என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்
இந்தியாவில் நான்கு புது பைக்குகளை அறிமுகம் செய்த நிறுவனம்!
- கியூஜெ மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது இருசக்கர வாகனங்கள் விலையை அறிவித்து இருக்கிறது.
- முதற்கட்டமாக கியூஜெ மோட்டார் நிறுவனத்தின் நான்கு மோட்டார்சைக்கிள் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.
கியூஜெ மோட்டார் நிருவனம் இந்திய சந்தையில் SRC250 ரெட்ரோ ரோட்ஸ்டர், SRC500, SRV300 குரூயிசர், SRK400 ஸ்போர்ட் நேக்கட் என நான்கு மோட்டார்சைக்கிள் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் விலை ரூ. 1 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது.
புதிய கியூஜெ SRC250 மாடல் டிவிஎஸ் அபாச்சி RTR 160 4V மாடலுக்கு போட்டியாக அறிமுகமாகி இருக்கிறது. இதில் 249சிசி, பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 17.4 ஹெச்பி பவர், 17 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கியூஜெ SRC500 மாடலில் 480சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 25.5 ஹெச்பி பவர், 36 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்த எடை 250 கிலோ ஆகும். இதன் விலை ரூ. 2 லட்சத்து 59 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
குரூயிசர் மாடலான கியூஜெ SRV300 மாடலில் 296சிசி, வி-ட்வின் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 30.3 ஹெச்பி பவர், 26 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
கியூஜெ SRK400 மாடலில் 400சிசி, லிகவிட் கூல்டு பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 40.9 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் விலை ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய சந்தையில் கியூஜெ மோட்டார் நிறுவனத்தின் சக்திவாயந்த மாடல் ஆகும்.