என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
ஜனவரி 2021 முதல் கார் மாடல்களுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாக மாருதி சுசுகி அறிவித்து இருக்கிறது.
மாருதி சுசுகி லிமிட்டெட் நிறுவனம் ஜனவரி 2021 முதல் தனது கார் மாடல்களின் விலை உயர்த்தப்படும் என அறிவித்து இருக்கிறது. கார் உற்பத்தி செலவீன கட்டணம் உயர்ந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
விலை உயர்வு வெவ்வேறு மாடல்களின் வேரியண்ட்கள் அளவில் வேறுபடும் என மாருதி சுசுகி தெரிவித்து உள்ளது. மாருதி சுசுகி நிறுவனம் தற்சமயம் 14 கார்களை விற்பனை செய்து வருகிறது. இவை ஆல்டோ (ரூ. 2.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) துவங்கி எக்ஸ்எல்6 (ரூ. 9.84 லட்சம், எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.
முன்னதாக டிசம்பர் மாதத்தில் மாருதி சுசுகி வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மாருதி சியாஸ், எஸ் பிரெஸ்ஸோ மற்றும் செலரியோ போன்ற மாடல்களுக்கு ரூ.. 51 ஆயிரம் மதிப்பிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
கேடிஎம் நிறுவனத்தின் ஆர்சி 125 மற்றும் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
கேடிஎம் நிறுவனம் சமீபத்தில் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலையை இந்தியாவில் மாற்றியமைத்தது. தற்சமயம் ஆர்சி 125 மற்றும் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள்களின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புதிய விலை உயர்வின் படி கேடிஎம் ஆர்சி 125 மாடல் விலை ரூ. 1,280 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 1,61,101 என மாறி இருக்கிறது. கேடிஎம் ஆர்சி 390 மோட்டார்சைக்கிள் விலை ரூ. 3,537 அதிகரிக்கப்பட்டு தற்சமயம் ரூ. 2,56,917 என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கேடிஎம் ஆர்சி 125 மாடலில் 125சிசி, லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 14.5 பிஹெச்பி பவர், 12 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது ஆர்சி மாடல்களிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு உள்ளது.
முன்னதாக கேடிஎம் 390 டியூக், 390 அட்வென்ச்சர் போன்ற மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி 390 டியூக் மாடல் விலை ரூ. 8515 வரை உயர்த்தப்பட்டது.
ரெவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி400 மற்றும் ஆர்வி300 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை மாற்றப்பட்டு உள்ளது.
ரெவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் ஆர்வி400 மற்றும் ஆர்வி300 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்தி உள்ளது. இரு மாடல்களின் விலையும் ரூ. 15 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் முன்பதிவு கட்டணம் மற்றும் ஒருமுறை செலுத்தும் தொகையும் அடங்கும்.
ரெவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் 2019 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவற்றின் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்டன.
முன்னதாக ஆர்வி300 மாடல் ரூ. 84,999, ஆர்வி400 மாடல் ரூ. 1,03,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்சமயம் மோட்டார்சைக்கிள் விலை மட்டுமின்றி முன்பதிவு கட்டணமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வின் படி ரெவோல்ட் ஆர்வி300 மாடல் துவக்க விலை ரூ. 94,999 என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையில் இருந்து ரூ. 10 ஆயிரம் வரை அதிகம் ஆகும். ரெவோல்ட் ஆர்வி400 மாடல் துவக்க விலை ரூ. 1.19 லட்சம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 15 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் எம்ஜி கிறிஸ்துமஸ் சர்பிரைஸ் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் விசேஷ சலுகை, தள்ளுபடி மற்றும் பலன்கள் எம்ஜி வாகனங்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
எம்ஜி மோட்டார் தனது வாடிக்கையாளர்கள் எக்ஸ்பீரியன்ஸ் திட்டத்தை அப்கிரேடு செய்ய வாய்ப்பை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தங்களது பழைய கார்களுக்கு ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான பலன்களை பெற முடியும்.

இதுதவிர வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக பைபேக் திட்டம் வழங்கப்படுகிறது. இதில் பயனர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் தங்களின் வாகனத்தை ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட தொகையில் திரும்ப கொடுக்கும் திட்டத்தையும் எம்ஜி மோட்டார் வழங்குகிறது.
இந்த சலுகைகள் எம்ஜி ஹெக்டார், ஹெக்டார் பிளஸ் மற்றும் இசட்எஸ் இவி மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இவை ஸ்டாக் இருப்பிற்கு ஏற்றவாரு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்றாம் தலைமுறை வால்வோ எஸ்60 மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
வால்வோ நிறுவனம் சமீபத்தில் மூன்றாம் தலைமுறை எஸ்60 செடான் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய செடான் மாடல் அளவில் 4761எம்எம் நீளமாகவும், 2040எம்எம் அகலமாகவும், 1431எம்எம் உயரமாகவும் இருக்கிறது. இதன் வீல்பேஸ் 2872எம்எம் அளவில் இருக்கிறது.
இத்துடன் தார் ஹேமர் எல்இடி டேடைம் லைட்கள், சி வடிவ எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மாடல் 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்களை கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஹெட்-யூனிட் மற்றும் ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம் வழங்கப்படுகிறது.

இதன் கேபின் பானரோமிக் சன்ரூப், 4 சோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பிற்கு பைலட் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், லேண் கீப்பிங் ஏயிட், டிரைவர் அலெர்ட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் வால்வோ எஸ்60 மாடல் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 188 பிஹெச்பி பவர், 300 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்சான் இவி மாடலுக்கான சந்தா கட்டணத்தில் திடீர் மாற்றம் செய்து இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இவி காம்பேக்ட் எஸ்யுவி மாடலுக்கான சந்தா விலையை தற்காலிகமாக குறைத்து உள்ளது. அதன்படி டாடா நெக்சான் இவி சந்தா மாதம் ரூ. 29,500 முதல் துவங்குகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இரண்டாவது முறையாக விலை குறைக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக நெக்சான் இவி சந்தா விலை செப்டம்பர் மாதத்தில் ரூ. 41,500 இல் இருந்து ரூ. 34,900 ஆக குறைக்கப்பட்டது. இந்த விலை நெக்சான் இவி 36 மாதங்களுக்கான சந்தா திட்டத்திற்கு டெல்லி பகுதியில் மட்டும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

டாடா நெக்சான் இவி சந்தா விலை ஒவ்வொரு நகரங்களுக்கு ஏற்ப வேறுபடும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. பெங்களூரு, ஐதராபாத், பூனே மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும் நெக்சான் இவி கிடைக்கிறது. டாடா நெக்சான் இவி சந்தா முறை 12, 24 அல்லது 36 மாதங்கள் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
டாடா நெக்சான் இவி மாடலில் 30.2kWh லித்தியம் அயன் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இது 127 பிஹெச்பி பவர், 245 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 275 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் முன்பதிவு விரைவில் துவங்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஸ்கூட்டர் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் விலை ரூ. 1.27 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இது எஸ்ஆர்160 மாடலின் விலையை விட ரூ. 20 ஆயிரம் அதிகம் ஆகும்.
புதிய அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் மாடலுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது. எனினும், விலை அடிப்படையில் அப்ரிலியா மாடல் விலை சற்றே அதிகம் ஆகும்.
புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய சந்தைக்கென உருவாக்கப்பட்டு இருக்கிறது. அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் உள்ள எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆர்எஸ்660 மாடலில் உள்ளது போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.
பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் சவுகரியமான இருக்கை, எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 160சிசி பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனத்தின் அல்டுராஸ் ஜி4 மாடல் விற்பனை அடுத்த ஆண்டு நிறுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 பிரீமியம் எஸ்யுவி மாடல் விற்பனை அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அல்டுராஸ் ஜி4 மாடல் இரண்டாம் தலைமுறை சங்யாங் ரெக்ஸ்டான் மாடலின் ரி-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.
இந்தியாவில் அல்டுராஸ் ஜி4 மாடல் சிகேடி முறையில் கொண்டுவரப்பட்டு இங்குள்ள மஹிந்திரா ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்வேறு காரணங்களால் மஹிந்திரா மற்றும் சங்யாங் நிறுவனங்களிடையே உள்ள ஒப்பந்தம் முடிவுக்கு வர இருகிறது.

தற்சமயம் சுமார் 500 யூனிட்களை உற்பத்தி செய்வதற்கான பாகங்களை மஹிந்திரா வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதன்பின் கூடுதல் யூனிட்களை மஹிந்திரா இறக்குமதி செய்யாது என்றே கூறப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் அல்டுராஸ் ஜி4 மாடலை இந்த ஆண்டு துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் இதன் துவக்க விலை ரூ. 28.69 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 31.69 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
டொயோட்டா நிறுவனத்தின் முழுமையான எலெக்ட்ரிக் கார் வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
டொயோட்டா நிறுவனம் தனது எலெக்டிரிக் வாகன வெளியீட்டு விவரங்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி டொயோட்டா நிறுவனத்தின் டிஎன்ஜிஏ பிளாட்பார்மில் மிட்-சைஸ் எஸ்யுவி ரக எலெக்ட்ரிக் மாடல் உருவாக வருகிறது.
புதிய பிளாட்பார்ம் முன்புறம், பின்புறம் மற்றும் ஆல்-வீல் டிரைவ் போன்ற வாகனங்களுக்கு ஏற்றதாக இருக்கும் என தெரிகிறது. மேலும் இது அனைத்து விதமான பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உபகரணங்களை பொருத்த ஏதுவாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதை கொண்டு பல்வேறு வேரியண்ட்களை குறுகிய காலக்கட்டத்தில் உருவாக்குவதோடு, தனிப்பட்ட மாடல்களையும் உருவாக்க முடியும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது. தற்போதைய வடிவமைப்பின் படி புதிய கார் தோற்றத்தில் ஆர்ஏவி4 எஸ்யுவி போன்று காட்சியளிக்கிறது.
முன்னதாக டொயோட்டா நிறுவனம் கேம்ரி ஹைப்ரிட் பேஸ்லிப்ட் மாடலை ஐரோப்பிய சந்தைகளில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிசான் நிறுவனத்தின் 2021 கிக்ஸ் பேஸ்லிப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நிசான் நிறுவனம் 2021 கிக்ஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடலை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கிக்ஸ் பேஸ்லிப்ட் மாடல் வெளிப்புறம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கின்றன.
2021 நிசான் கிக்ஸ் எஸ்யுவி மாடலின் என்ஜின் அம்சத்திலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி காரின் முன்புறம் வி-மோஷன் ஹெக்சகோனல் கிரில், குரோம் சரவுண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்புற பம்ப்பரில் கிரில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதிலேயே பாக் லேம்ப்களும் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கின்றன. பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அதிகளவு மாற்றம் செய்யப்படவில்லை. எனினும், பூட்-லிட், டெயில் லைட் கிளஸ்டர் மற்றும் பின்புற பம்ப்பரில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
காரின் உள்புறம் புதிதாக 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், நிசான் கனெக்டெட் தொழில்நுட்பம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த காரில் முந்தைய வெர்ஷன் போன்றே 1.6 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் புது ஆக்டேவியா மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஸ்கோடா நிறுவனம் தனது நான்காம் தலைமுறை ஆக்டேவியா மாடலை சமீப காலமாக சோதனை செய்து வருகிறது. புதிய ஆக்டேவியா மாடல் என்ஜின் விவரங்கள் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அதன்படி நான்காம் தலைமுறை ஆக்டேவியா மாடல் பெட்ரோல் என்ஜினுடன் மட்டுமே அறிமுகமாகும் என தெரிகிறது.
இந்த மாடலில் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 190 பிஎஸ் பவர், 320 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 8.3 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. புது ஆக்டேவியா மாடலில் ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லேம்ப்கள், பட்டர்பிளை கிரில், 17 இன்ச் அலாய் வீல்கள், ஸ்ப்லிட் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.
காரின் உள்புறம் பெரிய ஃபுளோட்டிங் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், அனைத்து பட்டன்கள் மற்றும் நாப்களில் டச் சார்ந்த கண்ட்ரோல்கள் வழங்கப்படுகின்றன. இதில் 2 ஸ்போக் ஸ்டீரிங் வீல், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
பியாஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி வருகிறது.
பியாஜியோ இந்தியா நிறுவனம் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக புது மோட்டார்சைக்கிள் பிளாட்பார்மை உருவாக்கி வருகிறது. இதன்கீழ் அந்நிறுவனம் 350சிசி-450சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்ரிலியா பிராண்டிங்கில் வெளியிட இருக்கிறது.
இந்த தகவலை பியாஜியோ இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி டெய்கோ கிராபி உறுதிப்படுத்தி இருக்கிறார். தற்சமயம் இவை கான்செப்ட் வடிவில் இருப்பதாகவும் விரைவில் சந்தையில் வெளியாக 2.5 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக பியாஜியோ நிறுவனம் ஆர்எஸ்150 மற்றும் டியுனோ 150 மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. இவை இரண்டும் அனைவரின் கவனத்தை ஈர்த்தன. இதே வழக்கத்தை பியாஜியோ தற்சமயம் 350சிசி-450சிசி மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.
புதிய உயர் ரக மோட்டார்சைக்கிள்கள் பியாஜியோ நிறுவனத்தின் இத்தாலி நாட்டு குழுவினரால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இவை பெரிய மாடலின் தோற்றத்தை தழுவி, சந்தையில் உள்ள அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.






