search icon
என் மலர்tooltip icon

    பைக்

    101 கிமீ ரேன்ஜ், ரூ. 79 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான ஒலா S1 ஏர்
    X

    101 கிமீ ரேன்ஜ், ரூ. 79 ஆயிரம் பட்ஜெட்டில் அறிமுகமான ஒலா S1 ஏர்

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றத்தில் ஒலா S1 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது.

    ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய ஒலா S1 ஏர் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஒலா S1 ஏர் ஒலா நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேஸ் வேரியண்ட் ஆக அமைந்து இருக்கிறது. குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வர ஒலா எலெக்ட்ரிக் புதிய ஸ்கூட்டரில் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

    அறிமுக சலுகையாக ஒலா S1 ஏர் ஸ்கூட்டர் விலை ரூ. 79 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிமுக விலை அக்டோபர் 24 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன் பின் புதிய ஒலா S1 ஏர் விலை ரூ. 84 ஆயிரத்து 999 என மாறி விடும். புதிய ஒலா S1 ஏர் மாடல்- இகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    ஒலா S1 ஏர் மாடலில் 2.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் முழு சார்ஜ் செய்தால் 101 கிலோமீட்டர் வரை செல்லும் என சான்று பெற்று இருக்கிறது. இத்துடன் மணிக்கு அதிகபட்சமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என ஒலா எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கிறது. ஒலா S1 ப்ரோ மாடலில் 8.5 கிலோவாட் மோட்டார் மற்றும் 4 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஒலா S1 ஏர் மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற போர்க்குகள், பின்புறம் ட்வின் ரியர் ஷாக் அப்சார்பர்கள், டிரம் பிரேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்கூட்டர் ஒலா S1 ப்ரோ மாடலை விட எடை குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மொத்த எடை 99 கிலோ ஆகும். ஒலா S1 ப்ரோ எடை 125 கிலோ ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை ஒலா S1 ஏர் மாடலில் 7 இன்ச் டிஎப்டி டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, மூவ் ஒஎஸ் 3.0 மென்பொருள், ஹில் ஹோல்டு கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் வினியோகம் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×