search icon
என் மலர்tooltip icon

    பைக்

    கிளாசிக் 650 உருவாக்கும் ராயல் என்பீல்டு - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    கிளாசிக் 650 உருவாக்கும் ராயல் என்பீல்டு - வெளியீடு எப்போ தெரியுமா?

    • ராயல் என்பீல்டு நிறுவனம் புது வாகனங்கள் வெளியீட்டில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது.
    • சமீபத்தில் தான் சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 650 மோட்டார்சைக்கிளை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய கிளாசிக் 650 மாடல் இண்டர்செப்டார் 650, காண்டினெண்டல் GT650 மற்றும் புதிய சூப்பர் மீடியோர் 650 மாடல்கள் உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. புது கிளாசிக் 650 பற்றிய தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாடல் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது 650 பிளாட்ஃபார்மில் வேறு எந்த மாடலும் இடம்பெறவில்லை என்பதால், கிளாசிக் 650 இந்த இடைவெளியை போக்கும் வகையில் அறிமுகம் செய்யப்படலாம். சமீப காலங்களில் ராயல் என்பீல்டு விற்பனையில் கிளாசிக் சீரிஸ் மாடல்கள் அதிக பங்குகளை பெற்று வருகின்றன. இதை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ராயல் என்பீல்டு கிளாசிக் 650 அறிமுகம் இருக்கும் என தெரிகிறது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய மாடல் அதன் 350சிசி மாடலை போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில், இந்த மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், மினிமலிஸ்ட் தோற்றம் கொண்ட ஃபியூவல் டேன்க் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம். புதிய கிளாசிக் 650 மாடலிலும் மற்ற மாடல்களில் உள்ளதை போன்று 649சிசி, பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இதன் வீல்கள், பிரேக்கிங் உள்ளிட்டவை இண்டர்செப்டார் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். இத்துடன் எல்இடி லைட்டிங், ஏராளமான ஆப்ஷனல் அக்சஸரீக்கள் வழங்கப்படும் என தெரிகிறது. முற்றிலும் புதிய கிளாசிக் 650 மாடல் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு அல்லது 2024 துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து துவங்கலாம்.

    Next Story
    ×