என் மலர்

  பைக்

  2023 கவாசகி KX250 இந்தியாவில் அறிமுகம்
  X

  2023 கவாசகி KX250 இந்தியாவில் அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கவாசகி நிறுவனத்தின் புதிய KX250 மோட்டார்சைக்கிள் லைம் கிரீன் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.
  • புதிய கவாசகி டர்ட் பைக் பொது சாலைகளில் பயன்படுத்த அனுமதியில்லை என்பதால், இதனை பதிவு செய்ய வேண்டாம்.

  இந்தியா கவாசகி மோட்டார் நிறுவனம் 2023 KX250 டர்ட் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கவாசகி KX250 விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2023 கவாசகி KX250 டர்ட் மாடல் பந்தய களத்துக்கான மாடல் என்பதால், இதனை பொது சாலைகளில் பயன்படுத்த அனுமதி இல்லை. இதன் காரணமாக இந்த பைக்கை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

  KX250 2023 மாடலில் ஏராளமான அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதன் செயல்திறன் முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் KX250 இதுவரை வெளியான மாடல்களை விட அதிக சக்திவாய்ந்த என்ஜின் கொண்டிருக்கிறது. புதிய கவாசகி KX250 மாடல் லைம் கிரீன் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இது முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது.

  2023 கவாசகி KX250 மாடலில் 249சிசி, லிக்விட் கூல்டு, நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினில் ஃபிங்கர்-ஃபாலோவர் வால்வு ஆக்டுவேஷன், இண்டேக் மற்றும் எக்சாஸ்ட் போர்ட்களில் ரிவைஸ்டு பிராசஸிங் உள்ளது. இதில் ரிவைஸ்டு கிரான்க்-கேஸ் டிசைன் மற்றும் ஹைட்ராலிக் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய KX250 மாடலில் புதிய கியரிங், ரிவைஸ்டு சஸ்பென்ஷன் செட்டிங் மற்றும் புதிய டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன.

  இவை தவிர புது மாடலில் குறைந்த எடை மற்றும் அகலமான ஃபூட்பெக், நீண்ட எக்சாஸ்ட் ஹெடர் பைப், மேம்பட்ட இக்னிஷன் டைமிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள என்ஜின் லான்ச் கண்ட்ரோல் மற்றும் மூன்று என்ஜின் மேப் சாய்ஸ் கொண்டுள்ளது.

  Next Story
  ×