search icon
என் மலர்tooltip icon

    பைக்

    விரைவில் இந்தியா டுகாட்டி மோட்டார்சைக்கிள்
    X

    விரைவில் இந்தியா டுகாட்டி மோட்டார்சைக்கிள்

    • டுகாட்டி நிறுவனத்தின் புதிய மோட்டார்சைக்கிளில் 937சிசி, L-ட்வின் ரக என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • புதிய டுகாட்டி பைக் இந்தியாவில் டிரையம்ப் டைகர் 900 ரேலி மற்றும் ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    டுகாட்டி இந்தியா நிறுவனம் டிசம்பர் 12 ஆம் தேதி DesertX அட்வென்ச்சர் டூரர் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் புதிய DesertX மாடலுக்கான முன்பதிவு தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் புதிய DesertX அட்வென்ச்சர் மாடலில் 937 சிசி, L ட்வின் ரக என்ஜின் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் புதிய மான்ஸ்டர் மற்றும் மல்டிஸ்டிராடா வி2 மோட்டார்சைக்கிள்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த என்ஜின் குறைந்த எடை மற்றும் அதிக திறன் கொண்ட வரையில் மாற்றப்பட்டு இருப்பதாக டுகாட்டி தெரிவித்துள்ளது. அந்த வகையில் புதிய என்ஜின் 110 ஹெச்பி பவர், 92 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    ஏற்கனவே இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. அந்த வகையில் டுகாட்டி DesertX அட்வென்ச்சர் மாடலில் ஃபுல் எல்இடி லைட்டிங், ப்ளூடூத் சார்ந்த 5-இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்போர்ட், டூரிங், அர்பன், வெட், ரேலி மற்றும் எண்டியூரோ என ஆறு விதமான ரைடிங் மோட்கள்- ஃபுல், ஹை, மீடியம் மற்றும் லோ என நான்கு வித பவர் மோட்களை கொண்டிருக்கிறது.

    இவை தவிர குரூயிஸ் கண்ட்ரோல், போஷ் IMU, என்ஜின் பிரேக் கண்ட்ரோல், டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், பை-டைரெக்‌ஷனல் குயிக்‌ஷிஃப்டர், கார்னெரிங் ABS போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் இந்திய வெர்ஷனிலும் இதே அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×