி. மாடலை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எஸ்.யுவி. கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விற்பனை ஆகஸ்டு மாதம் துவங்க இருக்கிறது.

    தற்சமயம் வெளியீட்டுக்கு முன் கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்னிவல் எம்.பி.வி. காரை இந்தியாவில் இரண்டாவது மாடலாக அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கியா கார்னில் எம்.பி.வி. 2020 ஆம் ஆண்டு வாக்கில் விற்பனை செய்யப்படுகிறது.

    கியா கார்னிவல்

    இந்திய சந்தையில் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் மாடலாக கார்னிவல் எம்.பி.வி. இருக்கும். கார்னிவல் எம்.பி.வி. கார் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா மாடலை விட அகலமாக இருக்கும். இதன் வீல்பேஸ் மட்டும் 3060 எம்.எம். அளவில் இருக்கும். இதில் ஏழு, எட்டு மற்றும் பதினொன்று இருக்கைகள் கொண்ட மாடலாக வெளியாகும்.

    கியா கார்னிவல் காரில் 3-சோன் கிளைமேட் கண்ட்ரோல், எலெக்ட்ரிக்கல் பவர் ஸ்லைடிங் ரியர் டோர், எல்.இ.டி. லைட்டிங், தொடுதிரை வசதி கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது. இந்த கார் 2.2 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் கொண்டிருக்கும்.

    இந்த என்ஜின் 202 பி.ஹெச்.பி. @3800 ஆர்.பி.எம். மற்றும் 441 என்.எம். டார்க் @1750 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×