என் மலர்tooltip icon

    கார்

    • நிசான் கிராவைட் மாடலில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.
    • கிராவைட் மாடல் மேனுவல், ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் வருகிறது.

    நிசான் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிராவைட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் நிலை நிறுத்தப்பட்டுள்ள கிராவைட் எஸ்யூவி மாடல் CMF-A பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய நிசான் கிராவைட் மாடலின் விலை ரூ. 5.65 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

    புதிய கிராவைட் மாடல் அப்ரைட் மற்றும் பாக்ஸி ஸ்டைல் கொண்டிருக்கிறது. இத்துடன் டெக்ஸ்ச்சர்கள் கொண்ட அகலமான பிளாக் நிற கிரில், ஸ்வெப்ட்-பேக் ஹெட்லேம்ப்கள், மெல்லிய எல்.இ.டி. உள்ளது. இதன் முன்புற பம்ப்பரில் C வடிவ இன்சர்ட்கள், இருபுறமும் ஆரஞ்சு நிற அக்சென்ட்கள் இடம்பெற்றுள்ளன.

    பக்கவாட்டுகளில் வீல் ஆர்ச்கள், ரூஃப் ரெயில்கள், பாடி கிளாடிங் மற்றும் டூயல்-டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் கதவுகளில் கிராஃபிக் ஒட்டப்பட்டுள்ளது. பின்புறத்தில் ராப்-அரவுண்ட் டெயில் லேம்ப்கள், ரிவைஸ்டு பம்ப்பர் மற்றும் அக்சென்ட் டீடெயிலிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    உள்புறத்தில் 8-இன்ச் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மெல்லிய ஏர்-வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 7 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. ரெனால்ட் எம்.பி.வி. போன்றே புதிய நிசான் கிராவைட் மாடலும் 5+2 இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இந்த கார் மூன்றடுக்கு இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் சார்ஜிங், புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ரெயின் சென்சிங் வைப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்கு இந்த 6 ஏர்பேக், பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா, டயர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய நிசான் கிராவைட் மாடலில் 1.0 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 71 ஹெச்.பி. பவர், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் (AMT) யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் லிட்டருக்கு 19.3 முதல் அதிகபட்சம் 19.6 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    • மாருதி சுசுகி இ-விட்டாரா மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
    • புதிய இ-விட்டாரா மாடலை பத்து வண்ணங்களில் இருந்து தேர்வு செய்யலாம்.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் தனது முதல் மின்சார வாகனமான இ-விட்டாரா மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. BaaS (பேட்டரி ஒரு சேவையாக) உடன் ரூ. 10.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும் இ-விட்டாரா நெக்சா டீலர்ஷிப்கள் மூலம் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும்.

    புதிய இ-விட்டாரா - 48.8kWh மற்றும் 61.1kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. இரண்டு யூனிட்களும் ஒவ்வொன்றும் ஒரு மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை ஒரு முறை சார்ஜ் செய்தால் முறையே 440 கிலோமீட்டர் மற்றும் 543 கிலோமீட்டர் வரை செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

    வேரியண்ட்களை பொறுத்தவரை, 2026 மாருதி சுசுகி இ-விட்டாரா மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவை டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்பா என அழைக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் புதிய இ-விட்டாரா மாடலை பத்து வண்ணங்களில் இருந்து தேர்வு செய்யலாம். அவற்றில் Opulent Red, Bluish Black, Arctic White, Grandeur Grey, Splendid Silver, Nexa Blue, மற்றும் Land Breeze Green, Splendid Silver, Opulent Red, மற்றும் Arctic White உள்ளிட்ட டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் Bluish Black ரூஃப் உடன் வருகின்றன.

    மாருதி இ-விட்டாரா மாடலின் முக்கிய அம்சங்களில் எல்இடி டிஆர்எல்-கள், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், 18-இன்ச் அலாய் வீல்கள், லெவல் 2 ADAS, 360-டிகிரி கேமரா, மின்சார சன்ரூஃப், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், 10-வழிகளில் பவர்-அட்ஜஸ்ட் வசதி கொண்ட டிரைவர் இருக்கை, வயர்லெஸ் மொபைல் சார்ஜர், டிரைவ் மோடுகள், சுசுகி கனெக்ட், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், டூயல் 10-இன்ச் ஸ்கிரீன்கள் மற்றும் ஏழு ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும்.

    • ஜீப் மெரிடியன் டிராக் எடிஷனில் பல காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
    • டிராக் எடிஷன் மாடலிலும் 2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஜீப் இந்தியா நிறுவனம், மெரிடியன் SUV-யின் புதிய டிராக் எடிஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் AT வேரியண்ட் விலை ரூ. 35.95 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கி AT 4x4 வெர்ஷன் ரூ. 37.82 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். இந்த புதிய எடிஷன் ஓவர்லேண்ட் வேரியண்ட்-ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்த மாடலில் பல காஸ்மெடிக் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.

    மெரிடியன் டிராக் எடிஷனின் கிரில்லில் பியானோ பிளாக் அக்சென்ட்கள், வெளிப்புற பேட்ஜ்கள் மற்றும் பாடி மோல்டிங்ஸ் உள்ளன. இது 18-இன்ச் டயமண்ட்-கட் அலாய் வீல்கள், நியூட்ரல் கிரே ஹைலைட்களுடன் கூடிய டார்க் எஸ்பிரெசோ கிரில், சிக்னேச்சர் டிராக் எடிஷன் ஹூட் டீக்கல் மற்றும் டிராக் எடிஷன் இன்சிக்னியா ஆகியவற்றை கொண்டுள்ளது.

    டிராக் எடிஷனின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதியை மேம்படுத்தும் புதிய 140மிமீ ஸ்லைடிங் இரண்டாவது வரிசை இருக்கை ஆகும். கேபினில் இப்போது சூட் இன்சர்ட்களுடன் டூயல்-டோன் டூபெலோ தீம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, ஸ்டீயரிங் வீலில் கார்டினா லெதர் ஃபினிஷ் மற்றும் கான்ட்ராஸ்ட் ஸ்டிட்ச் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

    இயந்திர ரீதியாக, ஜீப் மெரிடியன் டிராக் எடிஷன் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட 2.0 லிட்டர் டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த என்ஜின் 170 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் FWD மற்றும் AWD டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    • மஜெஸ்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டுவின்-டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • மஜெஸ்டர் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    எம்ஜி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மஜெஸ்டர் மாடலின் விலை விவரங்கள் ஏப்ரல் மாத வாக்கில் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், புதிய கார் பற்றிய விவரங்களை எம்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி புதிய எம்ஜி மஜெஸ்டர் எஸ்யூவி- கான்க்ரீட் கிரே, மெட்டல் ஆஷ், பியர்ல் வைட் மற்றும் மெட்டல் பிளாக் என நான்குவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் வாடிக்கையாளர்கள் ஷார்ப் மற்றும் சேவி என இரு வேரியண்ட்களில் ஒன்றை தேர்வு செய்யும் வசதி வழங்கப்படுகிறது.

    2026 எம்ஜி மஜெஸ்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டுவின்-டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 213 ஹெச்பி பவர், 478 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், மற்றும் ஆப்ஷனல் 4x4 சிஸ்டம் வழங்கப்படுகிறது.

    முற்றிலும் புதிய எம்ஜி மஜெஸ்டர் மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த எஸ்யூவி-க்கான முன்பதிவு கட்டணம் ரூ. 41,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் புதிய மஜெஸ்டர் மாடல் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர், ஸ்கோடா கோடியக் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஃபோக்ஸ்வேகன் டெய்ரான் உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
    • பாதுகாப்பு அம்சங்களால் இளம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

    இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி, தனது அரீனா ஃபிளாக்ஷிப் தயாரிப்பான விக்டோரிஸ் SUV-ஐ செப்டம்பர் 2025-ல் அறிமுகப்படுத்தியது. அறிமுகமானது முதல் இந்த மாடல் அபார வரவேற்பை பெற்று, இந்திய கார் ஆஃப் தி இயர் (ICOTY) விருதை வென்றது.

    மேலும், நிறுவனத்தின் விற்பனை அட்டவணையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த சாதனையின் மூலம், வெளியான ஐந்தே மாதங்களுக்குள் விக்டோரிஸ் மாடல் 50,000 யூனிட்கள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. இது இந்திய SUV சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.

    கிராண்ட் விட்டாரா SUV-ஐ அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விக்டோரிஸ், இந்திய சந்தையில் ரூ.10.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், CNG மற்றும் ஹைபிரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்கள் உள்ளிட்ட ஆறு வேரியண்ட்களில் வருகிறது. இந்த மாடல் நவீன வடிவமைப்பு, சிறந்த எரிபொருள் திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களால் இளம் வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

    இதன் ஹைப்ரிட் வேரியண்ட் சுற்றுச்சூழல் உணர்வுள்ள டிரைவர்களுக்கு சிறந்த தேர்வாக உள்ளது, இது மாருதி சுசுகியின் பசுமை இயக்கத்திற்கு பொருந்துகிறது. விற்பனை எண்ணிக்கையை பொறுத்தவரை, விக்டோரிஸ் இந்த ஆண்டை 15,240 யூனிட்கள் பதிவு செய்து வலுவாகத் தொடங்கியுள்ளது.

    அறிமுகமானதில் இருந்து ஒவ்வொரு மாதமும் 12,000 முதல் 14,000 யூனிட்கள் வரை நிலையான விற்பனையை விக்டோரிஸ் பதிவு செய்து, மாருதி சுசுகியின் சிறந்த விற்பனையான SUVகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த வெற்றி, போட்டி நிறைந்த இந்திய SUV சந்தையில் - டாடா நெக்சான், ஹூண்டாய் கிரெட்டா போன்ற மாடல்களுக்கு இடையே - விக்டோரிஸ் தனித்து நிற்க உதவியுள்ளது. 

    • புதிய எம்.பி.வி. கார் கிராவைட் வைட், சில்வர், பிளாக் மற்றும் கிரே நிற ஆப்ஷன்களில் சிக்னேச்சர் டீல் நிறத்தில் வழங்கப்படும்.
    • முன்பக்க கிரில் ஒரு குரோம் ஸ்லாட் மற்றும் பானட்டில் கிராவைட் எழுத்துக்களைப் பெறுகிறது.

    நிசான் இந்தியா நிறுவனம் கிராவைட் (Gravite) எம்.பி.வி. கார் மாடலை வருகிற 17ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாடல் ஜனவரி 21 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மார்ச் மாதத்தில் இருந்து இந்த மாடலுக்கான டெலிவரிகள் தொடங்கும் என்று நிசான் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இதன் விலை அறிவிப்பு இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக, வெளிப்புற வண்ணத் தட்டுகளைக் காட்டும் டீசரை நிசான் வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய எம்.பி.வி. கார் கிராவைட் வைட், சில்வர், பிளாக் மற்றும் கிரே நிற ஆப்ஷன்களில் சிக்னேச்சர் டீல் நிறத்தில் வழங்கப்படும்.

     

    முன்னர் பகிரப்பட்ட வடிவமைப்பு வரைபடங்கள் ஸ்டைலிங் பற்றிய தெளிவான பார்வையை தருகின்றன. இந்த எம்.பி.வி. ஹெட்லேம்ப் கிளஸ்டர்களுக்குள் ஒருங்கிணைக்கப்பட்ட கிடைமட்டமாக நிலைநிறுத்தப்பட்ட எல்இடி டிஆர்எல்-களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் முன்பக்க கிரில் ஒரு குரோம் ஸ்லாட் மற்றும் பானட்டில் கிராவைட் எழுத்துக்களைப் பெறுகிறது.

    கிராவைட் ரெனால்ட் ட்ரைபரை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இது மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் இணைக்கப்பட்ட அதே 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை பயன்படுத்தும். அம்சங்கள் மற்றும் வேரியண்ட் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியீட்டின் போது தெரியவரும்.

    • இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு DSG ஆட்டோமடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • உட்புறம் பெரிய 15-இன்ச் மிதக்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல் டிஜிட்டல் கேபின் கொண்டுள்ளது.

    ஃபோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம், புதிய டெய்ரான் ஆர்-லைன் எஸ்யூவியை இந்திய சந்தைக்காக வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் முதன்மை சலுகையாக நிலைநிறுத்தப்பட்டுள்ள டெய்ரான், ஃபோக்ஸ்வாகனின் எஸ்யூவி போர்ட்ஃபோலியோவில் முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த மாடல் செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் கவர்ச்சி ஆகியவற்றில் வலுவான கவனம் செலுத்துகிறது.

    டெய்ரான் ஆர்-லைனின் மாடலில் 2.0 லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் என்ஜின் உள்ளது, இது 201hp பவர், 320Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு DSG ஆட்டோமடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஃபோக்ஸ்வாகனின் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் வருகிறது.

    வடிவமைப்பைப் பொறுத்தவரை, டெய்ரான் ஆர்-லைன், ஆர்-லைன் குறிப்பிட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள், கிரில் மற்றும் கதவுகளில் தனித்துவமான பேட்ஜிங் மற்றும் 19-இன்ச் டயமண்ட் கட் அலாய் வீல்கள் போன்ற பிரத்யேக ஸ்போர்ட்டி கூறுகளை கொண்டுள்ளது. இது டைனமிக் கார்னரிங் செயல்பாட்டுடன் கூடிய HD மேட்ரிக்ஸ் LED ஹெட்லேம்ப்கள், முன் மற்றும் பின்புறத்தில் ஒளிரும் ஃபோக்ஸ்வாகன் லோகோ மற்றும் லைட்டிங் சிக்னேச்சர்களுடன் LED டெயில் லேம்ப்களையும் பெறுகிறது.

    உட்புறம் பெரிய 15-இன்ச் மிதக்கும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஃபுல் டிஜிட்டல் கேபின் கொண்டுள்ளது. வென்டிலேஷன், மெமரி மற்றும் மசாஜ் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், 3-ஜோன் கிளைமேட் கண்ட்ரோ், பனோரமிக் சன்ரூஃப், 30-வண்ண சரவுண்ட் லைட்கள், 11 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும்.

    இத்துடன் லெவல் 2 ADAS சூட், சென்ட்ரல் ஏர்பேக் உட்பட ஒன்பது ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா மற்றும் பார்க் அசிஸ்ட் பிளஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

    செயல்திறன், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் பிரீமியம் நிலைப்படுத்தல் ஆகியவற்றின் கலவையுடன், ஃபோக்ஸ்வாகன் டெய்ரான் ஆர்-லைன் ஃபுல் சைஸ் எஸ்யூவி பிரிவில் ஸ்கோடா கோடியாக், டொயோட்டா ஃபார்ச்சூனர், MG குளோஸ்டர் மற்றும் ஜீப் மெரிடியன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலின் வெளியீடு மற்றும் விலை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டாங்கோ ரெட், எவரெஸ்ட் ஒயிட், ஸ்டீல் பிளாக் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கும்.
    • சி-பில்லரில் ஸ்டார் எடிஷன் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.

    மஹிந்திரா நிறுவனம் தார் எஸ்யூவி வரிசையில் புதிய தார் ராக்ஸ் ஸ்டார் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் 177 எச்பி பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 175 எச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வேரியண்ட்களில் கிடைக்கும்.

    இதன் பெட்ரோல் வேரியண்டில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மட்டும் உள்ளது. AX7L வேரியண்ட் அடிப்படையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. பளபளப்பான கருப்பு வண்ண கிரில்கள், அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த கார் டாங்கோ ரெட், எவரெஸ்ட் ஒயிட், ஸ்டீல் பிளாக் ஆகிய வண்ணங்களிலும் கிடைக்கும். இதன் சி-பில்லரில் ஸ்டார் எடிஷன் பேட்ஜ் இடம்பெற்றுள்ளது.

    எல்இடி லைட்டுகள், 10.25 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்பிளே மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. முன்புறம் வென்டிலேட்டெட் சீட்கள், 360 டிகிரி கேமரா, பனோரமிக் சன்ரூப், 9 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

    இந்திய சந்தையில் புதிய தார் ராக்ஸ் ஸ்டார் எடிஷன் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ரூ.17.85 லட்சம், டீசல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ரூ.16.85 லட்சம் மற்றும் டீசல் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் சுமார் 18.35 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இது 160bhp பவர், 280Nm டார்க் உற்பத்தி செய்கிறது.
    • இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் DCT யூனிட் வழங்கப்படுகிறது.

    ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டஸ்டர் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமானது. புதிய தலைமுறை டஸ்டர் மாடல் புதிய வடிவமைப்பு, மிகப்பெரிய அளவிலான உட்புற மாற்றங்கள் மற்றும் புதிய பவர்டிரெய்ன்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்த காருக்கான முன்பதிவுகள் இப்போது ரூ. 21,000-க்கு செய்யப்படுகின்றன. மேலும் இந்த முன்பதிவுகளுக்கு முன்னுரிமை டெலிவரி, சிறப்பு அறிமுக விலைகள் மற்றும் இலவச 'கேங் ஆஃப் டஸ்டர்' போன்ற சலுகைகள் கிடைக்கும். காரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து, புதிய டஸ்டர் உருவாக்கப்படுவதைக் காணும் வாய்ப்பும் உள்ளது.

    2026 டஸ்டரின் வெளிப்புற சிறப்பம்சங்களில் ஒருங்கிணைந்த LED DRLகளுடன் கூடிய செவ்வக LED ஹெட்லேம்ப்கள், கிரில்லில் டஸ்டர் எழுத்துக்கள், முன் மற்றும் பின்புறத்தில் ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட்டுகள், முன் பம்பரின் இருபுறமும் ஏர் வென்ட்கள், சுற்றிலும் பிளாக் பிளாஸ்டிக் ஃபினிஷ், இடையில் இயங்கும் LED லைட் பார் கொண்ட C-வடிவ LED டெயில்-லைட்கள், ஒருங்கிணைந்த பின்புற ஸ்பாய்லர், பின்புற வைப்பர் மற்றும் வாஷர், டெயில்கேட்டுக்கான பிளாக்-இன்சர்ட் மற்றும் ஒரு ஷார்க்-ஃபின் ஆண்டெனா ஆகியவை அடங்கும்.

    இத்துடன் ORVMகள், B மற்றும் C-பில்லர்கள், ரூஃப் ரெயில்கள் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றிற்கான கருப்பு நிற பூச்சும் வழங்கப்படுகிறது. ஜேட் மவுண்டெயின் கிரீன், பியர்ல் ஒயிட், மூன்லைட் சில்வர், ஸ்டெல்த் பிளாக், ரிவர் புளூ மற்றும் சன்செட் ரெட் ஆகிய ஆறு வண்ணங்கள் வழங்கப்படுகின்றன. இவைதவிர டூயல் டோன் ஆப்ஷன்களும் வழங்கப்பட உள்ளன.

    புதிய ரெனால்ட் டஸ்டரின் உட்புறத்தில் பியானோ பிளாக் இன்சர்ட்களுடன் கூடிய புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டேஷ்போர்டில் டூயல் ஸ்கிரீன் செட்டப், சரவுண்ட் லைட்கள், டைப்-சி சார்ஜிங் போர்ட், ஆட்டோ-ஹோல்டுடன் கூடிய EPB, பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் ஒரு ஃபாக்ஸ் கார்பன் ஃபைபர் ஃபினிஷ் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மற்ற இடங்களில், இது டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி, டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், இயங்கும் முன் இருக்கைகள், சரிசெய்யக்கூடிய முன் ஆர்ம்ரெஸ்ட், பவர்டு டெயில்கேட், 60:40 ஸ்பிளிட் பின்புற இருக்கைகள், ஆர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம், 360-டிகிரி கேமரா, ஆறு ஏர்பேக்குகள் மற்றும் லெவல் 2 ADAS ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

     

    அடுத்த தலைமுறை டஸ்டர் மாடல் 1.8 லிட்டர், 4-சிலிண்டர், டைரக்ட் இன்ஜெக்ஷன் பெட்ரோல் என்ஜின், டூயல் எலக்ட்ரிக் மோட்டார்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 160bhp பவர், 172Nm டார்க் வெளிப்படுத்தும். இத்துடன் 1.3 லிட்டர், 4-சிலிண்டர், டர்போ-பெட்ரோல், டைரக்ட் இன்ஜெக்ஷன் மோட்டார் வழங்கப்படுகிறது. இது 160bhp பவர், 280Nm டார்க் உற்பத்தி செய்கிறது.

    இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் DCT யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றுடன் 1.0 லிட்டர், 3-சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 100bhp பவர், 160Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. புதிய டஸ்டர் மாடலின் விலைகள் மார்ச் 2026-இல் அறிவிக்கப்பட உள்ளன.

    • ஐந்து டூயல்-டோன்ஆப்ஷன்களும் கான்ட்ராஸ்ட் பின்க் ரூஃப் பெறுகின்றன.
    • இந்த பிரிவில் முதல் முறையாக பின்புற இருக்கை மசாஜ் செயல்பாடும் வழங்கப்படுகிறது.

    இந்த வார தொடக்கத்தில், ஸ்கோடா ஆட்டோ இந்தியா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் மாடலை வெளியிட்டது, அதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கி உள்ளன. ஸ்கோடா நிறுவனம் புதிய ஃபேஸ் லிஃப்ட் விலைகளை அறிவிக்காத நிலையில், காரை முன்பதிவு செய்யும் போது கிடைக்கும் ஆப்ஷன்களை பார்ப்போம்.

    2026 குஷாக் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கும். கிளாசிக்+, சிக்னேச்சர், ஸ்போர்ட்லைன், பிரெஸ்டீஜ் மற்றும் மான்டே கார்லோ. இந்த கார் சிம்லா கிரீன், செர்ரி ரெட், ஸ்டீல் கிரே, பிரில்லியண்ட் சில்வர், கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல், டீப் பிளாக் மற்றும் லாவா புளூ உள்ளிட்ட மோனோ-டோன் விருப்பங்களுடன் 13 வண்ணங்களில் கிடைக்கும். சிம்லா கிரீன், செர்ரி ரெட், ஸ்டீல் கிரே, கேண்டி ஒயிட் மற்றும் பிரில்லியண்ட் சில்வர் ஆகிய ஐந்து டூயல்-டோன்ஆப்ஷன்களும் கான்ட்ராஸ்ட் பின்க் ரூஃப் பெறுகின்றன.

    அம்சங்களைப் பொறுத்தவரை, புதிய ஸ்கோடா குஷாக், எலெக்ட்ரிக் சன்ரூஃப், முழு LED விளக்குகள், தொடர்ச்சியான டர்ன் இண்டிகேட்டர்கள், ஆறு ஏர்பேக்குகள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், அலாய் வீல்கள் மற்றும் விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் (புதிய) 8-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது. மேலும் இந்த பிரிவில் முதல் முறையாக பின்புற இருக்கை மசாஜ் செயல்பாடும் வழங்கப்படுகிறது.

    • ஒற்றை டர்போ மற்றும் இரட்டை-டர்போ போர்வையில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 2.0-லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது.
    • வேரியண்டை பொறுத்து, இந்த எஸ்யூவி 4X2 மற்றும் 4x4 டிரைவ் ட்ரெயின்களுக்கான ஆப்ஷனை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஒருவழியாக தனது Majestor எஸ்யூவி-க்கான வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் புதிய Majestor பிப்ரவரி 12ஆம் தேதி அறிமுகமாகும் என்று எம்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய Majestor மாடல் 2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ நிகழ்வில் இந்தியாவில் அறிமுகமானது. இந்த எஸ்யூவி டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாகவும், குளோஸ்டர் (Gloster) எஸ்யூவி-க்கு மிக பிரீமியம் மாற்றாகவும் நிலைநிறுத்தப்படும்.

    வடிவமைப்பைப் பொறுத்தவரை, Majestor ஒரு பெரிய பாக்ஸ் வடிவ எஸ்யூவி-ஆக தோன்றுகிறது, இது செவ்வக வடிவ கிரில் கொண்டிருக்கிறது. இந்த எஸ்யூவி பொனட்டின் அடிப்பகுதியில் எல்இடி டே-டைம் ரன்னிங் லைட்கள் மற்றும் பம்பரில் கீழே நிலைநிறுத்தப்பட்ட செங்குத்தாக ஹெட்லேம்ப்களுடன் ஒரு ஸ்பிலிட் ஹெட்லேம்ப் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. Majestor சாயல் குளோஸ்டரை போலவே தோன்றுகிறது, இது ஒரு ஷோல்டர் லைன் கொண்டுள்ளது, சக்கர வளைவுகளை சுற்றியும் கதவுகளுக்கு அடியிலும் கிளாடிங் உள்ளது.

    பின்புறத்தில், Majestor புதிய கனெக்கடெட் டெயில் லேம்ப் அமைப்பைப் பெறுகிறது. ஒட்டுமொத்தமாக, வடிவமைப்பு உலகளாவிய சந்தைகளில் விற்கப்படும் மேக்ஸஸ் D90 மாடலிலிருந்து அதிக அளவில் மாறவில்லை.

     

    எம்ஜி இந்தியா, Majestor-இன் கேபினைப் பற்றிய ஒரு பார்வையை ஒருபோதும் வழங்கவில்லை. இதில் டேஷ்போர்டில் மென்மையான-தொடு பொருட்கள் பயன்படுத்தப்படும், முன் இருக்கை பயணிகளுக்கான டேஷ்போர்டில் ஒரு கிராப் ஹேண்டில் மற்றும் ஏர்-கண்டிஷன் வென்ட்களின் மேல் அமர்ந்திருக்கும் ஒரு ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Majestor-இலும் Gloster-ஐ போலவே மூன்று வரிசை இருக்கைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பவர்டிரெயினை பொருத்தவரை, எம்ஜிMajestor அதன் ரன்னிங் கியரை குளோஸ்டருடன் பகிர்ந்து கொள்ளலாம், ஒற்றை டர்போ மற்றும் இரட்டை-டர்போ போர்வையில் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட 2.0-லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. வேரியண்டை பொறுத்து, இந்த எஸ்யூவி 4X2 மற்றும் 4x4 டிரைவ் ட்ரெயின்களுக்கான ஆப்ஷனை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

    • இரு வேரியண்ட்களைப் பொறுத்து, அனைத்து இருக்கைகளும் இடத்தில் இருக்கும்போது பொருட்களின் கொள்ளளவு 435 லிட்டர் முதல் 1,303 லிட்டர் வரை இருக்கும்.
    • பொது சார்ஜிங் நிலையங்களில் எளிதாக அணுகுவதற்காக சார்ஜிங் போர்ட் முன்புறத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    பிரஸ்ஸல்ஸ் மோட்டார் ஷோவில் ஹூண்டாய் நிறுவனம் தனது ஸ்டாரியா MPV முழு-மின்சார மாடலை வெளியிட்டது. ஸ்டாரியா எலெக்ட்ரிக் என்று அழைக்கப்படும் இது, ஹூண்டாயின் முதல் முழுமையான மின்சார மறு செய்கையைக் குறிக்கிறது. மேலும் 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் கொரியா மற்றும் ஐரோப்பாவில் விற்பனைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. பிற உலகளாவிய சந்தைகளிலும் இந்த மாடல் பின்னர் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த EV, முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட 84kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. இது 215hp பவர் மற்றும் 350Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த ஹூண்டாய் கார் முழு சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என WLTP மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த MPV மாடல் 800-வோல்ட் மின்சார கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. இது 20 நிமிடங்களில் 10இல் இருந்து 80 சதவீதம் வரையிலான DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை செயல்படுத்துகிறது. 11kW AC ஆன்போர்டு சார்ஜரும் வழங்கப்படுகிறது.

    அமைப்பைப் பொறுத்தவரை, ஸ்டாரியா எலெக்ட்ரிக் ICE-இயங்கும் மாடலின் நீண்ட, பெட்டி விகிதாச்சாரத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. ஹூண்டாய் மின்சார MPVயை இரண்டு இருக்கை அமைப்புகளில் வழங்கும். ஏழு இருக்கைகள் கொண்ட சொகுசு வேரியண்ட் மற்றும் ஒன்பது இருக்கைகள் கொண்ட வேகன் மாடல். இரு வேரியண்ட்களைப் பொறுத்து, அனைத்து இருக்கைகளும் இடத்தில் இருக்கும்போது பொருட்களின் கொள்ளளவு 435 லிட்டர் முதல் 1,303 லிட்டர் வரை இருக்கும்.

    ICE ஸ்டாரியாவின் வடிவமைப்பு மாற்றங்களில் மூடிய-முன் பகுதி, EV-க்கு ஏற்ற விவரங்கள் மற்றும் கிடைமட்ட LED லைட்டிங் ஆகியவை அடங்கும். பொது சார்ஜிங் நிலையங்களில் எளிதாக அணுகுவதற்காக சார்ஜிங் போர்ட் முன்புறத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

    உள்புறம், டேஷ்போர்டில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான இரட்டை 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் உள்ளன, இது ஹூண்டாயின் சமீபத்திய ccNC மென்பொருளை ஓவர்-தி-ஏர் அப்டேட் திறனுடன் இயக்குகிறது. அடிக்கடி பயன்படுத்தப்படும் செயல்பாடுகளுக்கு பொத்தான்கள் உள்ளன.

    ஐரோப்பிய மற்றும் கொரிய நாடுகளில் கார்கள் விற்பனைக்கு கிடைப்பதை ஹூண்டாய் உறுதி செய்திருந்தாலும், இந்தியாவில் இந்த மாடலின் அறிமுகம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. பெரிய MPV-கள் மற்றும் EV சார்ஜிங் உள்கட்டமைப்பு கட்டுப்பாடுகள் குறைவாக இருப்பதால், இந்திய சந்தைக்கான அதன் வாய்ப்புகள் இந்த கட்டத்தில் நிச்சயமற்றதாகவே உள்ளன.

    ×