என் மலர்
பைக்
- யமஹா நிறுவனம் இந்திய சந்தையில் தனது MT 15 V2 விலையை மாற்றியமைத்து இருக்கிறது.
- புதிய விலை MT 15 V2 அனைத்து நிற வேரியண்ட்களுக்கும் பொருந்தும் என யமஹா தெரிவித்து இருக்கிறது.
யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் அக்டோபர் மாதம் MT 15 V2 மோட்டார்சைக்கிள் விலையை இந்திய சந்தையில் உயர்த்தி இருக்கிறது. விலை உயர்வு யமஹா MT 15 V2 அனைத்து நிற வேரியண்ட்களுக்கும் பொருந்தும். இம்முறை யமஹா MT 15 V2 மாடலின் விலை ரூ. 500 அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஆகஸ்ட் மாத வாக்கில் யமஹா இதே மாடல் விலையை ரூ. 1500 உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய விலை விவரம்:
யமஹா MT 15 V2 மெட்டாலிக் பிளாக் ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 900
யமஹா MT 15 V2 ஐஸ் புளோ, ரேசிங் புளூ ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 900
யமஹா MT 15 V2 மோட்டோ ஜிபி எடிஷன் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரத்து 900
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
விலை தவிர யமஹா MT 15 V2 அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த மாடல் 155 சிசி, லிக்விட் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 18.14 ஹெச்பி பவர், 14.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் யமஹா MT 15 V2 மாடலில் அப்சைடு-டவுன் போர்க்குகள், அலுமினியம் ஸ்விங் ஆரம், பிரேக்கிங்கிற்கு சிங்கில் டிஸ்க் மற்றும் சிங்சில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் எல்இடி ஹெட்லேம்ப், டெயில் லேம்ப், எல்சிடி கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 10 லிட்டர் பியூவல் டேன்க் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது S1 ஸ்கூட்டரின் புது வேரியண்டை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.
- ஏற்கனவே இந்தியாவில் ஓலா S1 சீரிஸ் ஸ்கூட்டர்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓலா S1 புது வேரியண்ட் விலை ரூ. 80 ஆயிரத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
முன்னதாக S1 ப்ரோ ஸ்கூட்டருக்கு ஓலா எலெக்ட்ரிக் அறிவித்த ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி சலுகை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. புது வேரியண்ட் தீபாவளி வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதன் விலை ரூ. 80 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அந்த வகையில் புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை இந்தியாவில் கிடைக்கும் 125சிசி ஸ்கூட்டர்களுக்கு இணையாக மாறி விடும்.

ஓலா S1 தற்போதைய மாடலில் உள்ள அம்சங்கள் புது வேரியண்டிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், புது வேரியண்டில் ஓலா S1 மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் 3 கிலோவாட் ஹவர் பேட்டரியை விட சிறிய பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. குறைந்த விலையை அடுத்த புதிய ஓலா S1 வேரியண்ட் டிவிஎஸ் ஐகியூப் மாடலின் பேஸ் வேரியண்டிற்கு போட்டியாக அமையும்.
சமீபத்தில் தான் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி சலுகையை அறிவித்தது. இந்த சலுகை அக்டோபர் 5 ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், ஓலா எலெக்ட்ரிக் தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் இந்த சலுகை தீபாவளி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
- ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் தனது ஒலா S1 ஸ்கூட்டர் விற்பனையை சமீபத்தில் துவங்கியது.
- தற்போது நாடு முழுக்க 20 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் இயக்கி வருகிறது.
ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் நவராத்திரி காலக்கட்டத்தில் தனது ஸ்கூட்டர் விற்பனை அமோகமாக நடைபெற்றதாக தெரிவித்து இருக்கிறது. நவராத்திரி விற்பனையின் போது ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு ஸ்கூட்டர் வீதம் விற்பனையாகி இருக்கிறது. பண்டிகை காலத்தில் மட்டும் விற்பனை நான்கு மடங்கு வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்ட எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் விற்பனை வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஒலா எலெக்ட்ரிக் அறிமுகமான காலக்கட்டத்தில் விற்பனையக காலக்கட்டம் முடிந்துவிட்டதாக தெரிவித்து இருந்தது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்கள் திறக்கப்பட்டதை அடுத்து ஒலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு ஆன்லைனிலேயே நடைபெற்று வருகிறது. பண்டிகை காலக்கட்டத்தில் அமோக விற்பனை நடைபெற்ற போதிலும், எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன என்ற தகவலை ஒலா எலெக்ட்ரிக் அறிவிக்கவில்லை.
கடந்த மாதம் வரை ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் 20 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை திறந்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நாடு முழுக்க 200 எக்ஸ்பீரியன்ஸ் செண்டர்களை திறக்க ஒலா எலெக்ட்ரிக் திட்டமிட்டுள்ளது. மேலும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒலா S1 மற்றும் S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அசத்தல் சலுகைகளை வழங்குகிறது. மேலும் ஒலா S1 ப்ரோ மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- சீன மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான சாண்டெஸ் இந்தியாவில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களை வெளியிட்டுள்ளது.
- இரு மாதங்களுக்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இவற்றின் விலை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
சீனாவை சேர்ந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளர் சாண்டெஸ், இந்திய சந்தையில் தனது இருசக்கர வாகனங்கள் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில் சாண்டெஸ் 350R விலை ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் என துவங்கிகிறது. சாண்டெஸ் 350T ADV மாடலின் விலை அதிகபட்சமாக ரூ. 3 லட்சத்து 57 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
குறைந்த விலையில் கிடைக்கும் சாண்டெஸ் 350R நேக்கட் பைக் விலை ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 3 லட்சத்து 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சாண்டெஸ் 350X ஸ்போர்ட் டூரர் விலை ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம் என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சாண்டெஸ் GK350 கபே ரேசர் மற்றும் 350T ரோட்-சார்ந்த டூரர் விலைகள் முறையே ரூ. 3 லட்சத்து 37 ஆயிரம் மற்றும் ரூ. 3 லட்சத்து 47 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிளாக்ஷிப் மாடல்களான 350T ADV அட்வென்ச்சர் பைக் விலை ரூ. 3 லட்சத்து 57 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 3 லட்சத்து 67 ஆயிரம் என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் சாண்டெஸ் சீரிஸ் மாடல்கள் கேடிஎம் 390 மற்றும் பிஎம்டபிள்யூ 310 ட்ரியோ, ராயல் என்பீல்டு 650 ட்வின் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. கேடிஎம் மற்றும் ராயல் என்பீல்டு மாடல்கள் அதிக திறன் கொண்டிருப்பதோடு சாண்டெஸ் மாடல்களை விட குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் செப்டம்பர் மாதத்திற்கான இருசக்கர வாகன விற்பனை விவரங்கள் வெளியாகி உள்ளது.
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2022 செப்டம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை விவரங்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 2022 மாதத்துடன் ஒப்பிடும் போது செப்டம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வாகன விற்பனை 12.4 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.
செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஹீரோ மோட்டோகார்ப்ப் நிறுவனம் 5 லட்சத்து 07 ஆயிரத்து 690 மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இதுதவிர 12 ஆயிரத்து 290 யூனிட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 5 லட்சத்து 19 ஆயிரத்து 980 யூனிட்களில் ஹீரோ நிறுவனம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 237 பைக்குகளையும், 39 ஆயிரத்து 743 ஸ்கூட்டர்களையும் விற்பனை செய்து இருக்கிறது.

2021 செப்டம்பர் மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 10 ஆயிரத்து 366 யூனிட்கள் குறைவாக விற்பனை செய்துள்ளது. பண்டிகை காலம் துவங்க உள்ள நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அக்டோபர் 7 ஆம் தேதி விடா எனும் புது பிராண்டின் கீழ் ஹீரோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீட்டை உணர்த்தும் டீசர்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் கழற்றும் வசதி கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது. இது மட்டுமின்றி அமெரிக்காவை சேர்ந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளரான ஜீரோ உடன் ஹீரோ கூட்டணி அமைத்து இருக்கிறது. இதன் மூலம் இரு நிறுவனங்கள் இணைந்து எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளன.
- ஜாவா நிறுவனத்தின் புதிய 42 பாபர் மாடல் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
- புதிய ஜாவா 42 பாபர் மாடல் மூன்று வித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஜாவா 42 பாபர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் விலை ரூ. 2 லட்சத்து 06 ஆயிரத்து 500 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய பாபர் மாடல் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை அதன் நிறத்திற்கு ஏற்ப மாறுபடும்.
விலை விவரங்கள்:
மிஸ்டிக் காப்பர் ரூ. 2 லட்சத்து 06 ஆயிரத்து 500
மூன்ஸ்டோன் வைட் ரூ. 2 லட்சத்து 07 ஆயிரத்து 500
ஜாஸ்பர் ரெட் (டூயல் டோன்) ரூ. 2 லட்சத்து 09 ஆயிரத்து 187
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய ஜாவா 42 பாபர் மாடலில் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப், கிளாக் கன்சோல், புதிய ஹேண்டில்பார், பார்-எண்ட் மிரர்கள், புதிய வடிவம் கொண்ட பியூவல் டேன்க், டேன்க் பேட்கள், ரி-டிசைன் செய்யப்பட்ட சீட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சாப்டு ஃபெண்டர்கள், லோ-சிங்கில் சீட் மற்றும் அகலமான டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த மோட்டார்சைக்கிளில் 334சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 30.2 ஹெச்பி பவர், 32.74 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் ஃபுல் எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ரிவைஸ்டு ஸ்விட்ச் கியர், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை புதிய ஜாவா 42 பாபர் மாடலில் டிஸ்க் பிரேக்குகள், டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் மற்றும் வயர் ஸ்போக் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
- ஜிடி போர்ஸ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
- புதிய ஜிடி போர்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
ஜிடி போர்ஸ் நிறுவனத்தின் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இரு ஸ்கூட்டர்களும் குறைந்த வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஜிடி போர்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்- ஜிடி சோல் வேகாஸ் மற்றும் ஜிடி டிரைவ் ப்ரோ பெயரில் அறிமுகமாகி உள்ளன. இவற்றின் விலை முறையே ரூ. 47 ஆயிரத்து 370 மற்றும் ரூ. 67 ஆயிரத்து 290 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.
புதிய ஜிடி சோல் வேகாஸ் மாடல் லீட் ஆசிட் பேட்டரி மற்றும் லித்தியம் அயன் பேட்டரி என இரண்டு விதமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஜிடி சோல் வேகாஸ் லெக்ட்ரிக் ஸ்கூட்டரின் லித்தியம் அயன் பேட்டரி மாடலின் விலை லீட் ஆசிட் வேரியண்டை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஜிடி சோல் வேகாஸ் லித்தியம் அயன் பேட்டரி பேக் விலை ரூ. 63 ஆயிரத்து 641 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரை முழு சார்ஜ் செய்தால் 65 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கிறது.

ஜிடி சோல் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் லீட் ஆசிட் பேட்டரி வேரியண்ட் முழு சார்ஜ் செய்தால் 60 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 8 மணி நேரம் ஆகும். இந்த ஸ்கூட்டரின் எடை 95 கிலோ ஆகும். இது ஜிடி சோல் வேகாஸ் லித்தியம் அயன் பேட்டரி பேக் மாடலை விட 7 கிலோ வரை எடை அதிகம் ஆகும்.
ஜிடி சோல் வேகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிளாசி ரெட், கிரே மற்றும் ஆரஞ்சு என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஆண்டி-தெஃப்ட் அலாரம், ரிவர்ஸ் மோட், குரூயிஸ் கண்ட்ரோல், சிஸ்டம், இக்னிஷன் லாக் ஸ்டார்ட், ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக் முன்புற சஸ்பென்ஷன், டூயல் டியூப் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளன. ஜிடி டிரைவ் ப்ரோ மாடலின் லித்தியம் அயன் பேட்டரி பேக் மாடல் விலை ரூ. 82 ஆயிரத்து 751 ஆகும். இந்த ஸ்கூட்டர் 75 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்குகிறது.
- எல்எம்எல் நிறுவனம் இந்திய சந்தையில் ரி-எண்ட்ரி கொடுப்பதை சமீபத்தில் தான் உறுதிப்படுத்தியது.
- எல்எம்எல் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
எல்எம்எல் நிறுவனம் இந்திய சந்தையில் ரி-எண்ட்ரி கொடுப்பதை கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் உறுதிப்படுத்தி இருந்தது. இதைத் தொடர்ந்து "ஸ்டார்" மற்றும் "ஹைப்பர்பைக்" பெயர்களை தனது வாகனங்களுக்கு பயன்படுத்த காப்புரிமை கோரியது. இந்த வரிசையில், எல்எம்எல் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
ஸ்பை படங்களில் இருப்பது கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயார் நிலையில் காட்சியளிக்கும் ஸ்டார் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். தோற்றத்தில் இந்த ஸ்கூட்டர் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. முன்புறம் மேக்சி ஸ்கூட்டர் போன்று பெரிய அப்ரன் மற்றும் மோட்டார்சைக்கிளில் உள்ளதை போன்ற ஹேண்டில்பார் காணப்படுகிறது. பின்புறம் வழக்கமான ஸ்கூட்டர் போன்றே காட்சியளிக்கிறது.

அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்கூட்டரில் எல்இடி லைட்டிங், செவ்வக வடிவத்தில் எல்சிடி ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, கனெக்டெட் மற்றும் செக்யுரிட்டி அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் போர்க்குகள், மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் இருபுறமும் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் எல்எம்எல் ஸ்டார் மாடல் பிரீமியம் எலெக்ட்ரிக் பிரிவில் அறிமுகம் செய்யப்படலாம். அந்த வகையில், இந்த மாடல் ஒலா S1 ப்ரோ, ஏத்தர் 450X ஜென் 3, டிவிஎஸ் ஐகியூப் மற்றும் பஜாஜ் செட்டக் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
Photo Courtesy: Rushlane
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய எக்ஸ்டிரீம் 160R ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது.
- பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புதிய எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் 2.0 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் 2.0 எடிஷனில் ஹீரோ கனெக்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. பண்டிகை கால விற்பனையை ஒட்டி இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் 2.0 எடிஷன் விலை ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 738, எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது.
புதிய ஸ்டெல்த் 2.0 எடிஷன் மாடலின் டெலிஸ்கோபிக் போர்க்குகள், பிரேம் மற்றும் பில்லியன் க்ரிப் பகுதிகளில் ரெட் நிற ஹைலைட்கள் செய்யப்பட்டுள்ளன. இதே போன்ற ஹைலைட்கள் ஹெட்லைட் மாஸ்க், பியூவல் டேன்க், ரியர் பேனல், என்ஜின் கௌல் மற்றும் ரிம் டேப்களின் கிராபிக்ஸ்-இலும் செய்யப்பட்டுள்ளன. டிசைன் தவிர இந்த மோட்டார்சைக்கிளில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அம்சங்களை பொருத்தவரை ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ஹீரோ கனெக்ட் ஸ்மார்ட்போன் செயலியுடன் இணைந்து செயல்படும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் டோ-அவே அலெர்ட், ஜியோ பென்ஸ் அலெர்ட், பார்க்டு லொகேஷன், ட்லிப் அனலசிஸ், வெஹிகில் ஸ்டார்ட் அலெர்ட், லைவ் டிராக்கிங், ஸ்பீடு அலெர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
எக்ஸ்டிரீம் 160R மாடலிலும் பிஎஸ்6 புகை விதிகளுக்கு பொருந்தும் 163சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.9 ஹெச்பி பவர், 14 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. புதிய ஹீரோ எக்ஸ்டிரீம் 160R ஸ்டெல்த் 2.0 மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. வினியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.
- யமஹா வாடிக்கையாளர்களுக்கு ரைடிங் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பிராண்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்த வீக்கெண்ட் நிகழ்வு நடத்தப்பட்டது.
- இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் யமஹா ரசிகர்கள் கலந்து கொண்டு, ரைடிங் மற்றும் யமஹா தொழில்நுட்பங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டனர்.
"தி கால் ஆஃப் தி ப்ளூ" என்ற பிராண்டு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, யமஹா மோட்டார் இந்தியா குழுமம் சார்பில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஐடிஏ ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் 'தி கால் ஆஃப் தி ப்ளூ வீக்கெண்ட்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ப்ளூ ஸ்ட்ரீக்ஸ் (உணர்ச்சிமிக்க யமஹா உரிமையாளர்களின் சமூகம்) 500 க்கும் மேற்பட்ட ரைடர்ஸ் மற்றும் 1000 யமஹா ரசிகர்கள் இந்த வீக்கெண்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் மூலம், ஒவ்வொரு மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களும் யமஹாவின் பிரீமியம் மாடல் வரம்பில் சிறந்த தொழில்நுட்பம், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றனர்.

நிகழ்ச்சியின் போது, பங்கேற்பாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதமாகவும், அவர்களின் சவாரி திறனை கூர்மைப்படுத்தும் நோக்கிலும் ஜிம்கானா ரைடு போன்ற நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும் உற்சாகத்தை உருவாக்க, டெஸ்ட் ரைடு செயல்பாடு, யமஹா தயாரிப்பு வரம்பின் காட்சி மற்றும் ஒரு அக்சஸரீக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.
வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறையில் ஒரு பகுதியாக ரைடிங் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதில் யமஹா பிராண்டின் அர்ப்பணிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழ்நாட்டின் பிற இடங்களிலும் 'தி கால் ஆஃப் தி ப்ளூ வீக்கெண்ட்' நிகழ்வை தொடர்ந்து நடத்த திட்டமிட்டு இருப்பதாக யமஹா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
- கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய W175 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்தியாவில் புதிய கவாசகி W175 இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட W175 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கவாசகி W175 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் எபோனி பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் என துவங்குகிறது. இதன் பிரீமியம் வெர்ஷன் போல்டு கேண்டி பெர்சிமன் ரெட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய கவாசகி W175 மாடல் இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் குறைந்த திறன் கொண்ட ரோட்-லீகல் வேரியண்ட் ஆகும். இந்த மோட்டார்சைக்கிளில் 177சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.8 ஹெச்பி பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை கவாசகி W175 மாடலில் டபுள் கிராடில் சேசிஸ், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் ட்வின் ரியர் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முன்புறம் 270 மில்லிமீட்டர் ரோட்டார், பின்புறம் 110 மில்லிமீட்டர் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.
இவற்றுடன் ஹாலோஜன் ஹெட்லைட், ஹாலோஜன் டெயில் லைட், கன்வென்ஷனல் இண்டிகேட்டர்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய கவாசகி W175 மோட்டார்சைக்கிள் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனின் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜூப்பிட்டர் கிளாசிக் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது.
- புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டரில் டைமண்ட் கட் அல்ய் வீல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்திய சந்தையில் ஜூப்பிட்டர் கிளாசிக் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இது சாலையில் அதிவேகமாக 50 லட்சம் வாகனங்கள் எனும் மைல்கல்லை எட்டியதை கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் மாடல் விலை ரூ. 85 ஆயிரத்து 866 ஆகும்.
இந்த ஸ்கூட்டரின் பெண்டர் கார்னிஷ், டிண்ட் செய்யப்பட்ட வைசர், மிரர் ஹைலைட் உள்ளிட்டவைகளை சுற்றி பிளாக் தீம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் 3டி பிளாக் லோகோ வழங்கப்பட்டு இருக்கிறது. ஹேண்டில்பார் எண்ட், டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரிச் டார்க் பிரவுன் பேனல்கள், பிரீமியம் லெதர் இருக்கை மேற்கவர்கள், பேக் ரெஸ்ட் போன்ற அம்சங்கள் உள்ளன .இந்த ஸ்கூட்டர் மிஸ்டிக் கிரே மற்றும் ரீகல் பர்ப்பில் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

டிவிஎஸ் ஜூப்பிட்டர் கிளாசிக் மாடலில் புதிய தலைமுறை அலுமினியம், லோ-ஃப்ரிக்ஷன் 110சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் சீரான செயல்திறன், பிக்கப் மற்றும் மைலேஜ் உள்ளிட்டவைகளை வழங்குகிறது. இத்துடன் டிவிஎஸ் மோட்டார் காப்புரிமை பெற்ற எகனோமீட்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இது இகோ மோட் மற்றும் பவர் மோட் ஆப்ஷன்களை வழங்குகிறது. இவற்றில் இகோ மோட் அதிக மைலேஜ் வழங்கும்.
இந்திய சந்தையில் டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் பிளாக்ஷிப் ஜூப்பிட்டர், என்டார்க், வீகோ மற்றும் பெப் பிளஸ் என நான்கு ஐசி என்ஜின் ஸ்கூட்டர்களும் தொடர்ந்து அமோக வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. ஜூப்பிட்டர் மற்றும் வீகோ மாடல்கள் 3 லட்சத்து 64 ஆயிரத்து 095 யூனிட்களும், பெப் பிளஸ் 28 ஆயிரத்து 913 யூனிட்களும் விற்பனையாகி உள்ளன. டிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 15 ஆயிரத்து 028 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன.






