என் மலர்
ஆட்டோமொபைல் செய்திகள்
2021 ஜனவரி மாதம் முதல் விரிவாக்க பணிகளை துவங்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது பிளாக்ஷிப் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு துவங்கி நாட்டின் 27 நகரங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகளின் அங்கமாக இது அமைகிறது.
முன்னதாக முதற்கட்ட விரிவாக்க பணிகளின் போது மைசூரு, ஹூப்ளி, ஜெய்பூர், இந்தூர், பனாஜி, புவனேஷ்வர், நாசிக், சூரத், சண்டிகர், விஜயவாடா, விசாகபட்டினம், நாக்பூர், நொய்டா, லக்னோ மற்றும் சிலிகுரி என 16 புதிய நகரங்களில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனை துவங்கப்பட்டது.
இதுதவிர பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதவிர டெல்லி, மும்பை, பூனே மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் சமீபத்தில் விற்பனையை துவங்கி இருக்கிறது.
இந்தியாவில் கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா நிறுவன மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கேடிஎம் மற்றும் ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இரு நிறுவன மாடல்களின் விலையும் முறையே ரூ. 1200 மற்றும் ரூ. 8500 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கேடிஎம் 125 டியூக் மற்றும் கேடிஎம் 250 அட்வென்ச்சர் மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
கேடிஎம் ஆர்சி 125 மாடல் விலையில் ரூ. 1279 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 1.61 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என மாற்றப்பட்டு இருக்கிறது. கேடிஎம் 390 டியூக் மாடலின் விலை ரூ. 8,517 உயர்த்தப்பட்டு தற்சமயம் ரூ. 2.66 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.
கேடிஎம் டியூக் 250 மாடலின் விலை ரூ. 4738 வரை உயர்த்தப்பட்டு ரூ. 2.14 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. ஆர்சி 390 மாடல் விலை ரூ. 3539 அதிகரித்து தற்சமயம் ரூ. 2.56 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ஹஸ்க்வர்னா ஸ்வார்ட்பிளேன் 250 மற்றும் விட்பிளேன் 250 மாடல்களின் விலை ரூ. 1790 வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இவற்றின் விலை தற்சமயம் ரூ. 1.86 லட்சம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்குகிறது.
போர்டு நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
போர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்களிடையே கடந்த ஆண்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி எதிர்கால போர்டு மாடல்கள் மஹிந்திரா நிறுவன கூட்டணியில் உருவாகிறது. மேலும் மஹிந்திரா நிறுவனம் உ்பத்தி பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறது.
அதன்படி மஹிந்திரா பிளாட்பார்மில் உருவாகும் புது எஸ்யுவி மிட்-சைஸ் மாடல் ஆகும். இந்த மாடல் மஹிந்திராவின் புதிய எக்ஸ்யுவி500 மாடலை தழுவி உருவாகிறது. இதன் விற்பனை அடுத்த ஆண்டு மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்சமயம் புதிய போர்டு எஸ்யுவி மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ஸ்பை படத்தில் உள்ள காரின் முன்புற கிரில் பகுதியில் போர்டு லோகோ இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் முன்புறம் ஏர்-இன்டேக் பம்ப்பரிலும், ஸ்ப்லிட் லைட்னிங் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த எஸ்யுவி மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் யூனிட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இவை இரண்டும் 180 பிஹெச்பி பவர் வழங்குகிறது. இரு என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட்கள் வழங்கப்படுகின்றன.
நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் முன்பதிவில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
நிசான் நிறுவனம் கடந்த வாரம் புதிய மேக்னைட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நிசான் மேக்னைட் மாடல் விலை இந்தியாவில் ரூ. 4.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அறிமுகமானதும் முன்பதிவு துவங்கிய நிலையில், நிசான் மேக்னைட் மாடல் ஐந்து நாட்களில் 5 ஆயிரத்திற்கும் அதிக யூனிட்கள் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. புதிய நிசான் மேக்னைட் முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய நிசான் மேக்னைட் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.35 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எனினும், இவை அறிமுக விலை தான் என்றும் டிசம்பர் 31, 2020 ஆம் தேதிக்கு பின் இந்த விலை மாற்றப்படும்.
இதன் வெளிப்புறம் எல்இடி ஹெட்லேம்ப், பாக் லைட்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் வழங்கப்படுகிறது.
நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
2021 கேடிஎம் 125 டியூக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கேடிஎம் நிறுவனம் 2021 டியூக் 125 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய டியூக் 125 மாடல் விலை ரூ. 1.50 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய மாடலை விட ரூ. 8 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
புதிய 2021 மாடல் தோற்றத்தில் 200 டியூக் போன்றே காட்சியளிக்கிறது. இதில் கூர்மையான ஹெட்லேம்ப், பியூவல் டேன்க் மற்றும் டெயில் பகுதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் டேன்க் கொள்ளளவு 10.5 லிட்டர்களில் இருந்து 13.5 லிட்டர்களாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

2021 125 டியூக் மோட்டார்சைக்கிளில் புதிதாக ஸ்ப்லிட் ரக டிரெலிஸ் பிரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் இருக்கை முன்பை விட சவுகரியமாக வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 125 சிசி லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த என்ஜின் 14.3 பிஹெச்பி பவர், 12 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் டபிள்யூபி யுஎஸ்டி போர்க்குகள், மோனோஷாக், இருசக்கரங்களில் ஒற்றை டிஸ்க், சிங்கில் சேனல் ஏபிஎஸ் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் புதிய 2021 கேடிஎம் 125 டியூக் மாடல் யமஹா எம்டி 15 மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இது யமஹா மாடலை விட ரூ. 10 ஆயிரம் விலை அதிகம் ஆகும்.
கவாசகி நிறுவனத்தின் 2021 மெகுரோ கே3 மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
கவாசகி நிறுவனம் மெகுரோ கே3 மோட்டார்சைக்கிளை ஜப்பான் நாட்டு சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் கவாசகி டபிள்யூ800 மாடலை தழுவி உருவாகி இருக்கிறது. இதன் விற்பனை 2021 பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

தோற்றத்தில் மெகுரோ கே3 மாடல் டபிள்யூ800 போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடல் பியூவல் டேன்க் மற்றும் பக்கவாட்டில் மெகுரோ பேட்ஜிங் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் பியூவல் டேன்க் மீது பின்-ஸ்ட்ரிப் செய்யப்பட்டு இருக்கிறது.
மெகுரோ கே3 மாடலில் 773சிசி பேரலெல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 51 பிஹெச்பி பவர், 62.9 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே என்ஜின் கவாசகி டபிள்யூ800 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிகோர் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் புல் சைஸ் எஸ்யுவி மற்றும் மைக்ரோ எஸ்யுவி மாடல்கள் அடங்கும். இத்துடன் டிகோர் ஹேட்ச்பேக் மாடலின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
தற்சமயம் டிகோர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த ஹேட்ச்பேக் மும்பையில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்டவை ஆகும். 2021 டிகோர் காம்பேக்ட் செடான் மாடலின் வெளிப்புறம் அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.
டர்போ பெட்ரோல் வேரியண்ட் டிகோர் ஜெடிபி என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதன் 1.2 லிட்டர் யூனிட் பிஎஸ்4 விதிகளுக்கு உட்பட்டதாகும். இது 114 பிஹெச்பி மற்றும் 150 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா புது வேரியண்ட் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா மாடலின் புது வேரியண்ட்டை உருவாக்கி வருகிறது. முன்னதாக இந்த வேரியண்ட் கொரியாவில் சோதனை செய்யப்படுவதாக பல்வேறு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
அந்த வரிசையில், தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா 7 பேர் பயணிக்கும் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இது அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகமாகி, ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

இந்திய சந்தையில் புதிய ஹூண்டாய் கிரெட்டா மாடல் இரண்டாம் தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் டாடா கிராவிடாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
புதிய ஹூண்டாய் கிரெட்டா தற்போதைய மாடலை விட நீளமாகவும், நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக மூன்றாம் கட்ட இருக்கைகளை வழங்க வேண்டும் என்பதால் இந்த மாற்றம் நிச்சயம் மேற்கொள்ளப்படலாம்.
ரெனால்ட் நிறுவன கார் மாடல்களுக்கு ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
ரெனால்ட் நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து இருக்கின்றன. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடி வடிவில் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் பிஎஸ்6 க்விட், டஸ்டர் மற்றும் டிரைபர் போன்ற மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 80 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ரெனால்ட் டஸ்டர் ஆர்எக்ஸ்எஸ் சிவிடி வேரியண்ட்டிற்கு ரூ. 70 ஆயிரம் வரையும், மற்ற வேரியண்ட்களுக்கு ரூ. 60 ஆயிரம் வரை சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளன.

ரெனால்ட் க்விட் மாடலுக்கு ரூ. 43 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ரெனால்ட் டிரைபர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரமும், ஏஎம்டி வேரியண்ட்களுக்கு ரூ. 10 கூடுதல் சலுகையும் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று ஒவ்வொரு கார் மாடலுக்கும் அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகள் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் கார்ப்பரேட் சலுகை உள்ளிட்டவைகளாக பிரித்து வழங்கப்படும்.
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
பியாஜியோ நிறுவனம் தனது அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரை இந்த மாதம் வெளியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே ஸ்கூட்டர் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
தற்போதைய தகவல்களின் படி எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் இந்தியாவில் டிசம்பர் மாதத்தின் நான்காவது வாரத்தில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. இம்மாத இறுதியில் விற்பனையகம் வந்து, ஜனவரி மாத துவக்கத்தில் இதன் விநியோகம் துவங்கலாம் என கூறப்படுகிறது.

புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய சந்தைக்கென உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் உள்ள எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆர்எஸ்660 மாடலில் உள்ளது போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.
பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் சவுகரியமான இருக்கை, எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 160சிசி பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் புதிய ஏத்தர் 450எக்ஸ் சீரிஸ் 1 மாடலின் விநியோக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது சீரிஸ் 1 ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர் விநியோகம் புதிய நகரங்களில் துவங்க இருப்பதாக அறிவித்து உள்ளது. அதன்படி பூனே, ஐதராபாத் மற்றும் ஆமதாபாத் நகரங்களில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இரக்கிறது.
இந்த ஸ்கூட்டரை வாங்க ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு மீதி தொகையை செலுத்தி, அடுத்தக்கட்ட வழிமுறைகளை நிறைவு செய்தபின் ஸ்கூட்டரை டெலவரி எடுத்துக் கொள்ளலாம். இது ஸ்டான்டர்டு மாடலின் ஸ்பெஷல் எடிஷன் வேரியண்ட் ஆகும்.

ஏத்தர் 450 எக்ஸ் ஸ்டான்டர்டு வேரியண்ட் விலை ரூ. 1.59 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சீரிஸ் 1 கலெக்டர்ஸ் எடிஷன் ஸ்டான்டர்டு மாடலை விட அதிக மாற்றங்களை கொண்டிருக்கிறது.
ஏத்தர் எனர்ஜி வாகனங்கள் உற்பத்தி பணிகள் விரைவில் ஓசூரில் உள்ள ஆலையில் துவங்க இருக்கிறது. இந்த ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லடசம் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
சுசுகி நிறுவன ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலில் எக்சாஸ்ட் காணப்படாததே, இவை எலெக்ட்ரிக் வெர்ஷன் தான் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன. ஸ்பை படங்களில் உள்ள ஸ்கூட்டர் புதிய நிறம் கொண்டிருக்கிறது. இவைதவிர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றத்தில் தற்சமயம் விற்பனையாகும் மாடல் போன்றே காட்சியளிக்கிறது.
இதனால் பர்க்மேன் எலெக்ட்ரிக் மாடலில் 12-10 இன்ச் வீல்கள் மற்றும் முன்புற டிஸ்க் உள்ளிட்டவை முந்தைய மாடலில் இருந்தபடி வழங்கப்படுகின்றன. இதன் சிறப்பம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனினும், ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் எலெக்ட்ரிக் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ் ஐகியூப் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.






