என் மலர்

  பைக்

  எலெக்ட்ரிக் பைக் உருவாக்கும் ஒலா எலெக்ட்ரிக்
  X

  எலெக்ட்ரிக் பைக் உருவாக்கும் ஒலா எலெக்ட்ரிக்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் குறைந்த விலையில் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த வாரம் அறிமுகம் செய்தது.
  • அறிமுக சலுகையாக இந்த ஸ்கூட்டர் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது.

  ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் அடுத்த ஆண்டு வாக்கில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவில் களமிறங்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய விவரம் ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது குறைந்த விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்- ஒலா S1 ஏர் மாடல் வெளியீட்டின் போது தெரியவந்துள்ளது.

  இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என ஒலா எலெக்ட்ரிக் நம்புகிறது. இந்த பிரிவில் தற்போதைய சூழலில் அதிக நிறுவனங்கள் களத்தில் போட்டியிடவில்லை.

  மேலும் தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்கள் தன்னை கவரவில்லை என ஒலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்து இருக்கிறார். புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

  புதிய எலெக்ட்ரிக் வாகனம் சிறப்பானதாக இருக்க ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் முற்றிலும் புது தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மட்டுமின்றி எலெக்ட்ரிக் கார்கள் பிரிவிலும் ஒலா எலெக்ட்ரிக் கவனம் செலுத்த உள்ளது. இதற்கான டீசர்களை ஒலா எலெக்ட்ரிக் வெளியிட்டு வருகிறது.

  Next Story
  ×