search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    மாருதி சுசுகி எர்டிகா
    X
    மாருதி சுசுகி எர்டிகா

    விரைவில் இந்தியா வரும் எர்டிகா சி.என்.ஜி.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது எர்டிகா சி.என்.ஜி. வேரியண்ட்டை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி ஆகஸ்டு 21 ஆம் தேதி தனது எம்.பி.வி. ரக காரின் ரக்கட் வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த கார் நெக்சா விற்பனையகங்களில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    புதிய கார் மாருதி எர்டிகா கிராஸ் என அழைக்கப்படும் என தெரிகிறது. புதிய மாடலில் பல்வேறு கிராஸ்ஒவர் அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட அழகிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது. எர்டிகா காரின் வெளிப்புறம் மற்றும் உற்புறங்களில் அதிகளவு அப்டேட்கள் செய்யப்படும் என தெரிகிறது.

    மாருதி சுசுகி எர்டிகா

    இதுதவிர மாருதி சுசுகி நிறுவனம் எர்டிகா காரின் சி.என்.ஜி. வேரியண்ட்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்சமயம் இரண்டாம் தலைமுறை எர்டிகா கார் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமே கிடைக்கிறது. முந்தைய வெர்ஷனில் சி.என்.ஜி. ஆப்ஷன் வழங்கப்பட்டிருந்தது.

    இதேபோன்று இரண்டாம் தலைமுறை மாடலிலும் சி.என்.ஜி. வெர்ஷனை வழங்க மாருதி சுசுகி பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இது 1.5 லிட்டர் K15B பெட்ரோல் என்ஜினை தழுவிய பவர்-டிரெயின் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் சியாஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.

    முந்தைய தலைமுறை எர்டிகா சி.என்.ஜி. மாடல் லிட்டருக்கு 22.8 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கியது. புதிய சி.என்.ஜி. மாடலின் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் லிட்டருக்கு 25 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என தெரிகிறது.
    Next Story
    ×