search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா ஹேரியர்
    X
    டாடா ஹேரியர்

    ஹேரியர் காரை டூயல் டோனில் அறிமுகம் செய்த டாடா மோட்டார்ஸ்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் காரை டூயல் டோன் ஃபினிஷில் அறிமுகம் செய்துள்ளது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் ஹேரியர் எஸ்.யு.வி. மாடலை டூயல் டோன் நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹேரியர் டூயல் டோன் நிறங்களின் விலை ரூ. 16.76 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் கிடைக்கிறது. 

    ஹேரியர் கார் தற்சமயம்: கலிஸ்டோ காப்பர் / பிளாக் மற்றும் ஆர்கஸ் வைட் / பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. ஹேரியர் கார் வழக்கமான ஒற்றை நிற வேரியண்ட்களுடன் டூயல் டோன் ஆப்ஷனும் கிடைக்கிறது. புதிய டூயல் ஃபினிஷ் டாடா ஹேரியர் 10,000 யூனிட்கள் விற்பனையை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் டாடா ஹேரியர் கார் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டூயல் டோன் நிறங்கள் டாப் எண்ட் மாடலான ஹேரியர் XZ வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.  

    டாடா ஹேரியர்

    டாடா ஹேரியர் மாடல் அந்நிறுவனத்தின் புதிய OMEG பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாகி இருக்கிறது. புதிய ஹேரியர் எஸ்.யு.வி. இந்தியாவில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூன்டாய் டக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது.

    இந்தியாவில் டாடா ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் துவக்க விலை ரூ. 12.99 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 16.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×