என் மலர்
பைக்
- பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்சர் 125 புது வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புது வேரியண்ட் பல்சர் 125 சிங்கில் சீட் மற்றும் ஸ்ப்லிட் சீட் வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 125 கார்பன் ஃபைபர் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய கார்பன் எடிஷன் சிங்கில் சீட் மற்றும் ஸ்ப்லிட் சீட் என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. இந்த மாடல் புளூ மற்றும் ரெட் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.
புதிய பஜாஜ் பல்சர் 125 கார்பன் ஃபைபர் எடிஷன் சிங்கில் சீட் விலை ரூ. 89 ஆயிரத்து 254 என்றும் ஸ்ப்லிட் சீட் வெர்ஷன் விலை ரூ. 91 ஆயிரத்து 642 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரண்டு வித நிறங்களிலும் பிளாக் பேஸ் நிறமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லைட் கௌல், பியூவல் டேன்க் மற்றும் ஷிரவுட்கள், என்ஜின் கௌல், ரியல் பேனல், வீல் ஸ்டிரைப் உள்ளிட்டவைகளில் கிராபிக்ஸ் உள்ளது.

கார்பன் ஃபைபர் கிராபிக்ஸ் பெல்லி பேன், முன்புற ஃபெண்டர், டேன்க், ரியர் கௌல் உள்ளிட்டவைகளில் இடம்பெற்று இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைனில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் சிங்கில்-பாட் ஹெட்லைட், ட்வின் டிஆர்எல்கள், மஸ்குலர் ஃபியூவல் டேன்க், போல்டெட் ஷிரவுட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
மெக்கானிக்கல் அம்சங்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாடலிலும் 124.4சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.64 ஹெச்பி பவர், 10.80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
- பிஎம்டபிள்யூ நிறுவனம் முற்றிலும் புதிய R 1250 RS மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்த மாடலில் 136ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 1254சிசி பாக்சர் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் 2023 R 1250 RS ஸ்போர்ட்ஸ் டூரர் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2023 பிஎம்டபிள்யூ R 1250 RS மாடலில் புதிய ஸ்டாண்டர்டு அம்சங்கள், விரும்புவோர் தேர்வு செய்யும் வகையில் கூடுதல் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை ஸ்போர்ட்ஸ் டூரர் மாடலின் திறன்களை மேம்படுத்தும்.
மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை புதிய பிஎம்டபிள்யூ R 1250 RS மாடலில் யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் 1254சிசி, ட்வின் சிலிண்டர் பாக்சர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 136 ஹெச்பி பவர், 143 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ ஷிப்ட்கேம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

எலெக்ட்ரிக் பிரிவில் டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோல், புதிய "Eco" டிரைவிங் மோட் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர பிஎம்டபிள்யூ இண்டெக்ரல் ஏபிஎஸ் ப்ரோ, டைனமிக் பிரேக் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஃபுல் எல்இடி லைட்டிங், கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, யுஎஸ்பி சாக்கெட் மற்றும் இண்டெலிஜண்ட் எமர்ஜன்சி கால் வசதி உள்ளது.
ரைடிங் மோட்ஸ் ப்ரோ மற்றும் ரைடிங் மோட் பிரீசெலக்ஷன், என்ஜின் டிரேக் கண்ட்ரோல், ஹீடெட் சீட்கள், டியூப் ஹேண்டில்பார்கள் ஆப்ஷனல் உபகரணங்களாக வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மெல்லிய ட்வின் பாட் ஹெட்லைட், ஃபுல் ஃபேரிங், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன், ஸ்ப்லிட்-ஸ்டைல் சீட், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக இந்த மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
- ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய 100சிசி பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- புதிய 100சிசி பைக் ஹீரோ ஸ்பிலெண்டர் மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக விற்பனைக்கு வருகிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய புது பைக் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை உருவாக்கி வருகிறது. இந்த வரிசையில் ஹோண்டாவின் புதிய கம்யுட்டர் ரக மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹோண்டாவின் புதிய 100சிசி பைக் பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக வெளியாகி வருகின்றன. இந்த மாடல் ஹீரோ ஸ்பிலெண்டருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய ஹோண்டா 100சிசி பைக் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என்றும் இது மிக குறைந்த விலையில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் 100சிசி பைக் விலை ரூ. 75 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இது நம்பத்தகுந்த கம்யுட்டர் ரக மோட்டார்சைக்கிள் ஆக இருக்கும். இந்த பைக் அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற டிசைன் மற்றும் குறைந்த எடை கொண்டிருக்கும்.
இதில் கன்வென்ஷனல் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன் செட்டப், பின்புறம் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படும். பிரேக்கிங்கிற்கு இருபுறமும் டிரம் பிரேக் மற்றும் கம்பைன்டு பிரேக்கிங் செட்டப் வழங்கப்படலாம். புது 100சிசி மோட்டார்சைக்கிள் வெளியீடு மட்டுமின்றி இந்திய சந்தையில் தனது விற்பனையகங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ஹோண்டா திட்டமிட்டு வருகிறது.
ஊரக பகுதிகளில் 11 புதிய டச்பாயிண்ட்களை சமீபத்தில் துவங்கிய ஹோண்டா, நகர்ப்புறங்களில் 119 கூடுதல் விற்பனை டீலர்களை நியமனம் செய்துள்ளது. இது மட்டுமின்றி 10 பெஸ்ட் டீல் அவுட்லெட்கள், 239 அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையங்களை ஹோண்டா திறந்து வைத்துள்ளது.
- அமேசான் நிறுவனம் டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது.
- கூட்டணியின் அங்கமாக ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அமேசான் தனது டெலிவரி பணிகளுக்காக பயன்படுத்த இருக்கிறது.
அமேசான் இந்தியா மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் இடையே புது கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தத்தின் படி அமேசான் இந்தியா நிறுவனம் டிவிஎஸ் நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டெலிவரி பணிகளில் பயன்படுத்த இருக்கிறது.
இந்திய சாலைகளில் 2025 வாக்கில் 10 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த ஒப்பந்தம் மூலம் திட்டத்தை செயல்படுத்த அமேசான் முடிவு செய்துள்ளது. எனினும், டெலிவரிக்கு பயன்படுத்தப்பட இருக்கும் ஐகியூப் மாடல்களின் சரியான வேரியண்ட் எது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

டெலிவரி பணிகளுக்கு பயன்படுத்தப்பட இருப்பதால் அமேசான் நிறுவனம் எண்ட்ரி லெவல் ஐகியூப் மாடலை வாங்கலாம் என கூறப்படுகிறது. டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு ஸ்கூட்டரில் உள்ள எல்லா வசதிகளும் பயன்தராது. எனினும், இவ்வாறு செய்யும் போது ரேன்ஜ் மற்றும் சார்ஜிங் நேரம் உள்ளிட்டவை கவலை அளிக்கும் பிரச்சினையாக இருக்கும்.
இதனை எதிர்கொள்ள டிவிஎஸ் நிறுவனம் அமேசானுக்காக அதிக ரேன்ஜ் மற்றும் செயல்திறன் வழங்கும் ஐகியூப் வேரியண்டை உருவாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகி இருக்கும் ஒப்பந்தம் காரணமாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு மேலும் அதிகரிக்க செய்யும் என்றே தெரிகிறது.
- கவாசகி நிறுவனத்தின் புதிய KX250 மோட்டார்சைக்கிள் லைம் கிரீன் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.
- புதிய கவாசகி டர்ட் பைக் பொது சாலைகளில் பயன்படுத்த அனுமதியில்லை என்பதால், இதனை பதிவு செய்ய வேண்டாம்.
இந்தியா கவாசகி மோட்டார் நிறுவனம் 2023 KX250 டர்ட் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கவாசகி KX250 விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2023 கவாசகி KX250 டர்ட் மாடல் பந்தய களத்துக்கான மாடல் என்பதால், இதனை பொது சாலைகளில் பயன்படுத்த அனுமதி இல்லை. இதன் காரணமாக இந்த பைக்கை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
KX250 2023 மாடலில் ஏராளமான அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதன் செயல்திறன் முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் KX250 இதுவரை வெளியான மாடல்களை விட அதிக சக்திவாய்ந்த என்ஜின் கொண்டிருக்கிறது. புதிய கவாசகி KX250 மாடல் லைம் கிரீன் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இது முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது.

2023 கவாசகி KX250 மாடலில் 249சிசி, லிக்விட் கூல்டு, நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினில் ஃபிங்கர்-ஃபாலோவர் வால்வு ஆக்டுவேஷன், இண்டேக் மற்றும் எக்சாஸ்ட் போர்ட்களில் ரிவைஸ்டு பிராசஸிங் உள்ளது. இதில் ரிவைஸ்டு கிரான்க்-கேஸ் டிசைன் மற்றும் ஹைட்ராலிக் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய KX250 மாடலில் புதிய கியரிங், ரிவைஸ்டு சஸ்பென்ஷன் செட்டிங் மற்றும் புதிய டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இவை தவிர புது மாடலில் குறைந்த எடை மற்றும் அகலமான ஃபூட்பெக், நீண்ட எக்சாஸ்ட் ஹெடர் பைப், மேம்பட்ட இக்னிஷன் டைமிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள என்ஜின் லான்ச் கண்ட்ரோல் மற்றும் மூன்று என்ஜின் மேப் சாய்ஸ் கொண்டுள்ளது.
- ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மீடியோர் 650 விவரங்கள் வெளியாகி உள்ளது.
- புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் மூன்று வித வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மிடில் வெயிட் குரூயிசர், சூப்பர் மீடியோர் 650 மாடல் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் நடைபெற்று வரும் 2022 EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் GT 650 போன்ற மாடல்களை போன்ற பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சூப்பர் மீடியோர் 650 மாடல் 1500mm அளவில் வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இதன் டிசைன் மீடியோர் 350 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த மாடல் அதிக பிரீமியம் தோற்றம் கொண்டிருக்கிறது. ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் என இரண்டு வித வேரியண்ட்களில் இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் ஸ்டாண்டர்டு மாடல் ஐந்து நிறங்களிலும், டூரர் மாடல் இரண்டு வித நிறங்களிலும் கிடைக்கிறது.

இத்துடன் டூரர் மாடலில் ஏராளமான சவுகரிய வசதிகள், உயரமான விண்ட்-ஸ்கிரீன், பில்லியன் பேக்ரெஸ்ட், டூயல் சீட்கள், பேனியர்கள், டூரிங் ஹேண்டில்பார் மற்றும் பெரிய பூட்பெக் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலிலும் 648சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் தான் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 46.2 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
புதிய சூப்பர் மீடியோர் 650 மாடலில் 19-16 இன்ச் அலாய் வீல்கள், 43mm அப்சைடு-டவுன் போர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 320mm டிஸ்க், பின்புறத்தில் 300mm ரோடோடார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் S1 சீரிசில் மூன்று ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தமிழ் நாட்டின் கிருஷ்னகிரி மாவட்டத்தில் உள்ள பியூச்சர்பேக்டரி ஆலையில் இருந்து 1 லட்சமாவது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டு உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த ஆலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வந்தது.
தற்போது ஒரு லட்சம் யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், அடுத்த ஒரு லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்ய பாதி நேரமோ போதுமானது என ஒலா எலெக்ட்ரிக் நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மோகம் தொடர்ந்து அதிகரித்து வருவதும் இதற்கு காரணம் ஆகும்.

பண்டிகை காலக்கட்டத்தில் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை அதிக வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. அக்டோபர் 2022 மாதத்தில் மட்டும் ஒலா எலெக்ட்ரிக் வாகன விற்பனை 20 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. இதன் மூலம் மாதாந்திர விற்பனை 60 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
மேலும் இந்தியாவில் தனது வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில், ஒலா S1 ஏர் பெயரில் புது ஸ்கூட்டரை ஒலா எலெக்ட்ரிக் அறிமுகம் செய்து இருக்கிறது. ஒலா S1 சீரிசில் புது வேரியண்டாக இது அமைந்துள்ளது. இந்த மாடலுக்கான முன்பதிவு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவங்குகிறது. வினியோகம் ஏப்ரல் 2023 வாக்கில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய CB500F மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- வெளியீட்டுக்கு முன் ஹோண்டா CB500F மோட்டார்சைக்கிள் பெங்களூரு பிங்விங் மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹோண்டா இந்தியா நிறுவனம் புதிய CB500F மோட்டார்சைக்கிளை பெங்களூருவில் உள்ள பிங்விங் விற்பனை மையத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறது. மோட்டார்சைக்கிள் அறிமுகமாகும் முன் அதனை விற்பனையகத்தில் காட்சிப்படுத்துவது ஹோண்டா நிறுவனத்திற்கு முதல் முறை ஆகும்.
புதிய மோட்டார்சைக்கிளை பார்க்க வருமாறு விற்பனையகம் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் புதிய மோட்டார்சைக்கிளுக்கு இந்திய சந்தையில் அதிக வரவேற்பு கிடைக்கும் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து வெளியீடு நடைபெற இருக்கிறது.

ஹோண்டா CB500F மாடலில் 471சிசி, பேரலல் ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 47 ஹெச்பி பவர், 43 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஸ்லிப்ட் மற்றும் அசிஸ்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
ஹார்டுவேரை பொருத்தவரை ஹோண்டா CB500F மாடலில் முன்புறம் 41 மில்லிமீட்டர் ஷோவா செபரேட் பன்ஷன் போர்க் பிக் பிஸ்டன், பின்புறம் மோனோ ஷாக் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கிற்கு முன்புறம் ட்வின் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறம் ஒற்றை டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
Photo Courtesy: TeamBHP
- ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.
- புதிய மோட்டார்சைக்கிளுக்கான வெளியீட்டு தேதி அடங்கிய டீசரை ராயல் என்பீல்டு வெளியிட்டு இருக்கிறது.
ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீடியோர் மோட்டார்சைக்கிளுக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் புது மோட்டார்சைக்கிள் டீசர் வெளியாகி இருக்கிறது. புதிய சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை இத்தாலியில் நடைபெற இருக்கும் 2022 EICMA நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் நவம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
EICMA நிகழ்வில் அறிமுகமாகும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஒற்றை பெரிய மோட்டார்சைக்கிள் இது ஆகும். இதே நிகழ்வில் ராயல் என்பீல்டு நிறுவனம் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 650சிசி பிரிவில் ராயல் என்பீல்டு அறிமுகம் செய்யும் முதல் மோட்டார்சைக்கிள் இது ஆகும்.

புதிய குரூயிசர் மோட்டார்சைக்கிள் இதுவரை எந்த மாடலும் அறிமுகம் செய்யப்படாத பெரிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 650சிசி பிரிவில் இண்டர்செப்டார் 650 மாடல் அதன் விலை மூலம் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இதே போன்ற வரவேற்பு சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சூப்பர் மீடியோர் 650 விலை இண்டர்செப்டார் 650 மாடலை விட அதிகமாக இருக்கும் என தெரிகிறது.
இந்திய சந்தையில் புதிய சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிள் 2022 ரைடர் மேனியா நிகழ்வின் போது அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 2022 ரைடர் மேனியா நிகழ்வு நவம்பர் 18 முதல் நவம்பர் 20 ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்வில் ராயல் என்பீல்டு வாடிக்கையாளர்கள் புதிய பைக்கை நேரில் பார்ப்பதோடு, அதனை தொட்டு அனுபவிக்க முடியும்.
Photo Courtesy: Bikewale
- யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் புளூ ஸ்கொயர் பெயரில் பிரத்யேக விற்பனை மையங்களை கட்டமைத்து வருகிறது.
- நாடு முழுக்க யமஹா புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் மூலம் சர்வதேச மாடல்களை விற்பனை செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.
இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் நாடு முழுக்க 100 புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களை கட்டமைத்துள்ளது. இந்திய சந்தையில் ரிடெயில் விற்பனையை உறுதிப்படுத்த 3s நெட்வொர்க்கை யமஹா புளூ தீமிற்குள் கொண்டு வரவும் யமஹா திட்டமிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் யமஹா சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் மாடல்களை இந்தியாவுக்கு கொண்டுவரும் என யமஹா தெரிவித்துள்ளது. எந்தெந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும், யமஹா டெனர் 700 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் ஒற்றை களமாக புளூ ஸ்கொயர் விற்பனை மையம் துவங்கப்பட்டது. யமஹாவின் ரேசிங் டிஎன்ஏவுடன் வாடிக்கையாளர்கள் இணையும் நோக்கில் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. யமஹா உருவாக்கி இருக்கும் புளூ ஸ்டிரீக்ஸ் ரைடர் குழுவில் வாடிக்கையாளர்கள் இணையவும் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் பாலமாக செயல்படுகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு புளு ஸ்கொயர் விற்பனையகமும் யமஹா நிறுவனத்தின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள்- யமஹா YZF R15M, யமஹா ஏரோக்ஸ் 155 போன்ற மாடல்களை காட்சிப்படுத்தி வருகின்றன. இத்துடன் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களில் யமஹாவின் சர்வதேச மாடல்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹயபுசா மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
- புது லிமிடெட் எடிஷன் ஹயபுசா மாடலில் ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.
சுசுகி நிறுவனம் ஹயபுசா லிமிடெட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லிமிடெட் எடிஷன் மாடல் "Bol d'Or " என அழைக்கப்படுகிறது. ஹயபுசா லிமிடெட் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாடலில் ஹயபுசாவின் பாரம்பரிய அம்சங்களுடன் புதிய பெயிண்ட் மற்றும் விசேஷ ஸ்டிக்கரிங் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹயபுசா ஸ்டாண்டர்டு மாடலுடன் ஒப்பிடும் போது புதிய மாடலில் பெரிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஃபிளாட் சேடில், ரியர் சீட் கௌல், முன்புற பிரேக் மற்றும் கிளட்ச் லீவர் அப்கிரேடு, சிறிய டெயில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலிலும் 1340 சிசி லிக்விட் கூல்டு இன்-லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அக்ரபோவிக் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் என்ஜின் கிரான்க்-கேஸ் தற்போது கார்பன் பைபர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய சுசுகி ஹயபுசா "Bol d'Or" எடிஷன் மொத்தத்தில் 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட உள்ளன. இது பிரான்ஸ் நாட்டு சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சுசுகி ஹயபுசா Bol d'Or லிமிடெட் எடிஷன் விலை 27 ஆயிரத்து 499 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 22 லட்சத்து 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் சுசுகி ஹயபுசா ஸ்டாண்டர்டு மாடலை லிமிடெட் எடிஷன் விலை அதிகம் ஆகும். இந்தியாவில் சுசுகி ஹயபுசா மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 41 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- 2023 டுகாட்டி டயவெல் V4 மோட்டார்சைக்கிளில் கிராண்டூரிஸ்மோ 1158சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய டயவெல் V4 மாடலின் ஒட்டு மொத்த எடை 223 கிலோ ஆகும்.
டுகாட்டி நிறுவனம் புதிய டயவெல் V4 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டயவெல் V4 மாடலில் ஏர் இண்டேக், எல்இடி லைட்டிங், குவாட்ருபில் மெஷின் கன் டெயில் பைப் எக்சாஸ்ட், V4 கிராண்டூரிஸ்மோ என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் உள்ள 1158சிசி V4 என்ஜின் 166 ஹெச்பி பவர், 126 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 2023 டுகாட்டி டயவெல் V4 மாடல் எடை குறைவாகவும், அதிக கச்சிதமாகவும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பராமரிப்பை பொருத்தவரை "பிக்" சர்வீஸ் செய்வதற்கான இடைவெளி 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் உள்ள டி-ஆக்டிவேஷன் சிஸ்டம் என்ஜினில் உள்ள சிலிண்டர்களை பயன்பாட்டுக்கு ஏற்ப பயன்படுத்துகிறது.

சஸ்பென்ஷனை பொருத்தவரை டுகாட்டி டயவெல் V4 மாடலில் இன்வர்ட் செய்யப்பட்ட 50mm போர்க்குகள், கன்டிலிவர் ரியர் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு சஸ்பென்ஷனையும் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு உள்ளது. பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை பிரெம்போ ஸ்டைல்மா கேலிப்பர்கள், முன்புறம் 330mm ட்வின் டிஸ்க் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய 2023 டுகாட்டி டயவெல் V4 மாடலில்- ஸ்போர்ட், டூரிங் மற்றும் அர்பன் என மூன்று விதமான டிரைவிங் மோட்கள் உள்ளன. இத்துடன் டுகாட்டி டிராக்ஷன், ஏபிஎஸ் கார்னெரிங் மற்றும் டுகாட்டி வீலி கண்ட்ரோல் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் குரூயிஸ் கண்ட்ரோல் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.






