என் மலர்tooltip icon

    பைக்

    • கேடிஎம் நிறுவனத்தின் புதிய 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிள் இரண்டு விதமான புது நிறங்களில் கிடைக்கிறது.
    • மற்ற அம்சங்களுடன், புதிய 2023 மாடலில் கேடிஎம் கனெக்ட் ஆப் வசதி கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கிறது.

    கேடிஎம் நிறுவனம் 2023 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 கேடிஎம் 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மாடல்- ஆரஞ்சு மற்றும் பிளாக், கிரே என இரண்டு விதமான புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    முந்தைய மாடலை போன்றே புது மாடலிலும் ஸ்ப்லிட்-ஸ்டைல் ஹெட்லைட், செமி ஃபேரிங் டிசைன், 23 லிட்டர், 3-பார்ட் ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், டூயல் பாரெல் எக்சாஸ்ட், அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ஃபுல் எல்இடி லைட்டிங், 7 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே, புதிய நேவிகேஷன் மென்பொருள், செலக்டபில் ரைடு மோட்கள், WP செமி ஆக்டிவ் சஸ்பென்ஷன், ஏபிஎஸ் மற்றும் அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் உள்ளன.

    இத்துடன் கேடிஎம் கனெக்ட் ஆப் வசதி உள்ளது. இது டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன்+ கைடன்ஸ், வேபாயிண்ட் மார்க்கர், மியூசிக் மற்றும் போன் அழைப்புகளை இயக்கும் வசதிகளை வழங்குகிறது. புதிய 2023 மாடலில் வி-ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 158 ஹெச்பி பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    பை-டைரெக்‌ஷனல் குயிக்‌ஷிப்டர், WP சஸ்பென்ஷன் ப்ரோ உள்ளிட்டவை ஆப்ஷனல் அக்சஸரீயாக வழங்கப்படுகிறது. இத்துடன் ஆட்-ஆன் மற்றும் அக்சஸரீக்கள் பட்டியலில் கேடிஎம் பவர்பார்ட்ஸ் கலெக்‌ஷன் வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் பாதுகாப்பு, டீடெயிலிங், அதிக செயல்திறன், லக்கேஜ், ரேக் மற்றும் பேக் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    2023 கேடிஎம் 1290 சூப்பர் அட்வென்ச்சர் எஸ் மோட்டார்சைக்கிள் அடுத்த மாதம் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும். இதன் இந்திய வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • ஹோண்டா நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலை விரைவில் வெளியிட இருக்கிறது.
    • புதிய எலெக்ட்ரிக் பைக் அதிக சக்திவாய்ந்த பெர்ஃபார்மன்ஸ் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தெரிகிறது.

    ஹோண்டா நிறுவனம் தனது ரோஸ் பரேட்-க்காக புது டீசரை வெளியிட்டு இருக்கிறது. டீசரில் இருப்பது ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தெரிகிறது. ஹோண்டா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன திட்டம் அனைவரும் அறிந்ததே. இது பற்றிய தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆகி விட்டன. இதில் சர்வதேச சந்தையில் ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கும் பல்வேறு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் விவரங்கள் இடம்பெற்று இருந்தன.

    இதே தகவல்களில் இந்தியாவுக்காக ஆக்டிவா எலெக்ட்ரிக் வெர்ஷனை ஹோண்டா அறிமுகம் செய்ய இருப்பதும் அம்பலமானது. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் சந்தையில் பெருமளவு வாடிக்கையாளர்களை குறிவைத்து வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் இவை அதிக செயல்திறன் மற்றும் மகிழ்ச்சியை வழங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களாக இருக்கும் என தெரிகிறது.

    அமெரிக்க சந்தைக்காக திட்டமிடப்பட்டு இருக்கும் புது எலெக்ட்ரிக் பைக் மிட்-பெர்ஃபார்மன்ஸ் ஸ்டிரீட் மாடல் ஆகும். இந்த மாடல் பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இதில் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார், 150 முதல் 200 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்கும் பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    • டுகாட்டி நிறுவனத்தின் முற்றிலும் DesertX மோட்டார்சைக்கிளில் 937சிசி, L ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிள் கிராஸ்-ஸ்போக் ரக வீல்களை கொண்டிருக்கிறது.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் தனது புதிய அட்வென்ச்சர் டூரர், DesertX மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டுகாட்டி DesertX விலை ரூ. 17 லட்சத்து 91 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஒற்றை வேரியண்டில் கிடைக்கும் டுகாட்டி DesertX மாடல் இந்தியாவில் டிரையம்ப் டைகர் 900 ரேலி மற்றும் ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    புதிய DesertX அட்வென்ச்சர் மாடலில் 937 சிசி, L ட்வின் ரக என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் புதிய மான்ஸ்டர் மற்றும் மல்டிஸ்டிராடா வி2 மோட்டார்சைக்கிள்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த என்ஜின் குறைந்த எடை மற்றும் அதிக திறன் கொண்ட வரையில் மாற்றப்பட்டு இருப்பதாக டுகாட்டி தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய என்ஜின் 110 ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    இத்துடன் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் சார்ந்த 5-இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்போர்ட், டூரிங், அர்பன், வெட், ரேலி மற்றும் எண்டியூரோ என ஆறு விதமான ரைடிங் மோட்கள்- ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு வித பவர் மோட்களை கொண்டிருக்கிறது.

    இவை தவிர குரூயிஸ் கண்ட்ரோல், போஷ் IMU, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பை-டைரெக்‌ஷனல் குயிக்‌ஷிஃப்டர், கார்னெரிங் ABS போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்டைலிங்கை பொருத்தவரை ட்வின் பாட் ஹெட்லைட், உயரமான விண்ட்-ஸ்கிரீன், செமி ஃபேரிங் டிசைன், 21 லிட்டர் ஃபியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட், பேஷ் பிலேட், டியூப்லெஸ் டயர், வயர் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    மற்ற ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை கயபாவின் அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக், இரண்டையும் அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளை கஸ்டமைஸ் செய்ய டுகாட்டி ஏராளமான அக்சஸரீக்களை ஆப்ஷனாக வழங்குகிறது.

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மோட்டார்சைக்கிளை ரூ. 20 லட்சம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்துள்ளது.
    • புதிய பிஎம்டபிள்யூ பைக் டுகாட்டி பனிகேல் வி4, கவாசகி நின்ஜா ZX-10R மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சந்தையில் S1000RR மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய பிஎம்டபிள்யூ S1000RR விலை ரூ. 20 லட்சத்து 25 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    விலை விவரங்கள்:

    பிஎம்டபிள்யூ S1000RR ஸ்டாண்டர்டு ரூ. 20 லட்சத்து 25 ஆயிரம்

    பிஎம்டபிள்யூ S1000RR ப்ரோ ரூ. 22 லட்சத்து 15 ஆயிரம்

    பிஎம்டபிள்யூ S1000RR M ஸ்போர்ட் ரூ. 24 லட்சத்து 55 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2023 பிஎம்டபிள்யூ S1000RR மோட்டார்சைக்கிள் ஏராளமான ஸ்டைலிங் மற்றும் மெக்கானிக்கல் அப்டேட்களை பெற்று இருக்கிறது. இதன் ஃபேரிங்கில் ஸ்போர்ட்ஸ் ஏரோ விங்லெட்கள் ஸ்டாண்டர்டு ஃபிட்மெண்ட் வடிவில் வழங்கப்படுகிறது. இது டவுன்ஃபோர்ஸ்-ஐ 10 கிலோ வரை குறைக்கும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் விண்ட்ஸ்கிரீன் உயரம் சற்றே அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் மெல்லிய எல்இடி ஹெட்லைட் முந்தைய மாடலில் வழங்கப்பட்டதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய ரியர் எண்ட், அதிக திறன் கொண்ட என்ஜின், மேம்பட்ட அசிஸ்டண்ஸ் சிஸ்டம்கள் உள்ளது. புதிய பிஎம்டபிள்யூ S1000RR மாடலிலும் 999சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் மற்றும் பிஎம்டபிள்யூ ஷிஃப்ட்கேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 206.5 ஹெச்பி பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், ஸ்லைடு கண்ட்ரோல் ஃபன்ஷன், ஏபிஎஸ், பிரேக் ஸ்லைடு அசிஸ்ட், ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல், பை-டைரெக்‌ஷனல் குயிக்‌ஷிப்டர், லான்ச் கண்ட்ரோல், லேண் லிமிட்டர் மற்றும் ரெயின், ரோடு, டைனமிக், ரேஸ் என நான்கு ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் 2023 பிஎம்டபிள்யூ S1000RR மோட்டார்சைக்கிள் டுகாட்டி பனிகேல் வி4, கவாசகி ZX-10R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. புதிய பிஎம்டபிள்யூ S1000RR மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன.

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
    • இவற்றில் இரு ஸ்கூட்டர்களுக்கு ஒலா நிறுவனம் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிவித்து இருந்த ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி சலுகையை நீட்டித்து இருக்கிறது. அந்த வகையில் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி இந்த ஆண்டு இறுதிவரை வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகை பண்டிகை காலத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், தற்போது இந்த சலுகையின் வேலிடிட்டியை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்து இருக்கிறது.

    இந்த சலுகையின் மூலம் ஒலா S1 ப்ரோ ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் ரூ. 10 ஆயிரம் குறைந்த விலை, அதாவது ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 999-க்கு வாங்கிட முடியும். சலுகையின்றி இந்த ஸ்கூட்டர் ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த சலுகை ஒலா S1 ப்ரோ மாடலுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

    தள்ளுபடி மட்டுமின்றி மிக குறைந்த மாத தவணை முறை வசதி, முன்பணம் இன்றி வாங்கும் வசதி, குறைக்கப்பட்ட வட்டி, இதர கட்டணங்கள் முழுமையாக ரத்து, தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டுகலுக்கு கூடுதல் தள்ளுபடி என ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகிறது.

    சலுகை தவிர ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் 11 நகரங்களில் புதிதாக 14 எக்ஸ்பீரின்ஸ் செண்டர்களை துவங்கி இருக்கிறது. இவற்றில் மூன்று பெங்களூரு நகரிலும், பூனேவில் இரண்டு மற்றும் ஆமதாபாத், போபால், டேராடூன், டெல்லி, ஐதராபாத், கோடா, நாக்பூர், ராஞ்சி மற்றும் வதோதரா போன்ற பகுதிகளில் ஒன்று என்ற வீதத்தில் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

    • டுகாட்டி நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிளில் 937சிசி, L-ட்வின் ரக என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய டுகாட்டி பைக் இந்தியாவில் டிரையம்ப் டைகர் 900 ரேலி மற்றும் ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் டிசம்பர் 12 ஆம் தேதி DesertX அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் புதிய DesertX மாடலுக்கான முன்பதிவு தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய DesertX அட்வென்ச்சர் மாடலில் 937 சிசி, L ட்வின் ரக என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் புதிய மான்ஸ்டர் மற்றும் மல்டிஸ்டிராடா வி2 மோட்டார்சைக்கிள்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த என்ஜின் குறைந்த எடை மற்றும் அதிக திறன் கொண்ட வரையில் மாற்றப்பட்டு இருப்பதாக டுகாட்டி தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய என்ஜின் 110 ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில் டுகாட்டி DesertX அட்வென்ச்சர் மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் சார்ந்த 5-இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்போர்ட், டூரிங், அர்பன், வெட், ரேலி மற்றும் எண்டியூரோ என ஆறு விதமான ரைடிங் மோட்கள்- ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு வித பவர் மோட்களை கொண்டிருக்கிறது.

    இவை தவிர குரூயிஸ் கண்ட்ரோல், போஷ் IMU, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பை-டைரெக்‌ஷனல் குயிக்‌ஷிஃப்டர், கார்னெரிங் ABS போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெர்ஷனிலும் இதே அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் காட்சிப்படுத்திய சூப்பர் மீடியோர் 650 மாடலின் வெளியீட்டு தேதியை அறிவித்து இருக்கிறது.
    • புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளாக இருக்கும் என தெரிகிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புது மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் நடைபெற்ற ரைடர் மேனியா 2022 நிகழ்வில் சூப்பர் மீடியோர் 650 மாடலை காட்சிப்படுத்தி இருந்தது. தற்போது இந்த மாடல் ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவில் வெளியிடப்படும் என ராயல் என்பீல்டு அறிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 விலை ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. அந்த வகையில் புதிய சூப்பர் மீடியோர் 650 ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    சூப்பர் மீடியோர் 650 மாடலில் 649சிசி பேரலல் ட்வின் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் கொண்ட மூன்றாவது மாடலாக சூப்பர் மீடியோர் 650 அறிமுகமாகி இருக்கிறது. இந்த குரூயிசர் மோட்டார்சைக்கிள் இண்டர்செப்டார் மாடலின் மேல் நிலை நிறுத்தப்படுகிறது. இந்த மாடல் ஏராளமான அக்சஸரீக்களை கொண்டிருக்கிறது.

    ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலில் அப்ரைட் ரைடிங் பொசிஷன், டியர் டிராப் வடிவ ஃபியூவல் டேன்க், சண்க்கி, ஃபெண்டர் ரியர் டயர், வட்ட வடிவம் கொண்ட எல்இடி ஹெட்லைட், வட்ட வடிவம் கொண்ட டெயில் லைட், ட்வின் எக்சாஸ்ட் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    • ராயல் என்பீல்டு நிறுவனம் புது வாகனங்கள் வெளியீட்டில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது.
    • சமீபத்தில் தான் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 650 மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய கிளாசிக் 650 மாடல் இண்டர்செப்டார் 650, காண்டினெண்டல் GT650 மற்றும் புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல்கள் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. புது கிளாசிக் 650 பற்றிய தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாடல் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது 650 பிளாட்ஃபார்மில் வேறு எந்த மாடலும் இடம்பெறவில்லை என்பதால், கிளாசிக் 650 இந்த இடைவெளியை போக்கும் வகையில் அறிமுகம் செய்யப்படலாம். சமீப காலங்களில் ராயல் என்பீல்டு விற்பனையில் கிளாசிக் சீரிஸ் மாடல்கள் அதிக பங்குகளை பெற்று வருகின்றன. இதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 650 அறிமுகம் இருக்கும் என தெரிகிறது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய மாடல் அதன் 350சிசி மாடலை போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், மினிமலிஸ்ட் தோற்றம் கொண்ட ஃபியூவல் டேன்க் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம். புதிய கிளாசிக் 650 மாடலிலும் மற்ற மாடல்களில் உள்ளதை போன்று 649சிசி, பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இதன் வீல்கள், பிரேக்கிங் உள்ளிட்டவை இண்டர்செப்டார் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். இத்துடன் எல்இடி லைட்டிங், ஏராளமான ஆப்ஷனல் அக்சஸரீக்கள் வழங்கப்படும் என தெரிகிறது. முற்றிலும் புதிய கிளாசிக் 650 மாடல் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு அல்லது 2024 துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து துவங்கலாம். 

    • கேடிஎம் நிறுவனத்தின் புதிய 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் WP முன்புறம் மற்றும் பின்புற சஸ்பென்ஷன் கொண்டுள்ளது.
    • புதிய 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிள் இந்திய பைக் வாரம் 2022 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

    கேடிஎம் இந்தியா நிறுவனம் தனது 890 அட்வென்ச்சர் ஆர் மோட்டார்சைக்கிளை இந்தியா பைக் வாரம் 2022 நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. கேடிஎம் நிறுவன மாடல்களுடன் இந்த மோட்டார்சைக்கிளும் காட்சிக்கு வைக்கப்பட்டது. முழுமையான ஆஃப் ரோடிங் தோற்றம் கொண்டிருக்கிறது.

    புதிய கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மாடலில் செங்குத்தாக பொருத்தப்பட்ட ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட், ஸ்மோக்டு விண்ட்ஸ்கிரீன் உள்ளது. இத்துடன் ஹேண்டில்பார் கார்டுகள், பெல்லி பேன் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. 890 அட்வென்ச்சர் ஆர் மாடலில் 889சிசி, LC8c பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

    இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்டீல் டியூப் ஃபிரேம் WP முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் WP மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் TFT ஸ்கிரீன், டிராக்‌ஷன் கண்ட்ரோல், ABS, ரைடு மோட்கள் மற்றும் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய 2023 மாடலில் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி மற்றும் இதுவரை இல்லாத அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. தற்போது இந்த மோட்டார்சைக்கிள் வாடிக்கையாளர் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலின் இந்திய அறிமுகம் பற்றி கேடிஎம் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    • ராயல் என்பீல்டு நிறுத்தின் லிமிடெட் எடிஷன் ஸ்கேல் மாடல் 2022 ரைடர் மேனியா நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை மற்றும் எடை குறைந்த கிளாசிக் 500 மாடல் ஆகும்.

    2022 ரைடர் மேனியா நிகழ்வில் ராயல் என்பீல்டு நிறுவனம் தனது குறைந்த விலை கிளாசிக் 500 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதுதவிர ஹண்டர் 350 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் குறைந்த விலை மோட்டார்சைக்கிள் என்ற பெருமையை பெற்று இருந்தது.

    மிக குறைந்த எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்ட ராயல் என்பீல்டு கிளாசிக் 500 மாடல் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்ந்துள்ளது. இந்திய சந்தையில் புதிய கிளாசிக் 500 மாடலின் விலை ரூ. 67 ஆயிரத்து 990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கிளாசிக் 500 பைக்கின் 1:3 ஸ்கேல் மாடல் ஆகும். இந்த மாடல் 18 விதமான நிறங்களில் கிடைக்கிறது.

    கிளாசிக் 500 மேட்டார்சைக்கிளின் மினியச்சர் மாடல் அதன் அம்சங்கள் மற்றும் ஸ்டைலிங்கில் விசேஷ கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. இதில் ரைடருக்கான இருக்கை, வயர் ஸ்போக் வீல்கள், பீஷூட்டர் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இது லிமிடெட் எடிஷன் மாடல் ஆகும்.

    இந்த மாடலில் மூவிங் திராடிள் மற்றும் கிளட்ச் யூனிட், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய செயின் மற்றும் மைக்ரோ கீ உள்ளது. தற்போது விற்றுத் தீர்ந்ததாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், இந்த மாடல் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது என்ற விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    • கேடிஎம் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளின் புது மாடல் ஏராளமான மாற்றங்களை பெற்று இருக்கிறது.
    • எல்இடி ஹெட்லைட்களின் மேல்புறமாக 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மாடலில் புதிதாக விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

    கேடிஎம் நிறுவனம் முற்றிலும் புதிய 890 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2023 மாடலின் அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பெரும்பாலன டிசைன் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அட்வென்ச்சர் ஸ்டைலிங் மற்றும் உயரமான ஸ்டான்ஸ் 2023 மாடலிலும் பின்பற்றப்பட்டு உள்ளது.

    புதிய மாடலின் ஹெட்லைட் மற்றும் ஸ்கிரீன் டிசைன் ஆல்டர் செய்யப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பக்கவாட்டு ஃபேரிங் அதிகளவு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த மாடலில் செங்குத்தாக பொருத்தப்பட்ட எல்இடி ஹெட்லைட்கள் உள்ளன. இத்துடன் புதிய விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் என்ஜின் மற்றும் ஃபியூவல் டேன்க் உள்ளிட்டவைகளை பாதுகாக்க புதிதாக அலாய் கார்டு பொருத்தப்பட்டுள்ளது.

    2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மாடலில் 889சிசி, LC8c பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 ஹெச்பி பவர், 100 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஸ்டீல் டியூப் ஆல்டர் செய்யப்படாமல், ரிவேம்ப்டு 43mm WP அபெக்ஸ் USD ஃபோர்க்குகளை கொண்டிருக்கிறது. பின்புறம் WP அபெக்ஸ் மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இதன் பிரேக்கிங் முந்தைய மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் 21 இன்ச், பின்புறத்தில் 18 இன்ச் ஸ்போக்டு வீல்கள், பைரெளி ரேலி STR டயர்களை கொண்டிருக்கின்றன. அம்சங்களை பொருத்தவரை 2023 கேடிஎம் 890 அட்வென்ச்சர் மாடலில் மேம்பட்ட 5-இன்ச் TFT ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, குயிக்‌ஷிஃப்டர், குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் செட்டிங்ஸ் உள்ளது.

    கேடிஎம் நிறுவனம் 2023 மாடலின் விலை விவரங்களை இதுவரை அறிவிக்கவில்லை. எனினும், முந்தைய மாடலின் விலை GBP 10 ஆயிரத்து 449, இந்திய மதிப்பில் ரூ. 10 லட்சத்து 19 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அந்த வகையில் புது மாடலின் விலை இதைவிட சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    • டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் அபாச்சி ஸ்பெஷல் எடிஷன் மாடலில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
    • ஸ்பெஷல் எடிஷன் மாடலின் என்ஜின் அம்சத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அபாச்சி RTR 160 4V ஸ்பெஷல் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய அபாச்சி RTR 160 4V ஸ்பெஷல் எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. வழக்கமான RTR 160 4V மாடலை விட ஸ்பெஷல் எடிஷனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டு புது நிறத்தில் கிடைக்கிறது.

    முந்தைய ஸ்பெஷல் எடிஷன் அபாச்சி RTR 160 4V மாடல் மேட் பிளாக் நிறத்தில் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இதே நிறம் புதிய 2023 மாடலிலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இத்துடன் பியல் வைட் ஷேட் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய பெயிண்ட் ஃபினிஷ் பை-டோன் அலாய் வீல்கள் - முன்புறம் பிளாக், பின்புறத்தில் ரெட் நிறம் வழங்கப்பட்டு இருக்கிறது. சீட் தொடர்ந்து டூயல் டோன் ஃபினிஷ் கொண்டிருக்கிறது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடலில் ட்வீக் செய்யப்பட்ட எக்சாஸ்ட், புதிய புல்-பப் மஃப்ளர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்டாண்டர்டு மாடலில் இருப்பதை விட 1 கிலோ வரை எடை குறைவு ஆகும். இந்த மாடலில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச் மற்றும் பிரேக் லீவர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இவற்றுடன் ஸ்டாண்டர்டு மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் மூன்று வித ரைடு மோட்கள், smartXonnect ப்ளூடூத் கனெக்டிவிட்டி, எல்இடி ஹெட்லேம்ப், டிஆர்எல் மற்றும் கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. என்ஜினை பொருத்தவரை புது மாடலிலும் 159.7சிசி, ஆயில் கூல்டு, ஃபியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 17.3 ஹெச்பி பவர், 14.73 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

    ×