என் மலர்tooltip icon

    பைக்

    • ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கி வரும் புதிய கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் விவரங்கள் வெளியாகி உள்ளது.
    • இந்த மாடலிலும் 349சிசி, ஜெ பிளாட்ஃபார்ம் என்ஜின் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்கனவே பயன்படுத்தி வரும் பிளாட்ஃபார்ம் மட்டுமின்றி புதிய பிளாட்ஃபார்ம்களில் ஏராளமான புது மோட்டார்சைக்கிள் மாடல்களை உருவாக்கி வருகிறது. இவற்றில் பாபர்-ஸ்டைல் மாடல் ஒன்று ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஜெ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த மோட்டார்சைக்கிள் பற்றிய முழு விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

    எனினும், இந்த மோட்டார்சைக்கிள் கிளாசிக் 350 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல் என்ற வகையில் புது பைக்கின் ஸ்டைலிங் கிளாசிக் 350 மாடலை தழுவி இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த மாடலின் மாதிரி படத்தின் படி வட்ட வடிவ ஹெட்லைட், பீக்-ஸ்டைல் எலிமண்ட் வழங்கப்படுகிறது.

    இத்துடன் நீர்-துளி வடிவ ஃபியூவல் டேன்க், ரைடருக்கான இருக்கை, ஆப்-ஹேங்கர் ஹேண்டில்பார், ரியர் ஃபெண்டர் மவுண்ட் செய்யப்பட்ட டெயில்-லைட், வயர் ஸ்போக் வீல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் ஹார்டுவேர் கிளாசிக் 350 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. அந்த வகையில், இது டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் ட்வின் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்படலாம்.

    இதன் பேஸ் மாடலில் டிரம் பிரேக் செட்டப், பிரீமியம் வேரியண்ட்களில் இருபுறமும் டிஸ்க் பிரேக் செட்டப் வழங்கப்படலாம். மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 349சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 20 ஹெச்பி பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பாபர் ஸ்டைல் மாடலின் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இங்கு அறிமுகமானதும் யெஸ்டி பாபர் மாடலுக்கு போட்டியாக அமையும். மேலும் இது புதிய ராயல் என்பீல்டு புல்லட் 350 வெளியீட்டிற்கு பின் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Photo Courtesy: bikewale

    • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை மாற்றுவதாக அறிவித்து இருக்கிறது.
    • ஹீரோ வாகனங்கள் விலை குறிப்பிட்ட தேதியில் இருந்து மாற்றப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்கள் விலை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என அறிவித்து இருக்கிறது. அதிகபட்சமாக இருசக்கர வாகனங்கள் விலை ரூ. 1500 வரை உயர்த்தப்படும் என்று ஹீரோ மோட்டோகார்ப் தெரிவித்துள்ளது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடும்.

    "உற்பத்தி மற்றும் உதிரி பாகங்களுக்கான செலவீனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. விலை உயர்வு வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில், அவர்களுக்கு நிதி சலுகை மூலம் தீர்வுகளை வழங்குவோம்," என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன மூத்த நிதி அலுவலர் நிரஞ்சன் குப்தா தெரிவித்து இருக்கிறார்.

    விலை உயர்வு தவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் எக்ஸ்பல்ஸ் 200டி 4வி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஏற்கனவே இந்த மாடலுக்கான டீசர்கள் வெளியிடப்பட்டு விட்டன. எனினும், இதற்கான வெளியீட்டு தேதி மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போதைய விலை உயர்வை தொடர்ந்து அடுத்த மாத வாக்கில் இந்த மாடல் வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 1000 சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • புதிய 1000சிசி பைக் டிசம்பர் மாத முதல் வாரத்தில் நடைபெற இருக்கும் இந்தியா பைக் வாரத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் இந்திய சந்தையில் புது மோட்டார்சைக்கிள் வெளியீட்டை உணர்த்தும் டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் புது மோட்டார்சைக்கிள் பெயர் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், டீசரில் உள்ள சிலஹவுட்டின் படி புது பைக் 2023 பிஎம்டபிள்யூ S 1000 RR மாடலாக இருக்கும் என்றே தெரிகிறது. ஏற்கனவே இந்த மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

    2023 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிக மாற்றங்களை பெற்று இருக்கிறது. டிசைனை பொருத்தவரை மெல்லிய எல்இடி ஹெட்லைட், ஃபேரிங்கில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு அதிக ஸ்டேபிலிட்டி வழங்கும் வகையில் ஏரோ பேக்கேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிதாக சேர்க்கப்பட்ட விங்லெட்கள் 10 கிலோ வரை டவுன்ஃபோர்ஸ் வழங்குகிறது.

    இதன் பின்புறம் புதிதாக உருவாக்கப்பட்டு அதிக செயல்திறன் வெளிப்படுத்துவதோடு, மேம்பட்ட அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களை கொண்டிருக்கிறது. இந்த மாடலில் 999சிசி, இன்-லைன் 4 சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிஎம்டபிள்யூ ஷிஃப்ட்கேம் உள்ளது. இது 206.5 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    எலெக்ட்ரிக் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்லைடு கண்ட்ரோல், ஏபிஎஸ் மற்றும் பிரேக் ஸ்லைட் அசிஸ்ட், நான்கு ரைடு மோட்கள், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பை-டைரெக்‌ஷனல் குயிக்‌ஷிஃப்டர், லான்ச் கண்ட்ரோல், பிட் லேன் லிமிட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. 

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் மூன்று புது நிறங்களில் கிடைக்கிறது.
    • புதிய நிறம் கொண்ட ஹிமாலயன் மாடல்களின் விலை ரூ. 2 லட்சத்து 16 ஆயிரம் என துவங்குகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஹிமாலயன் மோட்டார்சைக்கிளை மூன்று நிறங்களில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் கிலேசியர் புளூ, ஸ்லீட் பிளாக் மற்றும் டியூன் பிரவுன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 2 லட்சத்து 15 ஆயிரத்து 900, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.

    புதிய ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் டி-பாஸ்டு லோகோ மற்றும் யுஎஸ்பி போர்ட்களை கொண்டிருக்கிறது. இதன் கிளேசியர் புளூ நிற வேரியண்ட் இமய மலை பகுதிகளில் இருக்கும் அதிக தெளிவான கிளேசியர் ஏரியை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாக ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் ஸ்லீட் பேட்டனை மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறது. எனினும், இம்முறை பிளாக் வெர்ஷனில் கொண்டுவந்துள்ளது. இந்த டிசைன் பாறைகளின் மீது காணப்படும் ரேசர் ஷார்ப் க்லிஸ்டெனிங் ஸ்லீட்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஹிமாலயன் மாடலின் என்ஜினில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடலில் 411 சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 24.3 ஹெச்பி பவர், 32 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

    • அல்ட்ராவைலட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
    • புதிய அல்ட்ராவைலட் F77 மாடல் முழு சார்ஜ் செய்தால் 307 கிமீ வரை செல்லும்.

    பெங்களூரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் அல்ட்ராவைலட், இந்திய சந்தையில் ஒருவழியாக தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய அல்ட்ராவைலட் F77 மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 4 லட்சத்து 55 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    அல்ட்ராவைலட் F77 மாடல் ஸ்டாண்டர்டு, ரெக்கான் மற்றும் ஸ்பெஷல் என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. மூன்று வேரியண்ட்களிலும் ஒரே மாதிரியான டிசைன், எல்இடி ஹெட்லைட், பெரிய ஃபேரிங், ஸ்ப்லிட் சீட் செட்டப், அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அல்ட்ராவைலட் F77 ஸ்டாண்டர்டு மற்றும் ரெக்கான் வேரியண்ட்கள் சூப்பர்சோனிக் சில்வர், ஸ்டெல்த் கிரே மற்றும் பிளாஸ்மா ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. ஸ்பெஷல் வேரியண்ட் மீடியோர் கிரே + ஆஃப்டர்பர்னர் எல்லோ நிறத்தில் கிடைக்கிறது.

    இதன் ஸ்டாண்டர்டு வேரியண்டில் 27 கிலோவாட் மோட்டார், 7.1 கிலோவாட் ஹவர் பேட்டரியுடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் பைக் அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. மேலும் முழு சார்ஜ் செய்தால் 206 கிலோமீட்டர் வரை செல்லும். ரெக்கான் மற்றும் ஸ்பெஷல் வேரியண்ட்களில் முறையே 29 கிலோவாட் மற்றும் 30.2 கிலோவாட் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இரு மாடல்களுடன் 10.3 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. அல்ட்ராவைலட் F77 ரெக்கான் வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 147 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஸ்பெஷல் வேரியண்ட் மணிக்கு அதிகபட்சம் 157 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இரு வேரியண்ட்களும் முழு சார்ஜ் செய்தால் 307 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. மூன்று வேரியண்ட்களின் மோட்டார்களும் ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேமில் வைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மாடலில் 41 மில்லிமீட்டர் யுஎஸ்டி முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் பிரீலோடு அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று மாடல்களிலும் முன்புறத்தில் 320 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 230 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. அல்ட்ராவைலட் F77 மாடலில் 5 இன்ச் அளவில் TFT ஸ்கிரீன், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, அடாப்டிவ் டேஷ் லைட்னிங், ஆட்டோ ஹெட்லைட் ஆன்/ஆஃப், நேவிகேஷன், வெஹிகில் லொகேட்டர், ஃபால் மற்றும் கிராஷ் சென்சார் உள்ளது.

    முதற்கட்டமாக அல்ட்ராவைலட் F77 வினியோகம் பெங்களூருவில் துவங்குகிறது. இதைத் தொடர்ந்து மும்பை, கொச்சின், சென்னை, ஐதராபாத் என பல்வேறு நகரங்களில் படிப்படியாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் பேஸ் மாடலுக்கு 30 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி, ரெக்கான் மாடலுக்கு 50 ஆயிரம் கிலோமீட்டர்களும், ஸ்பெஷல் வேரியண்டிற்கு 1 லட்சம் கிலோமீட்டர்கள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது.

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபல இருசக்கர பிராண்டு பல்சர் தொடர்ந்து அதிக விற்பனையை பதிவு செய்து வருகிறது.
    • முற்றிலும் புதிய பல்சர் P150 மோட்டார்சைக்கிள் ஐந்து விதமான நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய பல்சர் P150 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய பல்சர் P150 மாடல் சிங்கில் டிஸ்க் மற்றும் ட்வின் டிஸ்க் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ. 1 லட்சத்து 67 ஆயிரத்து 755 என துவங்குகிறது. இதன் சிங்கில் டிஸ்க் வேரியண்ட் சிங்கில் பீஸ் சாடில், ஃபிளாட் ஹேண்டில்பார் கொண்டிருக்கிறது.

    இதன் ட்வின் டிஸ்க் வெர்ஷன் ஸ்ப்லிட் ஸ்டைல் சாடில், க்ளிப் ஆன் ஹேண்டில்பார் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 757 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய பல்சர் P150 மாடலின் ஸ்டைலிங் பல்சர் N250 மற்றும் N160 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிசைன் அம்சங்களை பொருத்தவரை டிண்ட் செய்யப்பட்ட விண்ட்ஸ்கிரீன், பாடி கலர் ஹெட்லைட் கவுல், பாடி கலர் என்ஜின் கவுல் கொண்டிருக்கிறது. ட்வின் டிஸ்க் வெர்ஷனில் ஸ்ப்லிட் ஸ்டைல் பில்லியன் கிராப் ரெயில் கொண்டிருக்கிறது.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை 149.68சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.5 ஹெச்பி பவர், 13.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலின் 90 சதவீத டார்க் பயன்படுத்தக்கூடிய RPM-இல் கிடைக்கும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்து இருக்கிறது.

    பஜாஜ் பல்சர் P150 இரண்டு வேரியண்ட்களும் - ரேசிங் ரெட், கரீபியன் புளூ, எபோனி பிளாக் ரெட், எபோனி பிளாக் புளூ மற்றும் எபோனி பிளாக் வைட் என ஐந்து வித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் முதற்கட்டமாக கொல்கத்தாவில் அறிமுகமாகி இருக்கிறது. வரும் நாட்களில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் இந்த மாடல் கிடைக்கும்.

    • உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு வரலாறு காணாத வகையில் பலமடங்கு அதிகரித்து வருகிறது.
    • இந்திய சந்தையிலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் கணிசமான வளர்ச்சியை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றன.

    தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் மேட்டர், இந்தியாவில் முதல் முறையாக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பெயர் அறிவிக்கப்படவில்லை. எனினும், இதன் விவரங்கள் மட்டும் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த மாடல் எப்போது வெளியாகும் என்ற விவரங்களும் மர்மமாகவே உள்ளது.

    மேட்டர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த மோட்டார்சைக்கிள் நேக்கட் ஸ்டைல் மற்றும் ஷார்ப் டிசைன் கொண்டிருக்கிறது. இதில் ஆங்குலர் கேசிங்கில் எல்இடி ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பாடி முழுக்க ரேஸ் நம்பர்கள் கிராஃபிக்ஸ்-ஆக வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிளில் 7 இனஅச் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்ப்ளே, கனெக்டெட் ஸ்கிரீன் ரிமோட் லாட் / அன்-லாக், ஜியோஃபென்சிங், லைவ் லொகேஷன் டிராக்கிங், வெஹிகில் ஹெல்த் மாணிட்டரிங், சார்ஜிங் விவரங்கள், புஷ் நேவிகேஷன் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கீலெஸ் ஸ்டார்ட் வசதியை கொண்டிருக்கிறது. இதன் இருபுறமும் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய மேட்டர் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் 10.5 கிலோவாட் மோட்டார் கொண்டிருக்கிறது. இத்துடன் "ஹைப்பர்ஷிஃப்ட்" மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இது மோட்டார்சைக்கிள் திறனை அதிகப்படுத்தி, வேறு எந்த மாடலும் வழங்காத ரேன்ஜ் வழங்கும் என மேட்டர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இத்துடன் 5 கிலோவாட் ஹவர் மேட்டர் எனர்ஜி 1.0 பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் திறன் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இதன் பவர்பேக் உடன் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ரோட்டார் மற்றும் ஸ்டேட்டர்-ஐ குளிர்ச்சியூட்டும். இதன் டிரைவ்டிரெயின் மேட்டர் நிறுவன ஆலையில் மிக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த மாடலுடன் 1 கிலோவாட் இண்டெலிஜெண்ட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

    இந்த சார்ஜர் மேட்டர்சார்ஜ் 1.0 என அழைக்கப்படுகிறது. இதை கொண்டு மோட்டார்சைக்கிளை எந்த விதமான 5A, 3-பின் பிளக் பாயிண்ட் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சார்ஜர் மோட்டார்சைக்கிளை ஐந்து மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விடும். இது ஒவர் சார்ஜ் ப்ரோடெக்‌ஷன் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை சப்போர்ட் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரைடர் மேனியா நிகழ்வு கோவாவில் நடைபெற்று வருகிறது.
    • சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சூப்பர் மீடியோர் 650 ரைடர் மேனியா நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது.

    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரைடர் மேனியா இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின் மீண்டும் நடைபெற்று வருகிறது. 2022 ரைடர் மேனியா நிகழ்வு கோவாவில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் ராயல் என்பீல்டு நிறுவனம் முற்றிலும் புதிய சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை காட்சிப்படுத்தி இருந்தது. மேலும் இந்த மோட்டார்சைக்கிள் அனைத்து நிறங்களும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என ராயல் என்பீல்டு அறிவித்து இருந்தது.

    சூப்பர் மீடியோர் 650 மாடலை அறிமுகம் செய்தது மட்டுமின்றி ராயல் என்பீல்டு நிறுவனம் குறைந்த விலையில் கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளையும் அறிமுகம் செய்து இருக்கிறது. இது 1:3 லிமிடெட் எடிஷன் கிளாசிக் கலெக்டபில் மாடல் ஆகும். இந்திய சந்தையில் புதிய மாடலின் விலை ரூ. 67 ஆயிரத்து 990 ஆகும். இதற்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 2 ஆயிரம் ஆகும்.

    புதிய ராயல் என்பீல்டு கிளாசிக் 500 கலெக்டபில் மாடல் 18 வெவ்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இதற்கான முன்பதிவு ரைடர் மேனியா நிகழ்ச்சியில் மட்டுமே நடைபெறுகிறது. முதற்கட்டமாக எட்டு நிறங்களுக்கான முன்பதிவு மட்டுமே நடைபெற்று வருகிறது. கிளாசிக் 350 மாடல் 15 நிறங்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    ராயல் என்பீல்டு கிளாசிக் 500 ரெடிட்ச் கிரே நிறம், சிங்கில் சேனல் ஏபிஎஸ் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 87 ஆயிரத்து 346 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சீரிசில் டாப் எண்ட் மாடல் க்ரோம் பிரான்ஸ், டூயல் சேனல் ஏபிஎஸ் விலை ரூ. 2 லட்சத்து 18 ஆயிரத்து 450 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    கிளாசிக் 500 மேட்டார்சைக்கிளின் மினியச்சர் மாடல் அதன் அம்சங்கள் மற்றும் ஸ்டைலிங்கில் விசேஷ கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இதில் ரைடருக்கான இருக்கை, வயர் ஸ்போக் வீல்கள், பீஷூட்டர் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும். எனினும், இந்த மாடல் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட இருக்கின்றன என்ற விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    • விசேஷ அம்சங்களுடன் டிராக் பயன்பாட்டிற்கான 2023 RC 8C லிமிடெட் எடிஷனை கேடிஎம் அறிமுகம் செய்து இருந்தது.
    • புதிய 2023 மாடலில் அதிக செயல்திறன் கொண்ட என்ஜின், எடை குறைந்த பாகங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த 2023 RC 8C லிமிடெட் எடிஷன் மாடல் விற்பனை துவங்கிய 2 நிமிடம் 38 நொடிகளில் முழுமையாக விற்றுத் தீர்ந்தது. டிராக் பயன்பாட்டிற்காகவே உருவாக்கப்பட்டு இருக்கும் லிமிடெட் எடிஷன் மாடல் மொத்தத்திலேயே 200 யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட்டன.

    மிக குறுகிய காலக்கட்டத்திற்குள் விற்பனையாகி போன 200 யூனிட்களில், 30 பேர் தங்களின் 2023 கேடிஎம் RC 8C மாடலை ஸ்பெயின் நாட்டில் உள்ள வலென்சியாவில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் டெலிவரி எடுத்துக் கொள்வதாக தெரிவித்து உள்ளனர். முன்பதிவுகள் எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படும் பட்சத்தில் மறு விற்பனைக்காக ஆன்லைன் காத்திருப்போர் பட்டியலை கேடிஎம் உருவாக்கி இருக்கிறது.

    2023 கேடிஎம் RC 8C மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட ஏராளமான மாற்றங்களை பெற்று இருக்கிறது. இதில் புதிய பெயிண்ட், ஏரோ பேக்கேஜ் ட்வீக், மேம்பட்ட எலெக்ட்ரிக் அம்சங்கள், எடையை குறைக்கும் புதிய பாகங்கள், உயர் ரக பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள என்ஜின் ட்வீக் செய்யப்பட்டு அதிக செயல்திறன் வழங்கும் வகையில் ரி-டியூன் செய்யப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக 2023 கேடிஎம் RC 8C மாடலில் உள்ள என்ஜின் 133 ஹெச்பி பவர், 98 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது முந்தைய மாடலில் இருப்பதை விட 6.9 ஹெச்பி அதிகம் ஆகும். அதிக செயல்திறன் கிடைக்கச் செய்வதற்காக புதிதாக டைட்டானியம் வால்வுகள், கான்ராட்கள், இரு பிஸ்டன் ரிங்குகள், அதிக கம்ப்ரெஷன் ரேஷியோ, பெரிய திராடிள் பாடி, ஃபியூவல் பம்ப் / பிரெஷர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

    எலெக்ட்ரிக் அம்சங்களை பொருத்தவரை 2023 கேடிஎம் RC 8C மாடலில் டிராக்‌ஷன் கண்ட்ரோல், மேப்பிங், என்ஜின் பிரேக்கிங் போன்ற வசதிகள் உள்ளன. இத்துடன் ஸ்டீரிங் ஹெட், திராடிள் ரெஸ்பான்ஸ் -ஐ அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காக்பிட்-இல் மேம்பட்ட டேஷ்போர்டு, ஜிபிஎஸ், கேடிஎம் RC16 மாடலில் உள்ளதை போன்ற டிரைவ்டு ஹேண்டில்பார் ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன.

    • கியூஜெ மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இருசக்கர வாகனங்கள் விலையை அறிவித்து இருக்கிறது.
    • முதற்கட்டமாக கியூஜெ மோட்டார் நிறுவனத்தின் நான்கு மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.

    கியூஜெ மோட்டார் நிருவனம் இந்திய சந்தையில் SRC250 ரெட்ரோ ரோட்ஸ்டர், SRC500, SRV300 குரூயிசர், SRK400 ஸ்போர்ட் நேக்கட் என நான்கு மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 1 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.

    புதிய கியூஜெ SRC250 மாடல் டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மாடலுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கிறது. இதில் 249சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 17.4 ஹெச்பி பவர், 17 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    கியூஜெ SRC500 மாடலில் 480சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.5 ஹெச்பி பவர், 36 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த எடை 250 கிலோ ஆகும். இதன் விலை ரூ. 2 லட்சத்து 59 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    குரூயிசர் மாடலான கியூஜெ SRV300 மாடலில் 296சிசி, வி-ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 30.3 ஹெச்பி பவர், 26 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

    கியூஜெ SRK400 மாடலில் 400சிசி, லிகவிட் கூல்டு பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 40.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கியூஜெ மோட்டார் நிறுவனத்தின் சக்திவாயந்த மாடல் ஆகும்.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • எலெக்ட்ரிக் கார் தவிர புதிதாக ஸ்போர்ட்பைக் மாடலை ஒலா எலெக்ட்ரிக் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய புது எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி வருவதாக தெரிகிறது. புதிய ஒலா எலெக்ட்ரிக் பைக் அல்ட்ராவைலட் F77 மாடலுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் ஸ்போர்ட் ரைடிங் ஸ்டைல் கொண்ட எலெக்ட்ரிக் பைக்-ஐ அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக பாவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் பொது மக்களிடம் எந்த மாதிரியான பைக் ஸ்டைல் உங்களுக்கு பிடிக்கும் என்ற கேள்வி அடங்கிய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார். அதில் 47.1 சதவீதம் பேர் ஸ்போர்ட்ஸ் மாடலை விரும்புவதாக தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 27.7 சதவீதம் பேர் குரூயிசர் மாடலையும், 15.1 சதவீதம் பேர் அட்வென்ச்சர் மாடலையும், 10.1 சதவீதம் பேர் கஃபே ரேசர் மாடலை விரும்புவதாக பதில் அளித்துள்ளனர்.

    சமீபத்தில் தான் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. ஒலா S1 ஏர் பெயரில் அறிமுகமான புது ஸ்கூட்டர் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. திடீரென ஒலா எலெக்ட்ரிக் சிஇஒ எலெக்ட்ரிக் பைக் பற்றிய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு இருப்பது, வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    மேலும் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அல்ட்ராவைலட் F77 எலெக்ட்ரிக் ஸ்போர்ட்-பைக் மாடலுக்கு போட்டியாக புது எலெக்ட்ரிக் ஸ்போர்ட்-பைக்கை அறிமுகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக ஒலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் களமிறங்க விருப்பம் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    • கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் 2023 நின்ஜா 650 மாடலை அறிமுகம் செய்தது.
    • புதிய மாடலின் விலை முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மாற்றப்பட்டு இருக்கிறது.

    கவாசகி இந்தியா நிறுவனம் மேம்பட்ட நின்ஜா 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2023 கவாசகி நின்ஜா 650 விலை ரூ. 7 லட்சத்து 12 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

    2023 கவாசகி நின்ஜா 650 மாடலின் டிசைன் மற்றும் ஸ்டைலிங் மட்டும் முந்தைய மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் கூர்மையான முகம், ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட், டிரான்ஸ்பேரண்ட் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் கவாசகி டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (KRTC) வழங்கப்பட்டு இருக்கிறது. இது KRTC 2-லெவல் சிஸ்டம் கொண்டுள்ளது. மேலும் இதை முழுமையாக ஆஃப் செய்ய முடியும்.

    புதிய மாடலிலும் 649சிசி, பேரலெல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67 ஹெச்பி பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. எல்இடி இலுமினேஷன், டிராக்‌ஷன் கண்ட்ரோல் மட்டுமின்றி 2023 மாடலில் 4.3 இன்ச் TFT ஸ்கிரீன், கவாசகி ரைடாலஜி செயலி மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.

    ×