search icon
என் மலர்tooltip icon

    பைக்

    அல்ட்ராவைலட் F77 எலெக்ட்ரிக் பைக் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    அல்ட்ராவைலட் F77 எலெக்ட்ரிக் பைக் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • அல்ட்ராவைலட் நிறுவனத்தின் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இரு ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    பெங்களூரை சேர்ந்த அல்ட்ராவைலட் ஆட்டோமொடிவ் நிறுவனம் இந்திய சந்தையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை நவம்பர் 27 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. முன்னதாக 2019 வாக்கில் அல்ட்ராவைலட் நிறுவனம் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டது. சமீபத்தில் தான் இந்த மோட்டார்சைக்கிள் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது.

    2019 மாடலுடன் ஒப்பிடும் போது, F77 மாடலில் தற்போது புதிய பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் கூடுதல் செல்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் முழு சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் 130 முதல் 150 கிலோமீட்டர் வரை செல்லும் என அல்ட்ராவைலட் ஆட்டோமோடிவ் தெரிவித்தது.

    அல்ட்ராவைலட் F77 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் உள்ள பிஎல்டிசி மோட்டார் 33 ஹெச்பி பவர், 90 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மணிக்கு 0 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.5 நொடிகளில் எட்டிவிடும். இந்த பைக் மணிக்கு 147 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சஸ்பென்ஷன், முன்புறம் யுஎஸ்டி போர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், முன்புறம் 320எம்எம் மற்றும் பின்புறம் 230எம்எம் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ரைடு மோட்கள் மற்றும் ரி-ஜெனரேடிவ் பிரேக்கிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×